Pages

  • RSS

30 May, 2010

ஏஞ்சல் வந்தாளே..

engle

இந்த வருஷத்துக்குரிய முதல் விருது.. வழங்கிய நண்பர் ஜெய்லானிக்கு என்னோட நன்றிகள். வா அழகே வானு கூப்டு அல்லாருக்கும் குடுத்திருக்காரு.

வழக்கமான எந்த ரூல்சும் போடலை ஜெய்லானி. அதாங்க.. எத்தனை பேருக்கு குடுக்கணும் நான்னு சொல்லல. இருந்தாலும் எனக்கு பிடிச்ச அஞ்சாம் நம்பர் சட்னு மைண்ட்ல வந்ததால அஞ்சு பேருக்கு குடுக்கலாம்னு இருக்கேன்.

1. சீமான் கனி

2. தியா

3. சந்தியா 

4. அப்பாவி தங்கமணி

5. மதுமிதா

இதையும் விட போன வருஷம் சின்ன அம்மிணியும், சுதா அண்ணாவும் விருது கொடுத்திருந்தீங்க. மறந்தே போய்ட்டேங்க. மன்னிச்சுக்கோங்க. ரொம்ப நன்றி ரெண்டு பேருக்கும். தவறித் திருந்துவது மனித இயல்புதானே. (அடிங்.. நீயும் தத்துவம் சொல்ல ஆரம்பிச்சிட்டியா.. மொத்துவம் கிடைக்க முன்னாடி ஓடிப் போய்டு)

ஆங்.. சொல்ல மறந்துட்டேன்.. அதான் மறந்துட்டேனே.. அப்புறம் எங்கனு சொல்றது.

போய்டாதிங்க. இருங்கஅஅஅஅ.. இது சொல்ல மறந்த விஷயம் இல்லை. வேற. கொஞ்சம் ஒரு மாதிரியா.. மனக் கஷ்டமா இருந்த, இருக்கிற  விஷயம் பத்தி உங்க கிட்ட சொல்லலாம்னு நினைக்கிறேன்.

j 006

கார்க்கி.. நேற்றைய நர்சிம் பதிவு.. நான் என்ன சொல்ல வரேனு உங்களுக்கு புரியலைன்னா அத நான் நம்பமாட்டேன். ஏன்னா என்ன விட உங்களுக்கு பதிவர்கள், பதிவுலகம் பரிச்சயமானது. என்னதான் நான் இவ்ளோ தூரம் வந்திட்டாலும் பதிவுலகத்தில நடக்கிற பல பிரச்சனைகள் எனக்கு தெரியல, புரியல.

அவர் வயசில என்ன விட சின்னவரா இருந்தாலும் நான் இந்த பதிவுலகத்துக்குள்ள குதிக்க காரணமானவர். இதுக்கு முன்னாடியும் அவர பத்தி எழுதி இருக்கேன்.. ஆனா இப்டி ஒரு விஷயம் அதாவது குருவுக்கு அட்வைஸ் பண்றா மாதிரி எழுதுவேன்னு நினைக்கல.

இருந்தாலும் அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றதில்லைங்கிற என் கொள்கையையும் மீறி அவருக்காக சில வரிகள். தயவு செஞ்சு யாரும், முக்கியமா கார்க்கி.. அவரோட சகா/சகிகள்.. தப்பா எடுத்துக்காதிங்க.   அவங்க பிரச்சனை எனக்கு புரிந்தும் புரியாமலுமா ஓரளவுக்கு புரிஞ்சுது. ஓரளவுக்கு புரிஞ்ச விஷயம் பத்தி பேசக் கூடாதுன்னுதான் நான் எந்தக் கருத்துமே, எங்கேயுமே சொல்லல. ஆனா நான் மதிப்பும் மரியாதையும் வச்சிருக்கிற ஒரு நல்ல பதிவர் கார்க்கி இப்டி செய்தது சரி இல்லை. அவர் கமண்ட்ஸ் இன்னமும் பிரச்சனைய பெருசாக்கினா மாதிரி எனக்கு தோணுது. அவர் கோபம், துணிவு, இடுக்கண் களையும் நட்பு எல்லாம் பதிவுகள் மூலமா தெரிஞ்சிருந்தாலும் நேத்து அவர் காட்டியது கொஞ்சம் அதிகப்படியான அக்கறையோனு தோணுது.. இன்னொரு வகையில பாத்தா அவர் இத சீரியஸா எடுத்துக்காம விளையாட்டா கமண்ட்ஸ்ல கும்மினாரான்னும் தெரியல.

அவர் பதிவ அதிகம் படிக்கிற ஒரு வாசகி என்கின்ற முறையில இத எழுத நினைச்சேன். இருந்தாலும் இது சரியா, தவறா, இல்லை நாந்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கேனா.. எனக்குத் தெரியல.. என் நண்பர்கள் நீங்களும்தானே மக்கள்ஸ்.. அதான் உங்க கிட்ட பகிர்ந்துக்கிட்டேன். உங்களுக்கு தோணுறதை சொல்லுங்க. சண்டை வேண்டாம். ரத்தம் வேண்டவே வேண்டாம். திட்டு?? பாத்து.. பாவம் நான்.

என் வழக்கமான ’வர்ட்டா’ சொல்ல மனசு வர்லை.. என்னமோ போங்கப்பா.. இந்த பதிவர்களையே புரிஞ்சுக்க முடியல..

17 நல்லவங்க படிச்சாங்களாம்:

சின்ன அம்மிணி said...

கார்க்கியின் பதிவு மூலமாத்தான் உங்களையே எனக்கு தெரியும். நீங்கள் சொல்வதையே நானும் நினைத்தேன் சுசி.
மற்ற பதிவுலக அரசியல்கள் இன்னும் எனக்கும் தெரியாமல்தான் இருக்கிறது.

சின்ன அம்மிணி said...

விருது வழங்கியவருக்கும் வாங்கியவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

LK said...

விருதுகளுக்கு வாழ்த்துக்கள். பதிவுலக அரசியல் கும்மிகளில் இருந்து விலகி இருப்பது நல்லது

LK said...

மறந்துட்டேன் பாருங்க., உங்ககிட்ட இருந்து விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

விருதுக்கு வாழ்த்துக்கள் , அதை பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

அரசியல் கும்மி அவ்வளவு நல்லதில்ல.

seemangani said...

விருதுக்கு நன்றி சுசிக்கா சக விருதாளிகளுக்கும் (எபூடி...)வாழ்த்துகள்...புரிந்துவிடாதவரை தான் எல்லாம் புரிந்தது போல் தோன்றும் புரிந்து விட்டாலோ புரிந்ததும் பிரிந்ததும் புரியாமல் போகும் எனக்கு புரிந்தது சுசிக்கா உங்களுக்கு ..

ராமலக்ஷ்மி said...

விருது பெற்றிருக்கும் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.

அவ்ளோதாங்க.

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்....

siva said...

susima..

kavala padathenga..

ungaloda oru vaasangan

entha vaasagan

enakum oru sila prachanaigal...

chinna ammanai cholavathai pola
பதிவுலக அரசியல்கள் இன்னும் எனக்கும் தெரியாமல்தான் poivittathu..

enakum theria villai..thavara purinuthu kondu vittanga romba varutha patten...

nan migavum maraiyaathi vaithu erukkum padivargaley ennai migavum mana kastathiruku ullakinanga..i felt a lot.yen
2,3nall kooda manasukula aluthen..
athanala.

entha padivey venamanu vilagiten..epovathu varuven unga vaasagana...

neenga epothum pola erunga..
oru sila nanbargal udaviyal soolnilagalai yetrukolla mudivu paninen..avargalum padiulagam serthavargal than..

epo padivu pakam varathu ellai..neriya time save agauthu...liberary poren.susima.
athupola neenga kavalpadthenga elam sari aidum.

mansuku pidithathai ciunga..patrama erunga..kavalapadthenga..
mathavangalai pathi kavalapadthenga.

oru padivila neenga choli erkenga ungalku ethu sarinu padutho cithukitu poikitey erukanum...
endru.

athai nan follow panren...

ungal viruthu kidathaimaiku valthukal.

epothum oru vaasaganai.

கோபிநாத் said...

விருதுக்கு வாழ்த்துக்கள் மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் ;-)

இவை எல்லாத்தையும் விட இன்னும் அதிகமாக சைடுல இருக்கும் அண்ணன் கவிதை அருமை..;))

மீதி பத்திக்கு எல்லாம்.......................................................................இதுவும் கடந்து போகும்...:))))))))))))))

கார்க்கி said...

:)))))))))0

thanks susikkaa

கார்க்கி said...

:)))))))))0

thanks susikkaa

sandhya said...

எல்.கே.சொன்னது தான் என் கருதுதும் அரசியல் ப்ளாக் பக்கம் போகாமல் இருப்பது தான் நல்லது .நண்பர்கள் தவறு செய்தா அது திருத்தறது நல்ல காரியம் தான் சுசி ...

sandhya said...

நான் ப்ளாக் உலகத்தில் வந்து கொஞ்ச நாள் தான் ஆச்சு அதுக்குள்ளே எனக்கு விருது கொடுக்க தோன்றிய உங்க நல்ல மனசுக்கு நன்றி ..நன்றி

கார்க்கி said...

ஒன்னு மட்டும் சொல்றேங்க..

முதல் தடவ விட்டாரு.. அடுத்த தட்வையும் டீசண்ட்டா எதிர்வினையாற்றினார்.. மூணாவது தடவையும் இப்படி செய்தா கோவமே வராதா?

எல்லோரும் மனுஷன் தானே?

Madumitha said...

உங்கள் விருதுக்கு மிக்க நன்றி.
சந்தோஷமாயிருக்கிறது.

தியாவின் பேனா said...

நன்றி