Pages

  • RSS

23 May, 2010

முறைக்காதிங்கப்பா..

காலேல எந்திரிக்க லேட்டாச்சேன்னு திட்டிக்கிட்டே (அட உங்கள இல்லேங்க.. அவளதான் திட்டிக்கிறா) ஒரு வழியா அரக்கப்பரக்க ரெடியாகி நான் கீழ வரவும் திறந்துடு சீசேம் சொல்லாமலே எங்க பெட்ரூம் கதவு திறந்து தூக்கம் வழியிற கண்ணோட கண்ணாளன் எட்டிப் பாக்கவும் சரியா இருந்துது. (யப்பா.. எம்மாம் பெரிய வசனம்.. அசத்திட்டேடி சுசி)

”என்னடி.. இன்னுமா நீ போகலை?????”

இவ்ளோ குட்டிக் கேள்விய எதுக்கு இப்டி அழுத்த்த்திக் கேக்கறார்னு பாக்கறிங்களா.. நான் வேலைக்குப் போய்ட்டேன்னு நினைச்சு ரூம விட்டு வெளிய வந்திருப்பார். என்ன பாத்ததும் ஷாக். (அதெல்லாம் இல்லை.. காலேலவே பேய் முகத்தில முழிச்சிட்டதால பயந்துட்டார்ங்க அவர்)

”அதில்லப்பா.. இப்போ இருட்டு ஆரம்பிச்சிடுச்சில்ல.. நான் வேற ஜன்னலாண்டை உக்காந்திருக்கேன்ல.. வெளிய இருட்டில இருந்து பாக்குறவங்களுக்கு வெளிச்சத்தில உக்காந்திருக்கிற என்ன அப்டியே  தெரியும்ல.. அதான் பாத்து பாத்து என்னய அழகுபடுத்திக்கிட்டதில கொஞ்சம் லேட்டாச்சு.. நாளைக்கு வழக்கத்த விட ஒரு ஒன் அவர் சீக்கிரம் எந்திரிக்கணும்.. எப்டிப்பா.. நான் அழக்கா இருக்கேனா??”

பதில எதிர்பார்க்காம கேள்விய அப்டியே விட்டுட்டு கார் கீய மட்டும் மறக்காம எடுத்துட்டு ஸ்டோர் ரூம் வழியா கராஜ்ஜுக்கு எஸ்ஸாகிட்டேன். கீ ஹால்டர் இருக்கிறது எங்க ரூம் பக்கத்தில. மறந்துட்டு மறுபடி போக முடியாதே.. ஏன்னா அவர் கண்டிப்பா முறைச்சிட்டு இருப்பார்னு எனக்குத் தான் தெரியுமே.

\\\\\/////          \\\\\/////          |||||          \\\\\/////          \\\\\/////         

தலைவலி, தொண்டைவலி, ஜலதோஷம், ஜூரம்.. எல்லாம் ஒண்ணா தாக்குதலை நடத்திடுச்சு. சோஃபால படுத்து ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தேன். என்னவர் டிவி பாத்துட்டு இருந்தார். அதாவது ஃபுட்பால் மேச்.

“சவுண்ட கம்மி பண்ணுங்கப்பா”

கம்மியாச்சு. அடுத்து ஃபோன் பேச ஆரம்பிச்சார்.

”அட.. இவ்ளோ ஒரு நல்ல சான்ஸ மிஸ் பண்ணிட்டாண்டா.. இரு.. அதான்.. அதான்.. அத்.. ஏய்.. எடு.. பாரு எங்க பாஸ் பண்ணுது லூசுன்னு.. இரு..அதான்.. அடி.. கோல்ல்ல்ல்.. செம கோல்டா மச்சான்.. இவன் இந்த கார்னர்ல இருந்து பாஸ் பண்ணும்போது மறுபடி சொதப்பிட்டான்னு நினைச்சேன்.. நல்லவேளை அவன் அங்க இருந்தான். ஹஹஹா.. ம்?? ஆமால்ல.. ஹொஹொஹோ.. இருந்தாலும் முத சான்ஸ் விட்டி..”

”ப்ச்”

தலை திருப்பி என்ன ஒரு லுக்கு..

“சரி மச்சான்.. வைக்கிறேன்.. சரி.. ஓக்கே ஒக்கே.. நீ சீக்கிரம் வா”

ஃபோன் வைக்கப்பட்டதும் நானும் நிம்மதியா உறங்க ஆரம்பிச்சே..

”அம்மாச்சி”

விலுக்னு முழிச்சுப் பாத்தேன். உறங்கல கிட்டத்தட்ட ஒரு பத்து நிமிஷம் தூங்கிட்டேன். அம்முவுக்கு இல்லை சதுருக்கு கம்பியூட்டர் கேம் விளாடும்போது என்னிக்கு ஒரே தடவைல காது கேட்டிருக்கு இன்னைக்கு கேக்க. நாலாவது அம்ம்ம்மாச்சிக்குத்தான் பதில் சவுண்டு விட்டா அவ கீழ இருந்து.

“என்னப்பா”

“அப்பா மொபைல் ரூம்ல இருக்கும் பாருங்க.. எடுத்துட்டு வாங்கம்மா..”

”என்னப்பா??”

போச்சுது போ. ஒண்ணு அவ கேம்ல அடுத்த லெவல் போக இன்னும் கொஞ்ச நேரம் இருக்கணும் இல்லை கேம சேவ் பண்ணிட்டு இருக்கா.

“அப்பா மொபைல்.. ரூம்ல.. இருக்கும் பாருங்க.. எடுத்துட்டு வாங்கடா..”

“எங்க இருக்குப்பா.. காணோம்”

“ரூம்ல தாண்டா.. டிவி முன்னாடி இல்லை பெட்ல.. இல்லேன்னா நைட் லாம்ப் பக்கத்..”

“ப்ப்ப்ச்ச்ச்.. எதுக்கு இங்க இருந்து கத்தறிங்க.. அதான் மத்த ஃபோன் இருக்கில்ல.. அதில இருந்து அவ மொபைல்க்கு கால் பண்ணி சொல்லலாம்ல”

“ஏய்.. என்ன சொல்றே.. மாடில இருந்து கீழ ரூம்ல இருக்கிற பொண்ணுக்கு ஃபோன் பண்ணணுமா நானு”

“அது கஷ்டம்னா நீங்களே கீழ போயி எடுத்துட்டு வாங்களேன். யாரு வேணாம்னா. உடம்புக்கு முடியலைன்னு படுத்துட்டு இருக்கிறவள கொஞ்ச நேரம் தூங்க விடறிங்களா பாருங்க”

“ஹலோ.. உடம்புக்கு முடியலைன்னா ரூம்ல போய் படுத்துக்கணும். இப்டி நடு ஹால்ல இல்லை. மறுபடி தூங்குறத்துக்கு முன்னாடி ரூம்ல போயி படுத்துக்கோ”

“நான் நோயாளி. எனக்கு முழு ரைட்ஸ் இருக்கு. இங்கதான் நான் படுத்துக்குவேன்”

“நல்லா படுத்துக்கோ.. யார் வேணாம்னா.. இன்னும் அஞ்சு நிமிஷத்தில ரமேஷ் வேற வரான்”

”எந்த குடை உங்களுக்கு பிடிக்குமோ அத எடுத்து வைங்க.. காலிங் பெல் சத்தம் கேட்டதும் உடனவே போயி பிடிச்சுடறேன்”

சொல்லிக்கிட்டே எந்திரிச்சு காஃபி டேபிள சுத்தி.. அவர் பக்கம் போகாம மாடிப் படிய நோக்கி மூவாயிட்டேன். ஏன்னா அவர் கண்டிப்பா முறைச்சிட்டு இருப்பார்னு எனக்குத் தான் தெரியுமே.

paraply

பி.கு:- யாராவது வீட்டுக்கு வராங்கன்னு சொன்னா

”அப்டியா.. ஓடிப் போயி குடையப் பிடி”

ன்னு சொல்றது எங்க வழக்கம். இப்போ அது கிண்டலா சொல்றதா ஆயிட்டாலும் அந்தக் காலத்தில ரெண்டு விஷயத்துக்காக இது வழக்கத்தில இருந்ததா அம்மம்மா சொல்வாங்க. ஒண்ணு பணம் படைச்சவங்க ஏழைங்க வீட்டுக்கு வரப்போ ஏழைங்க மரியாதைக்காக ஓடிப் போயி குடை பிடிச்சு ரோட்ல இருந்து வீட்டுக்கு கூட்டிட்டு வருவாங்களாம். ரெண்டாவது சில பணம் படைச்சவங்க குடை பிடிக்கன்னு கூடவே  ஒருத்தங்கள கூட்டிட்டும் வருவாங்களாம். இப்போ ரெண்டுமே  வழக்கத்தில இல்லாம போயிட்டாலும் நாங்க இன்னமும் பேச்சு வழக்கத்துல வச்சிருக்கோம்ல..

முறைப்புக்கள் தொடரும்..

வர்ட்டா..

21 நல்லவங்க படிச்சாங்களாம்:

Chitra said...

குடை பிடிக்கிறதுல இத்தனை விஷயம் இருக்கா? நல்லா எழுதி இருக்கீங்க.... தொடரட்டும். படமும் சூப்பர்!

முகிலன் said...

நானும் இப்பவே குடை வாங்கி வச்சிடுறேன்.

LK said...

ஹ்ம்ம் தினமும் எல்லோரின் வாழ்கையில் நடக்கும் விசயங்களுடன், புதிய விசயம் ஒன்று சொல்லி இருகிறீர்கள். நன்றி

சின்ன அம்மிணி said...

நீங்க எங்க வீட்டுக்கு வந்தா கண்டிப்பா குடை பிடிப்பேன் :)

seemangani said...

அட இப்படிபட்ட அருமையான தகவல்கள் தெரியாம இவ்ளோநாளா இருந்துட்டேனே சுசிக்கா...சரியான சமையத்துல பதிவு வந்திருக்கு எங்கே குடை...??எங்கே குடை...??நானும் வரர்ர்ட்டா...

கார்க்கி said...

enna aachu? how are u know?

ஜெய்லானி said...

ஆ..குடையில இவ்வளவு விஷயமா???

சுசி said...

நன்றி சித்ரா.

L L L L L

முதல் வருகைக்கு நன்றி முகிலன்.

L L L L L

வீட்டுக்கு வீடு வாசப்படிங்கிரிங்களா கார்த்திக் :)

சுசி said...

ஐ லைக் யூ அம்மிணி :)

L L L L L

அதான் போஸ்ட்லவே கலர் கலரா படத்தில இருக்கே.. ஒண்ண எடுத்துக்கோங்க சீமான்..

L L L L L

//தொண்டைவலி, ஜலதோஷம், ஜூரம்..//
இப்போ பரவால்ல கார்க்கி. நன்றி.

சுசி said...

ஆமாம் ஜெய்லானி.

பா.ராஜாராம் said...

நலமா சுசி?

சுசி said...

நலமே.. நீங்க நலமா பா.ரா சார்??

தியாவின் பேனா said...

எப்படி
நிறையத்தான் யோசிப்பிங்களோ ???????????

கோபிநாத் said...

\\தொண்டைவலி, ஜலதோஷம், ஜூரம்.. எல்லாம் ஒண்ணா தாக்குதலை நடத்திடுச்சு. \\

எனக்கும் எல்லாமே இருக்கு....இப்போ உங்களுக்கு எப்படி இருக்கு!

ராமலக்ஷ்மி said...

வண்ணக் குடைகளும் கூடவே வந்த கதையும் நல்லாயிருக்கு:)! டேக் கேர் சுசி.

பித்தனின் வாக்கு said...

Oh i see, i will also purchase a kudai. ammaa neenga eppa enga veetuku varinga?

சுசி said...

இல்லை தியா.. யோசிக்காததாலதான் இப்டி..

L L L L L

எனக்கு இப்போ பரவால்ல. உங்களுக்கு இப்போ எப்டி இருக்கு கோபி??

L L L L L

நன்றி அக்கா.

சுசி said...

இந்தியா வந்தா வருவேன் அண்ணா.. குடைய ரெடியா வச்சுக்கோங்க.

நர்சிம் said...

;)

சுசி said...

நர்சிம் ;);)

அப்பாவி தங்கமணி said...

ஹா ஹஹா....சூப்பர் ... வீட்டுக்கு வீடு வாசப்படி.. சரியான முறைக்கற குடும்பமா இருக்கும் போல... கலகலப்புக்கு பஞ்சம் இல்ல போங்க... Is your fever okay now?