Pages

  • RSS

31 May, 2010

எங்க போன?

kyss r

உன் ஒற்றைக் கேள்வி!!

என் மீது உனக்கான

அத்தனை உரிமையையும்

இரட்டைச் சொல்லில் அடக்கிவிட்டாய்.

நான் வருவேன்னு தெரியாதா..

இன்னும் எவ்ளோ நேரம் வெயிட் பண்ண..

வருவியா மாட்டியா..

வழக்கமா எனக்கு முன்னாடி வந்திடுவே..

அதான் சொன்னேனே நான் வருவேன்னு..

நீ வந்திருப்பேன்னு நினைச்சேன்..

வரது கஷ்டம்னா அப்போவே சொல்லி இருக்கலாமே..

நான் வந்தாச்சு..

எப்போ வருவே நீ..

எத்தனை அர்த்தங்கள்

உன் ஒற்றைக் கேள்வியில்

உன்னைப் போலவே உன் பேச்சுக்கும்

என்னை ஆட்டுவிக்கும் சக்தி அதிகம்

நீ விட்டுப் போன பின்னும்

தட்டிப் போன அர்த்தம்

இன்னும் ஏதும் இருக்குமா என்று

உற்றுக் கேட்கிறேன் மனதுக்குள் மறுபடி

எ.. ங்..க.. போ.. ன.. ?..

sad women

30 May, 2010

ஏஞ்சல் வந்தாளே..

engle

இந்த வருஷத்துக்குரிய முதல் விருது.. வழங்கிய நண்பர் ஜெய்லானிக்கு என்னோட நன்றிகள். வா அழகே வானு கூப்டு அல்லாருக்கும் குடுத்திருக்காரு.

வழக்கமான எந்த ரூல்சும் போடலை ஜெய்லானி. அதாங்க.. எத்தனை பேருக்கு குடுக்கணும் நான்னு சொல்லல. இருந்தாலும் எனக்கு பிடிச்ச அஞ்சாம் நம்பர் சட்னு மைண்ட்ல வந்ததால அஞ்சு பேருக்கு குடுக்கலாம்னு இருக்கேன்.

1. சீமான் கனி

2. தியா

3. சந்தியா 

4. அப்பாவி தங்கமணி

5. மதுமிதா

இதையும் விட போன வருஷம் சின்ன அம்மிணியும், சுதா அண்ணாவும் விருது கொடுத்திருந்தீங்க. மறந்தே போய்ட்டேங்க. மன்னிச்சுக்கோங்க. ரொம்ப நன்றி ரெண்டு பேருக்கும். தவறித் திருந்துவது மனித இயல்புதானே. (அடிங்.. நீயும் தத்துவம் சொல்ல ஆரம்பிச்சிட்டியா.. மொத்துவம் கிடைக்க முன்னாடி ஓடிப் போய்டு)

ஆங்.. சொல்ல மறந்துட்டேன்.. அதான் மறந்துட்டேனே.. அப்புறம் எங்கனு சொல்றது.

போய்டாதிங்க. இருங்கஅஅஅஅ.. இது சொல்ல மறந்த விஷயம் இல்லை. வேற. கொஞ்சம் ஒரு மாதிரியா.. மனக் கஷ்டமா இருந்த, இருக்கிற  விஷயம் பத்தி உங்க கிட்ட சொல்லலாம்னு நினைக்கிறேன்.

j 006

கார்க்கி.. நேற்றைய நர்சிம் பதிவு.. நான் என்ன சொல்ல வரேனு உங்களுக்கு புரியலைன்னா அத நான் நம்பமாட்டேன். ஏன்னா என்ன விட உங்களுக்கு பதிவர்கள், பதிவுலகம் பரிச்சயமானது. என்னதான் நான் இவ்ளோ தூரம் வந்திட்டாலும் பதிவுலகத்தில நடக்கிற பல பிரச்சனைகள் எனக்கு தெரியல, புரியல.

அவர் வயசில என்ன விட சின்னவரா இருந்தாலும் நான் இந்த பதிவுலகத்துக்குள்ள குதிக்க காரணமானவர். இதுக்கு முன்னாடியும் அவர பத்தி எழுதி இருக்கேன்.. ஆனா இப்டி ஒரு விஷயம் அதாவது குருவுக்கு அட்வைஸ் பண்றா மாதிரி எழுதுவேன்னு நினைக்கல.

இருந்தாலும் அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றதில்லைங்கிற என் கொள்கையையும் மீறி அவருக்காக சில வரிகள். தயவு செஞ்சு யாரும், முக்கியமா கார்க்கி.. அவரோட சகா/சகிகள்.. தப்பா எடுத்துக்காதிங்க.   அவங்க பிரச்சனை எனக்கு புரிந்தும் புரியாமலுமா ஓரளவுக்கு புரிஞ்சுது. ஓரளவுக்கு புரிஞ்ச விஷயம் பத்தி பேசக் கூடாதுன்னுதான் நான் எந்தக் கருத்துமே, எங்கேயுமே சொல்லல. ஆனா நான் மதிப்பும் மரியாதையும் வச்சிருக்கிற ஒரு நல்ல பதிவர் கார்க்கி இப்டி செய்தது சரி இல்லை. அவர் கமண்ட்ஸ் இன்னமும் பிரச்சனைய பெருசாக்கினா மாதிரி எனக்கு தோணுது. அவர் கோபம், துணிவு, இடுக்கண் களையும் நட்பு எல்லாம் பதிவுகள் மூலமா தெரிஞ்சிருந்தாலும் நேத்து அவர் காட்டியது கொஞ்சம் அதிகப்படியான அக்கறையோனு தோணுது.. இன்னொரு வகையில பாத்தா அவர் இத சீரியஸா எடுத்துக்காம விளையாட்டா கமண்ட்ஸ்ல கும்மினாரான்னும் தெரியல.

அவர் பதிவ அதிகம் படிக்கிற ஒரு வாசகி என்கின்ற முறையில இத எழுத நினைச்சேன். இருந்தாலும் இது சரியா, தவறா, இல்லை நாந்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கேனா.. எனக்குத் தெரியல.. என் நண்பர்கள் நீங்களும்தானே மக்கள்ஸ்.. அதான் உங்க கிட்ட பகிர்ந்துக்கிட்டேன். உங்களுக்கு தோணுறதை சொல்லுங்க. சண்டை வேண்டாம். ரத்தம் வேண்டவே வேண்டாம். திட்டு?? பாத்து.. பாவம் நான்.

என் வழக்கமான ’வர்ட்டா’ சொல்ல மனசு வர்லை.. என்னமோ போங்கப்பா.. இந்த பதிவர்களையே புரிஞ்சுக்க முடியல..

26 May, 2010

கடவுளும் நானும்..

கடவுள் எனக்கு எப்ப பரிச்சயமானார்னு எனக்கு நினைவில்ல.. நினைவு தெரிஞ்ச நாள்ள இருந்தே எனக்கு அவர தெரியும். கோயில், கடவுள்னா  வெறும் கூட்டம், பஜனை, பிரசாதம் இல்லை. அதுக்கும் மேல எதுவோ  ஒண்ணுன்னு எப்ப இருந்து நினைக்க ஆரம்பிச்சேன்னு தெரில. எப்போதும் அம்மா கூடவே சுத்துனதால அவங்க செஞ்சத பாத்து நானும் சாமி கும்பிட ஆரம்பிச்சு அப்டியே வழக்கத்துல வந்துதா இதுன்னு எனக்கு புரியலை. ஆனா எனக்கு கடவுள் மேல நிறைய்ய்ய்ய்ய நம்பிக்கை இருக்கு. எப்போதும் என் வேண்டுதல் இதுவா தான் இருக்கும்.

கடவுளே.. எல்லாரும் நல்லா இருக்கோணும்.. ஒருத்தர்க்கும் ஒரு வருத்தமோ.. கஷ்டமோ வரக் கூடாது.. எல்லாரையும் நல்லபடியா பாத்துக்கோங்க.

இதுக்கு அப்புறம் தான் எனக்கான வேண்டுதல்  வரும். தேவை இருந்தா மட்டும். இல்லேன்னா நான் சாமி கிட்ட கேக்குறது இவ்ளோதான். இதனால தான் என் ப்ளாக் பேரு கூட யாவரும் நலமாச்சு.

எப்போதும் எங்க வீட்ல வெள்ளிக்கிழமை குடும்பமா கோயிலுக்கு போய் வருவோம். வந்து வீட்ல பஞ்சபுராணம் சொல்வோம். அப்பா தீபம் காட்டுவார். நான் இங்க  வர வரைக்கும் இது நடந்தது. தவிர விசேஷ நாட்கள்லவும் இது நடக்கும். பூஜை ரூம்ல ஒரு உண்டியல் இருக்கும். எதுனா வேண்டுதல்னா, யாருக்காவது உடம்புக்கு முடியலைன்னா உடன பணம் எடுத்து வைப்பாங்க அம்மா.

அம்மா வழி தாத்தாவ அப்புச்சின்னு சொல்வோம், அவர் குல தெய்வம் வைரவர். எங்க  வீட்டுக்கு  மூணாவது வீடு அப்புச்சி வீடு. அவங்க வீடு முன்னாடி வைரவர் கோயில். அங்க போம்போதும் வரும்போதும் ஒரு தடவை நின்னு வணக்கம் போட மறக்கிறதில்லை. பரீட்சைக்கோ, வெளியூருக்கோ, இல்லை எதுனா முக்கிய, நல்ல விஷயத்துக்கோ போக முன்னம் ஓடிப் போய் அவர ஒரு வணக்கம் வச்சுக்குவோம். அஞ்சாவது வரைக்கும் வைரவருக்கு பூமாலை கட்டி பாமாலை பாடுறது என் வழக்கம். அப்புச்சி எனக்காகவே நிறைய்ய பூக்கள் வளர்ப்பார். பக்கத்து வீடுகள்லயும் பூப்பறிக்க எனக்கு உரிமை கிடைச்சுது. அதனால அவருக்கு எப்போதும் பூவுக்கு குறைவில்லை. ஆறாவது வந்ததும் டியூஷன் போக ஆரம்பிச்சதால என் கோயில் தொண்டு குறைஞ்சாலும் நேரம் கிடைக்கும்போது மாலை கட்டி எடுத்துட்டு போக மறக்கிறதில்லை.

அப்பா கிராமத்தில அப்பப்பா குல தெய்வம் வீரபத்ரர். அப்பப்பா,அப்பாச்சி, இன்னும் சில அப்பா வழி உறவுக்காரங்களுக்கு சாமி வரும். வருஷத்தில ஒரு தடவை வீரபத்ரருக்கு திருவிழா நடக்கும். மடை போடுறதுன்னு சொல்வாங்க. நாலு ஜாம பூஜையோட காலேல பெரிய பூஜை நடக்கும். அங்கயே மரத்துக்கீழ நைட்டு பூரா இருப்போம். சமையலுக்கு பாவிக்கிற பானைங்க தொடக்கம் மீதமான அரிசி, காய்கறி, நேந்து விட்ட கோழி, ஆடுங்க வரைக்கும் மதியம் ஏலம் நடக்கும். அத்தனை உறவுக்காரங்களும் வந்து அவ்ளோ சந்தோஷமா இருக்கும். இப்போ அடுத்த தலைமுறையா அத்தை, சித்தப்பாவுக்கு சாமி வருது. அப்பாவுக்கும் ஒரே ஒரு தடவை வந்துதாம். நான் இங்க வந்ததுக்கு அப்புறம்.

எம் மதமும் சம்மதமே கொள்கை எங்களது. எங்க ஊர்ல முன்னாடி முஸ்லிம்கள் இருந்தப்போ பள்ளிவாசல் கடந்துதான் நாங்க நிறைய இடத்துக்குப் போக வேண்டி இருந்துது. அப்டி போம்போது அல்லானு மனசுக்குள்ள ஒவொரு தடவையும் நினைச்சுப்பேன். பீச்சுக்கு போறப்போல்லாம் தேவாலயம், மாதா கோயில் போய் மெழுகுவத்தி ஏத்த மறக்கிறதில்லை. குழந்தை யேசுவுக்கு வேண்டுதல் வச்சு அம்மா பன், பிஸ்கட்னு வாங்கிப்போய் குடுப்பாங்க. அதை விட கொஞ்சம் தூரத்தில பிள்ளையார் கோயில். அவரையும் அப்பப்போ போய் பார்ப்போம்.

ஊர விட்டு போய் வேற ஊர்ல இருக்க வேண்டி வந்தப்போல்லாம் அந்தந்த ஊர் கோயில்களுக்கு வெள்ளியானா போவோம். சாய்பாபா பஜனை.. ஒரு தடவை யெகோவா பிரார்த்தனை கூட போனோம். நான் பதினோராம் வகுப்பு வேற ஊர்ல அப்பா ஃப்ரெண்ட் வீட்ல தங்கி படிக்க வேண்டி வந்தப்போ எனக்கு துணையா இருந்தது நாகபூஷணி அம்மன். செவ்வாய்க் கிழமை விரதம் இருந்து ஸ்கூல் போய் வந்து சாயந்தரம் பூஜைக்கு போவேன்.  ஒரு அம்மாதான் பூஜை செய்வாங்க. அவங்க சாமி வந்து அருள் சொல்வாங்க. அது தவிர யார் கிட்டவும் பேச மாட்டாங்க. வேப்பிலை, மஞ்சள் அரைச்சு விட்ட தண்ணிய ஒரு சொம்பு தலைமேல வார்த்து, கைல பூ குடுப்பாங்க. கோவில சுத்தி வந்து அம்மனுக்கு பூவை வைக்கணும். என்னோட மனசில இருக்கிற அத்தனை விஷயங்களையும் அம்மன் கிட்ட சொல்ல ஆரம்பிச்சேன். அப்போதான் கடவுள் எனக்கு ஃப்ரெண்டாயும் ஆனது.

முதல்ல அக்காவும், அப்புறம் எல்லாருமா அதே ஊருக்கு வந்தப்போ வாரம் ஒரு கோயில் போய் வருவோம். அந்த சமயம் ஒரு பெரிய பிரச்சனை எனக்கு வந்தது. மனசுக்குள்ள அழுதிட்டே ஒருநாள் வேண்டிக்கிட்டு இருந்தப்போ திடீர்னு வந்து சொன்னாங்க ”எதுக்கு கலங்கறே.. தெளிவா இரு. இதுல உன் தப்பு எதுவும் இல்லை”ன்னு. எனக்கு சிலிர்த்துப் போச்சு. கல்யாணம் பேசி முடிவானதும் ஊர் எல்லையில இருந்த ஐய்யனாருக்கு அப்பா வாழைத்தார் நேந்து வச்சிருந்தார். அம்மா வர முடியாததால நான் ரஜி கூட போனேன். மனசுக்குள்ள ஆரம்பிச்ச அழுகை ஒரு கட்டத்தில கண் வழியா பொலபொலனு கொட்ட ஆரம்பிச்சிடுச்சு. அங்கேயும் ஒரு அம்மாதான் பூஜை பண்ணுவாங்க. உடம்புக்கு முடியலைன்னு அவங்க அன்னைக்கு கோயில் வர்லை. அவங்க மகன் பூஜை பண்ணிட்டு இருந்தார். திடீர்னு விபூதி குடுக்குற சமயம் வந்து என் கைல நூல் முடிஞ்சு கிட்டே சொன்னாங்க ”எதுக்கு இந்த கலக்கம்? எல்லாம் நல்லதே நடக்கும். தெளிவா போ. ஐய்யனார் இருக்கார்ல. அதுக்கும் மேல உன் அப்பா இருக்கார்”ன்னு. நாங்க வீட்டுக்கு போனதும் எதோ அலுவலா வெளியூர் போய்ட்டு லேட்டா போன அப்பா கிட்ட சொன்னாங்களாம் “உடம்பு சரி இல்லைடா தம்பி. இருந்தாலும் ஐய்யன் என்ன கோயில் போன்னு சொன்னார். வந்தேன். உன் பொண்ணுக்காகத்தான்  சொன்னார்னு வந்ததும் தெரிஞ்சுக்கிட்டேன்” ன்னு. இப்போ நினைச்சாலும் மயிர் சிலிர்க்கும். 

மாத விலக்கு சமயத்தில எங்களுக்கு பூஜை ரூம் தவிர வீடு பூரா போய் வர முழு சுதந்திரம் இருந்துது. கிணத்துல தண்ணி எடுக்க மாட்டோம். வீட்ல யாருமில்லாதப்போ எதுனா எடுக்க பூஜைரூம் போக வேண்டிய கட்டாயம் வந்தா போவோம். அப்புறம் அம்மா மஞ்சத்தண்ணி தெளிச்சு கழுவி சுத்தம் பண்ணுவாங்க. உள்ள போனோம்கிறத சொல்ல மறந்த சந்தர்ப்பங்களும் உண்டு. பொதுவாவே நான் பசி தாங்க மாட்டேன். அதனால சனி பகவானுக்காக சில சமயம், நவராத்ரி சமயம் தவிர நான் விரதம் இருந்ததில்லை. எனக்கும் சேர்த்து அப்பா, அம்மா, இப்போ மாமியார் இருப்பாங்க.

இங்க வந்ததுக்கு வீட்ல செஞ்ச அதே வெள்ளி பூஜை செஞ்சிட்டு வந்தேன். என்னவர் சில சமயம் வருவார். பல சமயம் தனியா. அத்தோட வெள்ளி, மற்றும் விசேஷ தினங்கள், விரத காலங்கள்ல வெஜிடேரியன் சாப்டேன். என்ன ப்ராப்ளம்னா இங்க பெரும்பாலும் நண்பர்களோட விருந்தோ, விசிட்டோ வெள்ளிக்கிழமைதான் நடக்கும். எனக்காக அவங்க மெனுவ எக்ஸ்ட்ராவா பண்ண வேண்டியதாச்சு. எதுக்கு தேவை இல்லாத கஷ்டம் அவங்களுக்குன்னுட்டு கோயில் போனா வெஜ் போகலேன்னா நான்வெஜ்ங்கிற பாலிசிக்கு வந்துட்டேன். தனியா இருந்த பூஜை ரூம் பசங்க தனி ரூம்கு ஷிஃப்ட்டானதும் ஸ்டோர் ரூம்கு ஷிஃப்ட் ஆயிடுச்சு. கெஸ்ட் ரூம பூஜை ரூமா பாவிக்கிறதில எங்களுக்கு உடன்பாடில்லை.  விசேஷ நாள்ல தேவாரம் சொல்லி வேண்டிக்குவோம் எல்லாருமா. மத்தபடி நாந்தான் தினமும் குளிச்சதும், தூங்க முன்னும் பூஜைரூம் போவேன். மாமியார் வரும்போது விரதம் இருந்தா சமைக்க, மாமனார் திதி, இல்லை கோயிலுக்கு எதுனா பிரசாதம் செஞ்சு எடுத்துட்டு போகன்னு கட்டிங் பிளேட் தொடக்கம் அத்தனையும் தனியா வெஜ் சமையலுக்குன்னு வச்சிருக்கேன்.

ஊருக்கு போனப்போ முதல்ல போறது கோயில்தான். இங்க ஒரு பிள்ளையார் இருக்கார். ஏழுமலை ஆனந்த சித்தி விநாயகர். இப்போ அவர்தான் எனக்கு எல்லாமே. 21ம் தேதில இருந்து அவருக்கு வருடாந்திர பத்து நாள் திருவிழா ஆரம்பம். நாங்க முதல் நாள் பூஜை உபயம் எடுத்திருக்கோம்.

pillaiyaar

என்னவருக்கும் நம்பிக்கை இருக்குன்னாலும் அவர் மனமுருகி கும்பிட்டு நான் பாத்ததில்லை. ஆனா புதுசா வண்டி வாங்கினா முதல்ல கோயில் தான் போவோம். கெட்ட கனவு கண்டேன் சாமிக்கு காசு எடுத்து வைக்கிறியாம்பார். எப்பவுமே பரீட்சை, தவிர முக்கியமான எதுனா, முதல்ல பிள்ளையார் சுழி போட்டு எழுத ஆரம்பிக்கிறது மட்டுமில்லாம சட்னு ஒரு தடவை கடவுளை மனசுக்குள்ள நினைச்சுக்கிறது என் வழக்கம். கோயில் போய் வந்தா என்னவோ ஒரு நிம்மதி. கொஞ்ச நேரம் பொறுப்பை எல்லாம் சாமி கிட்ட ஒப்படைச்சுட்டதா ஒரு இலகுவான மனநிலை. எல்லாம் அவர் பார்த்துப்பார்ன்ற திருப்தி. தலையணையில தலை சாய்க்கும்போது எப்போதும் சொல்வேன் அம்மாளாச்சி, தெய்வமே, முருகா, என் பிள்ளையாரப்பா எல்லாரையும் காப்பாத்து.. அதே வேண்டுதலோடவே எந்திரிப்பேன்.

கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி எனக்குத் துணையாய் எப்போதும் என் கூட இருக்கிறதான அந்த நினைவு எனக்கு வேண்டி இருக்கு. பசங்களுக்கு கோயில்னா பூஜை முடிஞ்சதும் ஓடி விளையாடுற,  ஃப்ரெண்ட்ஸ் யாரும் வராத நாட்கள்ல உலகத்திலயே போரான ஒரு இடம்.  அவ்ளோதான். நான் அவங்க கோயிலுக்கு வரணும்னு விரும்புவேன். சமயத்தில அப்பா கூட பிளான் பண்ணி முக்கா குடும்பமும் மட்டம் போட்றுவாங்க. நான் தனியா போய் வருவேன். என் கடவுள் நம்பிக்கை பத்தி அவங்களுக்கு சொல்வேன். பணம் எடுத்து வைக்கிறது உட்பட. ஆனா நம்புறதும் விடுறதும் அவங்க இஷ்டம்.

இம்மாம் பெருஸ்ஸா எழுதிட்டேன். திட்டணும்னா சின்ன அம்மிணிய திட்டுங்கப்பா.. அவங்கதான் தெரியாத்தனமா என்னய இத எழுத சொன்னாங்க. அம்மிணி.. எழுத ஆரம்பிச்சதும் நிறைய்ய விஷயங்கள் நினைவுக்கு வந்து தொடர் பதிவே தொடர் பதிவு ரேஞ்சுக்கு ஆகி போச்சு. இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயத்தை எழுத வைச்சத்துக்கு நன்றி.

சீமான் கனி, , அப்பாவி தங்கமணி, இயற்கை ராஜி, மங்குனி அமைச்சர், ஜெய்லானி  நீங்க இந்த தொடர தொடரணும்னு கேட்டுக்கிறேன்.

வர்ட்டா..

23 May, 2010

முறைக்காதிங்கப்பா..

காலேல எந்திரிக்க லேட்டாச்சேன்னு திட்டிக்கிட்டே (அட உங்கள இல்லேங்க.. அவளதான் திட்டிக்கிறா) ஒரு வழியா அரக்கப்பரக்க ரெடியாகி நான் கீழ வரவும் திறந்துடு சீசேம் சொல்லாமலே எங்க பெட்ரூம் கதவு திறந்து தூக்கம் வழியிற கண்ணோட கண்ணாளன் எட்டிப் பாக்கவும் சரியா இருந்துது. (யப்பா.. எம்மாம் பெரிய வசனம்.. அசத்திட்டேடி சுசி)

”என்னடி.. இன்னுமா நீ போகலை?????”

இவ்ளோ குட்டிக் கேள்விய எதுக்கு இப்டி அழுத்த்த்திக் கேக்கறார்னு பாக்கறிங்களா.. நான் வேலைக்குப் போய்ட்டேன்னு நினைச்சு ரூம விட்டு வெளிய வந்திருப்பார். என்ன பாத்ததும் ஷாக். (அதெல்லாம் இல்லை.. காலேலவே பேய் முகத்தில முழிச்சிட்டதால பயந்துட்டார்ங்க அவர்)

”அதில்லப்பா.. இப்போ இருட்டு ஆரம்பிச்சிடுச்சில்ல.. நான் வேற ஜன்னலாண்டை உக்காந்திருக்கேன்ல.. வெளிய இருட்டில இருந்து பாக்குறவங்களுக்கு வெளிச்சத்தில உக்காந்திருக்கிற என்ன அப்டியே  தெரியும்ல.. அதான் பாத்து பாத்து என்னய அழகுபடுத்திக்கிட்டதில கொஞ்சம் லேட்டாச்சு.. நாளைக்கு வழக்கத்த விட ஒரு ஒன் அவர் சீக்கிரம் எந்திரிக்கணும்.. எப்டிப்பா.. நான் அழக்கா இருக்கேனா??”

பதில எதிர்பார்க்காம கேள்விய அப்டியே விட்டுட்டு கார் கீய மட்டும் மறக்காம எடுத்துட்டு ஸ்டோர் ரூம் வழியா கராஜ்ஜுக்கு எஸ்ஸாகிட்டேன். கீ ஹால்டர் இருக்கிறது எங்க ரூம் பக்கத்தில. மறந்துட்டு மறுபடி போக முடியாதே.. ஏன்னா அவர் கண்டிப்பா முறைச்சிட்டு இருப்பார்னு எனக்குத் தான் தெரியுமே.

\\\\\/////          \\\\\/////          |||||          \\\\\/////          \\\\\/////         

தலைவலி, தொண்டைவலி, ஜலதோஷம், ஜூரம்.. எல்லாம் ஒண்ணா தாக்குதலை நடத்திடுச்சு. சோஃபால படுத்து ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தேன். என்னவர் டிவி பாத்துட்டு இருந்தார். அதாவது ஃபுட்பால் மேச்.

“சவுண்ட கம்மி பண்ணுங்கப்பா”

கம்மியாச்சு. அடுத்து ஃபோன் பேச ஆரம்பிச்சார்.

”அட.. இவ்ளோ ஒரு நல்ல சான்ஸ மிஸ் பண்ணிட்டாண்டா.. இரு.. அதான்.. அதான்.. அத்.. ஏய்.. எடு.. பாரு எங்க பாஸ் பண்ணுது லூசுன்னு.. இரு..அதான்.. அடி.. கோல்ல்ல்ல்.. செம கோல்டா மச்சான்.. இவன் இந்த கார்னர்ல இருந்து பாஸ் பண்ணும்போது மறுபடி சொதப்பிட்டான்னு நினைச்சேன்.. நல்லவேளை அவன் அங்க இருந்தான். ஹஹஹா.. ம்?? ஆமால்ல.. ஹொஹொஹோ.. இருந்தாலும் முத சான்ஸ் விட்டி..”

”ப்ச்”

தலை திருப்பி என்ன ஒரு லுக்கு..

“சரி மச்சான்.. வைக்கிறேன்.. சரி.. ஓக்கே ஒக்கே.. நீ சீக்கிரம் வா”

ஃபோன் வைக்கப்பட்டதும் நானும் நிம்மதியா உறங்க ஆரம்பிச்சே..

”அம்மாச்சி”

விலுக்னு முழிச்சுப் பாத்தேன். உறங்கல கிட்டத்தட்ட ஒரு பத்து நிமிஷம் தூங்கிட்டேன். அம்முவுக்கு இல்லை சதுருக்கு கம்பியூட்டர் கேம் விளாடும்போது என்னிக்கு ஒரே தடவைல காது கேட்டிருக்கு இன்னைக்கு கேக்க. நாலாவது அம்ம்ம்மாச்சிக்குத்தான் பதில் சவுண்டு விட்டா அவ கீழ இருந்து.

“என்னப்பா”

“அப்பா மொபைல் ரூம்ல இருக்கும் பாருங்க.. எடுத்துட்டு வாங்கம்மா..”

”என்னப்பா??”

போச்சுது போ. ஒண்ணு அவ கேம்ல அடுத்த லெவல் போக இன்னும் கொஞ்ச நேரம் இருக்கணும் இல்லை கேம சேவ் பண்ணிட்டு இருக்கா.

“அப்பா மொபைல்.. ரூம்ல.. இருக்கும் பாருங்க.. எடுத்துட்டு வாங்கடா..”

“எங்க இருக்குப்பா.. காணோம்”

“ரூம்ல தாண்டா.. டிவி முன்னாடி இல்லை பெட்ல.. இல்லேன்னா நைட் லாம்ப் பக்கத்..”

“ப்ப்ப்ச்ச்ச்.. எதுக்கு இங்க இருந்து கத்தறிங்க.. அதான் மத்த ஃபோன் இருக்கில்ல.. அதில இருந்து அவ மொபைல்க்கு கால் பண்ணி சொல்லலாம்ல”

“ஏய்.. என்ன சொல்றே.. மாடில இருந்து கீழ ரூம்ல இருக்கிற பொண்ணுக்கு ஃபோன் பண்ணணுமா நானு”

“அது கஷ்டம்னா நீங்களே கீழ போயி எடுத்துட்டு வாங்களேன். யாரு வேணாம்னா. உடம்புக்கு முடியலைன்னு படுத்துட்டு இருக்கிறவள கொஞ்ச நேரம் தூங்க விடறிங்களா பாருங்க”

“ஹலோ.. உடம்புக்கு முடியலைன்னா ரூம்ல போய் படுத்துக்கணும். இப்டி நடு ஹால்ல இல்லை. மறுபடி தூங்குறத்துக்கு முன்னாடி ரூம்ல போயி படுத்துக்கோ”

“நான் நோயாளி. எனக்கு முழு ரைட்ஸ் இருக்கு. இங்கதான் நான் படுத்துக்குவேன்”

“நல்லா படுத்துக்கோ.. யார் வேணாம்னா.. இன்னும் அஞ்சு நிமிஷத்தில ரமேஷ் வேற வரான்”

”எந்த குடை உங்களுக்கு பிடிக்குமோ அத எடுத்து வைங்க.. காலிங் பெல் சத்தம் கேட்டதும் உடனவே போயி பிடிச்சுடறேன்”

சொல்லிக்கிட்டே எந்திரிச்சு காஃபி டேபிள சுத்தி.. அவர் பக்கம் போகாம மாடிப் படிய நோக்கி மூவாயிட்டேன். ஏன்னா அவர் கண்டிப்பா முறைச்சிட்டு இருப்பார்னு எனக்குத் தான் தெரியுமே.

paraply

பி.கு:- யாராவது வீட்டுக்கு வராங்கன்னு சொன்னா

”அப்டியா.. ஓடிப் போயி குடையப் பிடி”

ன்னு சொல்றது எங்க வழக்கம். இப்போ அது கிண்டலா சொல்றதா ஆயிட்டாலும் அந்தக் காலத்தில ரெண்டு விஷயத்துக்காக இது வழக்கத்தில இருந்ததா அம்மம்மா சொல்வாங்க. ஒண்ணு பணம் படைச்சவங்க ஏழைங்க வீட்டுக்கு வரப்போ ஏழைங்க மரியாதைக்காக ஓடிப் போயி குடை பிடிச்சு ரோட்ல இருந்து வீட்டுக்கு கூட்டிட்டு வருவாங்களாம். ரெண்டாவது சில பணம் படைச்சவங்க குடை பிடிக்கன்னு கூடவே  ஒருத்தங்கள கூட்டிட்டும் வருவாங்களாம். இப்போ ரெண்டுமே  வழக்கத்தில இல்லாம போயிட்டாலும் நாங்க இன்னமும் பேச்சு வழக்கத்துல வச்சிருக்கோம்ல..

முறைப்புக்கள் தொடரும்..

வர்ட்டா..

19 May, 2010

இலவசமா ஒண்ணும் கிடையாதா??

Bilde000 (2) காலேல ஒன்பது மணிக்கு எந்திரிச்சு வீட்ல தேசியக் கொடி பறக்க விட்டதோட சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இனிதே ஆரம்பமாச்சு. மழை இல்லை. ஆனா குளிர் + காத்து.

 

 

 

 

Bilde003 ஒரு வழியா ரெடி ஆகி.. குடை, குளிருக்கேத்த ட்ரஸ், வூல் மிக்ஸ்ட் கோட், பூட்ஸ் சகிதம் 15:45 கிளம்பி முதல்ல ஸ்கூல் போனோம்.

 

 

 

Bilde004 (5) பொட்டிக் கடைல எல்லாம் ரெடியா அடுக்கி வச்சிருந்தாங்க. பரேட் வந்து தேசிய கீதம் பாடினதும் தான் வியாபாரம் ஆரம்பம்னு சொல்லியும் குளிர்ல சூடா hot dog சாப்ட நிறையப் பேர் அவசரப்பட்டாங்க. கிடைச்ச காப்ல எது என்ன விலைன்னு பாத்து வச்சுக்கிட்டேன். கண்ணாளன் முடியாதுன்னு சொன்னதால நான் களத்தில சாரி.. கடைக்குள்ள குதிக்க வேண்டியதாச்சு. கூட நாலு பேர். ஒருத்தர் hot dog ரெடியா தான் எடுத்து வைக்கிறதா சொன்னார். ஐஸ் கிரீம் பாக்ஸ் ஒருத்தர் ஓபன் பண்ணி குடுத்தார். க்ளவ்ஸ் மறந்துட்டேனா.. குளிர்ர்ர்.. ஒருத்தங்க மத்த இடங்கள்ல போயி சில்றை எடுத்து வரதா ஒத்துக்கிட்டாங்க. கண்டிப்பா நிறைய பேரு நோட்ட நீட்டுவாங்கனு தெரியும்.

அப்பப்போ எல்லாரும் வந்து எப்போ வியாபாரம் ஆரம்பம்னு கேக்கிறதோட விலையும் விசாரிச்சுட்டு போனாங்க. ”அப்போ இங்க இலவசமா எதுவும் கிடையாதா?”னு ஒருத்தர் கேட்டார். “ஏன் இல்லை.. ஹக், கிஸ் தாராளமா கிடைக்குமே”ன்னு சொன்னேன். “அய்யே.. நீங்கதான் குடுப்பிங்கன்னா இலவசம்னா கூட எனக்கு வேணாம்”னு சொன்னதோட எஸ்ஸாயிட்டார் கேட்டவர். அவர் பதில்ல இருந்து கேட்டது யாரா இருந்திருக்கும்னு நான் சொல்ல வேண்டியதில்லை உங்களுக்கு. அம்மு கேட்டா அவ ஃபேவரிட் urge சோடா என்ன விலைன்னு. 25குரோன்ஸ்னேன். என்னம்மா இவ்ளோ விலை சொல்றிங்கன்னா. கூட நின்னவர் கிட்ட அவ சொன்னத சொன்னேன். அவர் சொன்னார். அதான் சுதந்திரதின விலைனு. எல்லாம் அப்டிதான் கொஞ்சம் விலை ஜாஸ்தி. அதே சோடா கடேல 10 குரோன்ஸ் கம்மி.

பரேட் 16:17க்கு வந்து, தே கீ பாடின அடுத்த செக்கண்ட் வியாபாரம் சூடு பிடிச்சுது. கொஞ்ச நேரம் வேடிக்கை மட்டும் பாருங்க.

Bilde005 Bilde007

செம ஜாலியா இருந்துதுங்க. குட்டிப் பசங்க மட்டுமில்ல பெரியவங்க கூட எத வாங்குறதுனு முழிச்சுட்டு இருந்தாங்க.

”சோடானா எது?? கோக், பெப்ஸி, ஃபாண்டா??” ”பெப்ஸி.. இல்லை கோக்” கண்டிப்பா சொல்லியே ஆகணும் நானு. கோக் உடனவே தீர்ந்து போச்சுங்க. அவ்வ்..

”ஐஸ்னா எது?? சாக்லட் ஃப்ளேவர் இல்லை ஸ்ட்ராபெரி..” ”இது பிடிக்காது எனக்கு.. மாத்திக் குடுக்கறியா??” ”சரி.. போட் ஐஸ் இல்லை க்ளவுன் ஐஸ் குடுக்கட்டுமா??”

“எனக்கு hot dog ப்ரெட் இல்லாம சாசேஜ் மட்டும் வேணும்” “எனக்கு கெச் அப் வச்சு தனியா ப்ரெட் தான் வேணும்”

எத்தனை முகங்கள்.. ரொம்ப நேரம் நின்னு யோசிச்சவங்க, பட்னு சொல்லி வாங்கிட்டு போனவங்க, ஒரு தடவைக்கு ரெண்டு தடவை மீதி சில்றை சரி பாத்தவங்க, 20 குரோனுக்கு ஐஸ் வாங்கிட்டு 500 குரோன் நோட்ட நீட்னவங்க, எண்ணி எண்ணி சில்றைய கைல குடுத்தவங்க, நீயே எண்ணி எடுத்துக்கோன்னு குடுத்தவங்க, முன்னாடி டிஷ்யூ இருந்தும் எங்கேனு கேட்டவங்க, ஒரு ஐஸ் வாங்கிட்டு அஞ்சு டிஷ்யூ எடுத்துட்டு போனவங்க, என்ன வாங்கலாம்னு என் கிட்டவே ஐடியா கேட்டவங்க..

சில்லறை தட்டுப்பாடு வந்ததால சிலருக்கு அஞ்சு பத்து குரோன்ஸ் திடீர் கழிவு விலை. பறவால்ல ஸ்கூல் செலவுக்குதானே இருக்கட்டும்னு சொன்னவங்க சிலர்னா, அப்டியா ரொம்ப தாங்ஸ்னு சொன்னவங்க சிலர். ரொம்ப கஷ்டமான விஷயம் என்னன்னா மூணு குட்டிப் பசங்க திரும்பி மீதி சில்றை எடுக்குறத்துக்குள்ள போய்ட்டாங்க. ரெண்டு பேர தேடிட்டு போனேன். கூட்டத்துல கண்டு பிடிக்க முடில. ரெண்டு பேர தேட முடில, நிறைய பேர் வெயிட் பண்ணிட்டு இருந்ததால. கூட இருந்தவங்க சொன்னாங்க இந்த சமயத்துல இதெல்லாம் சகஜம். பேசாம விடு. மறுபடி வந்தா குடுக்கலாம்னு. இருங்க மீதி காசு குடுக்கறேன்னு சொல்லியும் அவங்க போனது எனக்கென்னமோ இன்னமும் மனசுக்கு கஷ்டமா இருக்கு.

அப்ப்ப்பா.. என் காய்ச்சல், தலைவலி எல்லாம் பறந்து போச்சு. ரெண்டு மணி நேரம் எப்டி போச்சுன்னு தெரில. இனிமே டவுனுக்கு போலாம் வானு என்னவர் வந்து சொன்னதும்தான் மணி ஆறானது தெரிஞ்சது. கார்ல எல்லாரும் ஏறியாச்சுல்ல.. சீட் பெல்ட் போட்டு சமத்தா இருக்கணும்.. ஏன்னா மறந்த தலைவலி எனக்கு மறுபடி வந்தாச்சு.

பூக்கள் நான் முன்னாடியே சொன்னா மாதிரி இல்லை. டுலிப்ஸ் வச்சு சமாளிச்சிருந்தாங்க. அதுவும் ஒரு சைட்ல சரியா பூக்கலை. மரங்கள் பாருங்க. இப்போதான் லைட்டா துளிர்க்க ஆரம்பிச்சிருக்கு. ஆனா ஒரு அதிசய மரம் பலூன் பூ பூத்து இருந்துது.

DSC00101 DSC00102 DSC00103 DSC00109

Bilde011 இந்த நேரம் ரெஸ்டாரண்ட்ல சாப்டுட்டோ இல்லை வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டோ மறுபடி நைட் வாண வேடிக்கை பார்க்க வருவாங்க. அதனால கூட்டம் கம்மியா இருக்கு. இந்த வருஷம் அவங்க கல்ச்சரல் டான்ஸ் Folkedans ம்பாங்க.. மிஸ் பண்ணிட்டேன்.

DSC00100 பூந்தொட்டி அருகில் குப்பைத்தொட்டி. நான் கவனிக்கல. அம்முதான் காட்டினாங்க.

 

 

 

 

 

 

DSC00127 இங்கதான் பாரஷூட்காரங்க லாண்ட் ஆவாங்க. இத சுத்திதான் fireworks நடக்கும்.

 

 

 

 

Bilde012 Bilde014 (3) அடுத்து காசு குடுத்து அலறிட்டு வர்லாம்னு பசங்க போனாங்க. அதென்னமோ தெரில அதில உக்காந்து பேய் சுத்து சுத்தும்போது அந்த அலறு அலறுவாங்க. இறங்கி வரும்போது ஒரு வீரச் சிரிப்பு.

DSC00110 ரொம்ப அலைஞ்சதில பசி எடுக்க ஆரம்பிச்சிடுச்சு இல்லை.. வாங்க இப்போ ரெஸ்டாரண்ட் போலாம்.. பசியாத போது புசியாதேனு பெரியவங்க சொல்லி இருக்காங்க இல்லை. அதான் முன்னாடியே கூட்டிப் போல. இந்த வருஷம் தாய்லாந்து ரெஸ்டாரண்ட்.

 

 

 

DSC00111 DSC00112 உள்ள போனதுமே russ cards லாம் கடை பரப்பி எத்தனை சேர்ந்திச்சுன்னு எண்ண ஆரம்பிச்சிட்டாங்க அக்காவும் தம்பியும். அப்டியே கொஞ்சம் ஓவர் குறும்பான கார்ட்ஸ எங்களுக்கும் காட்டி ஒரே சிரிப்பு அலை. நாஷனல் டே ஸ்பெஷல் மெனுல ஸ்டார்ட்டர் கிடையாதுன்னுட்டாங்க. அம்புட்டு கூட்டம். வாய்ல நுழையாத அவங்க மெனுவுக்குள்ள தேடி மம்மா தாய் மின்ட் பெப்பர் மட்டன் பக்கம் நான் கை காட்னேன். அவர் எதுவோ பீஃப்ல ஆர்டர் பண்ணார். ரெண்டுமே நல்லாருந்துது. அப்டியே டீப் ஃப்ரைட் பனானா வித் வனிலா ஐஸ்க்றீம். அவங்க ஸ்பெஷல்.. எங்க ஃபேவரிட்..

Bilde017 உண்டது செரிக்க மறுபடி ஒரு ரவுண்டு வந்தோம். எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு கான்டி. ஷூ லேஸ்ங்கிராங்க.. ஸ்னேக்ங்கிராங்க.. சரியா பெயர் தெரில.. வாட்டர் மெலன், ஸ்ட்ராபெரி, டூட்டிஃப்ருட்டி ஃப்ளேவர்ல வாங்கினேன்.

 

 

DSC00106 அப்டியே இவங்களுக்கும் ஒரு ஹாய் சொல்லிட்டு எல்லாரும் போய்ட்டு வாங்க. மணி 21:20 ஆச்சு. நாங்க வீட்டுக்கு போய் தேசியக் கொடி இறக்கணும். 9 – 9 தான் கொடிக்கான நேரம். இப்போவே லேட்டாச்சு. அப்புறம் என்ன..

 

 

வர்ட்டா..

16 May, 2010

சுதந்திர தின வாழ்த்துக்கள்..

நாளை 17ம் திகதி.. நார்வே சுதந்திர தினம். இந்த நாட்டு பிரஜையா ஆனத்துக்கு அப்புறம் நானும் கொண்டாட்டத்துல பங்கெடுத்துக்கணும் இல்லை. இங்க  வந்ததில இருந்து வருஷா வருஷம் டவுணுக்கு போயி நாங்களும் வாய் பார்த்துட்டு வருவோம். இன, மத, மொழி பேதமில்லாம.. ஓ சாரி.. நிறத்த விட்டுட்டேன்.. சேர்த்து படிச்சுக்கோங்க.. எல்லாரும் சொல்லிக்குவாங்க.. Gratulerer med dagen (க்றாத்துலேறெர் மே டாகென்) இன்றைய நாளுக்கு வாழ்த்துக்கள். எல்லாவிதமான பரேடும் காலேலவே ஆரம்பிச்சிடும். கார்ல போயி ஒரு வழியா பார்க்கிங் பிடிச்சு பார்க் பண்ணிட்டு அப்டியே சுத்தோ சுத்துன்னு சுத்திட்டு.. எதாவது ஒரு ரெஸ்டாரெண்ட்ல துண்ட போட்டு இடம் பிடிச்சு சாப்டுட்டு லேட்டா வீட்டுக்கு வருவோம். கல்ச்சரல் டான்ஸ், மியூசிக்னு எல்லாம் செண்டரா ஒரு இடத்தில நடந்துட்டு இருக்கும்.

இவங்க தேசிய உடைய Bunad (பூனாட்) னு சொல்வாங்க. ஒவொரு இடத்துக்கும் ஒவொரு மாதிரி இருக்கும். அத பாத்து இன்ன இடம்னு என்னால கண்டு பிடிக்க முடியாதுங்கிறத விட இந்த நாட்டுக்காரங்களாலேயே அது முடியாது. குறைந்த பட்ஷம் 20,000 குரோன்ஸ்ல இருந்து பூனாடோட விலை ஆரம்பிக்கும். எங்கூர் கோயில் திருவிழா கடைகள் மாதிரி குட்டிக் கடைகள், குட்டியா பஞ்ஜி ஜம்பிங், tivoli னு அமர்க்களமா இருக்கும்.  சறுக்கு மரம் ஏறுற போட்டி நடக்கும். பெரும்பாலும் வெளிநாட்டவங்க தான் ஏறுவாங்க. ஒருத்தர் ஒரு பரிசுதான் எடுத்துட்டு இறங்கணும்ங்கிறத அவங்க கண்டுக்கவே மாட்டாங்க. ஆளாளுக்கு கைக்கெட்றதெல்லாம் பிச்சு போட்டுடுவாங்க. ஒரு க்ரூப் பாரஷூட்ல இருந்து இறங்குவாங்க. நடுவுல ஒரு குளம் இருக்கு. அதுக்குள்ள லாண்ட் ஆகணும். ரெஸ்கியூ எல்லாம் குட்டி போட் வச்சிட்டு ரெடியா இருப்பாங்க. சமயத்தில கூட்டத்தில குதிச்சு மக்கள் அலறி அடிச்சிட்டு ஓடினதும் உண்டு.

bergensbunad இந்த ஊரோட பூனாட்.

பசங்களுக்கு செம கொண்டாட்டம்ங்க. யார் ஜாஸ்தி ஐஸ்க்ரீம் சாப்டுறதுன்னு போட்டியே நடக்கும். ஸ்பெஷலா பஞ்சு மிட்டாய்க்காரங்க வருவாங்க. பலூன் ஒரு பக்கம். வாங்கிற பாதி பேரு காத்துல பறக்க விட்டுடுவாங்க. அறிந்தும் அறியாமலும். வானத்தில ஸ்பைடர்மேன், ஸ்னோவைட், மொபைல், புலினு வித விதமா பறந்துட்டு இருக்கும். பசங்க ஸ்கூல்ல ப்ரோக்ராம் சாயந்தரம் நடக்கும். பொறுப்பு மூணாங் கிளாஸ் பேரண்ட்ஸ். இந்த வருஷம் சதுவுக்காக நாங்க பொட்டிக் கடைல வியாபாரம் பண்ணணும்.

குட்டிப் பசங்களுக்கு அடுத்து சுதந்திர தினக் கொண்டாட்டங்களில பட்டையக் கிளப்புறது ஹை ஸ்கூல் பசங்க. கடைசி வருஷ படிப்பில இருக்கிறவங்கள russ (றுஸ்) னு சொல்வாங்க. அவங்க போடற அலப்பர தாங்காதுங்க. ஆளாளுக்கு வண்டி வாடகைக்கு எடுத்துட்டு க்ரூப் க்ரூப்பா சுத்திட்டு இருப்பாங்க. அவங்களுக்குள்ள அடிதடி சண்டை நடக்குறதுமில்லாம சமயத்தில குசும்பு ஓவராகி மத்தவங்களையும் தொல்லை பண்ணுவாங்க. அவங்க றுஸ் கார்ட்னு ஒண்ணு, விசிட்டிங் கார்ட் சைஸ்ல வச்சிருப்பாங்க. அத கலெக்ட் பண்றது குட்டிப் பசங்களோட சம்மர் ஹாபி. போன வருஷம் அம்மு முன்னூத்தி சொச்சம் சேர்த்திருந்தாங்க.

russekort1

இந்த வருஷம் ஓவர் குளிரால கண்ணுக்குக் குளிர்ச்சி கம்மியா இருக்கும். இல்லேன்னா கலர் கலரா பூக்கள் அவ்ளோ அழகா இருக்கும். ஸ்பெஷலா இந்த நாளுக்குன்னு வித விதமா நட்டு வச்சிருப்பாங்க. என்னால நாளைக்கு போக முடியுமா தெரிலங்க. காய்ச்சல், ஜலதோஷம்,  அதோட  த்ராட் இன்ஃபெக்‌ஷனும் இருக்கு போல இருக்கு.. அவ்வ்.. வெதர் நல்லா இருந்தா போகலாம். நாளைக்கு மழை + குளிர் இருக்கும்னு அவதானிங்க சொல்ட்டாங்க. குளிருக்கேத்த உடுப்பு, குடை, ரெயின் பூட்ஸ்லாம் போட்டு போகணுமாம்.

17 mai vær

போனேன்னா கண்டிப்பா போட்டா புடிச்சிட்டு வந்து இன்னொரு போஸ்ட்ல போடறேன். நைட் வாண வேடிக்கை பாக்க அவ்ளோ அழகா இருக்கும். இந்த வருஷம் அதையும் மிஸ் பண்ண போறேன். ஆவ்வ்..

ஹச்.. ஹச்.. ஹச்ச்ச்ச்..

வர்ட்டா..

13 May, 2010

ஒரு வேளை..

என்ன கொடுமைங்க இது.. மே மாசம் ஆச்சுது.. இன்னமும் ஸ்னோ விட்டுப் போறதா காணோம். உங்களுக்கு எப்டி வெயில் கொடுமையா இருக்கோ அப்டியே எங்களுக்கு குளிர், இருட்டு. காலேல எந்திரிச்சு வெளிய பாக்கவே கடுப்பா இருக்கு. திங்கள் காலேல எடுத்த படங்கள் பாருங்க. டெம்ப்ரேச்சர் +5 க்கும் +10க்கும் இடையில  ஊசலாடுது.  ஐஸ்லண்ட்ல எரிமலை வெடிச்சதுதான் காரணம்ங்கிறாங்க. ஆனா என் ஃப்ரெண்டு சொல்லுது எனக்கு இருக்கிற வயித்தெரிச்சல்தான் எரிமலையா வெடிக்குதாம். ஒரு வேளை உண்மையா இருக்குமோ??

IMG_9541  IMG_9543

Bilde000 (5) முதல் ரெண்டும் வீடு.. கடைசி ரோடு..

><     ><     ><     ><     ><

என் கலீக் ஒருத்தர் ஆஃப்ரிக்கன். இப்போ லீவ்ல சவுத் ஆஃப்ரிக்கா போய்ட்டு வந்தப்போ கொண்டு வந்தார்ங்க. ஒண்ணு த்ராட் இன்ஃபெக்‌ஷன். இன்னொண்ணு ட்ரைட் மங்கோ ரோல்ஸ். சாப்பாட்டு விஷயத்தில எனக்கு கல்லும் செரிக்கும்னாலும் கொஞ்சம் பயத்தோட காக்கா கடி கடிச்சு டேஸ்ட் பண்ணேன். அப்புறம் பாக்கெட் காலி. என்னா டேஸ்ட்டு.. எங்கூர்ல பனம் பழத்தோட பல்ப் எடுத்து பனை ஓலைப் பாய்ல காய வச்சு பினாட்டுன்னு செய்வோம். அதே மெதட்ல மாம்பழ பல்ப்ல செஞ்சிருக்காங்க. இப்போ அவர் அம்மா இங்க வர இருக்காங்க. ரோல்ஸ் ஆர்டர் பண்ணிட்டோம்ல. ப்ராப்ளம் என்னன்னா அடிக்கடி இந்த எரிமலையோட சாம்பல் கூட்டம் தொல்லை பண்ணி ஃப்ளைட்ட லாண்ட் ஆக விடாம பண்றதால வரத்துக்கு கொஞ்சம் பயப்படறாங்களாம். ஒரு வேளை வராம இருந்துடுவாங்களோ??

Bilde018 (2)

><     ><     ><     ><     ><

எங்க பக்கத்து வீட்டுப் பசங்க முயல் வளர்க்கிறது பத்தி சொல்லி இருக்கேன். அமாண்டுஸ். அவர் இந்த குளிர் பத்தில்லாம் கவலைப்பட்டதா தெரில. எனக்குத்தான் அவர் இந்த கொடும் பனியிலேம் கூட்ல இருக்கிறத பாக்க கவலையா இருக்கும். இப்போ வளர்ந்திட்டாரு இல்லையா. ரொம்ப நேரம் தூக்கி வச்சிட்டு இருக்க முடியல. இறக்கி விட சொல்லி அடம். இல்லேன்னு தூக்கி வச்சிருந்தா பிறாண்டி வச்சிடறார். இறக்கினதும் வீடு பூரா ஓட்டம். விரட்டிப் பிடிக்கிறத்துக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது. ப வீ பொண்ணு சொன்னாங்க அவருக்கு ஒரு பெல்ட் வாங்கணுமாம். நாய்க்கு கழுத்தில மாதிரி இவருக்கு வயித்த சுத்தி கட்டணுமாம். எனக்கென்னமோ இன்னமும் கவலையா இருந்துது. ஒரு வேளை நாய் மாதிரி முயலும் வருங்காலத்துல வீட்ட காவல் காக்குமோ??

Bilde027 (2)

><     ><     ><     ><     ><

அல்லாரும் இப்போ பூதக் கண்ணாடிய எடுத்துக்கோங்க. சொல்லும்போது யூஸ் பண்ணலாம். இப்போதைக்கு பக்கத்தில வச்சுக்கோங்க. அப்டியே படிங்க தொடர்ந்து..

"ஆவ்வ்.."

அலறியபடி கையை உதறினேன்

சிவப்புப் பொட்டுக்கள் இரண்டு

சட்டென்று எட்டிப் பார்த்தன

முதலில் பதறிய கலீக்

சுதாரித்து பின் சிரிப்போடு கேட்டான் 

"பேப்பர் கட்??"

இந்த பேப்பர் கட் இருக்குங்களே.. வெட்டும்போது ஒரு எரிச்சல் சுரீர்னு வரும். அப்புறம் அப்பப்போ காயம் ஆறுற வரைக்கும் (இது உனக்கே நியாயமா படுதா??) விறுவிறுன்னு எரிச்சலாவே இருக்கும். என் கலீக் ஒருத்தி கைல வெட்டிக்கும்போது கெட்ட வார்த்தைல்லாம் சொல்லி கத்துவா. (இவ மனசுக்குள்ள கத்துவா) எனக்கென்னமோ இதில ஒரு தத்துவம் ஒளிஞ்சிட்டு இருக்கிறதா தோணும். வாழ்க்கேல வர பெரிய பிரச்சனைகள விட உப்புப் பெறாத குட்டிக் குட்டிப் பிரச்சனைகள்தான் நம்மள அதிகம் பாதிக்குது. மனச அலைய வைக்குது. நல்ல வேளை.. அதுக்கு இதுவே பரவால்லன்னு நினைக்க வைக்குது. இப்போ பூதக் கண்ணாடிய எடுத்து படத்தப் பாருங்க. காயத்த சுத்தி கருப்பா வட்டம்லாம் போட்டிருக்கேன். தெரிலன்னு சொல்றவங்க கை காமிங்க.. பேப்பரால சர்ரக்னு குட்டியா ஒரு கட் வச்சிட்டு.. உப்பு தூவி பிளாஸ்திரி போட்டிடலாம். ஒருவேளை காயம் அப்போ தன்னால தெரியுமோ??

  Bilde025

வர்ட்டா..

10 May, 2010

என் அன்பு மாமிக்கு..

காலேல எந்திரிச்சதும், ராத்திரி தூங்க போம்போதும், பகல்ல அப்பப்போவும் என் காதில அடிக்கடி கேட்டது “நீ எதுக்கும் யோசிக்காத, எந்தக் கவலையும் உனக்கு வேணாம்.. உன்ன எப்டியும் அவன் கிட்ட கொண்டு போய் சேர்க்கிறது என் பொறுப்பு” சொன்னது மாதிரியே அவ்ளோ கஷ்டங்களுக்கு மத்தியிலேம் என்ன கடல் கடந்து கூட்டி வந்து அவர் கரம் பிடிச்சு கொடுத்துட்டாங்க.. என் மாமியார்.

Mother & Daughter

எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து ரெண்டு குடும்பமும் நட்பு. எப்போதும் அவங்க மேல மரியாதை இருக்கும். எங்க அவங்கள பாத்தாலும் ஆண்ட்டினு போயி பேசிட்டுத்தான் மத்த வேலை. அவங்க கிட்ட நிறைய பேர் சொல்வாங்களாம். என்னையும் என்னவரையும் சேர்த்து வச்சு. அவங்களுக்கு ரொம்ப வேண்டிய ஒருத்தர் “அம்மா நீங்க வேணா பாருங்க.. உங்க ரெண்டாவது பையன் அங்கிளோட ரெண்டாவது பொண்ணு கிட்ட மாட்டிக்க போறான்” ன்னு சொன்னாராம். “நான் நம்பமாட்டேன். அவர் (அப்பா பேர சொல்லி) பொண்ணு ஒரு நாளும் அப்டி பண்ண மாட்டா.. ஏன்னா அவர் வளர்ப்பு அப்டி. எனக்கு நம்பிக்கை இருக்கு” ன்னு இவங்க சொன்னாங்களாம். லண்டன்ல அவர சந்திச்சப்போ இத சொல்லி சிரிச்சாங்க.

அவங்க நார்வேக்கு முதல் முறை வந்தப்போ ஏம்மா நீ பொட்டு வைக்கிறதில்லனு கேட்டாங்க. சொன்னேன். அடுத்ததா தாலி கழுத்தில இல்லாதத பாத்துட்டு புரிந்து கொண்டதா ஒரு சிரிப்பு. யாராவது ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கோ, இல்லை கோயிலுக்கோ போம்போது பொட்டோட தாலியும் தன்னால என் கழுத்தில இருக்கிறத பாத்து பெருமையா ஒரு சிரிப்பு. இனிமே நீ தங்கத்தில எதுனா வாங்கிப் பாரு உனக்கு இருக்கும்பாங்க. எனக்கு தங்கம் அவ்ளவா பிடிக்காதுங்கிறது தெரியும். இருந்தாலும் உன் கிட்ட சிவப்புக் கல் வச்ச தோடு இல்லைன்னுட்டு இதை வாங்கி வந்தேம்பாங்க. கூடவே தேடித் தேடி கலர் கலரா எனக்கு கவரிங்ல வாங்கிட்டு வரவும் மறக்க மாட்டாங்க.

வீட்டு வேலை செய்ய விடலேன்னா அவங்களுக்கு மூக்கு மேல கோவம் வந்திடும். வீடு பெருக்கிறது, ட்ரஸ் உலர போட்டு மடிச்சு வைக்கிறதுனு சின்ன வேலைகள் மட்டும் குடுப்பேன். சில சமயம் சமையல் செய்ய சொல்லி கேட்டேன்னா அவ்ளோ சந்தோஷம் அவங்களுக்கு. காலை பத்து மணிக்கே சமையல் ஆய்டிச்சுன்னு கால் பண்ணி சொல்வாங்க. முன்னாடி நான் வீட்ல இருந்தப்போ அவங்க இங்க வரும்போதெல்லாம் நல்லா சுத்துவோம். நான் வேலைக்கு போக ஆரம்பிச்சதும் அவங்க வீட்ல தனியா இருக்க வேண்டியதா போனப்போ டிவிதான் அவங்க துணை. வேலைல இருந்து ஃபோன் பண்ணா இன்னதெல்லாம் செஞ்சேன், இவங்க கால் பண்ணாங்கன்னு நான் கிளம்பினத்துக்கு அப்புறம் நடந்த எல்லாம் சொல்வாங்க. வீட்டுக்கு போனதும் பக்கத்தில உக்காந்து வேலை எப்டி போச்சுன்னு கேட்டு அன்னிக்கு என்ன நாடகத்தில என்ன ஆச்சுன்னு கதை சொல்வாங்க.

காலேல நான் கிளம்பும்போது எவ்ளோ சத்தமில்லாம  ரெடி  ஆனாலும்   எந்திருச்சு வந்து என்ன ட்ரஸ், எப்டி இருக்குன்னு பாத்து, இதுக்கு ஒரு பெரிய மாலை வச்சிருக்கியே வெள்ளையும் கருப்புமா முத்து கோர்த்தது.. அது இன்னும் நல்லா இருக்கும், இந்த ஷூதானே நேத்தும் போட்டே.. இன்னைக்கு வேற போடுன்னு சொல்றதும் இல்லாம வண்டி மறையிற வரைக்கும் ஜன்னல் வழியா பாத்துட்டு இருப்பாங்க. அவங்க ஒவொரு தடவையும் இங்க வந்துட்டு போம்போது வீடு ஹோன்னு வெறுமையா இருக்கும். அவங்க ஏர்போட்ல அழுதிட்டே போனதுதான் நினைவுக்கு வரும். அது மட்டுமில்லாம ஃப்ளைட்டுக்கு ஒரு வாரம் இருக்கும்போதே அழ ஆரம்பிச்சிடுவாங்க. எங்கள விட்டுட்டு போணுமேன்னு. அப்போ இங்கவே எங்க கூட இருங்கன்னாலும் முடியாதும்பாங்க. அவங்க வீடு, தென்னந்தோப்பு, அதுக்கும் மேல ஊர்ல இருக்கிற மச்சினர விட்டுட்டு இருக்க மாட்டாங்க. அவர் வேற என்னம்மா டிக்கட் கான்சல் பண்ணலையே.. திரும்பி வரிங்க இல்லைனு  கேட்டு வச்சிடுவார்.

அவங்களுக்கு அஞ்சும் பையனா போனதால மருமகள்கள் மகள்கள்தான். மத்த மருமகள் கிட்ட கூட நேரடியா சொல்வாங்களாம் நான்னா தனக்கு எப்பவுமே தனிதான்னு. எதுக்கு மாமி அப்டி சொல்றீங்க பாவம்ல அவங்கன்னா நான் ஒண்ணும் பொய் பேசலையேம்பாங்க. இதான் என் மாமி. அப்டியே என்னவர் அவங்க குணம் கொண்டு பிறந்திருக்கார். எதையும் நேரா வெளிப்படையா பேசுரது. எங்களுக்குள்ளும் சில முரண்பாடுகள் வரும்னாலும் அது இன்னமும் எங்க அன்பை உறுதியா ஆக்கும். இததான் நீ சொன்னியா நான் என்னமோ இப்டின்னு நினைச்சுட்டேன்னு சொல்லி சிரிப்பாங்க.

இந்த ஊரோட கிளைமேட் அவங்களுக்கு நல்லாவே ஒத்துப்போகும். ஒரு தடவை ஆத்து தண்ணில அடிச்சுட்டு போயி ஒரு மர வேர புடிச்சு உயிர் தப்பிட்டாங்கன்னாலும் அதுக்கப்புறம் அவங்களுக்கு ஆஸ்துமா வந்திடுச்சு. ஆனா வின்டர் டைம்ல ஷுகர் ஜாஸ்தி ஆயிடுரதால சம்மர் டைம்ல தான் வருவாங்க. ஹாஸ்பிட்டல் போம்போது என் கூட வரதையே விரும்புவாங்க. எங்க ஃபாமிலி டாக்டர் இந்தியர். ரெண்டு பேருக்கும் நாந்தான் ட்ரான்ஸ்லேட்டர். அவங்க என் கிட்ட சொல்றதில பாதியதான் டாக்டர் கிட்ட சொல்வாங்க. மீதி நான் சொல்லணும். சமயத்தில என்னவர் கூட போய்ட்டா இவர் சொல்ல மாட்டார். பாரும்மா.. இவன் கூட போக கூடாது. நான் சொல்ல மறந்துட்டேன். நாலு நாள் முன்னாடி எனக்கு முழங்கால் வலி இருந்துதுங்கிரத இவன் சொல்லலைம்பாங்க.

அம்மு முதல் பேத்திங்கிறதால அவங்க மேல உயிர் இவங்களுக்கு. அப்பம்மா வந்தாங்கன்னா ரெண்டு பேருக்கும் செம கொண்டாட்டம். அவங்களுக்கு ரெண்டு ஐஸ்க்ரீம், மூணு சாக்லட் சிபாரிசு செய்யப்படும். அப்பா, அம்மா, அண்ணன்கள், அக்கா மேல இவங்களுக்கு அவ்ளோ பாசம். அவங்களும் அதுக்கும் மேல இவங்க கிட்ட பாசம் வச்சிருக்காங்க. மாமியார் மெச்சிய மருமகளா நான் இருக்கிறது அவங்களுக்கு பெருமை. என் சித்தி சொல்வாங்க. நீங்க உங்க மாமியார புரிஞ்சு நடந்துக்கிறா மாதிரி.. அவங்க உங்க கிட்ட அன்பா இருக்கிறா மாதிரி.. எனக்கும் என் மாமியாருக்கும் இடையில ஒரு நெருக்கம் வர்லம்மான்னு.

ஊருக்கு போனா அவங்க நைட்டிய போட்டுட்டு சுத்திட்டு இருப்பேன். எனக்கு பிடிச்ச அவங்க புடவைய கட்டிக்குவேன். ஒரு புடவை மாமனார் வாங்கி கொடுத்தது. அத அவங்க பொக்கிஷமா வச்சிருந்தாங்கன்னு எனக்கு தெரியாது. டார்க் புளூல லைட் பர்ப்பிள் டிசைன். பாத்ததும் பிடிச்சு போச்சு. இத நான் கொண்டு போட்டுமான்னதும் குடுத்துட்டாங்க. அப்புறமா அவங்க இங்க  வந்தப்போ விஷயத்த சொன்னாங்க. அப்போ எதுக்கு மாமி என் கிட்ட குடுத்திங்கன்னப்போ நீ ஆசையா கேட்டப்போ மறுக்க முடியலடான்னாங்க. பேச்சு வர்ல எனக்கு. கடைசி மச்சினர் கல்யாணத்துக்கு போயிருந்தப்போ என் பசங்கள ஒத்துமையா எனக்கு அப்புறம் நீதான் பாத்துக்கணும். இந்த குடும்பம் எப்பவும் குலையாம இதே சந்தோஷத்தோட இருக்கும்படி பாத்துக்கோனு சொன்னப்போ அவங்கள இறுக்கி அணைச்சு அழுதிட்டே குருவி தலை பனங்காய் மாதிரி இருக்கு.. இவ்ளோ பெரிய பொறுப்பு எனக்கு எதுக்கு மாமின்னு கேட்டேன். உன்னால முடியும்னுதானே உன் கிட்ட கேக்கறேன். நீ செய்வே. செய்னாங்க. இந்த நம்பிக்கைக்கு.. அன்புக்கு.. இன்னமும் நான் நிறைய்ய்ய்ய செய்யணும் அவங்களுக்கு.

பல சமயத்தில என் அம்மாவா, தோழியா, சில சமயத்தில ஒரு குழந்தையா இருக்கிற என் அன்பு மாமிக்கு இன்னைக்கு பர்த்டேங்க. நீங்களும் அவங்கள வாழ்த்துங்க.

ஹாப்பி பர்த்டே மாமி.

வர்ட்டா..

05 May, 2010

டொட்டொடொய்ங்..

சனிக்கிழமை.. 01.05.10. என்னவரும் நானும் படம் பார்க்க உக்காந்தோம். பசங்களுக்கு படத்தோட பேர் சொன்னேன். யார் நடிச்சதுன்னாங்க சொன்னேன். அப்புறமா வரோம்னாங்க. கடைசி வரை வர்ல. போன ஞாயிறுக்கு முதல் ஞாயிறு (தேதி நீங்களே காலண்டர்ல பாத்துக்கோங்க) டிவி முன்னாடி உக்காந்திருந்த என்னவர் கூப்டார்.

”ஏய் இங்க கொஞ்சம் வாயேன்.. புது படமாம்”

கிச்சன்ல இருந்து நான் வரத்துக்குள்ள (பதினஞ்சு அடி தூ..ரம் நடந்து வந்தா) ட்ரெய்லர் போயிடுச்சு. எஸ்.கே நாதன் கடை சூரிச்ல சேல்னு ஸ்நேகா ஆடிட்டு இருந்தாங்க. மறுபடி ஆட் போட ஆரம்பிச்சதும் கூப்டார். மூணாவதா இது வரவும் நான் கிச்சன்ல இருந்து வரவும் சரியா இருந்துது.

நமது கலைஞர் தொலைக்காட்சியில்..

புத்தம் புதிய திரைப்படம்..

வரும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு..

’…..’ நடித்த புத்தம் புதிய திரைப்படம் ’…..’

நமது கலைஞர் தொலைக்காட்சியில்..

ன்னு சொல்லிட்டு இருந்தாங்க.

”இது புதுப் படம் இல்லை.. நீ கூட தியேட்டர்ல பாக்கலாமான்னு கேட்டேல்ல.. நல்ல வேளை இந்த சனி எந்த ப்ரோக்ராமும் இல்லை. நிம்மதியா பாக்கலாம்”

ன்னு சொல்லி, ரொம்ப எதிர்பார்ப்போட இருந்தார். சனியும் வந்தது. ரெண்டு பேரும் இருக்கோம் படம் பாத்துட்டு. என்னடி இது.. ரொம்ப முக்கியம்.. இது வேறயானு அப்பப்போ சொல்லிட்டு இருந்தவர் அப்புறம் சைலண்டா பாத்துட்டு இருந்தார். நான் போஸ்ட் படிச்சுட்டு கமண்ட் போடாம போற வாசகியா பேசாமலே இருந்தேன். படமும் முடிஞ்சுது.  கமண்ட் போட்டுட்டு பிளாகர் என்ன சொல்லப் போறார்னு மறுபடி கமண்ட் போட்ட பிளாக் போய் பாக்கிற வாசகியா அவர் முகத்த பாத்தேன்.

”என்னடி இது..”

”ஏம்பா..”

”நல்லவேளை அன்னிக்கு உன் பேச்ச கேட்டு நான் தியேட்டர் வர்லை”

”அதான் நானும் போல இல்லை.. எனக்கென்ன தெரியும். நான் கூட இப்டி இருக்கும்னு நினைக்கல”

ஒரு பாட்டாவது நல்லா இருந்திருக்கலாம்.. இவருக்கு விஜய் மாதிரி டான்சும் வராது.. காமெடியும் சொதப்பல்.. நல்ல வேளை தப்பிச்சேண்டா சாமி.. இன்னைக்கு யாராவது ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்காச்சும் போயிருக்கலாம். ஒரு சனிக்கிழமை அநியாயமா போச்சு போ..”

அதான் பாவனா ஷமீரானு ஒண்ணுக்கு ரெண்டு பேர் இருந்தாங்களேஏனு கேக்க நினைச்சுட்டு நினைச்சதோட விட்டுட்டேன். எனக்கு தெரியும் அவங்கள அவருக்கு பிடிக்கலைன்னு. ஷமீரா வா ஆ தில வந்த மாதிரி இதுல இல்லை. பாவனா டொட்டொடொய்ங் பாட்டுல கொஞ்சூண்டு நதியாவ என் நினைவுக்கு கொண்டு வந்தாங்க. அஜித்.. அவ்வ்வ்..

லேட்டான்னாலும் லேட்ட்ட்டஸ்டா நாங்க பாத்த படம்..

Bilde006 (2)

டொட்டொடொய்ங்.. டொட்டொடொய்ங்..

ஞாயிற்றுக்கிழமை. 02.05.10. நானும் சதுவும் கார்ல வெயிட் பண்ணிட்டு இருந்தோம். அம்முவுக்கு 4 மணிக்கு முடிய வேண்டிய டான்ஸ் கிளாஸ் 4.11 ஆகியும் முடியிறதா காணோம். x-box game விளாடிட்டு இருந்தவர கூட்டி வந்துட்டேங்கிற கடுப்பில இருந்தார். வெளிய வெயில்னாலும் குளிர். கார்லவே இருக்க வேண்டியதா போச்சு. முடிஞ்ச வரைக்கும் முயற்சி செஞ்சும் அவர் இந்த ரேஞ்சுக்கு போய்ட்டார்.

Bilde003 (2)

கடைசியா ஒண்ணு சொன்னேன். போட்டாரு பாருங்க ஒரு குதியாட்டம். நீங்களே பாருங்களேன்..

Bilde005

அப்புறம் அம்மு வந்ததும்தான் நேரம் 4.49 ன்னு தெரிஞ்சுது. அது வரைக்கும்

“அம்மா.. விஜய், வில்லு, வேட்டைக்காரன் எல்லாமே ’வி’ல தொடங்குது இல்லை..”

“வடிவேலும் இருக்காரா அய் ஜாலி..” ”

”இனிமே என் ஃபேவரிட் லிஸ்ட்ல சுறாதான் ஃபர்ஸ்ட்..”

இப்டியே பேசிட்டு இருந்தார். வேற ஒண்ணுமில்லிங்க.. செவ்வாய்க்கிழமை சுறா பாக்க தியேட்டர் போறோம்.. அப்பா டிக்கட் புக் பண்ணிட்டார்.. இந்த ரெண்டு வசனமும் தாங்க நான் சொன்னேன். இத முன்னாடியே சொல்லி இருக்கலாம்னு சொல்றீங்களா?? அததாங்க நானும் நினைச்சேன்..

டொட்டொடொய்ங்.. டொட்டொடொய்ங்..

இன்னைக்கு செவ்வாய்க்கிழமை. 04.05.10. ஆஃபீஸ்லருந்து 2:30 க்கே கிளம்ப நினைச்ச என் திட்டம் டமால்.. திடீர் மீட்டிங். ஏமாற்றம் நெம்பர் ஒன்.

ஃப்ரெண்ட் கூட ஒரு சின்ன மிஸ்அண்டர்ஸ்டாண்டிங். அது கிட்ட பேசிட்டு போலாம்னு நினைச்சேன் லைன் என்கேஜ்ட். ஏமாற்றம் டூவு.

அடுத்து சமையலையாவது சீக்கிரம் முடிக்கலாம்னா ஃப்ரிஜ் லைட் எரியுது வேலை செய்யல. நைட் வெட்டி ரெடியா சுத்தம் பண்ணி வச்ச மீன் மறுபடி செத்துப் போச்சு. மூணாவது ஏமாற்றம்.

ஒரு வழியா புறப்பட்டு போனா பார்க்கிங் கிடைக்கல. நாங்க மட்டும் உள்ள போக அவர் தேடி பார்க் பண்ணி வரேன்னுட்டு போய்ட்டார். ஏமாற்றம் நான்கு.

டிக்கட் வாங்கி பாத்தா 5 வது ரோல 1-4 சீட். முன்னாடி அதுவும் செண்டர் சீட் இல்லாம ஓரத்தில உக்கார வேண்டியதா போச்சு. என்னதான் 5 எனக்கு பிடிச்ச நம்பர்னாலும் அந்த ஏமாற்றம் அஞ்சேய்.

சர்டிபிக்கேட் போட ஆரம்பிச்சும் கண்ணாளன் வர்ல. அப்பப்போ வராரான்னு திரும்பி திரும்பி பாத்ததுல கரெக்டா பாக்க வேண்டிய பேர் போயி தமன்னானு வந்திடுச்சு. எத்தனாவது ஏமாற்றம்? ஆறு.

ஆனா ‘தள’ மட்டும் என்ன ஏமாத்தலிங்க. என்ன டான்ஸு, என்ன பாட்டு, என்ன காமெடி, அடடடடா.. நல்லா எழுதுற பதிவர்களோட பதிவுல நல்லா இருக்குன்னு கமண்ட் போட்டு அலுத்துப்போனா மாதிரி எனக்கும் அவர் படத்தப் பத்தி நல்லாருக்குன்னு சொல்லி சொல்லி அலுத்துப் போச்சுங்க.

எனக்கு கவலையெல்லாம் விசில் சத்தம் பாக்ரவுண்ட்ல கேக்காம பாத்ததுதான். டிக்கட் புக் செய்யும்போது நார்மலாவும், தியேட்டர் உள்ள போம்போது ஸ்ட்ரிக்டாவும் சொல்லிட்டாங்க. விசில், இல்லை ஆனந்தக் கூச்சல், கைதட்டல் கூடாதுன்னு. இருந்தாலும் அப்பப்போ கேட்டுட்டு இருந்துது. லைட்டா. இருந்தாலும்..

இதான் முத தடவையா ஊர்ல சினிமா டிக்கட் பாத்த ஒரு ஃபீல் வந்துது. டிக்கட் செலவ சரி செய்யவோ என்னமோ விலைய 110kr இல இருந்து 130 kr க்கு ஏத்திட்டாங்க.

பாருங்க என் கைல ஒண்ணில்ல நாலு Sunrise :))))

Bilde035

வர்ட்டா..

02 May, 2010

நான் பழகி நாள் பல ஆச்சு..

ஒரு சனிக்கிழமை.. 

எப்போன்னு இப்போ நினைவில்ல.. 

நீ லேட்டா தூங்கப் போற எண்ணத்தில இருந்தே..

தற்செயலா நான் அங்க வந்தப்போ பேசினோம்.. 

நீ பேசினத நான் கேட்டுட்டு இருந்தேன்னும் சொல்லலாம்..

இன்றும் ஒரு சனிக்கிழமை..

உன் கிட்ட பேசணும் போல இருக்கு..

உயிரோட ஒவொரு அணுவும் தவிக்குது..

ஃபோன் பண்ணி பார்க்க கை துடிக்குது..

மனசு ஒத்துக்க மாட்டேங்குது..

இன்னைக்கு நீ சீக்கிரம் தூங்கியிருந்தா..

என்னால உன் தூக்கம் கெட்டுப் போச்சுன்னா..

கேள்வியோடு பதிலும் தயாரா இருந்துது..

 

woman on a couch

தூக்கம் தொலைந்த இன்னொரு இரவுக்கு..

நான் பழகி நாள் பல ஆச்சு..

கனவில கண்ணாமூச்சி ஆடும் உன் வழக்கம்..

நனவுல நடக்காது பொல்லாத என் கண்ணா..

இன்னும் ஒரு சனிக்கிழமை..

தேதி கிழிக்கப்படும் எனக்கே எனக்குன்னு..

அன்னிக்கு வரேன் உன்கூட நான் பேச..

அதுவரைக்கும்?!