Pages

  • RSS

10 August, 2010

யாராவது.. ப்ளீஸ்..

உன் முன்னால் இருக்கும்போதெல்லாம்

உயிர் பிரிக்கும் எதையும்

என் கண்படாமல் வைத்து விடுகிறேன்

மிகக் கவனமாக

உன்னை எதுவும் செய்யும்

உரிமை எனக்கில்லை

என்னை நானே கொலை செய்துவிடும்

எண்ணம் எனக்கிருக்கிறது

இப்பொழுது புதிதாக.. பயமாக..

1 1 1 1 1

செத்துப் பார்க்க ஆசை

அப்போது உன் நினைவு

என்னுள் எப்படி இருக்கிறதென்று

உணர்ந்து பார்க்க வேண்டும்

யாராவது என்னைக் கொல்லுங்களேன்

ஒரே ஒரு தடவை..

1 1 1 1 1

புதைத்து விட்டதாய்

நான் நினைத்திருந்த

ஆசையொன்று

நேற்றிலிருந்து மீண்டும்

விரைந்து படர்கின்றது

மன வெளி முழுதும்

முன்னை விட

வேகமாய்

வீரியமாய்

எப்போது நான் உன்னை

கொல்லப் போகின்றேன்??”

1 1 1 1 1

இன்னைக்கு என் பயணத்தை தொடரலாம்னு தான் இருந்தேங்க. முடியலையே. குரு என்னடான்னா கனவு கண்டு மிரட்டுறார். தாமிரா என்னடான்னா காமிராவால விரட்டுறார். நர்சிம் ஒரு படி மேல போய் கொலையே பண்ணிட்டார்னா பாருங்களேன்.

என்ன செய்வேன் நான்?? எழுத வந்த பயண விபரம் மறந்து போச்சுங்க. நான் பாவம் மட்டுமில்லை. பயந்தவளும் கூட. இது உங்களுக்கும் தெரியும் இல்லையா. இதுக்கு என்ன தீர்வுன்னு யோசிச்சேன். பயத்த பயத்தாலதான் எடுக்கணும்னு யாரும் சொல்லலைங்க. நானே எனக்கு சொல்லிக்கிட்டேன். அதோட விளைவு தான் இந்த இடுகை. இப்போதான் மனசு அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாடான்னு சொல்லுது.

வர்ட்டா..

31 நல்லவங்க படிச்சாங்களாம்:

siva said...

hi

vadai enakuthan..

erunga padichutu vanthu meethi vadiya saptuporen..

ok..

tata

siva said...

hey nanthan 2vathu....

siva said...

உயிர் பிரிக்கும் எதையும் என் கண்படாமல் வைத்து விடுகிறேன் --wow..migavum rasitha varigal..arambemey amarkalam...

siva said...

நான் பாவம் மட்டுமில்லை.

appo padikravanga????PAVAM ELLAIYA???

சீமான்கனி said...

அன்புள்ள அக்கா நலமாய் இருக்கீங்கதானே????இதுக்குதான் நான் அப்போவே சொன்னேன் அந்தபக்கம் போகும்போது கொஞ்சம் எச்சரிக்கையா இருங்கன்னு கேட்டாதானே...

சீமான்கனி said...

இப்போ பாருங்க என்னவோ ஆய்டுச்சு...நான் பேய் 'சே' போய் மந்திரிக்க ஆளு கூப்பிட்டு வாரேன்...வர்ர்ட்டா...

LK said...

ஏன் இந்த கொலை வெறி

RAJ said...

"க்ளிக்" செய்து படியுங்கள்.

ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.

கார்க்கி said...

ஆவ்வ்வ்

நீங்க எழுதாம விட்டதற்கு நாங்க எல்லாம் காரணமா?

அருண் பிரசாத் said...

டச்சிங் கவிதைகள், சூப்பர்

நட்புடன் ஜமால் said...

2ஆவது பத்தி பற்றி நானும் சிந்திததுண்டு

ஆதிமூலகிருஷ்ணன் said...

மொக்கைக் கவிதைகள்.

ஜெய்லானி said...

//செத்துப் பார்க்க ஆசை
அப்போது உன் நினைவு
என்னுள் எப்படி இருக்கிறதென்று
உணர்ந்து பார்க்க வேண்டும்
யாராவது என்னைக் கொல்லுங்களேன்
ஒரே ஒரு தடவை..//

ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு...!!

கோபிநாத் said...

யாராவது.. ப்ளீஸ்..தலைப்பு அப்புறம் என்னாமே எழுதியிருக்கே அதை கொஞ்சம் சொல்ல முடியுமா!! ;)))

சே.குமார் said...

ஏன் இந்த கொலை வெறி?????????

டச்சிங் கவிதைகள்.

முனியாண்டி said...

//
செத்துப் பார்க்க ஆசை
அப்போது உன் நினைவு
என்னுள் எப்படி இருக்கிறதென்று
உணர்ந்து பார்க்க வேண்டும்//

எப்படி யோசிக்க முடிந்தது பிரம்மிப்பாக இருக்கிறது. மிகவும் ரசித்தேன்.

சின்ன அம்மிணி said...

கொலைவெறி தாங்க முடியலையே சுசி :)

sandhya said...

ஏன் தோழி இவ்ளோ சோகம் ?இந்த கொலை வெறி எதுக்கு ??நண்பர்கள் நாங்க எல்லோரும் இருக்கச்சே இவ்ளோ துக்கம் ஏன் ?சொல்லுங்க

நியோ said...

கொலை வெறி தவிர்க்க கூடாதது ....
தன்னையே உயிரோடு கொலை செய்ய முயற்சிப்பவர்கள் பேறு பெற்றவர்கள் ...
மிக்க மகிழ்ச்சி தோழர் !

சௌந்தர் said...

யாராவது என்னைக் கொல்லுங்களேன்
ஒரே ஒரு தடவை//

இதுக்கு தான் இந்த பக்கமே வருவது இல்லை....

vinu said...

யாராவது என்னைக் கொல்லுங்களேன்

ஒரே ஒரு தடவை


sollitteeeeeeeeeengalla senjiduvoom

சுசி said...

சிவா.. ஹிஹிஹி..

Z Z Z Z Z

இது எந்த மந்திரத்துக்கும் சரியா வராது கனி.

Z Z Z Z Z

யாருக்கு கார்த்திக்??

சுசி said...

அதில வேற உங்களுக்கு டவுட்டா கார்க்கி??

Z Z Z Z Z

நன்றி அருண்.

Z Z Z Z Z

ஜமால்.. நிஜமாவா??

சுசி said...

ஆதி.. ரொம்ப நன்றிங்க..

நான் விக்கி கையால மொக்கைப் பதிவர்னு பட்டம் வாங்கின ஆளாக்கும்.

நல்லா எழுதி பட்டத்தை இழந்துடுவேனோன்னு பயந்துட்டு இருந்தேன். அப்ப்ப்ப்பாடா..

Z Z Z Z Z

அதான் தெரில ஜெய்லானி.

Z Z Z Z Z

சொல்ல முடியாது. நீங்க படிச்சுத்தான் பாக்கணும் கோப்ஸ். கிர்ர்ர்ர்..

சுசி said...

நன்றி குமார்.

Z Z Z Z Z

ரொம்ப நன்றி முனியாண்டி.

Z Z Z Z Z

உங்களுக்குமா அம்மிணி??

சுசி said...

அதெல்லாம் இல்லை சந்தியா.. சும்மா.. லுல்லுல்லாயிக்கு :))

Z Z Z Z Z

முதல் வருகைக்கு நன்றி நியோ.. நான் தோழர் இல்லை.. ழி..

Z Z Z Z Z

ஹஹாஹா.. சௌந்தர்.. இவ்ளோ பயமா உங்களுக்கு??

சுசி said...

வினு.. ஏன் இந்த கொலைவெறி??

நியோ said...

// முதல் வருகைக்கு நன்றி நியோ.. நான் தோழர் இல்லை.. ழி.. //

முதல் வருகையா... நோ நோ ... ரெண்டாம் வருகை ...

// நியோ said...

" தட்டிப் போன அர்த்தம்

ஏதும் இருக்குமா என்று
உற்றுக் கேட்கிறேன் மனதுக்குள்... "

அப்படியேதும் இருக்காமலிருக்கட்டுமென
விரும்புகிறது இந்த வாசகன் மனம் ...
May 31, 2010 1:30 AM //

நீங்க தப்பா சொன்னதாலே டிக்கெட் கான்ஸல் பண்ணிட்டேன் !
நாகர்கோவிலிலிருந்துனா பண்ணலாம் ...நார்வேயிலிருந்து ???

வர்றேன் தோழர்! ('தோழி' யை விட 'தோழர்' எனக்கு பிடிச்சிருக்கு )

சீமான்கனி said...

என்னமா சமாளிக்கிராங்கபா...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....

ராமலக்ஷ்மி said...

//பயத்த பயத்தாலதான் எடுக்கணும்னு யாரும் சொல்லலைங்க. நானே எனக்கு சொல்லிக்கிட்டேன்.//

தெளிஞ்சாச்சு. இனி என்ன? அடுத்த பதிவு வரட்டும் சீக்கிரம்:)!

கயல் said...

அருமையான வரிகள்!