Pages

  • RSS

15 May, 2011

உங்களுக்கு 4. எங்களுக்கு 8.

அன்னையர் தினம் கனடாவிலும் வந்து போனது. ஸ்கைப்பில் என் அன்னையிடமும் கூடவே அய்யனிடமும் ஆசீர்வாதம் வாங்கினேன். அண்ணா ஸ்கைப்பிலும், ரஜி ஃபோனிலும் அதையே செய்திருக்கிறார்கள். அக்காச்சி எங்கள் நால்வருக்குமாக 4 தடவைகள் அம்மா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினாளாம். அடிப்பாவி.. இதே சாக்கா அரைக்கிலோ வெயிட்ட குறைச்சிட்டியா என்று சொன்னாலும் என் கண்ணீரை மறைக்கவென்று பரிசுகளைக் காட்டச் சொன்னேன். அதில் ஒரு body cream. அக்காச்சிக்குக் கிடைத்தது. அதன் விலை 20 கனேடியன் டாலர்ஸ் என்றதும் அதுக்கு வேறு எதாவது மாற்றி வாங்கலாம் என்று கடைக்குப் போனார்களாம். எதற்கும் ஒரு தடவை வாசனை எப்படி என்று பார்க்க சாம்பிள் கிரீமை திறந்தார்களாம். கூடவே வந்த கருண் சொன்னாராம்.

‘ம்ம்.. நல்ல வாசம்.. அம்மா.. இதையே யூஸ் பண்ணுங்க.. McDonald’s வாஷ்ரூம்ல இருக்கிற hand soap மாதிரியே மணக்குது’

(((((

அதிக நாள் ஆகிவிட்டது ரெஸ்டாரண்டில் போய் சாப்பிட்டு. முன்பெல்லாம் வெளியே சாப்பிடுவதென்றால் அது மாக்டொனால்ட்ஸ் பர்கராகவோ இல்லை பெப்பர்ஸ் பீஸாவாகவோ தான் இருந்தது. பிள்ளைகள் வளர்ந்ததும் ரெஸ்டாரண்ட் போவது பிடித்துப்போனதால் வாரம் ஒரு தடவை போய் வந்த வழக்கம் ஊர்ப் பிரச்சனையோடு இல்லாமல் போய் மீண்டும் ஆரம்பித்தது. அம்முவின் ஃப்ரெண்டி ’நீங்க லக்கி அதான் ஒவொரு வாரமும் ரெஸ்டாரண்ட் போறிங்க’ என்று சொன்னதன் பின் மீண்டும் குறைந்து போனது. காரணம் தெரியாமல். வெட்டிங் டே அன்று சைனா பாலஸ் என்ற ரெஸ்டாரண்ட் போனோம். அம்முவின் விருப்பம். தங்கா அக்கா வீட்டுக்குப் போய் அவர் அம்மா அப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்கிப் போனதில் லேட்டானதால் ஸ்டார்ட்டர் கூட ஆர்டர் பண்ணவில்லை.

037 3 ஃபாண்டா, ஒரு சைனீஸ் பியர். நான் பறக்கிறது, ஓடுறது, நீந்துறது எல்லாம் கலந்த ஒரு மெனு (Kamkon pot), கண்ஸ் நீந்துறது மட்டும் (sea delicasy), பிள்ளைகள் பீஃப், ஃப்ரைட் நூடில்ஸ்.

 

 

 

 

041 அப்படியே ஃப்ரைட் பனானா/பைனாப்பிள் வித் வனிலா ஐஸ்க்ரீம்.

 

 

 

 

 

 

048

பில் வந்தது. பக்கத்திலேயே சுடுநீரில் முக்கிய குட்டி டவல்களை வைத்து விட்டுப் போனார்கள். பில்லைப் பார்த்த பின்னர் கண்ணீரைத் துடைக்கவும் பயன்பட்டது.

(((((

First_Communion ஏப்ரல் அல்லது மே மாதத்தில் கிறிஸ்தவ நண்பர்கள் முதல் நன்மை என்ற ஒரு சமயச் சடங்கை செய்கின்றார்கள். 9 வயதான பிள்ளைகள் முதன் முதலாக ஆசீர்வதிக்கப்பட்ட அப்பம் உண்ணும் நாளாம். நாங்கள் இருக்கும் இடத்தில் இந்துக்களை விட கிறிஸ்தவர்களே அதிகம். போன சனிக்கிழமை மொத்தம் 4 ஃபங்க்‌ஷன். இந்த வருடம் ரெக்கார்ட். ஆனாலும் தெரிந்தவர் ஒருவர் ’4க்கே அலுத்துக்கறிங்க. எங்களுக்கு 8’ என்று சொன்ன போது அப்பாடா என்று இருந்தது. ’உங்களுக்கென்ன பசங்க வளந்திட்டாங்க. நாங்க இவங்களையும் இழுத்திட்டு அலையிறத நினைச்சுப் பாருங்க’ என்று வேறு சிலர் அங்கலாய்த்தபோது அச்சச்சோ என்றிருந்தது.

டென்மார்க்கில் இருந்து ஒரு நண்பியின் உறவினர்கள் வந்திருந்தார்கள். அங்கே எல்லாம் குறிக்கப்பட்ட நாளில் சர்ச்சில் இந்த நிகழ்வு முடிந்ததும் பின்னொரு நாளில் ஜூன் வரை ஃபங்க்‌ஷனை வைப்பார்களாம். இங்கே சனி அல்லது ஞாயிறு மட்டும்தான் வைக்கின்றார்கள். எந்த ஒரு ஃப்ங்க்‌ஷனிலுமே கலந்து கொண்ட உணர்வு வரவில்லை. ஒரு இடத்தில் சாப்பாடு, அடுத்த இடத்தில் டெசர்ட், அடுத்த இடத்தில் டீ, பலகாரம், கடைசியாகப் போன இடத்தில் ஃபோட்டோவுக்கு போஸ் மட்டும். பார்க்கிங் தேடி அலைந்ததிலும், நாலு திசைக்கும் ஓடியதிலுமே.. உஸ்ஸ்ஸ்ஸ்..

இதெல்லாம் கூட பரவாயில்லை. 4 ஃபங்க்‌ஷனும் ஒரே நாளில் நடந்ததால் 3 ஸாரி கிடைக்காம போச்சேன்றதுதான் எனக்கு மிகப் பெரிய்ய்ய கவலை. இப்போ நீங்க உஸ்ஸ்ஸ் சொல்றத்துக்குள்ள நான் எஸ்ஸ்ஸ்ஸ்..

வர்ட்டா..

01 May, 2011

ஒன்றாய்ச் சேர்த்(ந்)தவன்!!

நான்

மழை நின்று வெகு நேரம்

இலை சொட்டும் நீரும்

சடசடத்த ஓசையும்

இன்னமும் அடங்கவில்லை

வான் நிறைந்த கருமுகில்

குடையோடு காத்திருக்கிறேன்

மழை வராமலும் போகலாம்.

 

நீ

உன் மேல் இருப்பதால் தான்

சட்டையே அழகு என்றாய்

பாக்கெட்டில் நிறைத்து வைத்த

முத்தங்களை என்ன செய்தாயென்று

இது வரை சொல்லவில்லை.

 

நாம்

என்னுள்ளே வந்தாய்

எதற்காக வந்தாய்

விழிவழி நுழைந்து

உதிரத்தில் கலந்து

உயிர் பறித்தாய்

உனக்குள்ளே வந்தேன்

உயிர் கொண்டு வந்தேன்

உன்னையும் என்னையும்

ஒன்றெனச் சேர்த்து

காதல் செய்தேன்

kjærlighet