ம்.. பிறக்கும்போது மூணரை கிலோ, அப்பவே உன்ன விட வெயிட்டு கம்மி 51 cm ல இருந்தாராம்.ரெண்டாவது பையன். அடுத்ததாவது பொண்ணா பிறக்காதான்னு ஏங்கி பஞ்ச பாண்டவர்கள பெத்து போட்டதுதான் மிச்சம்னு அத்தையம்மா இப்பவும் சொல்லி கவலைப்படுவாங்க. இவர் ரெண்டாவது. பெரியண்ணா சின்ன வயசிலேயே வெளிநாடு போக வேண்டிய நிர்ப்பந்தம். மாமாவ காலன் பறிச்சுக்கிட்டான். பதினேழாவது வயசில அம்மா தம்பீங்க இவர் பொறுப்பில. அத்தையம்மா இழப்பில இருந்து மீண்டு வரும் வரைக்கும் முழுப் பொறுப்பும் இவர்தான். தம்பீங்க மூணு பேரும் இன்னைக்கும் சின்னண்ணன் கிட்ட கலந்து பேசித்தான் எதையும் செய்வாங்க. மாமியார் கிட்ட இவர் பேச்சுத்தான் எப்பவுமே எடுபடும். எப்பிடியாவது அவங்கள சமாளிச்சு தன் காரியத்த சாதிச்சுக்குவார்.
கிரிக்கட், ஃபுட்பால், வாலிபால் விளையாடுறதில புலி சிங்கம் ரேஞ்சு. இப்போ கூட யாராவது ஒண்ணு ஃபோன்ல டேய் மச்சான் நீ அந்த மாச்ல அடிச்சியே ஒரு சிக்சர்னு மலரும் நினைவுகள் பேசும். இங்க கிரிக்கட் கிடையாதுங்கிரதால மத்தது ரெண்டும் தொடருது. அதிலேம் ஃபுட்பால் முதல் பொண்டாட்டி லெவலுக்கு போய்டிச்சு.
வேட்டைப் பிரியர். ஒரு தடவை வேட்டைக்கு போன இடத்தில பாம்பு கூட கடிச்சிருக்கு. தான் நினைச்சத செய்து முடிச்சிட்டு தான் அடுத்த வேலை. மனசுல பட்டத மறைக்காம பேசுறதால கொஞ்சம் தலைக்கனம்னு சொல்வாங்க.
நல்ல வேளை சிக்ஸ் பாக் அளவுக்கு போகலேன்னாலும் வெயிட் கிலோ இல்ல கிராம் அளவுக்கு கூட ஏற விடமாட்டார். அண்ணனும் தம்பீங்களும் கொஞ்சம் புஷ்டியா இருப்பாங்களா போட்டு கடிச்சு குதறிடுவார். இந்த சம்மர்ல லண்டன் போறத்துக்கு ஒரு மாதம் முன்னாடியே கடைசி தம்பி சொன்னார் அண்ணி என்னவாவது பண்ணி வரும்போது சின்னண்ணா வெயிட்ட கொஞ்சம் ஏத்திடுங்கன்னு.
சரியான மொக்கைசாமி. இவர் இருக்கிற இடத்தில மொக்கையும் சிரிப்பும் கொடி கட்டிப் பறக்கும். பேச்சால சட்னு அடுத்தவங்கள இம்ப்ரெஸ் பண்ணிடுவார். குறிப்பா எதிர்ப்பாலார.. கடலை மன்னன். அதனால மத்தவங்க மட்டுமில்ல நானும் பொறுக்கீன்னு சொல்லி இருக்கேன். பின்ன என்னங்க. சும்மாவே ஊருக்குள்ள சேத்து வச்சு பேசி கிண்டல் பண்ணுவாங்க. இவர் வேற ரோட்ல எதிர்ல பைக்ல வந்தா சைக்கிள்ள போற எனக்கு ஹாரன் அடிக்கிறது, எங்க வீட்டுக்காங்கிறது, ஊருக்கே கேக்கிறா மாதிரி சத்தமா அண்ணன ரெடியா இருக்க சொல்லுங்க இதோ அஞ்சு நிமிஷத்தில வந்திடறேன் ஊர் சுத்தப் போணும்னு ஏய் அவர் விளையாட போணும்னு சொல்வார்டி... யார் இல்லேன்னா ஆறு மணி விளையாட்டுக்கு நாலு மணிக்கே கிளம்பி மூணு பேர கூட்டு சேத்துக்கிட்டு ரெண்டு பேரும் என்ன பண்ணுவாங்களாம்? ஊரோட இந்த கோடீலேர்ந்து அந்த கோடி வரைக்கும் ஒரு ரவுண்டு வருவாங்கல்ல. மனச்சாட்சியே மனச்சாட்சி இல்லாம பேச கூடாது சொல்லிட்டேன் முட்டு சந்தில உக்காந்து கிட்டே சவுண்டு குடுக்கிறதுன்னு கொலைவெறி ஆக்கிட்டார். ஒருநாள் வந்த கோவத்தில நேரா அம்மா கிட்ட வந்து ஏம்மா இந்த மாமனார் பேர சொல்லி அங்கிளோட பொறுக்கி அடங்கவே மாட்டுதான்னு ஒரே கத்தல். இப்போ கூட எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. நீ கொட்ற குப்பைய 'பொறுக்கி' எடுக்கப் போறாருன்னு சரியா சொல்லி இருக்கேன்னு.
கோவம் வந்துதுன்னு வச்சுக்குங்க.. அது யாரா இருந்தாலும் நோ எக்ஸ்கியூஸ்... ஊர்ல எனக்கு தெரிஞ்சு ஒரு எட்டு பத்து பேர், இங்க ஒரு நாலஞ்சு பேர்னு இன மத நிற வேறுபாடில்லாம 'கவனிக்கப்பட்டிருக்காங்க'. அதனால மத்தவங்க லைட்டா ரவுடியாட்டம் பாப்பாங்க.
ஒரு இடத்தில சும்மா உக்காந்து இருக்கிறது மட்டும் இவரால முடியாது. லீவ் நாள்ல கூட டான்னு ஆறு மணிக்கு எழுந்து நின்னு எங்க கிட்ட திட்டு வாங்குவார். அதிலையும் பேசாம இருக்கிறது முடியவே முடியாது.
என்னதான் கோவம் வந்தாலும் அத சாப்பாடு மேல காட்றது மட்டும் பிடிக்கவே பிடிக்காது. சாப்பாடு இன்னதுதான் வேணும்னு இல்ல. எண்ணை கம்மியா, தேங்காய் சேர்க்காததுன்னா சரி. ஸ்வீட் பிடிக்காது. white chocolate கொஞ்சம் பிடிக்கும். பிடிக்காத ஒண்ண யாருக்காகவும் செய்ய மாட்டார்.
எப்பவும் கலகலன்னு இருக்கிறவர் சோகமா இருக்கார்னா ஒண்ணு Manchester United இல்ல Brann ங்கிற லோகல் டீம் மாச்ல தோத்திடுச்சுனு அர்த்தம். இசை ஈடுபாடு அவருக்கு இல்லைங்கிரதால பாட்டெல்லாம் போடல.
என் கண்ணாளன் இன்னைக்கு போலவே என்னைக்கும் சந்தோஷமா வாழணும்னு என் அப்பன் விநாயகன வேண்டிக்கிறேன்.
அப்டியே அவருக்காக ரெண்டு க்ளப் படம்ஸ்.... இப்போ ஓக்கேவாப்பா ??? அப்பா.. பாருங்க இப்போதான் சிரிக்கிறார்.









முதலாம் வகுப்புக்கு போன முத நாளே அம்மா ஆர்டர போட்டுட்டாங்க.
இனி எல்லாரும் ரெண்டாம் வகுப்புக்கு போவோமா. இங்க எல்லாரும் ரொம்ப சமத்தா சுசி மாதிரியே இருக்கணும். ஏன்னா புதுசா வந்த குறள்தாசன்கிற பிரின்சிபால்தான் நமக்கு டீச்சர். இப்பவும் இவருக்கு என் மேல ரொம்ப அன்பு. சின்னண்ணன் இப்போ இவர் ஸ்கூல்லதான் டீச்சரா இருக்கான்.சமீபத்துல நடந்த பள்ளி விழாவில சின்னண்ணன் பொண்ண பாத்திட்டு அப்டியே என்ன பாக்றா மாதிரி இருந்ததாவும் தான் எப்பவும் என்னோட ரசிகன்னும் பாராட்டி பேசினாராம். நம்பலைல்ல? எடுங்க சூடத்த!
மூணாம் வகுப்பு ஒரு வித கிலியோடவே முடிஞ்சுது. காரணம் ஸ்கேல் புகழ் சுகுணா டீச்சர். மறந்திட்டீங்களா? வேணா இன்னொரு தடவ எழுதிடட்டுமா? ஓகே ஓகே.... தொடர்ந்து படீங்க.
நாலாம் வகுப்பு நல்ல வகுப்பு. சுகந்தீன்னு ஒரு தேவதையே டீச்சரா வந்தாங்க. ரொம்ப நல்ல மிஸ். அவங்க மிஸ் ங்கிரதனாலயோ என்னமோ ரொம்ப அன்பா இருப்பாங்க எல்லார்கிட்டயும். கல்யாணம் ஆகிப் போயும் ஊருக்கு வர்றப்போ என்ன வந்து பாக்கும்படி சொல்லி விடுவாங்க. அவங்களோட பிரியமான மாணவி நானாக்கும்.
அஞ்சாவது கணேஷ்வரி டீச்சர், குறள்தாசன் சார், சுகந்தி டீச்சரோட ஜாலியா போய்டிச்சு. இப்போ எனக்கு யசோ,லதா, மலர், மின்னி, சுமதி, ராஜி,மதாங்கினி, ரட்ணம், குமார், ஆதி, செந்தில்னு ஒரு நெருங்கின நண்பர் கூட்டம் உருவாய்டிச்சு. சுமதி கூட ஏன்னு தெரியாமலே ப்ளஸ் டூ முடியிற வரைக்கும் பேசிக்கலை. அப்புறமா நாங்க டீச்சிங் இண்டர்வியூ போனப்போதான் பேசிக்கிட்டோம். அவளுக்கும் காரணம் என்னன்னு தெரீலன்னு சொன்னா. இதில இப்போ யசோ,செந்தில்
பொழுது போக்குன்னா பாட்டி வீடுதான். எப்பவும் தனியாதா விளையாடுவேன். ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்து சாப்டு பாட்டி வீடு போனேன்னா ரொம்ப இருட்டானத்துக்கு அப்புறமாதான் மறுபடி வீட்டுக்கு வருவேன். அதுவும் தாத்தா என்ன முதுகு மேல சுமந்துகிட்டு போவாரு. அஞ்சாவது வந்ததும் தாத்தா லைட்டா மூச்சு வாங்கறத பாத்ததும் நானாவே இறங்கி அவர் கைய்ய இறுக்கி புடிச்சு கிட்டே பக்கத்தில நடந்து போவேன். என் தைரியத்த பத்தி மறுபடி எழுத வேணாமேன்னு பாக்கிறேன். 
கலை எனக்கு கை வந்த கலை. சித்திரம் கைப் பழக்கம் வரல.
நெஜமா நான் சந்ருவுக்கு நிறைய நன்றி சொல்லணும். அம்மாடி... இத தான் மலரும் நினைவுகள்ம்பாங்களா... மறுபடியும் அந்தந்த வயதில வாழ்ந்து பாக்கணும் போல ஆசையா இருக்கு. அது மட்டுமா? எங்க வீட்ல அப்பா, அம்மா, பெரியண்ணன், அக்கா, சின்னண்ணன், தாத்தா, பாட்டி மத்த உறவுக்காரங்க, ஊர்க்காரங்கன்னு எல்லாரோடான நினைவுகளும்....
என்னோட கல்விப் பயணம் நான் ரெண்டு வயசா இருக்கும்போதே ஆரம்பிச்சிடுச்சாம். என் முன்னாடி பிறந்த மூணு வாலுங்களும் பள்ளி போறது பெரும் அக்கப் போராம், என்னால. அவங்க கைய பிடிச்சுக் கிட்டு நானும் கூல் வாடேன் அப்டின்னு கிட்டு அடம் பிடிப்பேனாம். அப்புறம் அம்மா ஏதாவது பண்ணி என்ன அப்புறப் படுத்தினதும் அவங்க கிரேட் எஸ்கேப். அப்றமா ரொம்ப நேரத்துக்கு வெளி கேட்ட பாத்தாப்லையே வாசப் படீல உக்காந்திட்டிருப்பேனாம். அங்கனையே தூக்கம் கூட உண்டாம். அதனால அம்மா தொல்லையே இல்லாம வீட்டு வேல எல்லாம் முடிச்சிருவாங்களாம்.
இப்போ நான் உக்காந்து முழிச்சிட்டிருக்கேன். வாசப் படீலன்னு அவசரப் பட்டு நினைச்சிடாதீங்க. எனக்கு நாலு வயசு ஆய்டிச்சு. நர்சரி ஸ்கூல் மர பெஞ்சில கிட்டத்தட்ட ஒரு இருபது வாலுங்க புடை சூழ உக்காந்து அழலாமா வேணாமான்னு யோச்சுகிட்டு இருக்கேன்.அவனவன் போடற சௌண்ட பாக்கும்போது தப்பா ஆசப் பட்டுட்டோமோ, ஸ்கூலுன்னா ஏதோ எசகு பிசகா நடக்குமோன்னு லைட்டா பயம் வந்திச்சு. மூத்த வாலுங்க ஒரு வார்த்த சொல்லாம விட்டாங்களேன்னு அவங்கள திட்டினேன். அம்மாவும் அப்பாவும் ரொம்ப பெருமையா பாத்திட்டு நின்னாங்களா சரி போனா போகுதுன்னு உக்காந்திட்டேன். ராஜினின்னு ஒரு பொண்ணுதான் என் பெஸ்டு பிரென்ட். அவ அம்மாதான் டீச்சர். என் தாத்தாதான் எனக்கு இலவச டாக்சி. டீச்சர் பேரு தெரீல. ராஜினி அம்மான்னுதான் சொல்லுவேன்.
அடுத்து எல்கேஜி. டீச்சர் பேரு கணேஷ்வரி. அம்மாவோட உறவுக்காரங்க. ராஜினி க்ளாஸ்ல மிஸ்ஸுங்கறதால ஸ்டார்டிங் கொஞ்சம் ப்ராப்ளம் ஆயிடிச்சு. அவ என்ன விட ஒரு வயசு 



