Pages

  • RSS

10 May, 2010

என் அன்பு மாமிக்கு..

காலேல எந்திரிச்சதும், ராத்திரி தூங்க போம்போதும், பகல்ல அப்பப்போவும் என் காதில அடிக்கடி கேட்டது “நீ எதுக்கும் யோசிக்காத, எந்தக் கவலையும் உனக்கு வேணாம்.. உன்ன எப்டியும் அவன் கிட்ட கொண்டு போய் சேர்க்கிறது என் பொறுப்பு” சொன்னது மாதிரியே அவ்ளோ கஷ்டங்களுக்கு மத்தியிலேம் என்ன கடல் கடந்து கூட்டி வந்து அவர் கரம் பிடிச்சு கொடுத்துட்டாங்க.. என் மாமியார்.

Mother & Daughter

எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து ரெண்டு குடும்பமும் நட்பு. எப்போதும் அவங்க மேல மரியாதை இருக்கும். எங்க அவங்கள பாத்தாலும் ஆண்ட்டினு போயி பேசிட்டுத்தான் மத்த வேலை. அவங்க கிட்ட நிறைய பேர் சொல்வாங்களாம். என்னையும் என்னவரையும் சேர்த்து வச்சு. அவங்களுக்கு ரொம்ப வேண்டிய ஒருத்தர் “அம்மா நீங்க வேணா பாருங்க.. உங்க ரெண்டாவது பையன் அங்கிளோட ரெண்டாவது பொண்ணு கிட்ட மாட்டிக்க போறான்” ன்னு சொன்னாராம். “நான் நம்பமாட்டேன். அவர் (அப்பா பேர சொல்லி) பொண்ணு ஒரு நாளும் அப்டி பண்ண மாட்டா.. ஏன்னா அவர் வளர்ப்பு அப்டி. எனக்கு நம்பிக்கை இருக்கு” ன்னு இவங்க சொன்னாங்களாம். லண்டன்ல அவர சந்திச்சப்போ இத சொல்லி சிரிச்சாங்க.

அவங்க நார்வேக்கு முதல் முறை வந்தப்போ ஏம்மா நீ பொட்டு வைக்கிறதில்லனு கேட்டாங்க. சொன்னேன். அடுத்ததா தாலி கழுத்தில இல்லாதத பாத்துட்டு புரிந்து கொண்டதா ஒரு சிரிப்பு. யாராவது ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்கோ, இல்லை கோயிலுக்கோ போம்போது பொட்டோட தாலியும் தன்னால என் கழுத்தில இருக்கிறத பாத்து பெருமையா ஒரு சிரிப்பு. இனிமே நீ தங்கத்தில எதுனா வாங்கிப் பாரு உனக்கு இருக்கும்பாங்க. எனக்கு தங்கம் அவ்ளவா பிடிக்காதுங்கிறது தெரியும். இருந்தாலும் உன் கிட்ட சிவப்புக் கல் வச்ச தோடு இல்லைன்னுட்டு இதை வாங்கி வந்தேம்பாங்க. கூடவே தேடித் தேடி கலர் கலரா எனக்கு கவரிங்ல வாங்கிட்டு வரவும் மறக்க மாட்டாங்க.

வீட்டு வேலை செய்ய விடலேன்னா அவங்களுக்கு மூக்கு மேல கோவம் வந்திடும். வீடு பெருக்கிறது, ட்ரஸ் உலர போட்டு மடிச்சு வைக்கிறதுனு சின்ன வேலைகள் மட்டும் குடுப்பேன். சில சமயம் சமையல் செய்ய சொல்லி கேட்டேன்னா அவ்ளோ சந்தோஷம் அவங்களுக்கு. காலை பத்து மணிக்கே சமையல் ஆய்டிச்சுன்னு கால் பண்ணி சொல்வாங்க. முன்னாடி நான் வீட்ல இருந்தப்போ அவங்க இங்க வரும்போதெல்லாம் நல்லா சுத்துவோம். நான் வேலைக்கு போக ஆரம்பிச்சதும் அவங்க வீட்ல தனியா இருக்க வேண்டியதா போனப்போ டிவிதான் அவங்க துணை. வேலைல இருந்து ஃபோன் பண்ணா இன்னதெல்லாம் செஞ்சேன், இவங்க கால் பண்ணாங்கன்னு நான் கிளம்பினத்துக்கு அப்புறம் நடந்த எல்லாம் சொல்வாங்க. வீட்டுக்கு போனதும் பக்கத்தில உக்காந்து வேலை எப்டி போச்சுன்னு கேட்டு அன்னிக்கு என்ன நாடகத்தில என்ன ஆச்சுன்னு கதை சொல்வாங்க.

காலேல நான் கிளம்பும்போது எவ்ளோ சத்தமில்லாம  ரெடி  ஆனாலும்   எந்திருச்சு வந்து என்ன ட்ரஸ், எப்டி இருக்குன்னு பாத்து, இதுக்கு ஒரு பெரிய மாலை வச்சிருக்கியே வெள்ளையும் கருப்புமா முத்து கோர்த்தது.. அது இன்னும் நல்லா இருக்கும், இந்த ஷூதானே நேத்தும் போட்டே.. இன்னைக்கு வேற போடுன்னு சொல்றதும் இல்லாம வண்டி மறையிற வரைக்கும் ஜன்னல் வழியா பாத்துட்டு இருப்பாங்க. அவங்க ஒவொரு தடவையும் இங்க வந்துட்டு போம்போது வீடு ஹோன்னு வெறுமையா இருக்கும். அவங்க ஏர்போட்ல அழுதிட்டே போனதுதான் நினைவுக்கு வரும். அது மட்டுமில்லாம ஃப்ளைட்டுக்கு ஒரு வாரம் இருக்கும்போதே அழ ஆரம்பிச்சிடுவாங்க. எங்கள விட்டுட்டு போணுமேன்னு. அப்போ இங்கவே எங்க கூட இருங்கன்னாலும் முடியாதும்பாங்க. அவங்க வீடு, தென்னந்தோப்பு, அதுக்கும் மேல ஊர்ல இருக்கிற மச்சினர விட்டுட்டு இருக்க மாட்டாங்க. அவர் வேற என்னம்மா டிக்கட் கான்சல் பண்ணலையே.. திரும்பி வரிங்க இல்லைனு  கேட்டு வச்சிடுவார்.

அவங்களுக்கு அஞ்சும் பையனா போனதால மருமகள்கள் மகள்கள்தான். மத்த மருமகள் கிட்ட கூட நேரடியா சொல்வாங்களாம் நான்னா தனக்கு எப்பவுமே தனிதான்னு. எதுக்கு மாமி அப்டி சொல்றீங்க பாவம்ல அவங்கன்னா நான் ஒண்ணும் பொய் பேசலையேம்பாங்க. இதான் என் மாமி. அப்டியே என்னவர் அவங்க குணம் கொண்டு பிறந்திருக்கார். எதையும் நேரா வெளிப்படையா பேசுரது. எங்களுக்குள்ளும் சில முரண்பாடுகள் வரும்னாலும் அது இன்னமும் எங்க அன்பை உறுதியா ஆக்கும். இததான் நீ சொன்னியா நான் என்னமோ இப்டின்னு நினைச்சுட்டேன்னு சொல்லி சிரிப்பாங்க.

இந்த ஊரோட கிளைமேட் அவங்களுக்கு நல்லாவே ஒத்துப்போகும். ஒரு தடவை ஆத்து தண்ணில அடிச்சுட்டு போயி ஒரு மர வேர புடிச்சு உயிர் தப்பிட்டாங்கன்னாலும் அதுக்கப்புறம் அவங்களுக்கு ஆஸ்துமா வந்திடுச்சு. ஆனா வின்டர் டைம்ல ஷுகர் ஜாஸ்தி ஆயிடுரதால சம்மர் டைம்ல தான் வருவாங்க. ஹாஸ்பிட்டல் போம்போது என் கூட வரதையே விரும்புவாங்க. எங்க ஃபாமிலி டாக்டர் இந்தியர். ரெண்டு பேருக்கும் நாந்தான் ட்ரான்ஸ்லேட்டர். அவங்க என் கிட்ட சொல்றதில பாதியதான் டாக்டர் கிட்ட சொல்வாங்க. மீதி நான் சொல்லணும். சமயத்தில என்னவர் கூட போய்ட்டா இவர் சொல்ல மாட்டார். பாரும்மா.. இவன் கூட போக கூடாது. நான் சொல்ல மறந்துட்டேன். நாலு நாள் முன்னாடி எனக்கு முழங்கால் வலி இருந்துதுங்கிரத இவன் சொல்லலைம்பாங்க.

அம்மு முதல் பேத்திங்கிறதால அவங்க மேல உயிர் இவங்களுக்கு. அப்பம்மா வந்தாங்கன்னா ரெண்டு பேருக்கும் செம கொண்டாட்டம். அவங்களுக்கு ரெண்டு ஐஸ்க்ரீம், மூணு சாக்லட் சிபாரிசு செய்யப்படும். அப்பா, அம்மா, அண்ணன்கள், அக்கா மேல இவங்களுக்கு அவ்ளோ பாசம். அவங்களும் அதுக்கும் மேல இவங்க கிட்ட பாசம் வச்சிருக்காங்க. மாமியார் மெச்சிய மருமகளா நான் இருக்கிறது அவங்களுக்கு பெருமை. என் சித்தி சொல்வாங்க. நீங்க உங்க மாமியார புரிஞ்சு நடந்துக்கிறா மாதிரி.. அவங்க உங்க கிட்ட அன்பா இருக்கிறா மாதிரி.. எனக்கும் என் மாமியாருக்கும் இடையில ஒரு நெருக்கம் வர்லம்மான்னு.

ஊருக்கு போனா அவங்க நைட்டிய போட்டுட்டு சுத்திட்டு இருப்பேன். எனக்கு பிடிச்ச அவங்க புடவைய கட்டிக்குவேன். ஒரு புடவை மாமனார் வாங்கி கொடுத்தது. அத அவங்க பொக்கிஷமா வச்சிருந்தாங்கன்னு எனக்கு தெரியாது. டார்க் புளூல லைட் பர்ப்பிள் டிசைன். பாத்ததும் பிடிச்சு போச்சு. இத நான் கொண்டு போட்டுமான்னதும் குடுத்துட்டாங்க. அப்புறமா அவங்க இங்க  வந்தப்போ விஷயத்த சொன்னாங்க. அப்போ எதுக்கு மாமி என் கிட்ட குடுத்திங்கன்னப்போ நீ ஆசையா கேட்டப்போ மறுக்க முடியலடான்னாங்க. பேச்சு வர்ல எனக்கு. கடைசி மச்சினர் கல்யாணத்துக்கு போயிருந்தப்போ என் பசங்கள ஒத்துமையா எனக்கு அப்புறம் நீதான் பாத்துக்கணும். இந்த குடும்பம் எப்பவும் குலையாம இதே சந்தோஷத்தோட இருக்கும்படி பாத்துக்கோனு சொன்னப்போ அவங்கள இறுக்கி அணைச்சு அழுதிட்டே குருவி தலை பனங்காய் மாதிரி இருக்கு.. இவ்ளோ பெரிய பொறுப்பு எனக்கு எதுக்கு மாமின்னு கேட்டேன். உன்னால முடியும்னுதானே உன் கிட்ட கேக்கறேன். நீ செய்வே. செய்னாங்க. இந்த நம்பிக்கைக்கு.. அன்புக்கு.. இன்னமும் நான் நிறைய்ய்ய்ய செய்யணும் அவங்களுக்கு.

பல சமயத்தில என் அம்மாவா, தோழியா, சில சமயத்தில ஒரு குழந்தையா இருக்கிற என் அன்பு மாமிக்கு இன்னைக்கு பர்த்டேங்க. நீங்களும் அவங்கள வாழ்த்துங்க.

ஹாப்பி பர்த்டே மாமி.

வர்ட்டா..

18 நல்லவங்க படிச்சாங்களாம்:

Chitra said...

Thats sweet! Convey our birthday wishes to her. :-)

ராமலக்ஷ்மி said...

அன்பான மாமிக்கு அற்புதமான (மரு)மகள்! எங்கள் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களையும் அவசியம் அவர்களிடம் சொல்லுங்கள் சுசி!

Anonymous said...

மாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஆமா, ஏன் இப்படி சோப்பு மாமிக்கு, ஏதாவது தங்கநகை, வைர நகைக்கு அடி போட்டிருக்கீங்களா ஹிஹி(சும்மா)

Anonymous said...

happy birthday

mami

epothum nalamai erukanum

oru nigilvana padiu

susima

supera erukku

vasikka rumba rumba pidithu eruntathu..

surya

Anonymous said...

ஆமா, ஏன் இப்படி சோப்பு மாமிக்கு, ஏதாவது தங்கநகை, வைர நகைக்கு அடி போட்டிருக்கீங்களா ஹிஹி(சும்மா)---

helo china ammani..enga susimavuku thangamey pidikathu....neenga sariya padiva padikaliya...

ungalku poramai..unga mami eppdiellaieynu..corecta susima.

varata..

v.v.s sangam
complan surya

Priya said...

சோ, சுவீட்.
மாமிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

சீமான்கனி said...

//வீட்டுக்கு போனதும் பக்கத்தில உக்காந்து வேலை எப்டி போச்சுன்னு கேட்டு அன்னிக்கு என்ன நாடகத்தில என்ன ஆச்சுன்னு கதை சொல்வாங்க.//

//இன்னைக்கு வேற போடுன்னு சொல்றதும் இல்லாம வண்டி மறையிற வரைக்கும் ஜன்னல் வழியா பாத்துட்டு இருப்பாங்க.//

சுசி கா...அன்பான மகளுக்கு அன்பான அம்மா.... பதிவ படிச்சுட்டு எப்படி மாமியார் மருமகள் னு சொல்ல...ஆஹா...அருமை அக்கா

ஹாப்பி பர்த்டே மாமி.

தாரணி பிரியா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாமி :)

கார்க்கிபவா said...

ச்சோ ஸ்வீட்..

மாமிக்கு வாழ்த்துகள்

ஜெய்லானி said...

மாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சுசி said...

நேத்து பேச முடிலங்க சித்ரா.. அவங்க ஊருக்கு போயிருக்காங்க.. அங்க கவரேஜ் கிடைக்காது :((

H H H H H

கண்டிப்பா அக்கா.. சும்மாவே ஊருக்கு லைன் கிடைக்காது.. இதில இங்க நேத்திலேர்ந்து ஸ்னோ வேற..
இன்னைக்காவது பேச பிள்ளையார் ஹெல்ப் பண்ணனும் :))


H H H H H

கரீட்டா என்ன பத்தி புரிஞ்சுகிட்டிங்க அம்மிணி.. ஐ லைக் யூ..

சுசி said...

வொய் சூர்யா வொய்?? எதுக்கு இப்டி கொழுத்தி போடறிங்க??
அம்மிணி நல்லவங்களா இருக்கிறதால நான் தப்பிச்சேன் :)
இது நல்லால்ல சொல்ட்டேன் :(

H H H H H

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ப்ரியா.

H H H H H

ரொம்ப புகழாதிங்க சீமான்.. எனக்கு அழுகாச்சியா வருது.. அவ்வவ்..

சுசி said...

நன்றி தாரணி பிரியா.

H H H H H

அச்சச்சோ.. சாரி.. அடுத்த தடவை சர்க்கரை கம்மி பண்ணிக்கறேன் கார்க்கி.

H H H H H

நன்றி ஜெய்லானி.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அற்புதமான வரிகள் சுசி... இப்படி எல்லாரும் இருந்துட்டா உலகம் அழகாயிடும். உங்க மாமிக்கு என்னோட பிறந்த நாள் வாழ்த்துக்கள்

சுசி said...

நன்றி தங்கமணி..

என் மருமகள் எப்டி இருப்பாங்களோ??

கோபிநாத் said...

லேட்டானாலும் என்னோட வணக்கங்களும் சொல்லிக்கிறேன் ;)

சுசி said...

நன்றி கோபி :))))

கயல் said...

இந்த மாதிரி கனவுகள் எனக்கு எப்பவும் இருக்கும் மாமியார் மெச்சின மருமகளா இருக்கனும்ங்கிறது.உங்கள அப்படி பார்க்க பெருமையா இருக்கு. உங்க மாமிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.