Pages

  • RSS

29 November, 2009

அடிப்பாவி....

நவம்பர் மாதம் வந்தாலே மனதில் ஒரு பாரம் தானாக வந்து அமர்ந்து விடும். இம் முறை வேறு விதமாக.

உங்கள் தியாகத்துக்கு ஈடாக
ஏதேனும் வார்த்தைகள் கிடைக்குமென்றால்
அவற்றால்
உங்கள் தியாகத்தை விபரிப்பேன்
மாவீரர்களே....

கார்த்திகை 27.....வழக்கம்போல் இல்லாமல் இம் முறை வீட்டிலேயே சரியாக மாலை ஆறு மணிக்கு இது வரை ஈழ மண்ணில் உயிர் நீத்த அத்தனை உறவுகளுக்காகவும் ஒற்றை மெழுகுவர்த்தியை ஏற்றி அவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனை செய்து கொண்டோம். இனிமேலாவது அங்கே சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டுமென்று மனதார வேண்டிக் கொள்ளவும்  தவறவில்லை. முட்டி மோதும் எண்ண அலைகளிலிருந்தும்,  அவை தரும் வலிகளிலிருந்தும் தப்பிக்க முடியாமல் நான். என்னை தேற்றுவதற்காக தன்னை காட்டிக் கொள்ளாத என் கண்ணாளன். அவர் வேலைக்கு புறப்பட்ட போது என் தைரியத்தையும் கூடவே கொண்டு போய் விட்டதாய் உணர்ந்தேன். பிள்ளைகளால் சிறிது நேரம் சிந்தனை திசை மாற்றப்பட்டது. உடைந்து போய் விடாமல் இருப்பதற்காக யாருடனும்  பேசப் பிடிக்கவில்லை. உயிர் நட்பைத் தவிர.

********************************************************************************

மறுபடியும் இங்க வெள்ளமுங்க. கண்ணன் கூட எல்லாம் சரி ஆனத்துக்கு அப்புறமும் வெள்ளத்துக்கு முழுக் காரணம் இயற்கை தான். என் பர்த்டேவுக்கு முதல் முறையா எனக்கு ஒரு கண்பானை கிஃப்டா வேணும்னு கேட்டிருந்தேன். அதுவும் பர்த்டேக்கு ரெண்டு வாரம் முன்னாடியே கேட்டாச்சு. இந்த வாரம்தான் கிடைச்சுது. ரெம்ப நாள் மூஞ்சிய உம்முன்னு வச்சுக்கிட்டு சுத்துறது பாக்கிற அவருக்கு மட்டுமில்லாம எனக்கும் கஷ்டமா இருந்தாலும் விடல நான்.  கடசீல மறந்துட்டாரோங்கிற முடிவுக்கு நான் வந்தப்போ குடுத்தார். இத்தனை நாள் கழிச்சா குடுப்பாங்க. "நானே போய் வாங்கிக்க தெரியாம இல்ல. எப்பவும் என்கூட இருக்கப் போறது. என் கண்ணாளன் ப்ரெசென்ட் பண்ணினதுன்னு கேக்குறவங்களுக்கு 'பெருமையா' சொல்லணும் இல்ல. அதான் உங்ககிட்ட கேட்டேன்"னேன். சொன்ன விதத்தில சிரிச்சாலும்  பாயிண்ட புரிஞ்சு கிட்டார். இதுவரை எனக்கு இன்ன  கிஃப்ட்தான்  வேணும்னு கேக்காத நான் அதிசயமா கேட்டதுனால பெஸ்டா குடுக்கணும்னு தேடி அலைஞ்சாராம் (?!)

*******************************************************************************

செவ்வாய் கிழமை ஆபீசுக்கு  நிமிஷத்துக்கு ஒரு ஃபோன் பண்ணி பொண்ணும் பையனும் மாறி மாறி  எப்போ வீட்டுக்கு வருவீங்கம்மான்னு கேட்டுட்டு இருந்தாங்க. கராஜ்ல கார விட்டதும் அப்டியே என்ன மடக்கி மூணாவது வீட்டுக்கு கூட்டிட்டுப் போனாங்க. குனியச் சொல்லி கண்ண வேற மூடியாச்சு. அங்க போய் பாத்தா அவங்க வீட்டு பசங்க கைல ஒரு குட்டி முயல். பிரவுன் கலர்ல. பேர் அமாண்டுஸ். அவ்ளோ ஸ்வீட்டா... என்னக் கேக்கணுமா? உடனவே ஃப்ரென்ட் ஆய்ட்டேன். புஸ்ஸு புஸ்ஸுன்னு கழுத்துக்குள்ள மூச்சு விட்டுக் கிட்டே என் தோள்ள படுத்திருப்பார். ஒவொரு தடவையும் கூட்டுக்குள்ள விடும்போது ஏனோ மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். பசங்க தங்களுக்கும் வேணும்னு ஒத்தக் கால்ல நின்னாங்க. அப்பாவுக்கு அலர்ஜிம்மான்னு சொன்னதும் அப்பாவுக்குத்தானே எங்களுக்கு இல்லையேன்னு சொன்ன பொண்ணு, அவ கேட்டத்துக்காக அமாண்டுஸ் கூட விளையாடின அப்பா நாள் பூரா நச்சு நச்சுன்னு தும்மலோட அவஸ்தைப் பட்டத பாத்ததும் இப்போ அவர வீட்டுக்கு கொண்டு வரத நிறுத்திட்டா. இப்டியே எல்லா விஷயங்களையும் பசங்க புரிஞ்சு கிட்டாங்கன்னா பெத்தவங்களுக்கு எவ்ளோ நல்லா இருக்கும்.... ஆனா வீட்டுக்குள்ளே ஒரு ஜீவன கூட்டுக்குள்ளே அடைச்சு வச்சிருக்கிறதா... என்னால முடியாதுப்பா.

********************************************************************************

கஸின் கூட ஃபோன்ல பேசிட்டிருந்தப்போ நீ பாதி நான் பாதி கண்ணா... பாட்டு கேட்டுது அவ வீட்டு ரேடியோல. ஹேய்... சூப்பர் பாட்டுடி. கேட்டு ரொம்ப நாளாச்சுன்னேன். ஏன்னு கேட்டா. இல்ல.. இப்டியான பாட்டுகள கேக்கும்போது பழைய காதல்களோட ஃபீலிங்க்ஸா போய்டுது. அதான்னேன். நீங்க வேற அந்த ஃபீலிங்க்ஸ்லாம் போய்டக் கூடாதேன்னுதான் நான் கேக்குறதேன்னா. அப்போ நான் அவளுக்கு சொன்னத இத படிச்சத்துக்கு அப்புறம் அவ எனக்கு சொல்லப் போறா.

அது என்னன்னு தெரிஞ்சிக்க உங்களுக்கு ரெண்டு ஆப்ஷன் குடுக்கறேன். ஒண்ணு நீங்க மறுபடி தலைப்ப படிக்கணும்... டூவு நீங்க விவெல் சோப் ஆட் பாக்கணும். இதில்லாமலே நாங்க கண்டு பிடிச்சிட்டோமேன்னு  பொய்லாம்  பேசப் படாது. ஓக்கே...
வரட்டுங்களா....

22 November, 2009

(பாவ) மன்னிப்பு...

வணக்க்....கம் மக்களே.... நலமா?
போன பதிவு போட்டதிலேர்ந்து கொஞ்சம் ஓவராத்தான் அழுதிட்டேன் போல இருக்கு. என்கூட சேர்ந்து கிட்டு இயற்கையும் மழையா அழுது தீர்த்திடிச்சா... தெருவெங்கும் வெள்ளம்... போக்குவரத்து சிக்கல்... மழை ரெஸ்ட்ல போய்ட்டாலும் என் அழுகை நிக்கல. கண்ணன் கூட இன்னமும்... அவ்வ்வ்வ்.... அது ஒரு புறம்னா இன்னைக்கு நான் எழுதப் போற விஷயம் மறு புறம். என் பதிவுகள படிக்க வச்சு உங்கள கொடுமைப்படுத்தி, உங்க பொன்னான நேரத்தையும் மண்ணாக்கறேன் இல்ல... ரெம்ப உறுத்துதுங்க. ஏற்கனவே மனசு சோர்ந்து போயிருக்கிற நேரத்தில அழுகை பொங்குது... நான் பதிவு எழுத வந்த கதைய சொல்லி உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிட்டு உறுத்தலே இல்லாம கொடுமைய கண்டினியூ பண்றத்துக்கு அருமையான சர்ந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுத்த என் அன்புத் தம்பி கோபிநாத் உங்களுக்கு கோடி நன்றிகள். நல்லாருங்க தம்பி. ஏய் அடங்குடி... எதுக்கு இப்டி தலைய சுத்தி மூக்க தொடறே பாருங்க... ஒரு வித்யாசமான பில்டப்போட ஆரம்பிக்கலாம்னா .சா முறைக்குது. சரி வாங்க நாம கதைக்குள்ள குதிக்கலாம்.

எல்லாரையும் போலவே எனக்கும் ஃபார்வாட் மெயில் பண்ற ஒரு ஃப்ரெண்டு. அதில சிலபல பதிவுகளுக்கான லிங்கும் இருக்கும். பதிவுலகம் ரொம்ப பயங்கரமானதுங்கிற ஒரு தப்பான எண்ணத்தில நான் இருந்ததால டிலீட்ட அமுக்கிவிட்டுடுவேன். ஒரு நாள் ஃப்ரெண்டோட டார்ச்சர் ஒரு லிங்க போய் பாக்க வச்சிடுச்சு. அதுல பாருங்க கதவு வழியா ரைட் லெக்க வச்சு முறையா பதிவுலகத்துக்க போவேன்னு பாத்தா சாளரம் வழியா தொபுக்கடீர்னு உள்ள விழுந்துட்டேன். அதுதான் பதிவுலகம்னு மறுபடி தப்பா நினைச்சு அங்கனவே சுத்திகிட்டு இருந்தேன். கிட்டத்தட்ட எல்லா இடுகைகளும் படிச்சுட்டேன். அவ்வ்வ்வ்.... திடீர்னு ஒரு நாள் இவரெல்லாம் எழுதும்போது நாமளும் ஏன் எழுதக் கூடாதுன்னு (கார்க்கி நோ கோவம், பேசிக் கிட்டத விட இன்னும் போட்டுக் குடுத்திடுறேன். பீ கூல்... ஓகே..) தோணிச்சு. கம்பியூட்டர் கண்ணாம்பா + டெக்னிக்கல் தேனாம்பாவான நான் என்னதான் ரைமிங்கா இருந்தாலும் இப்டி ஒரு பேர் ரெம்ப ஓவருடி அதே ஃப்ரெண்டு துணையோட கொடுமைய ஆரம்பிச்சுட்டேன்.

என்ன எழுதலாம்னு ரொம்பல்லாம் யோசிக்கல. என்னப் பத்தி மட்டுமே எழுதுறதுன்னு உறுதியான முடிவோட இருந்தேன், இருக்கேன். அது தவிர விருதுகளுக்கு, வாழ்த்துக்களுக்குன்னு சிலது. அதையும் தவிர ஏகலைவியா என் குருநாதர் கார்க்கிக்கு குருதட்சணையா சில (டேமேஜ்) பதிவுகள். அம்புட்டுதேன். விவாதங்கள், அறிவுரைகள், ஆராய்ச்சிகள்னு என் அறிவுக்கு சம்பந்தமில்லாத எதையும் எழுத மாட்டேங்க. நானே என் இடுகைகள மறுபடி படிக்கிரதில்லேங்கிரப்போ உங்கள எக் காரணம் கொண்டும் என்னோட பழைய பதிவுகள படிச்சிடாதீங்கன்னு கெஞ்சி கேட்டுக்கிறேன்.

தமிழ்ல எழுதுறத்துக்கு google.com/transliterate/indic/Tamil பாவிக்கிறேன். இப்போ இன்னொரு ஃப்ரெண்டு கிட்ட ஈகலப்பைய வாங்கி வச்சிருக்கேன். இன்னும் சரியா அதில உழவு ஆரம்பிக்கல.

பதிவுலகத்துக்குள்ள வரு முன்னர் நான் இருந்த மனநிலை.... என்ன யார்னே தெரியாத ஒரு இடத்தில போய் ஒளிஞ்சுக்க மாட்டோமான்னு நான் நினைச்சது மனசளவில கை கூடியிருக்கு. உன்னைய ஒரு கிரிமினல் ரேஞ்சுக்கு அவங்க நினைக்கப் போறது உறுதி என் மனதுக்கு இதமாய், என்னை திசை திருப்பி ஒரு புது உலகுக்குள்ள கொண்டு போய் விட்ட பதிவுகள் எத்தனை.... என்னை பார்த்திராத, என் கூட பேசியிராத எத்தனை நண்பர்கள் என் கூட இப்போ... என்னமோ ரொம்ப நாளா பழகின மாதிரி ஒரு உணர்வு. இத்தனை நாளா இப்டியான உறவுகள இழந்திட்டு இருந்திருக்கேனேன்னு நிஜமான கவலை. ஒவொருத்தர் பதிவ படிக்கும்போதும் அவங்க திறமைய பார்த்து அப்டி வியந்து போவேன். பதிவர்களுக்குள்ள இந்த நட்பும் ஒற்றுமையும் என்னைக்கும் நிலைச்சு இருக்கணும்னு என்னை அறியாமலே வேண்டிக்கிற அளவுக்கு பதிவுலகம் என்னை மாத்திடிச்சு. என்றாவது ஒருநாள் உங்களில் யாரையாவது நான் நேரில் சந்திப்பேன் என்கிற நம்பிக்கையும் எனக்கு இருக்கு. அவங்களுக்கு இந்தக் கொடுமை வேறயா???

அப்புறம் என்னங்க.. என்னையும் மதிச்சு தொடர் பதிவுகளுக்கு கூப்ட, விருதுகள் வழங்கிய, என்னை பின் தொடர்கின்ற அத்தனை நல்ல இதயங்களுக்கும் நன்றிகள். உங்க யாரையாவது என் பதிவுகள் மூலமா, என் பின்னூட்டங்கள் மூலமா நான் காயப்படுத்தி இருந்தா மன்னிச்சுக்குங்க. இப்போ மாதிரியே எப்பவும் என் கொடுமைய பொறுத்துக் கிட்டு என் கூட நண்பர்களா இருங்க. என்னோட பதிவ படிக்கிற அத்தனை நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். இப்போ நான் இத தொடர்ந்து கொண்டு போறத்துக்கு கூப்பிட போறவங்க இவங்கதான்.

தியாவின் பேனா பேசுகிறது...
பார்த்ததும் படித்ததும் சங்கர்.
பிரியமுடன்......வசந்த்
பித்தனின் வாக்கு சுதாண்ணா.
எடக்கு மடக்கு R.கோபி.
வடலூரான் கலை.
இது என்னோட இடம். தமிழ்பிரியன்.
சொல்லரசன்
சந்ருவின் பக்கம்

பத்து பேருக்குமான சிறு குறிப்பு :- நீங்க முன்னாடியே உங்க கதைய எழுதி நான் அத படிக்காம மிஸ் பண்ணி இருந்தேன்னா கமன்ட்ல கும்மிடுங்க... வரட்டுங்களா...

15 November, 2009

வரலேன்னா குறிச்சிடு...

எல்லாரும் எப்டி இருக்கீங்க? நலம்தானே? நாங்களும் நலம்.

எனக்கும் கவிதை எழுதணும்னு ஆசை வந்திடுச்சுங்க... ஹிஹிஹி... சும்மா... லுல்லுல்லாயிக்கு.... எழுதல. வந்தாதானே... ஆனா நான் படிச்சதில பிடிச்ச சில பல கவிதைகள உடனவே குறிச்சு வச்சுக்குவேன். அதில சிலத இன்னைக்கு எழுதுறேன். படிச்சு அத எழுதினவங்களுக்கு ஒரு சபாஷ போட்டிடுங்க. (சட்டப் பிரச்சனைகளுக்கு முகம் குடுக்க பயந்ததால எழுதினவங்க பெயர்கள் உரு மறைப்பு செய்யப்பட்டுள்ளன) உங்கள படிக்க வச்ச எனக்கு??? வேற என்ன? கமன்ட்தான்.

சொல்ல நினைத்தபோதெல்லாம்
பேச
வாய்த்ததில்லை.
பேசக்
கிடைத்த சில நொடிக்குள்
சொல்லாமல் விட்டதே அதிகம்.
பேசாத சொற்களின் அடுக்கில்
மலையென வளர்கிறது
அன்பு!

வேகக்காற்று
கண்கள் மூடி
முகம் பொத்தி
வெட்கம் கொள்கிறேன்
ஒட்டிக் கொண்ட மணற்துகளாக
நீயனுப்பிய
முத்தங்கள்!

உன்னால் அடைந்த
சந்தோஷங்களுக்கு பதிலாக
எதையுமே தர முடியாத ஏக்கங்களில்
ஆழ வேரூன்றிப் படர்கிறது
அன்பு!

எனக்குள் அடைபடாமல்
வானம் அளக்கும் சுதந்திரம் தந்து
மிகச்சிறிய இதயத்தில்
நெருக்கடிகளுக்கு மத்தியிலும்
சிறு ஒளியாக
மிதந்தலைகிறது
அன்பு!

இந்தக் கவிதை படிச்சதும் எனக்கு பிடிச்சிருந்தாலும் ஒரு விஷயம் உடன்பாடில்லை. அன்பான ஒருவர் கொடுக்கும் முத்தம் எப்டி முகத்தில ஒட்டிக்கிற மணற்துகளா ஆகும்? பூவிதழ் பட்டாப்புல, மயிலிறகால வருடினாப்ல இப்டி எதுனா இருந்திருக்கலாமோ???

உன் நினைவுகளில் இருந்து
விடுதலை என்பது
கிடைக்காதா எனக்கென்று
அப்போதும் உன்னையே
நினைக்கிறது என் மனம்.

உன்னால் என் மனதில்
மொட்டவிழ்ந்த பூக்களையெல்லாம்
வாடாமல் வைத்திருக்க
வழியொன்று கண்டு கொண்டேன்

நீ என்னை தவிர்த்து விலகி
தவிக்க விடும் தருணமெல்லாம்
தவறாமல்
தனிமையில்
அழுகின்றேன் கண்ணா..

கண்ணீர்ப் பூக்களாம் தாம்
அவை
பெருமையாய்
சொல்லிக் கொள்கின்றன.

அவங்க கண்ணன் அவங்கள தவிக்க விடக் கூடாதுன்னு வேண்டிக்கிட்டேன்.சரிதானுங்களே?

'நீயும் நானும்
ஒண்ணுன்னு சொன்னேன்'
சொன்னவன் நீதானே?
இல்லாத ஒன்றை
உறுத்தலின்றி சொல்ல
எப்படி முடிந்தது உன்னால்??

ஒதுங்கி நீ போக நினைக்கும் வரை
ஒப்பவில்லை என் மனது
ஒன்று என்பதற்கு அர்த்தங்கள் பல என்று!

வேடிக்கையாய் நீயும்
வேதனையில் நானும்
புரிந்து கொள்ளாத நீயும்
புரிதலுக்காய் ஏங்கும் நானும்
தவிர்ப்பதிலே நீயும்
தவித்தபடி நானும்
ஒன்றென்பது இதில்
எங்கிருந்து வந்தது?

நீயும் நானும் ஒன்றுதான்
ஒன்றில் மட்டும்
என்னை ஏமாற்றுவதில் நீயும்
என்னையே ஏமாற்றுவதில் நானும்.

அவ்வ்வ்வ்... அழுகாச்சியா வருது. ஒதுங்கறாங்கன்னு தெரிஞ்சா பிடிக்கலேன்னா போய்கிட்டே இருன்னு போக வேண்டியதுதானே??? ஆனா இந்த மனசு மனசுன்னு ஒண்ணு இருக்கே... அது சிலத அப்டீல்லாம் சுலபமா விட சம்மதிக்காதுங்க. ரெம்ப அடம்புடிக்கும்.சமயத்தில சண்டித்தனம் கூட பண்ணும். அனுபவிக்கிறவங்களுக்குதான் தெரியும், புரியும் அதோட வலி!!!

அவ்வ்வ்.... மறுபடி அழுகாச்சியா வருது... கமன்டிட்டு வாங்களேன் கொஞ்சம் அழுரத்துக்கு கம்பேனி கிடைச்சாப்ல இருக்கும்... அவ்வ்வ்வ்வ்.... ஆவ்வ்வ்வ்வ்...

08 November, 2009

எனக்கும் புடிச்சிடுச்சு.

இந்த வாரம் எதப் பத்திடி மொக்கை போடப்போறே? கூடப் பொறந்தது அக்கறையா இப்டி கேட்டதுமே சட்னு உஷாராகி அதிசயம்னு சொல்லு இல்லேன்னா வ.போ உன்ன டியூப்லைட்னு குட்டியிருப்பா இல்லக்கா சின்ன அம்மிணி என்ன ஒரு தொடர் பதிவுக்கு கூப்டுருக்காங்க, அத எழுதப் போறேன்னேன். உன்னப் போயின்னு ஆரம்பிச்சவ நிறுத்தி எதப் பத்தின்னா. பிடிச்ச பிடிக்காத பத்து எழுதணும். நிறையப் பேர் ரொம்ப சூப்பரா எழுதி இருக்காங்க. நானும் எதுனா வித்யாசமா யோசிக்கிறேன்னேன் . சாப்பாடுன்னா தான் உனக்கு பிடிக்காத ஒண்ண கண்டுபிடிக்கிறது கஷ்டம். அதோட நீ எப்டி எழுதினாலும் அத எழுத்துன்னே சொல்ல முடியாது. மூடிக்கிட்டு போயி முடிஞ்சத எழுதுன்னா. தன் அழகு மேல கண்ணு வைக்காதன்னு என் கிட்ட (கொஞ்சம் கூட உறுத்தலே இல்லாம) சொன்ன என் நண்பன மாதிரியே என் எழுத்து மேல கண்ணு வைக்காத, இப்போ ஃபோன வைன்னு சொல்லிட்டு எழுத டிவி முன்னாடி உக்காந்துட்டேன் வித் மடிக் கணினி.. எனக்கு சரியா எழுத வராததுக்கு டிவியும் ஒரு காரணமோ??? வாஸ்து சரியில்ல. இடத்த மாத்தணும்

பதிவ தொடர என்ன கூப்டதுக்கு நன்றி அம்மிணி. இன்னொரு நன்றி ரூல்ஸ் எதுவும் போடாததுக்கு.

1. அரசியல் தலைவர்
அரசியலே பிடிக்காது. அப்புறம் தலைவர்கள எங்கிருந்து பிடிக் க/காத.


2. எழுத்தாளர்
பிடித்தவர்
:- ரமணிச்சந்திரன் தொடங்கி அப்டியே என் பதிவ படிக்கிற நீங்க ஒரு பதிவுக்கு சொந்தக்காரர்னா உங்க வரைக்கும் லிஸ்டு நீளும்..
பிடிக்காதவர் :- வேற யாரு இத எழுதினவங்கதான்.

3. கவிஞர்:
எனக்கு கவுஜ கூட எழுத வராதுங்கிரதால எல்லா கவிஞருமே பிடிச்சவங்கதான்.


4. இயக்குனர்:
பிடித்தவர் :- மணிரத்னம்.
பிடிக்காதவர் :- இருங்க யோசிக்கிறேன்.....


5. நடிகர்:
பிடித்தவர் :- எப்போதும்
விஜய்.
பிடிக்காதவர் :- லிஸ்டு கொஞ்சம் பெருசு.


6. நடிகை:
பிடித்தவர் :- ஜோதிகா.
பிடிக்காதவர் :- குணாவுக்கு யார் யார பிடிக்குமோ அவங்க எல்லாம்.


7.இசையமைப்பாளர்:
பிடித்தவர் :- இசைஞானி. இசைப்புயல், ஹாரிஸ், யுவன்.....
பிடிக்காதவர் :- இதுவும் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. எனக்கு பிடிச்சா மாதிரி ஒரு பாட்டையாவது இசை அமைச்சிடுரதால பிடிக்காதவர் கிடையாது.அம்புட்டுதேன்.

8. பாடகர்:
பிடித்தவர் :- டிம்மி.

பிடிக்காதவர் :- குணா பாடல்லாம் மாட்டார். என்னங்க இது கேள்வி.

9. பாடகி:
என்ன விட நல்லா பாடுரதால எல்லாரையும் பிடிக்குமே...


10. விளையாட்டு வீரர்:
விளையாட்டா? அப்டீன்னா???

இனி அப்டியே அம்மிணி மாதிரியே மூணு பேர கூப்டு விட்டுடுறேன்.

கோபிநாத் என்னதான் நீங்க மாமாங்கத்துக்கு ஒரு பதிவு போட்டாலும் நாங்க அழைப்போமில்ல.

பிரியமுடன்......வசந்த் நீங்க தொடர் பதிவல்லன்னு தானே போட்டீங்க.

பித்தனின் வாக்கு சுதாண்ணா தொடர் கதைக்கு சின்னதா ஒரு பிரேக் குடுங்க.

இது நம்ம ஆளு மறுபடி வெளியூரா? வந்ததும் கண்டினியூ..

அப்பாடா... கரீட்டா மூணு பேர கூப்டாச்சுப்பா. வரட்டா மக்களே? நலமா இருங்க.

மு.கு. :- என் கண்ணாளன் செஞ்ச சதியால நேத்து என்னால பதிவு போட முடியலீங்க. ஃபோன்ல எதோ ப்ராப்ளம்னு நோண்டிக்கிட்டு அடிக்கடி நெட் கனேக்சனையும் கட் பண்ணி ரொம்ப கடுப்பேத்திட்டார். அதனால திங்க கிழமை எப்படா விடியும்னு காத்திருந்து என் பதிவ படிக்க ஆவலா வந்த உங்கள ஏமாத்த வேண்டியதாயிடுச்சு. ஜாரி...

பார்ரா...இப்போ எதுக்கு இவ்ளோ உர்ர்ர்ர்.....நல்ல வேளடி சுசி புத்தியா முன்குறிப்ப கடசீல போட்டே. இல்லேன்னா உன் நிலம... அவ்வ்வ்வ்வ்.....

01 November, 2009

கேக் சாப்டு கொண்டாடுங்க....

என்னங்க திடீர்னு காணாம போய்ட்டேன்னு பாத்தீங்களா?  என்னாச்சு இவளுக்குன்னு  நினச்சு பாத்தீங்க இல்ல?  நினைக்காதவங்களுக்கு கேக் கிடையாது.உங்க கமன்ட்சுக்கு இன்னும் பதில் எழுதல. சாரி...

தலைக்கு மேல இல்ல அதுக்கும் மேல சரியான, செமையான, பயங்கரமான, கடுமையான, இன்னும் பல னவான வேலைங்க. அதான் பொட்டிக்கு + வலையுலகத்துக்கு  விடுமுறை விட்டுட்டேன். குடும்பத்துக்கே பர்த்டேஸ் வந்ததால சனிக்கிழமை சின்னதா ஒரு பார்ட்டி வீட்ல. ஒரே கல்லுல நாலு மாங்கா... அதான் ஒரு வாரம் லீவ் போட்டு வேலையில குதிச்சிட்டேன். சாப்பாடு ஆர்டர் பண்ணி எடுத்தோம். வந்தவங்க நலம் கருதி மத்ததெல்லாம் என் தலைமேல.

ரெண்டு கலாச்சாரங்களையும் கலவையா பின்பற்றுறா மாதிரி பட்ஷனங்களையும் நம்மூரு பேசிக் ரெசிப்பிய வச்சு இந்த ஊர்ல கிடைக்கிற சாமான்களை கொண்டு தயார் பண்ணணும். சிலது வெளிநாடு வாழ் பெண்மணிகளோட சுய கண்டுபிடிப்பாவும் இருக்கும். ஆனா தைரியமா சாப்பிடலாம்க. ஸ்வீட்டும் காரமுமா ஏழு அயிட்டம் செஞ்சேன். அதோட ஐசிங் கேக் மூணு.

இதில யார் கண்ணு பட்டுதோ என் லீவுக்கும் ஆப்பு. எங்க டிப்பார்ட்மென்ட்ல புதுசா சேர்ந்த ஒருத்தர தவிர மத்த எல்லாரையும் வைரஸ் காய்ச்சல் தாக்கிட்டதில நான் ரெண்டு நாள் வேலைக்கு போக வேண்டியதாயிடிச்சு. அதுவரை நீதானே ஜாலியா லீவ்ல இருக்கே செய்துமுடின்னு எந்த ஹெல்ப்புமே செய்யாம விட்டேந்தியா இருந்த மத்த மெம்பர்சுக்கு சனி காலை சரியாவே விடியல. அப்பப்போ என்னை தொல்லை பண்ணிக்கிட்டே ஜாலியா சுத்திக்கிட்டு இருந்த மொக்கை சாமிக்கு இனிமே வீட்ல பார்ட்டியே வேணாம்டின்னு சொல்ற அளவுக்கு வேலை. வீட்ட பூரா ஒதுங்க வச்சு மாப் பண்ணினது அவர்தான். பையனுக்கும் பொண்ணுக்கும் கான்டி பாக் ரெடி பண்றது, வெளிய குப்பை போட்டுட்டு வர்றது, ஸ்டோர் ரூம்ல எதுனா எடுத்து குடுக்கிரதுன்னு அவங்களுக்கு ஏத்த வேலை. அம்மா போதும் நாங்க இனிமே கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்கிற லெவலுக்கு போய்ட்டாங்க.

மூணு மணிக்கு ஆரம்பிச்ச பார்ட்டி முடிய நைட்டு ஒரு மணியாச்சு. எங்களையும் சேர்த்து மொத்தம் எட்டு குடும்பங்கள். ஒரு ஃபாமிலி நைட் தங்கிரதுன்னும், சிலர நான் டிராப் பண்றதுன்னும் முடிவாச்சு. அதெல்லாம் முடிச்சு நான் தூங்க நாலு மணியாச்சு. ரொம்ப நாளைக்கு அப்புறம் எல்லாரும் ஒண்ணா சந்திச்சோம். என்னதான் அலுப்பா இருந்தாலும் கலகலன்னு வீட்ல சத்தம் கேக்கிறா மாதிரியே இருந்திச்சா தூக்கம் வரல.... உடனையே நிறைய வேலை இருக்கு ஹெல்ப் பண்றியான்னு கேட்டப்போ செஞ்சு வை வந்து சாப்டுறேன்னு சொன்ன என் ஃப்ரெண்டோட ஞாபகம் வந்திச்சா... அதுக்கொரு மெயில போட்டுட்டு, ரெண்டு பதிவும் படிச்சேனா தூக்கம் தன்னால வந்திடுச்சு.இனி நான் செஞ்ச கேக் பாருங்க. சாப்பாடு நான் செய்யாததால ஃ போட்டோ எடுக்கல. ஸ்வீட்ஸ் காரம் சாப்ட எடுத்து  வைச்சிட்டு டீ செய்றதில நான் பிசி ஆய்ட்டதால ஃபோட்டோ எடுக்க மறந்துட்டேன்.

இது Sonic னு கண்ணனுக்கு ரொம்ப பிடிச்ச nintendo DS game. வந்து பாத்தவர் ஒரு பெரிய ஹக் மூலமா தன்னோட சந்தோஷத்த சொன்னார். உங்களுக்கு கஷ்டம்னா பரவால்லம்மா சோனிக்குக்கு மூக்கு இருக்கு. நீங்களும் வச்சு குடுக்குரீங்களான்னார். உடனையே செஞ்சு குடுத்ததும் உலகத்திலேயே நல்ல அம்மான்னு விருது குடுத்துட்டு போனார். என்னவோ மிஸ்ஸாகுதேன்னு எவ்ளோ யோசிச்சும் மூக்கு எனக்கு தெரியவே இல்ல. அதுக்கு மூளை முதல்ல இருக்கணுமோ???


இது H2O ன்னு கண்ணம்மாவுக்கு பிடிச்ச ஒரு கடல் கன்னிகள் பத்தின சீரியல். வேலை வாங்கறேன்னு கடுப்பில இருந்தவங்க இத காமிச்சதும் கூலாகி ஹெல்ப்போ ஹெல்ப்புன்னு ஹெல்ப்பிட்டாங்க. பிரிண்ட் க்ளியரா வராததால உங்களுக்கு ரொம்ப பிடிச்ச Emma ங்கிற கடல்கன்னி படம் சேர்க்க முடியலம்மான்னேன். இதுவே போதும்மான்னு ஹக்கோட ரெண்டு கிஸ்ஸும் சேத்து குடுத்தாங்க.

கண்ணாளனுக்குத்தான் பெரிய சர்ப்ரைஸ். என் புருஷன் குழந்தை மாதிரின்னு சொல்லாம செஞ்சுட்டீங்கன்னு எல்லாரும் சொன்னப்போ லைட்டா வெக்கப்பட்டார். நீங்க வேற என் பர்த்டே கிஃப்டா நான் கேட்டத இன்னும் வாங்கி குடுக்கலேங்கிற கடுப்பிலதான் இந்த கரடி குட்டிய செஞ்சேன்னு நான் சொல்ல.. ஏன் அத டெடி பொம்மைன்னு கொஞ்சம் டீசண்டா சொல்லக் கூடாதான்னு அவர் முறைக்க.. வந்தவங்க ரொம்ப சிரிச்சது இதுக்குத்தான்.அப்புறம் என்னங்க. எல்லாரும் கேக் சாப்டுங்க. அடுத்த தடவை ரொம்ப வித்யாசமான ஒரு பதிவோட சந்திக்கிறேன். வரட்டுங்களா....