Pages

  • RSS

04 October, 2009

முக்கிய அறிவிப்புகள்....

எல்லாரும் நலமா மக்கள்ஸ்?

நாங்க நலமா இல்ல..  குடும்பத்தோட ஜூரம் கும்மி அடிக்குது. குணா + சதுவுக்கு கும்மி கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கு. எனக்கும் பொண்ணுக்கும் கொஞ்சம் கம்மி. இந்த வாரம் பசங்களுக்கு ஸ்கூல் லீவுங்கிறதால பரவால்ல. பாவம் லீவ்ல என்ன பண்ணலாம்னு பெருசா ப்ளான் போட்டு வச்சிருந்தாங்க.

மு.அ.நம்பர் ஒன்னு:-  நாங்க சீக்கிரமா குணம் ஆய்டணும்னு வேண்டிக்கங்கப்பா... போலி டாக்டர் போலி நர்ஸ் வேலையும் சேர்த்து  பாக்க வேண்டியதா இருக்கு...

************************************

அடுத்ததா அந்த மேட்டருக்குத்தான்  ஜம்பி வந்திருக்கேன். சோ யாரும் அவசரப்பட்டு டாக்டருக்கேவான்னு கேக்காதீங்க. முடியல... நான் தெளிவா போலி ன்னு போட்டும் யாரும் அத கண்டுக்கிறதா இல்ல. இங்க வரதுக்கு செலவாகுமேங்கிரதால நல்ல வேளை   ட்ரீட்மெண்டுக்கு நேர்ல வரலைன்னாலும் கேள்விக் கணைகளை அனுப்பிட்டே இருக்காங்க. தலைவலிக்கு தைலம் தேய்க்கிறது, முதுகு வலிக்கு மூவ் தேய்க்கிறது உட்பட சில பாட்டி, சித்தப்பா, ஒன்னு விட்ட பெரியப்பா வைத்யம்தான் எனக்கு தெரியும். ஏதோ யாவரும் நலமுக்கு பொருத்தமா இருக்கட்டுமேன்னு நான் போட்டது எனக்கு சொ.செ.சூ ஆய்டிச்சு. போலியையும் மீறி எப்டின்னு ரொம்ப மூளைய குடைஞ்சும் பதில் கிடைக்கல. யக்கா ஃபாலோயர்சில போலின்னு போட்டு வைங்கன்னு கோபி,  குட்டி சாரி.. சுட்டி காமிச்சதும்தான் தெரிஞ்சுது. தம்பி டாங்க்சுப்பா... நீங்க யாருமே பிரஃபைல் பக்கம் போறதில்லயா மக்கா? ஃபாலோயர்சோட எஸ் ஆயிடரீங்களா? ரைட்டுங்க. இன்னையோட மாத்திடறேன். ஆனா ஒண்ணுங்க தலைப்புக்கு டாக்டர் மாதிரி வேற எதுவும் பொருந்த மாட்டேங்குது. 

மு.அ. நம்பர் ரெண்டு:- என்ன லேபல்ஸ் போடலாம்கிற ஆலோசனைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. டேமேஜுக்கு ஏற்ப ஆலோசனைகளுக்கு 'தக்க' சன்மானம் வழங்கப்படும்..

************************************

நேத்து The Love Guru படம் பாத்தேன். Mike Myers, Justin Timberlake, Jessica Alba நடிச்சிருந்தாங்க. படம் போன வருஷமே ரிலீஸ் நான் நேத்துதான் பாத்தேன். எஸ் ஆகாதீங்க ப்ளீஸ்... தமிழ் படத்துக்கே விமர்சனம் எழுத தெரியாத நான் உலக படத்துக்கா எழுத போறேன்??? அதில குரு சொன்னதில ஒரு விஷயத்த மட்டும் சொல்ல போறேங்க.
Be
Loving &
Openhearted
With
My
Emotions


எனக்கு ரொம்ப பிடிச்சுது. ஆனா புரிய வேண்டியவங்களுக்கு இது புரியுமான்னு தெரியல.

மு.அ. நம்பர்  மூணேய்:- எனக்கு குளிர் ஜூரம்.

************************************

இங்க இருட்டு ஆரம்பிச்சாச்சு. கூடவே குளிரும். சம்மர் வந்ததே தெரீல. அதுக்குள்ளே அடுத்த கால மாற்றம். ஆனா குணாவோட அலர்ஜி தொடரும் போட்டுட்டு போய்டுச்சு. அவருக்கு சம்மர் வந்தாலே அலர்ஜியும் கூட வந்திடும். ஒரு வகையான புல்லு, மகரந்தம், நாய், பூனைன்னு பெரிய லிஸ்ட் இருக்கு. மீ த ஃபஸ்டு லிஸ்ட்ல. நான்கூட இந்த வருஷம் பூனையாட்டம் மூக்க தேய்ச்சுவிட ஆரம்பிச்சிருக்கேன். இதுதான் அலர்ஜி வருவதற்கான முதல் அறிகுறியாம். ஆனா இந்த ஊரு பொண்ணுங்களுக்கு சம்மர்ல ட்ரெஸ் அலர்ஜியும் வந்திடுங்க. இதில இவ்ளோ warm country ல இருந்து வந்திருக்கே. இருந்தும் எதுக்கு இப்டி மூடி கட்டிக்கிட்டு இருக்கேன்னு என்ன பாத்து கேள்வி வேற. கேட்பவரின் நக்கலை பொறுத்து என் பதிலில் நளினம் இருக்கும்.

மு.அ. கட்ஸீ:- இங்கு எந்த அறிவிப்பும் கிடையாது.

************************************

அப்புறம் என்னங்க?   இப்டி கலவையா எழுதிட்டு அதுக்கு  எதுனா பெயர் வச்சாகணுமே. கூட்டு, பொறியல், சாலட் ஏன் காக்டெயில்னு கூட பேர் வச்சிருக்காங்க. யோசிச்சு நல்லதா ஒரு பேர அடுத்த தடவை வச்சிடறேன். இப்போதைக்கு ஒரு பழைய லேபல போட்டுக்கிறேன்.

19 நல்லவங்க படிச்சாங்களாம்:

சொல்லரசன் said...

விரைவில் நலம் பெற வேண்டிகொள்கிறேன்.உங்க கலந்து கட்டல் நல்ல இருக்கே தொடருங்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

யாவரும் நலமாக கடவுள வேண்டிக்கிறேன்

தமிழ் கவிதைக்கே விளக்கம் தெரியாம கிறுக்குபயன்னு பேர் வாங்கினேன் ஒருத்தவங்க கிட்ட (சத்தியமா சுசியில்ல) இதுல ஆங்கில கவிதை வேறயா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,,,,

ப்ரியமுடன் வசந்த் said...

இதுக்கு மருந்துசீட்டு அப்பிடின்னு பேர் வைக்கலாம்

போலிடாக்டரோட கிறுக்கல்தானே

:))))))

கோபிநாத் said...

யக்கா....;((

ராமலக்ஷ்மி said...

யாவரும் நலம் பெற பிரார்த்தனைகள்.

சொல்லரசனின் பின்னூட்டதிலிருந்து இரண்டு வார்ந்தைகள்: "கலந்து கட்டல்", நீங்கள் பரிசீலிக்கலாம் போலிருக்கே:)!

பித்தனின் வாக்கு said...

ஆகா என்னங்க போலி டாக்டர்னு சொல்லறிங்க, நான் உங்கள நம்பித்தான இனி புதுசா வரப்போற வியாதிக் எல்லாம் சிகிச்சை எடுத்துக்கலாமுனு இருந்தன். ஒகே. இரண்டு விசயம் நீங்க கவனிக்கலையா 1. இந்த மாதிரி சீசன் மாறப்ப எல்லாம் வைரஸ் காய்ச்சல் வரும் என்பதும், குடும்பத்தில் ஒருவருக்கு வந்தால் அனைவருக்கும் வரும் என்றும் தங்களுக்கு தெரியாதா? 2. அப்படி ஒருவருக்கு வந்தவுடன் காய்ச்சல் இல்லாத அனைவருக்கும் சாதாரன பாராசிட்டமால் மாத்திரை கொடுக்கனும் என்பதை நீங்கள் அறியவில்லையா?
சரி பரவாயில்லை சளி மற்றும் காய்ச்சல் சீசனில் வைரஸ் வந்தால் அனைவருக்கும் பாராசிட்டமால் கொடுங்கள். அதுபோல ஒருவருக்கு அம்மை வந்தால் அனைவரும் தள்ளி இருப்பதுடன் உடம்புக்கு கொடுதல் செய்யாத ஆண்டிபையாடிக் மாத்திரை கொடுப்பது அம்மை பரவுவதை தடுக்கும். நன்றி. அனைவரும் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள்.

கார்க்கிபவா said...

போலி டாக்டர், இந்த தொகுப்புக்கு “டானிக்கும், சில மாத்திரைகளும்”ன்னு பேரு வைக்கலாமான்னு பாருங்க.. :))

கார்க்கிபவா said...

//கேட்பவரின் நக்கலை பொறுத்து என் பதிலில் நளினம் இருக்கும். //

ஹிஹிஹிஹி

//எனக்கு ரொம்ப பிடிச்சுது. ஆனா புரிய வேண்டியவங்களுக்கு இது புரியுமான்னு தெரிய//

அவருக்கு எப்பவோ புரிஞ்சிருக்கும். நீங்க அவர ஒழுங்க புரிஞ்சிக்கோங்க...

விட்டுக் கொடுப்போமா எங்க ஆள?

கலையரசன் said...

யாவரும் நலம்ன்னு ஃப்ளாக்கையே வச்சிகிட்டு,
அங்க வலிக்குது, இங்க முழிக்கிதுன்னு சொல்றீங்களே டாக்டரம்மா?

எனிவே...
"You have places to go, people to see, lots of fun times to be enjoyed. Get well soon susi & family!"

சுசி said...

நன்றி சொல்லரசன். சொல்லிட்டீங்க இல்ல. க.க தொடரும்...


நன்றி பாதி வசந்த். அப்போ மீதி அந்த புண்ணியவதியா? ஹிஹிஹி...சத்தியம்லாம் எதுக்கு. டாக்டர் சம்பந்தப்பட்ட எதுவுமே வேண்டாம்பா.. போலீன்னு போட்டும் நம்பராய்ங்க...


வொய் கோபி வொய்??? எதா இருந்தாலும் சொல்லிட்டு அழுங்கப்பா....

நேசமித்ரன் said...

நலம் பெற பிரார்த்தனைகள்
பத்திரம்! டாக்டரம்மாவுக்கே உடம்பு சரியில்லைனா நாங்க எல்லாம் எங்க போயி வைத்தியம் பாத்துக்குறது ?
ஸ்கேன் ரிபோர்ட்டும் த்ரெட் மில் டெஸ்ட்டும்

சுசி said...

நன்றி அக்கா... எனக்கும் அப்டித்தான் தோணுது... கலந்து கட்டிட வேண்டியதுதான்.


நன்றி பித்தன். உவ்விட பாராசிட்டமால் இவ்விட பரசெத் தான் எங்கள வாழ வைக்குது. இது அதையும் தாண்டி வலிமையான வைரஸ். இன்னைக்கு நிஜ டாக்டர் கிட்ட போயாச்சு. இனிமே சரியாயிடும்.


நல்லாருங்க கார்க்கி. இந்த அட்வைசுக்காகவே இன்னொரு டேமேஜ் பதிவு போடலாமான்னு யோசிக்கிறேன்.டானிக்கும் சில மாத்திரைகளும் நல்லா இருக்கு ஆனா இல்லை.. btw உங்க ஆள நீங்க விட்டுக் குடுக்க வேண்டியதில்ல. குணா பேசியே தள்ளிக்கிட்டு போய்டுவார்.


கலை.. கழுகுப் பார்வை பாக்காதீங்கன்னா கேக்கறீங்களா. பாருங்க ஜூரத்தில இருக்கிறவள முழிக்கிதுங்கிறீங்க. நலமா இருங்கன்னு சொல்லத்தானே சொன்னேன். அதுக்கு டோட்டல் ஃபாமிலியவே கெட்ட வார்த்தேல திட்டிட்டீங்களே... அவ்...


யூ டூ நேசமித்ரன்? நான் நிஜமாவே டாக்டர் கிடையாதுங்க.... ஸ்கேன் ரிபோர்ட்டும் த்ரெட் மில் டெஸ்ட்டும்னு போட்டேன்னா மறுபடி டாக்டர் ஆக்கிடுவாங்க.

Anonymous said...

Hay Fever எல்லாம் ஸ்ப்ரே ஒண்ணு வாங்கி தினம் ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி மூக்குல அடிங்க. தும்மல், அரிப்பு எல்லாம் நின்னு போயிரும். மத்தபடி நிஜ டாக்டர் கிட்ட போங்க. காச்சலுக்கு பனடால் தருவாங்க :)

kanagu said...

seekiram udal nalam pera vendukiren :))

kanagu said...

25-vathu padhivirku enadhu vaazthukkal :)

சுசி said...

அம்மணி.. உவ்விடமும் டாக்டருங்க பனடால் தான் குடுக்கிறாங்களாஆ ?? நன்றீங்க. நிஜ டாக்டர் கிட்ட போயாச்சு. பனடாலும் அவர் கையால குடுத்தாதான் வொர்க் அவுட் ஆகுது... என்ன பண்ண :)))


முதல் வருகைக்கு நன்றி கனகு... இன்னொரு பெரிய்...ய நன்றியையும் சொல்லிக்கிறேன். நிஜமா நான் கூட கவனிக்கலைங்க... 25 பதிவு எழுதிட்டேனா??? பாவம் மக்கள்ஸ்...

இது நம்ம ஆளு said...

Be
Loving &
Openhearted
With
My
Emotions
Blow me....

:)

ISR Selvakumar said...

நாங்க சீக்கிரமா குணம் ஆய்டணும்னு வேண்டிக்கங்கப்பா... போலி டாக்டர் போலி நர்ஸ் வேலையும் சேர்த்து பாக்க வேண்டியதா இருக்கு...

இந்த வரிகளை படிச்சவுடனே சிரிச்சிட்டேன்.

பா.ராஜாராம் said...

உள்ள இருக்க மேட்டரை விடுங்க.முதல் முறையா வாசிக்கிறேன்.இவ்வளவு "சுறு சுறு" வா?கலக்கி இருக்கீங்க சுசி.great!