Pages

  • RSS

01 August, 2010

நிலா(வீட்டு)க்கு போய்ட்டேன் - 2

ஊர் சுத்தல் ஒண்ணு.
DSC00134 அல்லாரும் முதல்ல சாக்லேட் எடுத்துக்கோங்க. சுவிஸ் சாக்லேட் சூப்பரா இருக்கும். Mövenpick - The art of Swiss ice cream.. ம்ம்.. அள்ளும் சுவை. கொண்டு வர கரைஞ்சு போய்டும்னு நானே சாப்டேன். உங்களுக்கும் சேர்த்து..

 

விடுமுறைன்னு வந்துட்டா வேலைக்குப் போறவங்களுக்கும் சரி, போகாதவங்களுக்கும் சரி கொண்டாட்டத்துக்குக் குறைவிருக்காது. என்னவோ இவளவு நாளா அதுக்காகத்தான் உயிர் வாழ்ந்த மாதிரி அவ்வளவு ஒரு நிம்மதி. மனசுலயும் உடல்லயும் உற்சாகம் காட்டாறு மாதிரி கட்டில்லாம ஓடும். நான் வழக்கமா என்னோட விடுமுறைய பசங்க சம்மர் ஹாலிடே கூட மூணு வாரம், அவங்க பர்த்டே சமயம் ஒரு வாரம், விண்டர்ல ஒரு வாரம்னு பங்கு போட்டுக்கொள்வேன். அது என்ன மாயமோ தெரியல.. இன்னைக்குத்தான் லீவ்ல வந்தா மாதிரி இருக்கும் அதுக்குள்ள முடிஞ்சு போய்டும். அதுவும் விடுமுறை தீர்ந்து வேலைக்கு மறுபடி போகும் அந்த முதல் நாள்.. அவ்வ்வ்வ்..

அதிகமான எங்க கோடை விடுமுறை கார்ப் பயணமாவே இருக்கும். கண்ணாளனுக்கு வண்டி ஓட்டுறதுல இருக்கிற அலாதிப் பிரியம் முதல் காரணம்னா போற இடத்தில நாங்க நினைச்ச நேரம் நினைச்ச இடம் போக அது வசதியா இருக்கிறது ரெண்டாவது காரணம். பசங்களுக்கும் இது பிடிச்சுப் போனது கூடுதல் நன்மை. மாமியார் வந்து நிக்கிற சமயம் அவங்களும் விரும்பி வருவாங்க.

அம்மு ஆறு மாச குழந்தையா இருந்தப்போ முதல் முதல் டென்மார்க் போனோம். அவ்ளோ ஜாலியா கும்மாளம் போட்டுட்டு வந்தாங்க. அதையே சதுவும் பின்பற்றினார். அதிக நேரம் தூக்கத்தில கழியிற அவங்க பயணத்தில இந்த வருஷம் மாற்றங்கள். நிறைய நேரம் விழிச்சிருந்து எங்க கூட பேசிட்டு, அவங்களுக்குள்ள சண்டை போட்டுட்டுன்னு இதுவும் புது அனுபவமா இருந்துது.

இங்க இருந்து கார்ல யுரோப் டூர் போறதுன்னா ஒண்ணு கப்பல்ல போகலாம். இல்லை இங்க இருந்தே ட்ரைவ் பண்ணிட்டு போகலாம். நாங்க சில சமயம் கப்பல்ல டென்மார்க் போய் அங்க இருந்து ட்ரைவ் பண்ணுவோம். கப்பல்ல ஒரு முழு நாள் பயணம். நீர்ப் பரப்பும், ஆகாயமும் ஆழ்கடல்ல போகும்போது அவ்வளவு அழகா இருக்கும்.  கொஞ்சம்   பயமாவும். காத்துல கப்பல் ஆட ஆரம்பிச்சுதுன்னா, எங்க கேபினும் செக்கண்ட் ஃப்ளோருக்கு மேல இருந்துச்சுன்னா.. அவ்ளோதான். உவ்வே.. குடிக்காமலே குடிகாரன் பர்ஃபாமன்ஸ் குடுக்கணும் நான். இந்த சுவத்துல இருந்து அந்த சுவத்துக்கு ஒரே ஜம்பு. டாய்லெட்ல சர்க்கஸ்காரி மாதிரிதான் உக்காருவேன். இறுக்க்க்க்கி கண்ண மூடிட்டு, தூக்கமும் இல்லாம பெட்ல படுத்துட்டு இருப்பேன். மீதி முக்கால் குடும்பமும் அவ்ளோ ஆட்டம் போடும். ஊர சுத்திப் பாக்குறா மாதிரி கப்பல சுத்தி சுத்தி வருவாங்க. மாமியார் சமத்தா தூங்கிடுவாங்க. லேட்டா மீதிப் பேரும். என்னால முடியிறதில்லை.

இந்த தடவை ட்ரைவ் பண்றதுன்னு முடிவாச்சு. இங்க இருந்து தலைநகரம் ஆஸ்லோ வழியா சுவீடன் போகணும். சுவீடன் வழியா டென்மார்க். ஆஸ்லோ 550 கி.மீ. தூரத்தில இருந்தாலும் மலைப்பாதை, கூடவே குறைந்த வேகம்னு அதிக நேரம் பிடிக்கும். போக்குவரத்து நெரிசல்ல சிக்காம, வெயில் வரதுக்கு முன்னம் மலைப்பாதையை கடந்துட அநேகமா காலை நாலு மணிக்கு முன்னம் கிளம்பிடுவோம். வழியில கண்டெய்னர் லாரிகள் குறைவா இருக்கும் என்பதும் உபரி நன்மை. 

குடிக்க, கடிக்க, கேக்க, நொறுக்க, படிக்கன்னு தேவையான எல்லாம் எடுத்து வச்சுட்டு நைட் தூங்க போவோம். அதி காலையில எழுந்து ஃப்ளாஸ்க்ல டீ எடுத்துட்டு, சாண்ட்விச் பாக் பண்ணிட்டு எல்லாரும் வண்டில ஏறினதும் கண்ணாளன் கடைசியா வீட்ட ஒரு ரவுண்ட் வந்து ஜன்னல், கதவு எல்லாம் பூட்டி இருக்குதா, குறிப்பா குப்பை எல்லாம் பின்ல கட்டிப் போட்டாச்சான்னு செக் பண்ணுவார். குப்பைய மட்டும் மறந்தோம்னு வைய்யுங்க, திரும்பி வரும்போது வீடு அவ்ளோதான்.

தூரப் பயணம் போகும்போதெல்லாம் கார்ல ஏறின உடனவே முதல்ல சாமி பாட்டு கேக்குறது என் விருப்பம். ஒருவித நம்பிக்கைன்னும் சொல்லலாம். ஒரு தடவை அலாரம் வைக்காம தூங்கி ரொம்ப லேட்டா கிளம்பியாச்சு. நண்பர் ஒருவர் கால் பண்ணார். இப்போ பாதி தூரம் வந்தாச்சுன்னு சொன்னார் என்னவர். அவர் உடனவே சொன்னார் ”எங்க.. அதான் சுப்ரபாதம் கேக்குதே. இப்போ தான் கிளம்பி இருக்கிங்க” ன்னு.
IMG_0144

இந்த தடவை கிளம்ப நாலரை மணி ஆச்சு. மகாநதி ஷோபனா கூட சேர்ந்து விநாயகர் அகவல் சொன்னேன். (அவங்க பாடினாங்கடி.. நீ சொன்னேன்னு சொல்லு) மெதுவான தூறலோட குளிர்ச்சியா ஆரம்பிச்சுது பயணம். அப்புறம் முக்கியமான விஷயம். படங்கள் விபரங்கள் எல்லாம் கொஞ்சம் முன்ன பின்ன இருக்கும். பொறுத்துக்குங்க. போனதே ரெண்டு வார விடுமுறை. இங்க இருந்து அங்க போய் நிலாவுக்கு ஒரு ஹாயும் அட்ஷகிக்கு ஒரு உம்மாவும் குடுத்துட்டு வந்தா மாதிரி இருக்கு. எந்த இடத்தையும் சுத்திப் பார்க்க முடியல. அடுத்த விஷயம் இயற்கைய ரசிக்கவெல்லாம் எங்க வண்டி நிக்காது. நிக்கிற இடத்துல இருக்கிறத ரசிக்க வேண்டியதுதான். தவிர அந்தந்த வேகத்துக்கேற்ப ரசிக்கிறதும், படம் எடுத்துக்கிறதும் உங்க சாமர்த்தியம்.


IMG_0146 சுவிஸ்ல வெயில் ஜாஸ்தியா இருக்கும்னு சது காப்ஸ்லாம் எடுத்து வச்சிருக்கார்.

 

 



IMG_0145 நாலு முப்பதுக்கு கிளம்பினோம். இப்போ நாலு அம்பத்தேழாச்சா.. பாவம் சாண்ட்விச் பேக் கெஞ்சிட்டு இருந்துது சாப்டுன்னு.. அதான்.


 


மொத்தமா 1200 கி.மீ தூரத்தில டென்மார்க் சித்தி வீடு. டெஸ்டினேஷன் டைம் சாயந்தரம் ஆறு மணின்னு GPS ஆண்ட்டி சொன்னாங்க. எப்டியும் அவங்க சொல்றதுக்கு முன்னாடி போய் சேரணும் என்ற கொள்கையோட என்னவர். உயிர் போகாம போய் சேரணும் என்ற வேண்டுதலோட நான். அம்மா சாண்ட்விச்களை கபளீகரம் செய்வது தெரியாம கலைந்த தூக்கத்த தொடரும் அம்மு, சது.  போக்குவரத்தே இல்லாத சாலையில சத்தமே செய்யாம சமத்தா ஓடுது எங்க வண்டி..

எவ்ளோ நேரத்தில, எத்தனை  சாண்ட்விச் முழுங்கினேன், எத்தனை கப் டீ சாப்டேன் போன்ற இதர விஷயங்கள் அடுத்த பாகத்தில். முடிவ்வ்வே பண்ணிட்டேன்.. இனி தொடர்ந்து தொடர் பதிவுதான். அது வரைக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்களோடு..

வர்ட்டா..

29 நல்லவங்க படிச்சாங்களாம்:

Anonymous said...

என் இனிய தோழி சுசிக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ...சுசி உங்க டூர் பத்தி அழகா எழுதியிரிகிங்க ..சான்ட்விச் சாபிடற அந்த அழகான கைக்கு சொந்தக்காரி நீங்க தானே?

எப்போதும் போல அழகானா அருமையான பதிவு .".பாகம் இரண்டு " படிக்க ஆவலோட காத்திடிரிகிறேன்...

கோபிநாத் said...

சூப்பரு....எப்போன்னு வரும்ன்னு யோசிக்கிட்டு இருந்தேன். ;)

கலக்குங்க ;)

அப்புறம் ஒன்னு மறந்துட்டிங்கக்கா..ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ;)

சீமான்கனி said...

சுசிக்கா கண்ணு காது மூக்கு பல்லு எல்லாத்துலையும் புகைவருது மொத்த சாக்லேட் சான்வேஜ் பிஸ்கட் டீ எல்லாமே நீங்களே தனி உக்காந்து கட்டு கட்டுன்னு கட்டிடீங்களா...இது மட்டும் இல்லாம அடுத்த பதிவில் எவ்ளோனு கணக்குவேற சொல்ல போறீங்களா...முதலில் ஒரு பார்செல் அனுப்பிட்டு அடுத்த பதிவ போடணும் சொல்லிபுட்டேன்... அதவிட்டுட்டு காசு அனுப்பு கணக்குல அனுப்புனுலாம் சொல்லக்குடாது ...உங்களுக்கும் நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

குணா அதான் குப்பையெல்லாம் வண்டியில கட்டியாச்சுதானே பின்ன ஏன் செக் பண்ணுனார்?

//மகாநதி ஷோபனா கூட சேர்ந்து விநாயகர் அகவல் சொன்னேன்//

இதற்க்கடுத்த அடைப்புக்குறி வரிகள்
சற்றே பிழையோ?

கார்க்கிபவா said...

mm.சாக்லேட் நலல இருக்கு











பார்க்க

ஜெய்லானி said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் .

ஜெய்லானி said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் .

சுசி said...

நன்றி சந்த்யா.. கைக்கு சொந்தக்காரி நாந்தான்.. //அழகான//வுக்கு நானில்லை நானில்லை.. விரைவில எழுதறேன்.

X X X X X

ரைட்டு.. யோசிச்சிங்களோ?? என்னத்த மறந்தேன் கோபி?? சொல்லாம இப்டி ஏப்பம் விட்டா எப்டி??

X X X X X

கனி.. இப்டி அநியாயத்துக்கு சொல்லாதிங்க.. நான் ஸ்வாகா செஞ்சது என் பங்கு.

சுசி said...

வசந்து.. கிர்ர்ர்ர்ர்ர்..
என்ன பிழைப்பா??

X X X X X

கார்க்கி.. ஒய்ட், பிரவுன், டார்க் பிரவுன் எல்லா கலரும் இருந்துச்சே.. சரியா பாத்திங்களா??

X X X X X

நன்றி ஜெய்லானி.

Chitra said...

DSC00134 அல்லாரும் முதல்ல சாக்லேட் எடுத்துக்கோங்க. சுவிஸ் சாக்லேட் சூப்பரா இருக்கும். Mövenpick - The art of Swiss ice cream.. ம்ம்.. அள்ளும் சுவை. கொண்டு வர கரைஞ்சு போய்டும்னு நானே சாப்டேன். உங்களுக்கும் சேர்த்து..


...... Swiss Chocolates..... yummy!!!!!! Give me some!!!!!!!! :-)

Anonymous said...

தொடர் பதிவுன்னா, நீயே தொடர்ந்து எழுதிட்டு இருப்பியா? ஆஆஅவ்வ்
இருந்தாலும் ஊர்சுற்றல் எனபதால் ஓக்கேய் :)))

Anonymous said...

//எவ்ளோ நேரத்தில, எத்தனை சாண்ட்விச் முழுங்கினேன், எத்தனை கப் டீ சாப்டேன் போன்ற இதர விஷயங்கள் அடுத்த பாகத்தில்.//

எத்தனை தரம் கண் சிமிட்டினீங்கன்னும் மறக்காம எண்ணீக்கிடுங்க :)

Unknown said...

1500 km car otturathaa? Van maathiri comfyaana vehicle illainnaa kashtama irukkume

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சுவிஸ் சாக்லேட் சூப்பரா இருக்குமா? எனக்கு அமெரிக்கன் சாக்லெட் கிடைச்சது.(என் பெண் கொண்டு வந்தது)அத்தனையும் கொக்கோ.அலுக்கவே இல்லை.
எனக்கும் யூரப் டூர் ஒன்னு வீட்டுக்கார அம்மாவோட போணும்னு ஆசை!
பாரீஸ்,ஏதென்ஸ்,ஆம்ஸ்டர்டாம்,ஜூரிச் ரோம்,க்ரீஸ் பாக்க ஆசை.காசி,ராமேஸ்வரம் போற வயசுல ஆசையைப் பாருன்னு நல்லா கொமட்டுல குத்திட்டாங்க!!!

Thamira said...

தொடர்ந்து தொடர்பதிவா.? விடாதீங்க.. தாக்குங்க.! அப்படித்தான்.!

(உங்களுக்கென்ன கவலை. படிக்கிறவங்களுக்குதானே.! )

சுசி said...

எடுத்துக்கோங்க சித்ரா..

W W W W W

இருந்தாலும் ஓக்கேவா விஜ்ஜி(அய்!).. இதுக்கும் சேர்த்து இருக்கு ராஜாத்தி.. இப்போவே அழுதா எப்டி??

W W W W W

ஹஹாஹா.. அம்மிணி.. கோபி சொன்னாப்ல ஏப்பம் விட்டுட்டு கொர்னு தூங்கிட்டேன்.. இதில எங்கனு கண் சிமிட்ட..

சுசி said...

ஹிஹிஹி.. முகிலன்.. வாகனம் கொஞ்சம் பெருசுதான் (எனக்கேத்தாப்ல)

W W W W W

முதல் வருகைக்கு நன்றி ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி. // வீட்டுக்கார அம்மாவோட // இத சொன்னத்துக்கு அப்புறமுமாங்க.. டூ பேட் :))

W W W W W

ஆதீஈஈஈஈஈ..
அதானே.. எங்கடா நல்ல வார்த்தையா சொல்றிங்களேன்னு பார்த்தேன். அடைப்புக்குள்ள தேவையா அது??

Madumitha said...

உங்க ஊர் சாக்லேட் மாதிரியே
இருக்கு உங்கள் பதிவும்.

சௌந்தர் said...

தொடர் பதிவுவுக்கு வருபவர்களுக்கு சாண்ட்விச்...ஓரு கப் டீ.....

vinu said...

pongappa aavunna tour killambi poittu vanthu namma kaathula pugai vidavaikkirathea unga veallaiya pochu.


naan unga kittea kaa

'பரிவை' சே.குமார் said...

எப்போதும் போல அழகானா அருமையான பதிவு.

priya.r said...

பயண கட்டுரை நன்றாக இருக்கிறது . வழியில் உள்ள நாடுகளின் முக்கிய ஊர்களின் பெயர்களையும்
குறிப்பிடுங்கள்.தொடர் பதிவை படிக்க நாங்கள் ரெடி !

ப.கந்தசாமி said...

எல்லாம் நல்ல ஊர்கள். நான் இரண்டு தடவை ஸ்வீடன் வந்திருக்கிறேன். ரொம்ப்ப்ப்ப நாளைக்கு முன்னாடி.

Unknown said...

அழகானா அருமையான பதிவு

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

tata..
byebye....

Anonymous said...

சுசி இந்த லிங்க் லே போயி அழைக்கிறான் மாதவன் பாட்டு கேளுங்க ..வித் சீன் பார்க்க விரும்பினா you tube போயி பாருங்க .கேட்டா உங்களக்கும் ரொம்ப ரொம்ப பிடித்து போகும் ..
http://musicmazaa.com/tamil/audiosongs/movie/Sri+Raghavendra.html#embedAll

Thenammai Lakshmanan said...

சுசி பாருங்க என் காதுல புகை.. பின்ன என்ன இவ்வளவு சாக்லேட்டா..

இதை ஈடு செய்ய நானும் டாஃபிஃபி ஒரு பாக்கெட் முழுசா சாப்பிட்டேன்.. :)))

அமுதா கிருஷ்ணா said...

ம்.சாக்லேட் நல்லாயிருக்குப்பா..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//நான் வழக்கமா என்னோட விடுமுறைய பசங்க சம்மர் ஹாலிடே கூட மூணு வாரம், அவங்க பர்த்டே சமயம் ஒரு வாரம், விண்டர்ல ஒரு வாரம்னு பங்கு போட்டுக்கொள்வேன்//
வாவ்...வருசத்துக்கு அஞ்சு வாரமா... ஹும்... உங்க கம்பெனில எனக்கு ஒரு வேலை கெடைக்குமான்னு பாருங்களேன்...

ஹ ஹ ஹ...சூப்பர் பயண தொடர்.. தொடருங்க

Unknown said...

உங்க கம்பெனில எனக்கு ஒரு வேலை கெடைக்குமான்னு பாருங்களேன்...
----YEN

YENNU kekuren..
avanga company epothanoru allavuku nalla poikitu erukku.anga poi neenga idli sutu anta companya close panavanu keken?????

susi avangalku job vangi kuduntha enakum vangi kudukanum..amam choliputen..

okva.ellati 2perukum venam.eppudi..