Pages

  • RSS

29 August, 2010

என்னைப் புரிந்துகொள்..

எனக்கான ஒரு சூரியன்

  உதிப்பது முடியுமா

    காயும் நிலவு

      எனக்காக மட்டுமா

        தென்றலின் சுகத்தை

          யாரெல்லாம் அறியவில்லை

            கொட்டும் மழையில் குதிப்பது

              நான் மட்டும் இல்லையே

                ஒற்றைப் பூமியிடம்

              எத்தனை உயிர்கள்

            எவ்வளவு உரிமையாய்

          இயற்கை புரிகிறது..

        நீ மனிதனாய் போனதால்

      விட்டுக்கொடுக்க முடியாத

    சுயநலக்காரி ஆகி விட்டேன் போல..

  புரிந்து கொள்ள வேண்டியவன்

நீதான் என் பொதுநலக்காரா!!!!

hands

6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6

இதனால் சகல மக்களுக்கும் சொல்வது என்னவென்றால்..

நூறுன்னா கூட பரவால்ல.. கூட ஒண்ணு சேர்த்துக்கோங்க.. இப்போ நூத்தி ஒண்ணு ஆச்சா.. அத்தனை ஃபாலோயர்ஸ்.. யாவரும் நலமா இருக்காங்களாம்.

உங்க எல்லார் அன்புக்கும் ஆதரவுக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள். நீங்க தான் பணம் பொருளுக்கெல்லாம் ஆசைப்படாதவங்களாச்சே. அதுக்காக நான் செய் நன்றி மறக்க கூடாதில்லையா. இந்த நன்றிக் கடன எழுதியே தீர்த்துடலாம்னு முடிவு செஞ்சாச்சு.

இதனால் சகல மக்களுக்கும் மறுபடி சொல்வது என்னவென்றால்..

வர்ட்டா..

25 August, 2010

லுக்கு விடாதிங்கப்பா..

குடும்பமா வாக்கிங் போயிட்டு இருந்தோம். எப்போதுமே பாதிக் குடும்பம் முன்னாடி போயிட்டு இருக்கும். பின்னாடி வர பாதிக் குடும்பத்துல எப்ப்ப்ப்போதும் நானிருப்பேன். நம்ம நடையோட ஸ்பீடு அப்டி. என் ஸ்பீடுக்கு ஈடு கொடுத்து அப்பப்போ யாராவது கூட வருவாங்க. என்னவர் சொல்வார் ஒரு ஸ்டெப் வச்சிட்டு அடுத்தது வைக்க நீ தேட வேண்டியதில்ல.. தரை அங்கதான் இருக்கும்.. தைரியமா கால வைனு. இப்போ என் கூட அவர்தான் வந்திட்டு இருந்தார்.

“எனக்கு புது ஜாக்கிங் ஷூஸ் வாங்கணும்பா”

“இதுவே நல்ல புதுசா தானே இருக்கு”

“என்ன சொல்றிங்க நீங்க.. இது நான் இங்க வந்த வருஷம் வாங்கினது. இதோட பனெண்டாவது வருஷமா பாவிச்சுட்டு இருக்கேன். அதான் என்னால ஸ்பீடா நடக்க முடியலை தெரியுமா..”

இதுக்கு அவர் பதில் சொல்லைன்னாலும் பரவால்ல. இல்லைன்னா ஒரு ஜாக்கிங் ஷூவ பனெண்டு வருஷமா பாவிச்ச ஒரே ஆள் நீதாண்டின்னு சொல்லி இருந்தாலும் கூட பரவால்ல. ஒரு லுக்கு விட்டார் பாருங்க.. அதான்..

joggesko

<<<<<     >>>>>

இந்தியால இருந்து ஒரு பார்சல் வந்திருக்கிறதாவும், சைஸ் கொஞ்சம் பெருசா இருக்கிறதால் போஸ்ட் ஆஃபீஸ்ல வந்து தகுந்த ஆதாரம் காட்டி கலெக்ட் பண்ண சொல்லியும், ரெண்டு வாரத்துக்குள்ள எடுக்கலேன்னா உடமைக்கு நாங்க பொறுப்பு கிடையாது.. அப்டி ஒண்ணு இங்க வரவே இல்லைன்னு சொல்லிடுவோம்னும் ஒரு கார்ட் வந்திருந்துது எங்க ஊர் போஸ்ட் ஆஃபீஸ்ல இருந்து. அட நம்ம பதிவுலகவாசிங்க யாரோ தான் நமக்கு பார்ஸேல் அனுப்பி வைச்சிருக்காங்களோனு சட்னு குதிச்ச மனச அடக்கிட்டேன். நமக்கு யாரு.. வேணாம் விட்டுடலாம். ஒரு வேளை மாமா?? சான்ஸே இல்லை. கேக்காம அனுப்ப மாட்டார். அப்போ.. அதானா.. கண்ணாளனோட சர்ப்ரைஸாஆஆ.. திருவிழா வருது, ரெண்டு மூணு பார்ட்டிக்கும் போணும்.. நல்லதா சாரி இல்லை.. எல்லாம் அநேகமா ஒரு தடவை கட்டினதாதான் இருக்கு.. இல்லேன்னா பிளவுஸ் தைக்கலன்னு கொஞ்சம் ஓவராதான் புலம்பிட்டோமோ.. சரி.. அதான் வந்திடுச்சே இனிமே குதிச்சுக்கோன்னு மனச குதிக்க விட்டேன். அப்டியே ஃபோன் பண்ணி அவர் காதில விஷயத்தை விட்டேன். அவர் பேர்லதான் பார்ஸல் வந்திருக்கு. அவர் தான் போய் எடுக்கணும்.

பார்ஸல ஓபன் பண்ணா பெருசா ஒரு பாக்ஸ் முதல்ல எட்டிப் பாத்துச்சு.. புடவைக்கு எதுக்கு பாக்ஸ்லாம்.. ஓஹோ.. பொருத்தமா வளையல் கூடவே இருக்கும்போல.. அதான் உடையாம இருக்க பாக்ஸ்ன்னு நான் நினைக்குறத்துக்குள்ள குட்டியா ஒரு புக் ப்ரீத்தி புளூ லீஃப்னு எழுதினாப்ல.. அதேதாங்க.. டேபிள் டாப் கிறைண்டர்.. என் சோகத்தை அப்புறம் வச்சுக்கலாம்.. இப்போ மேல படிங்க.. இருந்தாலும் சின்னதா ஒரு ஆவ்வ்வ்..

”இது எப்போப்பா ஆர்டர் பண்ணிங்க..”

“போன மாசம் நம்ம விவேகானந்தன் அண்ணா இந்தியா போனார்ல.. அவர் கிட்ட சொல்லிவிட்டேன்”

”ஓ.. நான் கூட என்னமோ புடவைன்னு நினைச்சேன்பா. (காதில புகை தெரிஞ்சுது உங்களுக்கு?? அவர் கிரைண்டர்ல பிஸியா இருந்ததுல என்ன கவனிக்கல.. நான் சொன்னதையும் வ போ கவனிக்கல) இது நல்ல ப்ராண்டாப்பா”

”அப்டின்னுதான் அவர் சொன்னார்டி”

“இல்லப்பா பழசு ஸ்மித் கிரைண்டர்.. நான் இங்க வந்த வருஷம் வாங்கினது.. பனெண்டு வருஷமா பாவிச்சேன்ல. இதுவும் அப்டி இருக்கணுமே”

இதுக்கு அவர் பதில் சொல்லைன்னாலும் பரவால்ல. இல்லை ஒரு கிரைண்டர பனெண்டு வருஷமா பாவிச்ச ஒரே ஆள் நீதாண்டின்னு சொல்லி இருந்தாலும் கூட பரவால்ல. ஒரு லுக்கு விட்டார் பாருங்க.. அதான்..

Preethi_Blue_Leaf_Platinum

<<<<<     >>>>>

இது இங்க டிவில வந்த ஒரு ஆட்.. எனக்கு ரொம்ப பிடிச்சுதுங்க. குழந்தை அவ்ளோ க்யூட்டா இருக்கு.. நீங்களும் பாருங்க. இங்க caviar அவிச்சு.. bacon கூட லைட்டா பொறிச்சு ஒரு சாப்பாடு செய்வாங்க.. ம்ம்ம்ம்ம்.. ஊர்ல அம்மா மிளகாய்த்தூள், உப்பு கலந்து செஞ்சு குடுக்கிற பொறியல அடிச்சிக்க முடியாதுன்னாலும்.. இதுவும் நல்லா இருக்கும். அத விட ப்ரேக்ஃபாஸ்ட், லன்ச்கு சேர்த்துப்பாங்க முழு caviar.. வாயில கடுகாட்டம் கடக் கடக்னு கடிபடும். இப்போ நீங்க பல்லக் கடிக்கிற சத்தம் எனக்கு கேக்குது.. அதனால.. லுக்குகள் தொடரும்..

வர்ட்டா..

22 August, 2010

நிலா(வீட்டு)க்கு போய்ட்டேன் - 3

ஊர் சுத்தல் ஒண்ணு.

ஊர் சுத்தல் ரெண்டு.

இப்படியான பயணம் புறப்படும் போது எதையாவது மறந்துட்டு போகணும் என்ற வழக்கத்துக்கு ஏற்ப திடீர்னு அம்மு சொன்னா ”அம்மா.. பல்லுக்கு போடற க்ளிப் மறந்துட்டேம்மா” அவங்க பல்வரிசை சீரா இல்லைன்னு தூங்கும்போது க்ளிப் போடணும். பல் வைத்தியர் ஆணை. ”என்னம்மா.. பாத்ரூம்ல நீங்க வச்சுட்டு வந்தத கொண்டு வந்து கைல குடுத்தேன் இல்லை” இது நான். ”பறவால்லம்மா.. பல்லுக்கும் லீவு விட்டிடலாம். வீட்டுக்கு போய் போட்டுக்கலாம்” என்ற கண்ணாளன் சமாதானத்தோட தூக்கத்த தொடர்ந்தாங்க. பாஸ்போர்ட் எல்லாம் எடுத்துட்டேனான்னு நான் ஒரு தடவை சரி பார்த்துக்கிட்டேன். விசா தேவை இல்லைன்னாலும் போலிஸ் எங்காவது நிறுத்தி கேக்கும்போது காட்டணும்.

எங்க ஊர் எல்லை தாண்டினதும் இயற்கை விளையாட்டுக்கள். மலையும், நீரும், காடும், வானமும்.. அத்தனை அழகையும் கொஞ்சமும் இழக்காமல். இலவச வைத்தியம் கண் வழியே மனதுக்கு. என்னதான் ஊருக்குள்ளேயும் எல்லாமும் இருந்தும் ரசித்துப் பார்க்க எப்போதாவது தான் தோன்றும். இது அப்படியல்ல.  விடுமுறை என்று வந்தாலே காணும் அத்தனையும் ரசிப்பதாய் இல்லை ரசிக்க வைப்பதாய். வருஷம் ஒரு தடவை வரும் வழிதான் என்றாலும் இந்த மலை அப்படியே இருக்கு, இங்க இருந்த அருவிய காணமேன்னு உறவு விட்டுப் போகாமல் ஒரு விசாரிப்பு.

IMG_0149 இதில் இரண்டாவதாய் இருக்கும் மலை மட்டும் எல்லாவற்றையும் விட வேறு மாதிரியாய் தனித்து இருக்கும்.

 

 

 

 

IMG_0153 அடி வாரத்தில பாத்தா மண் சரிவு வந்த மாதிரி இருக்கும். ஆனா எப்போதும் இப்படித்தான்.

 

 

 

IMG_0156 குட்டிக் குட்டியாய் குதித்து விழும் நீர் வீழ்ச்சிகள்.

 

 

 

 

இந்த தடவை என்னமோ எனக்கு பயணம் போறதுக்கான மனநிலை அவ்வளவா இருக்கலை. வழக்கமா தடல் புடலா நடக்கிற பயண ஆயத்தங்கள் எதுவும் செய்யத் தோணலை. உலக கோப்பை ஃபைனல் காரணம் வச்சு கண்ணாளன் பயணத்தை பின் போட்டதும் ஒரு காரணமா இருக்கலாம். கிளம்புவதற்கு முதல் நாள் இரவு தூக்கம் இல்லாமல் வெற்று யோசனையில் இருந்த மூளைக்குள்ளும் ரசனை உணர்வுகள் உயிர் பெற ஆரம்பிச்சு மனதோடு உடலும் இலகுவாக ஆனப்போ ஓட்டுனர் பதவி எனக்கு கொடுக்கப்பட்டது.

கார் போகவே அகலம் குறைவா இருக்கிற மலைப் பாதை வளைவுகள். இதில் பல கண்டெய்னர் லாரிகள், டாங்கர்கள் வேகமா பேய் மாதிரி வரும். பாதையோட திருப்பங்கள், வேக அளவு எல்லாம் அவங்களுக்கு பழக்கமான வழக்கம். எப்பவாவது போற எங்களுக்கு?? அதிலும் எனக்கு?? அதிகாலையில புறப்படுறதால பெரும்பாலும் இவ் வகையான வாகனங்கள பார்க்க நேரிடாது. சொந்தச் சாலையில போற மாதிரி ஒரு அனுபவம் இருக்கும். மற்றைய வாகனங்கள் எப்பவாவது ஒன்றை கடக்கும்போது பார்க்கலாம். ஆனால் இந்த மலையை குடைந்த குகைகள் இருக்கே.. ஓரளவுக்கு மட்டுமே வெளிச்சம் இருக்கும். முக்கால் குடும்பமும்  தூங்கும்போது ஒற்றை ஆளா விழிச்சிருந்து வண்டி ஓட்டுவது கொஞ்சம் இல்லை நல்லாவே பயமா இருக்கும்.

DSCN0112 இம் முறை சது விழிச்சிருந்து பேசிட்டு இருந்ததோட படமும் எடுத்தார்.

 

 

 

 

1280078195387 இது 25 கி.மீ நீளமான குகை. இதே மாதிரி மூணு இடத்தில கலர் லைட் போட்டு அழகுபடுத்தி இருக்காங்க. இத பாக்க அம்முவும் எந்திரிச்சாச்சு. அவங்க எடுத்த ஃபோட்டோ இது.

 

 

DSCN0128 DSCN0129

மலைச்சரிவு வந்த இடம். திருத்த வேலைகள் நடந்துகொண்டு இருக்கிறதால ஒரு வழிப் பாதை மட்டும்.

IMG_0162 IMG_0164 இந்தப் பகுதி கொஞ்சம் வேறு மாதிரியான அமைப்பில இருக்கும். உயரமான மரங்கள் இல்லாத, செடிகள் நிறைந்த மலைப்பகுதி. இங்க மட்டும் 100 கி.மீ வேகத்துல ஓடலாம். கண்ணாளன் குட்டித் தூக்கம் கடந்தும் தூங்கிட்டு இருந்ததால எனக்கு இந்த வருஷம் முதல் முதலா கிடைத்தது வாய்ப்பு. படங்கள் அம்மு.

இப்போ மெதுவா என்னவரோட சேர்ந்து வானமும் தூக்கம் கலைந்து எழுந்திருக்க ஆரம்பிச்சுது.

IMG_0172 IMG_0175 IMG_0177 

ரொம்ப தூரம் வந்திட்டதால இங்க ஒரு சின்ன இடைவேளை. அந்த நேரத்தில நீங்களும் சான்விச்சும், டீயும் எடுத்துக்கோங்க. மிச்சம் இருக்குப்பா.. நான் தான் வண்டி ஓட்டிட்டு இருந்தேன்ல. மீதி அடுத்த பதிவில.

வர்ட்டா..

18 August, 2010

உயிர் விளையாட்டு.

X X X X X                                                                                                             X X X X X 

உன்னிடம்
கேட்காது தவிர்க்கப்பட்ட
கேள்விகளுக்குள்
மறைந்திருக்கின்றன
உன் மனதின் உண்மைகள்..

questions

X X X X X                                                                                                              X X X X X 

வாசல் வரை வரத்தான்

எனக்கான அனுமதி

காத்திருக்கிறேன்

நாளை உன் ஸ்பரிசம்

உணரலாமென..

 sko

X X X X X                                                                                                                                

உன் விரல் விசைக்காய்

என் சுழல்ப் பேச்சு

நீ இல்லாத வீட்டிலும்

மௌனமாய் தவமிருக்கும்..

fan

X X X X X                                                                                                              X X X X X

கொடுத்து வைத்த மேகம்
நினைக்கும் போதெல்லாம்
அழுது தீர்த்து விடுகிறது
என்னாலும் அது முடிந்தால்..

rain460

X X X X X                                                                                                                X X X X X

உயிராய் ஆனவனுக்காய்

உயிரோடு விளையாடும்

ஓர் உயிர் விளையாட்டு..

j 016 (2)

X X X X X                                                                                                             X X X X X 

16 August, 2010

தமிழ் அலை..

அக்காச்சி கனடா வந்ததுக்கு அப்புறம் நேத்து தான் அண்ணாவ ஸ்கைப்ல பாக்க முடிஞ்சுது. அண்ணாவோட ரெண்டாவது பையன் பேசினார்.

“சஜோபன் எங்க தயான்”

”அவரா அத்தை.. அவங்க எல்ல்ல்லாரும் அவங்க வீட்கு கனடாக்கு போய்ட்டாங்க”

“ஓ.. எப்போப்பா.. சொல்லவே இல்லையே யாரும் எனக்கு”

“அன்னிக்கே போய்ட்டாங்க. தெரியாதா உங்களுக்கு?? அப்பாதான் ப்ளேன்ல கொண்டு போயி விட்டுட்டு வந்தார்”

“ஓ.. உங்க அப்பா ப்ளேன்லாம் ஓட்டுவாரா?? அத்தைக்கு அதுவும் தெரியாதேப்பா”

“அத்தை.. அப்பா ப்ளேன் ஓட்டலை. ப்ளேன் இருக்கிற இடத்துக்கு கூட்டி போய் விட்டாரு. அவங்க ப்ளேன்ல ஏறி போய்ட்டாங்க”

“ஓ.. ரொம்ப நல்லது. உங்களுக்கு என்ன சொல்லிட்டு போனார் சஜோபன்??”

“எனக்கா அத்தை?? டாடா தயான்.. பை பை தயான்.. போய்ட்டு வரேன் தயான்னு சொல்லிட்டு போனார் அத்தை”

2 2 2 2 2

இது போன வாரம். புகழ், தயான் ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தாங்க. கிரண் ரொம்ப வாலுன்னு போட்டுக் குடுத்துட்டு இருந்தாங்கன்னும் சொல்லலாம்.

“அச்சச்சோ.. அவ்ளோ குழப்படி செய்வாரா கிரண். அப்போ நீங்க சமத்தா தயான்”

“ஆமா அத்தை. எங்க மாடு இருக்கில்ல.. அதுக்கு குடுக்கிற மாவு இருக்கில்ல.. அத எல்லாம் எடுத்து உடம்பு பூரா போட்டுப்பார் அத்தை.. குளிக்கிற மாதிரி”

கேள்விக்குறிய முகத்தில காட்டி அண்ணிய பாத்தேன். அவங்க பதில முகத்தில காட்டி பாத்ததோட மட்டுமில்லாம சொன்னாங்க..

”அது ஒண்ணும் இல்லை மச்சாள். மாட்டுக்கு வைக்கிற புண்ணாக்கு இருக்கில்ல. அத தான் அவர் அப்டி சொல்றார்”

 2 2 2 2 2

இதுவும் அதே மாட்டோட இன்னொரு கதை. தயானும் புகழும் டியூஷன் போய்ட்டு வந்தாங்களாம். வரும்போது யாரோ சொன்னாங்களாம். உங்க பின்னாடியே பேய் வரும். திரும்பி பாக்காம வீடு போய் சேருங்கன்னு. பயந்திட்டீங்களான்னு புகழ கேட்டேன். ஆமா அத்தை. ஓடியே வந்துட்டேன், சத்தமா கத்திக்கிட்டேன்னாங்க. தயான கேட்டேன்.

“எங்க மாடு இருக்கில்ல.. அது கன்னுக்குட்டி வச்சிருக்கில்ல.. அதனால அது கோவமா இருக்கும். நான் பக்கத்தில போக மாட்டேன். எனக்கு ரொம்ப பயம். பேய்க்கெல்லாம் எனக்கு பயம் கிடையாது அத்தை. ஏன்னா நான் வீரன்”

அப்டின்னார். அது சரி. நீங்க தான் அப்பப்போ அத்தைய ஸ்கைப்ல பாக்கறிங்க இல்லை. அப்புறம் உங்களுக்கு எப்டி பேய்க்கு பயம் வரும்னேன். அண்ணி விழுந்து விழுந்து சிரிக்கறாங்க. அண்ணா நோ கமண்ட்ஸ்.

2 2 2 2 2

அக்காச்சி வந்த அடுத்த நாள் அப்பா கிட்ட பேசும்போது பசங்க மூணு பேருமே ரொம்ப நல்லா தமிழ் பேசுறதா சொன்னார். அவங்களுக்கு வாங்க, போங்க, ஆமா, இல்லை மாதிரியான சில சொற்கள் தான் தமிழில பேச வரும். ஆனா நாங்க பேசினா புரிஞ்சுப்பாங்க. இப்படியே தொடர்ந்து பேசினா இனிமே மறக்க மாட்டாங்கப்பான்னு சொன்னேன். அப்டியே அண்ணா கிட்டவும் பேசினேன். சந்தோஷமா இருக்கு அவங்க தமிழ் பேசுறத கேக்கும்போதுன்னேன். அது வெறும் பேச்சில்லடி. தமிழ் அலைன்னார். ஷித்தி.. நான் கனடா வண்டிட்டன். எங்க வீட்ல நிக்கிடன். அம்மா கடைக்க போரிங்க நீங்க.. இப்டி பட படன்னு சஜோபன் பேசுறார். அக்காச்சி கிட்ட சொன்னப்போ சொன்னா அவர் தமிழ் புலமைய பத்தி.

அத்தானோட அப்பா ஃப்ரெண்டு வீட்டுக்கு போயிருந்தாங்களாம்.  பரவால்லையே. பசங்களுக்கு ரொம்ப மரியாதையான பழக்கம் பழக்கி வச்சிருக்கிங்க. அப்டித்தான் இருக்கணும் அப்டின்னு அவர் ஒரு சான்றிதழ் கொடுத்தாராம்.  ஒரு பத்து நிமிஷம் கழிச்சு.. சஜோபன் அவர பாத்து சொன்னாராம்..

“டேய்.. போய் எனக்கு சோடா எடுட்டுட்டு வாடா”

2 2 2 2 2

ஊர் நேரத்துக்கு சேரன் முழிச்சுக்குவாராம். அம்மாவும் அப்பாவும் அவர மடியில வச்சிட்டு அக்காச்சி தூக்கம் கலையாம இருக்க என் கூட ஸ்கைப்ல பேசிட்டு இருந்தாங்க. சதுர் வந்து என் தோளில சாஞ்சிட்டு பாத்துட்டு இருந்தார். சேரனுக்கு வந்துதே கோவம். டேய்.. எந்திரிடா.. ஷித்தி பாவ்ம். வலிக்கம்.. அடி உனக்கு.. இத சொன்னதும் இல்லாம அப்பப்போ மானிட்டருக்கு அடி, குத்து வேற. எனக்கு வலிக்காம இருக்கன்னு கிட்ட வர சொல்லி வருடி விட்டார். சதுருக்கு ஒரே சிரிப்பா போச்சு.

இன்னமும் கருண் தமிழ் அலையில நான் பாதம் நனைக்கல.

2 2 2 2 2

சமையல் செஞ்சுட்டு இருந்தேன். தங்கா அக்காவங்க சாப்பிட வரதா இருந்தாங்க. சதுர் தண்ணி குடிக்க வந்தவர் அதை விட்டு என் பக்கத்தில வந்தார். எதுவோ கேக்க போறார்னு தெரிஞ்சுது. எதுவா இருக்கும்னு பாத்தா அவருக்கு தேவையான எதுவும் அங்க இருக்கலை. அதிசயமா சமையலுக்கு எடுத்து வச்சிருந்த மசாலா பொருட்களை பாத்தார். அப்டியே கேட்டார்.

“என்னம்மா இது.. மரத்தை எல்லாம் போட்டா சமையல் செய்விங்க.. இத நாங்க சாப்டணுமா.. அஷ்..” (அப்டின்னா அய்யே..)

அவர் கேட்டது கறுவா பட்டை. அவ்ளோ பெருஸ்ஸ்ஸா மரத்துண்டு சைஸ்ல தான் கிடைச்சுது. இங்க இருக்கிற துருக்கிக்காரன் கடையில. தங்கா அக்கா சாப்டும்போது சொன்னாங்க. ”வந்ததும் சொல்ல நினைச்சேன். என்னப்பா இன்னைக்கு இவ்ளோ நல்லா வந்திருக்கு உங்க க்ரேவி.. வாசனையும் தூக்கலா இருக்கு”

Bilde007  பின்ன மரம்லாம் போட்டு சமையல் செஞ்சா சும்மாவா.. நீங்களும் பாருங்க மரத்தை.

 

 

 

 

 

வர்ட்டா.. 

10 August, 2010

யாராவது.. ப்ளீஸ்..

உன் முன்னால் இருக்கும்போதெல்லாம்

உயிர் பிரிக்கும் எதையும்

என் கண்படாமல் வைத்து விடுகிறேன்

மிகக் கவனமாக

உன்னை எதுவும் செய்யும்

உரிமை எனக்கில்லை

என்னை நானே கொலை செய்துவிடும்

எண்ணம் எனக்கிருக்கிறது

இப்பொழுது புதிதாக.. பயமாக..

1 1 1 1 1

செத்துப் பார்க்க ஆசை

அப்போது உன் நினைவு

என்னுள் எப்படி இருக்கிறதென்று

உணர்ந்து பார்க்க வேண்டும்

யாராவது என்னைக் கொல்லுங்களேன்

ஒரே ஒரு தடவை..

1 1 1 1 1

புதைத்து விட்டதாய்

நான் நினைத்திருந்த

ஆசையொன்று

நேற்றிலிருந்து மீண்டும்

விரைந்து படர்கின்றது

மன வெளி முழுதும்

முன்னை விட

வேகமாய்

வீரியமாய்

எப்போது நான் உன்னை

கொல்லப் போகின்றேன்??”

1 1 1 1 1

இன்னைக்கு என் பயணத்தை தொடரலாம்னு தான் இருந்தேங்க. முடியலையே. குரு என்னடான்னா கனவு கண்டு மிரட்டுறார். தாமிரா என்னடான்னா காமிராவால விரட்டுறார். நர்சிம் ஒரு படி மேல போய் கொலையே பண்ணிட்டார்னா பாருங்களேன்.

என்ன செய்வேன் நான்?? எழுத வந்த பயண விபரம் மறந்து போச்சுங்க. நான் பாவம் மட்டுமில்லை. பயந்தவளும் கூட. இது உங்களுக்கும் தெரியும் இல்லையா. இதுக்கு என்ன தீர்வுன்னு யோசிச்சேன். பயத்த பயத்தாலதான் எடுக்கணும்னு யாரும் சொல்லலைங்க. நானே எனக்கு சொல்லிக்கிட்டேன். அதோட விளைவு தான் இந்த இடுகை. இப்போதான் மனசு அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாடான்னு சொல்லுது.

வர்ட்டா..

04 August, 2010

சொர்க்கம்!! இரண்டே வார்த்தையில்.

vannசுள்ளிடும் உன் வார்த்தைகள்

ஒரு சிலதான்

என் மனதில் வலிகள்

வலிகள் மட்டும்??

 

*****     *****     *****     ******     *****

IMG_0640  எங்கு வரம் வாங்கி வந்தது

தொலை நீண்ட நீல வானம்

ஒன்று கடக்க இன்னொன்றாய்

ஒட்டி உறவாடிக் கொள்கின்றன

வெண் பஞ்சு மேகங்கள்..

 

*****     *****     *****     *****     *****

 

எனக்கான சொர்க்கம்

இரண்டே வார்த்தையில்..

”கிட்ட வா”

*****     *****     *****     *****     *****

தொடர் கதைய மறந்துட்டேன்னு நினைச்சிங்களா?? இதுவும் பயணத்தில பார்த்ததுதான். என் கண்ணனுக்கும் எனக்குமான சொத்து. சோகம், சுகம், ஏக்கம், கண்ணீர், காதல் அத்தனையையும் இரு மனங்களுக்கும் கண் வழி கடத்தும் மாய மருந்து. எல்லாம் மறந்து விரிந்த அவன் கைகளுக்குள் அணைந்து, அணைத்து அங்கேயே இருந்திட முடியாமல் நடப்பு வாழ்க்கை இழுத்து வருவது போல்தான் இதுவும். எதுவோ ஒரு ஜெர்மன் தெருவில.. 160 கி.மீ வேகத்துல வண்டி போய்க்கொண்டு இருந்த போதுதான் பார்த்தேன்..

KVS.  யாரோ  ஒரு புண்ணியவான். கோதுமையோ எதுவோ விளைச்ச ஒரு தானிய வயல்ல, அறுவடைக்குத் தயாரான பழுப்புப் பயிர்களுக்கு மத்தியில பசேல்னு எழுதி வச்சிருந்தார். கிட்ட வா.. கூடவே சுசியும் சேர்த்து சொல்வது போல.. அரக்கப் பரக்க காமிரா எடுத்து ஒரு கிளிக்.. வெறும் பழுப்புப் பயிர்.. அடுத்த கிளிக்.. இந்தப் படம்.. அப்படியும் ஒரு குட்டிச் செடி குறுக்கே.. V மறைஞ்சு போச்சு.

வண்டிய உடனே திருப்ப முடியாத படி நேர்ப் பாதை.. அகலம் குறைந்த சாலையோரம் ஒதுக்கி நிறுத்துவது உயிராபத்தில் முடியும். இன்னொரு முறை பார்க்கலாம் என்ற ஆறுதலோட இதாவது கிடைச்சதே என்ற திருப்தியோட வந்தாச்சு. அப்போ இருந்த படபடப்பில தோணலை. எந்த இடம்னாவது பார்த்து வைக்கணும்னு. அப்படியே எப்பவோ ஒரு தலைவலி நாளில் எழுதி வச்ச இன்னொரு ”கிட்ட வா”வும் இலவச இணைப்பா.. பாவம் நீங்க.

*****     *****     *****     *****     *****

 Kissing-Couple

இச் என்று ஒரு சத்தம்

இறுக்காத ஓர் அணைப்பு

”ஆமா இவ ஒருத்தி”

பட்டென்று நனவுக்கு வந்தேன்

”இத்தனை நேரம் தலைவலியோட

ஏன் கஷ்டப்படறே??”

”வீட்டுக்குப் போய்தான் டாப்லட் போடணும்னு

அப்டி என்ன வேண்டுதல் உனக்கு??”

”அவ வீட்ல காயகல்பம் வச்சிருக்காளாம்”

குறைப்படுவார்கள் அலுவலகத்தில்

போகாத பொழுதை நெட்டித் தள்ளி

வேலை முடிந்து வீடு வந்தால்

என் முகம் பார்த்த அடுத்த நொடி

இரு கை நீட்டி

என் கண்ணன் கூப்பிடுவான்

”தலைவலியா..

கிட்ட வா..”

இச் என்று ஒரு சத்தம்..

இறுக்காத ஓர் அணைப்பு..

உயிரின் அணுவரை சுகித்துப் போகும்

யாருக்கு வேண்டும் மருந்தும் மாத்திரையும்??

*****     *****     *****     *****     *****

01 August, 2010

நிலா(வீட்டு)க்கு போய்ட்டேன் - 2

ஊர் சுத்தல் ஒண்ணு.
DSC00134 அல்லாரும் முதல்ல சாக்லேட் எடுத்துக்கோங்க. சுவிஸ் சாக்லேட் சூப்பரா இருக்கும். Mövenpick - The art of Swiss ice cream.. ம்ம்.. அள்ளும் சுவை. கொண்டு வர கரைஞ்சு போய்டும்னு நானே சாப்டேன். உங்களுக்கும் சேர்த்து..

 

விடுமுறைன்னு வந்துட்டா வேலைக்குப் போறவங்களுக்கும் சரி, போகாதவங்களுக்கும் சரி கொண்டாட்டத்துக்குக் குறைவிருக்காது. என்னவோ இவளவு நாளா அதுக்காகத்தான் உயிர் வாழ்ந்த மாதிரி அவ்வளவு ஒரு நிம்மதி. மனசுலயும் உடல்லயும் உற்சாகம் காட்டாறு மாதிரி கட்டில்லாம ஓடும். நான் வழக்கமா என்னோட விடுமுறைய பசங்க சம்மர் ஹாலிடே கூட மூணு வாரம், அவங்க பர்த்டே சமயம் ஒரு வாரம், விண்டர்ல ஒரு வாரம்னு பங்கு போட்டுக்கொள்வேன். அது என்ன மாயமோ தெரியல.. இன்னைக்குத்தான் லீவ்ல வந்தா மாதிரி இருக்கும் அதுக்குள்ள முடிஞ்சு போய்டும். அதுவும் விடுமுறை தீர்ந்து வேலைக்கு மறுபடி போகும் அந்த முதல் நாள்.. அவ்வ்வ்வ்..

அதிகமான எங்க கோடை விடுமுறை கார்ப் பயணமாவே இருக்கும். கண்ணாளனுக்கு வண்டி ஓட்டுறதுல இருக்கிற அலாதிப் பிரியம் முதல் காரணம்னா போற இடத்தில நாங்க நினைச்ச நேரம் நினைச்ச இடம் போக அது வசதியா இருக்கிறது ரெண்டாவது காரணம். பசங்களுக்கும் இது பிடிச்சுப் போனது கூடுதல் நன்மை. மாமியார் வந்து நிக்கிற சமயம் அவங்களும் விரும்பி வருவாங்க.

அம்மு ஆறு மாச குழந்தையா இருந்தப்போ முதல் முதல் டென்மார்க் போனோம். அவ்ளோ ஜாலியா கும்மாளம் போட்டுட்டு வந்தாங்க. அதையே சதுவும் பின்பற்றினார். அதிக நேரம் தூக்கத்தில கழியிற அவங்க பயணத்தில இந்த வருஷம் மாற்றங்கள். நிறைய நேரம் விழிச்சிருந்து எங்க கூட பேசிட்டு, அவங்களுக்குள்ள சண்டை போட்டுட்டுன்னு இதுவும் புது அனுபவமா இருந்துது.

இங்க இருந்து கார்ல யுரோப் டூர் போறதுன்னா ஒண்ணு கப்பல்ல போகலாம். இல்லை இங்க இருந்தே ட்ரைவ் பண்ணிட்டு போகலாம். நாங்க சில சமயம் கப்பல்ல டென்மார்க் போய் அங்க இருந்து ட்ரைவ் பண்ணுவோம். கப்பல்ல ஒரு முழு நாள் பயணம். நீர்ப் பரப்பும், ஆகாயமும் ஆழ்கடல்ல போகும்போது அவ்வளவு அழகா இருக்கும்.  கொஞ்சம்   பயமாவும். காத்துல கப்பல் ஆட ஆரம்பிச்சுதுன்னா, எங்க கேபினும் செக்கண்ட் ஃப்ளோருக்கு மேல இருந்துச்சுன்னா.. அவ்ளோதான். உவ்வே.. குடிக்காமலே குடிகாரன் பர்ஃபாமன்ஸ் குடுக்கணும் நான். இந்த சுவத்துல இருந்து அந்த சுவத்துக்கு ஒரே ஜம்பு. டாய்லெட்ல சர்க்கஸ்காரி மாதிரிதான் உக்காருவேன். இறுக்க்க்க்கி கண்ண மூடிட்டு, தூக்கமும் இல்லாம பெட்ல படுத்துட்டு இருப்பேன். மீதி முக்கால் குடும்பமும் அவ்ளோ ஆட்டம் போடும். ஊர சுத்திப் பாக்குறா மாதிரி கப்பல சுத்தி சுத்தி வருவாங்க. மாமியார் சமத்தா தூங்கிடுவாங்க. லேட்டா மீதிப் பேரும். என்னால முடியிறதில்லை.

இந்த தடவை ட்ரைவ் பண்றதுன்னு முடிவாச்சு. இங்க இருந்து தலைநகரம் ஆஸ்லோ வழியா சுவீடன் போகணும். சுவீடன் வழியா டென்மார்க். ஆஸ்லோ 550 கி.மீ. தூரத்தில இருந்தாலும் மலைப்பாதை, கூடவே குறைந்த வேகம்னு அதிக நேரம் பிடிக்கும். போக்குவரத்து நெரிசல்ல சிக்காம, வெயில் வரதுக்கு முன்னம் மலைப்பாதையை கடந்துட அநேகமா காலை நாலு மணிக்கு முன்னம் கிளம்பிடுவோம். வழியில கண்டெய்னர் லாரிகள் குறைவா இருக்கும் என்பதும் உபரி நன்மை. 

குடிக்க, கடிக்க, கேக்க, நொறுக்க, படிக்கன்னு தேவையான எல்லாம் எடுத்து வச்சுட்டு நைட் தூங்க போவோம். அதி காலையில எழுந்து ஃப்ளாஸ்க்ல டீ எடுத்துட்டு, சாண்ட்விச் பாக் பண்ணிட்டு எல்லாரும் வண்டில ஏறினதும் கண்ணாளன் கடைசியா வீட்ட ஒரு ரவுண்ட் வந்து ஜன்னல், கதவு எல்லாம் பூட்டி இருக்குதா, குறிப்பா குப்பை எல்லாம் பின்ல கட்டிப் போட்டாச்சான்னு செக் பண்ணுவார். குப்பைய மட்டும் மறந்தோம்னு வைய்யுங்க, திரும்பி வரும்போது வீடு அவ்ளோதான்.

தூரப் பயணம் போகும்போதெல்லாம் கார்ல ஏறின உடனவே முதல்ல சாமி பாட்டு கேக்குறது என் விருப்பம். ஒருவித நம்பிக்கைன்னும் சொல்லலாம். ஒரு தடவை அலாரம் வைக்காம தூங்கி ரொம்ப லேட்டா கிளம்பியாச்சு. நண்பர் ஒருவர் கால் பண்ணார். இப்போ பாதி தூரம் வந்தாச்சுன்னு சொன்னார் என்னவர். அவர் உடனவே சொன்னார் ”எங்க.. அதான் சுப்ரபாதம் கேக்குதே. இப்போ தான் கிளம்பி இருக்கிங்க” ன்னு.
IMG_0144

இந்த தடவை கிளம்ப நாலரை மணி ஆச்சு. மகாநதி ஷோபனா கூட சேர்ந்து விநாயகர் அகவல் சொன்னேன். (அவங்க பாடினாங்கடி.. நீ சொன்னேன்னு சொல்லு) மெதுவான தூறலோட குளிர்ச்சியா ஆரம்பிச்சுது பயணம். அப்புறம் முக்கியமான விஷயம். படங்கள் விபரங்கள் எல்லாம் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும். பொறுத்துக்குங்க. போனதே ரெண்டு வார விடுமுறை. இங்க இருந்து அங்க போய் நிலாவுக்கு ஒரு ஹாயும் அட்ஷகிக்கு ஒரு உம்மாவும் குடுத்துட்டு வந்தா மாதிரி இருக்கு. எந்த இடத்தையும் சுத்திப் பார்க்க முடியல. அடுத்த விஷயம் இயற்கைய ரசிக்கவெல்லாம் எங்க வண்டி நிக்காது. நிக்கிற இடத்துல இருக்கிறத ரசிக்க வேண்டியதுதான். தவிர அந்தந்த வேகத்துக்கேற்ப ரசிக்கிறதும், படம் எடுத்துக்கிறதும் உங்க சாமர்த்தியம்.


IMG_0146 சுவிஸ்ல வெயில் ஜாஸ்தியா இருக்கும்னு சது காப்ஸ்லாம் எடுத்து வச்சிருக்கார்.

 

 IMG_0145 நாலு முப்பதுக்கு கிளம்பினோம். இப்போ நாலு அம்பத்தேழாச்சா.. பாவம் சாண்ட்விச் பேக் கெஞ்சிட்டு இருந்துது சாப்டுன்னு.. அதான்.


 


மொத்தமா 1200 கி.மீ தூரத்தில டென்மார்க் சித்தி வீடு. டெஸ்டினேஷன் டைம் சாயந்தரம் ஆறு மணின்னு GPS ஆண்ட்டி சொன்னாங்க. எப்டியும் அவங்க சொல்றதுக்கு முன்னாடி போய் சேரணும் என்ற கொள்கையோட என்னவர். உயிர் போகாம போய் சேரணும் என்ற வேண்டுதலோட நான். அம்மா சாண்ட்விச்களை கபளீகரம் செய்வது தெரியாம கலைந்த தூக்கத்த தொடரும் அம்மு, சது.  போக்குவரத்தே இல்லாத சாலையில சத்தமே செய்யாம சமத்தா ஓடுது எங்க வண்டி..

எவ்ளோ நேரத்தில, எத்தனை  சாண்ட்விச் முழுங்கினேன், எத்தனை கப் டீ சாப்டேன் போன்ற இதர விஷயங்கள் அடுத்த பாகத்தில். முடிவ்வ்வே பண்ணிட்டேன்.. இனி தொடர்ந்து தொடர் பதிவுதான். அது வரைக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்களோடு..

வர்ட்டா..