Pages

  • RSS

13 May, 2010

ஒரு வேளை..

என்ன கொடுமைங்க இது.. மே மாசம் ஆச்சுது.. இன்னமும் ஸ்னோ விட்டுப் போறதா காணோம். உங்களுக்கு எப்டி வெயில் கொடுமையா இருக்கோ அப்டியே எங்களுக்கு குளிர், இருட்டு. காலேல எந்திரிச்சு வெளிய பாக்கவே கடுப்பா இருக்கு. திங்கள் காலேல எடுத்த படங்கள் பாருங்க. டெம்ப்ரேச்சர் +5 க்கும் +10க்கும் இடையில  ஊசலாடுது.  ஐஸ்லண்ட்ல எரிமலை வெடிச்சதுதான் காரணம்ங்கிறாங்க. ஆனா என் ஃப்ரெண்டு சொல்லுது எனக்கு இருக்கிற வயித்தெரிச்சல்தான் எரிமலையா வெடிக்குதாம். ஒரு வேளை உண்மையா இருக்குமோ??

IMG_9541  IMG_9543

Bilde000 (5) முதல் ரெண்டும் வீடு.. கடைசி ரோடு..

><     ><     ><     ><     ><

என் கலீக் ஒருத்தர் ஆஃப்ரிக்கன். இப்போ லீவ்ல சவுத் ஆஃப்ரிக்கா போய்ட்டு வந்தப்போ கொண்டு வந்தார்ங்க. ஒண்ணு த்ராட் இன்ஃபெக்‌ஷன். இன்னொண்ணு ட்ரைட் மங்கோ ரோல்ஸ். சாப்பாட்டு விஷயத்தில எனக்கு கல்லும் செரிக்கும்னாலும் கொஞ்சம் பயத்தோட காக்கா கடி கடிச்சு டேஸ்ட் பண்ணேன். அப்புறம் பாக்கெட் காலி. என்னா டேஸ்ட்டு.. எங்கூர்ல பனம் பழத்தோட பல்ப் எடுத்து பனை ஓலைப் பாய்ல காய வச்சு பினாட்டுன்னு செய்வோம். அதே மெதட்ல மாம்பழ பல்ப்ல செஞ்சிருக்காங்க. இப்போ அவர் அம்மா இங்க வர இருக்காங்க. ரோல்ஸ் ஆர்டர் பண்ணிட்டோம்ல. ப்ராப்ளம் என்னன்னா அடிக்கடி இந்த எரிமலையோட சாம்பல் கூட்டம் தொல்லை பண்ணி ஃப்ளைட்ட லாண்ட் ஆக விடாம பண்றதால வரத்துக்கு கொஞ்சம் பயப்படறாங்களாம். ஒரு வேளை வராம இருந்துடுவாங்களோ??

Bilde018 (2)

><     ><     ><     ><     ><

எங்க பக்கத்து வீட்டுப் பசங்க முயல் வளர்க்கிறது பத்தி சொல்லி இருக்கேன். அமாண்டுஸ். அவர் இந்த குளிர் பத்தில்லாம் கவலைப்பட்டதா தெரில. எனக்குத்தான் அவர் இந்த கொடும் பனியிலேம் கூட்ல இருக்கிறத பாக்க கவலையா இருக்கும். இப்போ வளர்ந்திட்டாரு இல்லையா. ரொம்ப நேரம் தூக்கி வச்சிட்டு இருக்க முடியல. இறக்கி விட சொல்லி அடம். இல்லேன்னு தூக்கி வச்சிருந்தா பிறாண்டி வச்சிடறார். இறக்கினதும் வீடு பூரா ஓட்டம். விரட்டிப் பிடிக்கிறத்துக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது. ப வீ பொண்ணு சொன்னாங்க அவருக்கு ஒரு பெல்ட் வாங்கணுமாம். நாய்க்கு கழுத்தில மாதிரி இவருக்கு வயித்த சுத்தி கட்டணுமாம். எனக்கென்னமோ இன்னமும் கவலையா இருந்துது. ஒரு வேளை நாய் மாதிரி முயலும் வருங்காலத்துல வீட்ட காவல் காக்குமோ??

Bilde027 (2)

><     ><     ><     ><     ><

அல்லாரும் இப்போ பூதக் கண்ணாடிய எடுத்துக்கோங்க. சொல்லும்போது யூஸ் பண்ணலாம். இப்போதைக்கு பக்கத்தில வச்சுக்கோங்க. அப்டியே படிங்க தொடர்ந்து..

"ஆவ்வ்.."

அலறியபடி கையை உதறினேன்

சிவப்புப் பொட்டுக்கள் இரண்டு

சட்டென்று எட்டிப் பார்த்தன

முதலில் பதறிய கலீக்

சுதாரித்து பின் சிரிப்போடு கேட்டான் 

"பேப்பர் கட்??"

இந்த பேப்பர் கட் இருக்குங்களே.. வெட்டும்போது ஒரு எரிச்சல் சுரீர்னு வரும். அப்புறம் அப்பப்போ காயம் ஆறுற வரைக்கும் (இது உனக்கே நியாயமா படுதா??) விறுவிறுன்னு எரிச்சலாவே இருக்கும். என் கலீக் ஒருத்தி கைல வெட்டிக்கும்போது கெட்ட வார்த்தைல்லாம் சொல்லி கத்துவா. (இவ மனசுக்குள்ள கத்துவா) எனக்கென்னமோ இதில ஒரு தத்துவம் ஒளிஞ்சிட்டு இருக்கிறதா தோணும். வாழ்க்கேல வர பெரிய பிரச்சனைகள விட உப்புப் பெறாத குட்டிக் குட்டிப் பிரச்சனைகள்தான் நம்மள அதிகம் பாதிக்குது. மனச அலைய வைக்குது. நல்ல வேளை.. அதுக்கு இதுவே பரவால்லன்னு நினைக்க வைக்குது. இப்போ பூதக் கண்ணாடிய எடுத்து படத்தப் பாருங்க. காயத்த சுத்தி கருப்பா வட்டம்லாம் போட்டிருக்கேன். தெரிலன்னு சொல்றவங்க கை காமிங்க.. பேப்பரால சர்ரக்னு குட்டியா ஒரு கட் வச்சிட்டு.. உப்பு தூவி பிளாஸ்திரி போட்டிடலாம். ஒருவேளை காயம் அப்போ தன்னால தெரியுமோ??

  Bilde025

வர்ட்டா..

18 நல்லவங்க படிச்சாங்களாம்:

Madumitha said...

எதுவும்
அளவு மீறினால்
கஷ்டம் தான்
அது
வெயிலோ
பனியோ.
உங்கள்
இடுகை நன்று.

தமிழ் பிரியன் said...

ஒரு பின் குத்தினதுக்கு கூட இவ்ளோ பில்டப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா? அவ்வ்வ்

பனி அழகு தான்... அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு தான் போல

complan surya said...

hey

am the third..

erunga poi padichutu varen..

varta..

complan surya said...

சுசி
ததுவோம்லம் சொல்றீங்க.
சொன்ன கேக்றேங்கள விஜய்படம் பாகதீங்கனு சொன்ன கேக்கல..
அதோட பின் விளைவுthan ungal padivu....

"எதோ பாருங்க எந்த பிரச்சனயும் தூரதில வச்சு பார்த்த அது சின்னது.கிட்டக்க வச்சு பார்த்த பெருசா தெரியும்"..ada ungalapathu nanum epadi aiteney...

எப்புடி....

எண்ட உலகம் இருக்கே...அத பத்தி உங்கள்க்கி தெரியும்...

நல்ல இருந்தாச்சு படங்கள்.

வாழ்க வளமுடன்
வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
காம்ப்ளான் சூர்யா

கார்க்கி said...

இதுதான் பின்நவீன, இல்லையில்ல பின்குத்தின பதிவா?

சங்கர் said...

இங்க மண்டைய பொளக்குது வெயில், நீங்க பணி அடிக்குதுன்னு கவலை படுறீங்க, எங்க வயிதெரிச்சல் இன்னும் அதிக பனியா கொட்டப் போகுது பாருங்க

ஜெய்லானி said...

மசாலா மிக்ஸ் மாதிரி பதிவு சூப்பர்.

காயம் ரொம்ப அதிகமாதான் தெரியுது. பாத்துங்க..(( ஒரு வேளை என் கண் பவர் குறையுதோ ))

நர்சிம் said...

சென்னைலயும் குளிர் பிக்கிதுங்க.

கைய பார்த்துக்கோங்க.

சின்ன அம்மிணி said...

பேப்பர் கட் இருக்க விரல்ல புளி கரைச்சுப்பாருங்க. ஜில்லோன்னு இருக்கும்.

கோபிநாத் said...

ரைட்டு ;)

சுசி said...

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மதுமிதா.

I I I I I

நஞ்சில்ல தமிழ் பிரியன்.. குளிர் :((

I I I I I

நன்றி சூர்யா.

அப்பாவி தங்கமணி said...

பனிக்கொடுமை எங்கயும் அப்படி தான் இருக்கு... ஆனா snow விழற அளவுக்கு இல்ல. Temperature சிங்கள் digit தான்...எப்ப தான் விடியுமோ போங்க?

அந்த பேப்பர் கட் மேட்டர் இருக்கே... அதுலே நான் PHD . ஏன்னு கேக்கறீங்களா? பேப்பர் கட் இல்லாத நாளே கிடையாது நமக்கு. அதுவும் முக்கியமா எதுனா மீட்டிங்க்கு prepare ஆகறப்ப தான் பழி வாங்கும். ஆனாலும் நீங்க என்னமோ மாங்கா ஊறுகா ranje க்கு உப்பு மொளகாபொடி எல்லாம் சொல்லி பயபடுதரீங்களே

Good laugh, thanks

சுசி said...

இல்லை கார்க்கி.. பேப்பர் கட் பதிவு.
ரைட்டு!! மைண்ட்ல போட்டாச்சு.

I I I I I

நலமா சங்கர்?? வொய் வயெத்தெரிச்சல்? அப்டியே அந்த வெயில கொஞ்சூண்டு இங்க அனுப்பி வைக்கலாம்ல.

I I I I I

ஹஹாஹா.. பயந்துட்டிங்களா ஜெய்லானி??

சுசி said...

//சென்னையிலேம் குளிர் பிக்கிது//ன்னு உங்க சமீபத்திய பதிவுகள படிக்கும்போது தெரியுது நர்சிம் :))

I I I I I

ஆவ்வ்வ்.. அனுபவிச்சிருக்கேன் அம்மிணி..

I I I I I

ராங் ஆயிடுமோன்னு பயந்துட்டே இருந்தேன் கோபி.

சுசி said...

பேப்பர் கட் + பனிக் கொடுமை நமக்கு பொதுக் கொடுமையா இருக்கும் போலிருக்கே தங்கமணி..

ராமலக்ஷ்மி said...

வீடும் ரோடும் பனியாலே மூடிக் கிடக்கும் காட்சிகள் அழகெனில் மொசக் குட்டி அழகோ அழகு:)! காயம் சீக்கிரம் ஆறட்டும், பார்த்து பார்த்து வேலை செய்யுங்க:)!

சுசி said...

பனியோட அழக இப்போ ரசிக்க முடியல அக்கா.. போதும்னு சலிப்பும் எரிச்சலும்தான் வருது.

மொசக் குட்டி புசுபுசுன்னு.. ஹூம் என்ன பண்ண.. அவர் அலர்ஜி தடுக்கிரதால எதோ பக்கத்து வீட்லயாவது இருக்கேன்னு ஆறுதல் பட்டுக்க வேண்டியதுதான்.

LK said...

viral cut aana idathula slighta uppa tadavi koncham idli podi tadavunga sari aidum