Pages

  • RSS

05 May, 2010

டொட்டொடொய்ங்..

சனிக்கிழமை.. 01.05.10. என்னவரும் நானும் படம் பார்க்க உக்காந்தோம். பசங்களுக்கு படத்தோட பேர் சொன்னேன். யார் நடிச்சதுன்னாங்க சொன்னேன். அப்புறமா வரோம்னாங்க. கடைசி வரை வர்ல. போன ஞாயிறுக்கு முதல் ஞாயிறு (தேதி நீங்களே காலண்டர்ல பாத்துக்கோங்க) டிவி முன்னாடி உக்காந்திருந்த என்னவர் கூப்டார்.

”ஏய் இங்க கொஞ்சம் வாயேன்.. புது படமாம்”

கிச்சன்ல இருந்து நான் வரத்துக்குள்ள (பதினஞ்சு அடி தூ..ரம் நடந்து வந்தா) ட்ரெய்லர் போயிடுச்சு. எஸ்.கே நாதன் கடை சூரிச்ல சேல்னு ஸ்நேகா ஆடிட்டு இருந்தாங்க. மறுபடி ஆட் போட ஆரம்பிச்சதும் கூப்டார். மூணாவதா இது வரவும் நான் கிச்சன்ல இருந்து வரவும் சரியா இருந்துது.

நமது கலைஞர் தொலைக்காட்சியில்..

புத்தம் புதிய திரைப்படம்..

வரும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு..

’…..’ நடித்த புத்தம் புதிய திரைப்படம் ’…..’

நமது கலைஞர் தொலைக்காட்சியில்..

ன்னு சொல்லிட்டு இருந்தாங்க.

”இது புதுப் படம் இல்லை.. நீ கூட தியேட்டர்ல பாக்கலாமான்னு கேட்டேல்ல.. நல்ல வேளை இந்த சனி எந்த ப்ரோக்ராமும் இல்லை. நிம்மதியா பாக்கலாம்”

ன்னு சொல்லி, ரொம்ப எதிர்பார்ப்போட இருந்தார். சனியும் வந்தது. ரெண்டு பேரும் இருக்கோம் படம் பாத்துட்டு. என்னடி இது.. ரொம்ப முக்கியம்.. இது வேறயானு அப்பப்போ சொல்லிட்டு இருந்தவர் அப்புறம் சைலண்டா பாத்துட்டு இருந்தார். நான் போஸ்ட் படிச்சுட்டு கமண்ட் போடாம போற வாசகியா பேசாமலே இருந்தேன். படமும் முடிஞ்சுது.  கமண்ட் போட்டுட்டு பிளாகர் என்ன சொல்லப் போறார்னு மறுபடி கமண்ட் போட்ட பிளாக் போய் பாக்கிற வாசகியா அவர் முகத்த பாத்தேன்.

”என்னடி இது..”

”ஏம்பா..”

”நல்லவேளை அன்னிக்கு உன் பேச்ச கேட்டு நான் தியேட்டர் வர்லை”

”அதான் நானும் போல இல்லை.. எனக்கென்ன தெரியும். நான் கூட இப்டி இருக்கும்னு நினைக்கல”

ஒரு பாட்டாவது நல்லா இருந்திருக்கலாம்.. இவருக்கு விஜய் மாதிரி டான்சும் வராது.. காமெடியும் சொதப்பல்.. நல்ல வேளை தப்பிச்சேண்டா சாமி.. இன்னைக்கு யாராவது ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்காச்சும் போயிருக்கலாம். ஒரு சனிக்கிழமை அநியாயமா போச்சு போ..”

அதான் பாவனா ஷமீரானு ஒண்ணுக்கு ரெண்டு பேர் இருந்தாங்களேஏனு கேக்க நினைச்சுட்டு நினைச்சதோட விட்டுட்டேன். எனக்கு தெரியும் அவங்கள அவருக்கு பிடிக்கலைன்னு. ஷமீரா வா ஆ தில வந்த மாதிரி இதுல இல்லை. பாவனா டொட்டொடொய்ங் பாட்டுல கொஞ்சூண்டு நதியாவ என் நினைவுக்கு கொண்டு வந்தாங்க. அஜித்.. அவ்வ்வ்..

லேட்டான்னாலும் லேட்ட்ட்டஸ்டா நாங்க பாத்த படம்..

Bilde006 (2)

டொட்டொடொய்ங்.. டொட்டொடொய்ங்..

ஞாயிற்றுக்கிழமை. 02.05.10. நானும் சதுவும் கார்ல வெயிட் பண்ணிட்டு இருந்தோம். அம்முவுக்கு 4 மணிக்கு முடிய வேண்டிய டான்ஸ் கிளாஸ் 4.11 ஆகியும் முடியிறதா காணோம். x-box game விளாடிட்டு இருந்தவர கூட்டி வந்துட்டேங்கிற கடுப்பில இருந்தார். வெளிய வெயில்னாலும் குளிர். கார்லவே இருக்க வேண்டியதா போச்சு. முடிஞ்ச வரைக்கும் முயற்சி செஞ்சும் அவர் இந்த ரேஞ்சுக்கு போய்ட்டார்.

Bilde003 (2)

கடைசியா ஒண்ணு சொன்னேன். போட்டாரு பாருங்க ஒரு குதியாட்டம். நீங்களே பாருங்களேன்..

Bilde005

அப்புறம் அம்மு வந்ததும்தான் நேரம் 4.49 ன்னு தெரிஞ்சுது. அது வரைக்கும்

“அம்மா.. விஜய், வில்லு, வேட்டைக்காரன் எல்லாமே ’வி’ல தொடங்குது இல்லை..”

“வடிவேலும் இருக்காரா அய் ஜாலி..” ”

”இனிமே என் ஃபேவரிட் லிஸ்ட்ல சுறாதான் ஃபர்ஸ்ட்..”

இப்டியே பேசிட்டு இருந்தார். வேற ஒண்ணுமில்லிங்க.. செவ்வாய்க்கிழமை சுறா பாக்க தியேட்டர் போறோம்.. அப்பா டிக்கட் புக் பண்ணிட்டார்.. இந்த ரெண்டு வசனமும் தாங்க நான் சொன்னேன். இத முன்னாடியே சொல்லி இருக்கலாம்னு சொல்றீங்களா?? அததாங்க நானும் நினைச்சேன்..

டொட்டொடொய்ங்.. டொட்டொடொய்ங்..

இன்னைக்கு செவ்வாய்க்கிழமை. 04.05.10. ஆஃபீஸ்லருந்து 2:30 க்கே கிளம்ப நினைச்ச என் திட்டம் டமால்.. திடீர் மீட்டிங். ஏமாற்றம் நெம்பர் ஒன்.

ஃப்ரெண்ட் கூட ஒரு சின்ன மிஸ்அண்டர்ஸ்டாண்டிங். அது கிட்ட பேசிட்டு போலாம்னு நினைச்சேன் லைன் என்கேஜ்ட். ஏமாற்றம் டூவு.

அடுத்து சமையலையாவது சீக்கிரம் முடிக்கலாம்னா ஃப்ரிஜ் லைட் எரியுது வேலை செய்யல. நைட் வெட்டி ரெடியா சுத்தம் பண்ணி வச்ச மீன் மறுபடி செத்துப் போச்சு. மூணாவது ஏமாற்றம்.

ஒரு வழியா புறப்பட்டு போனா பார்க்கிங் கிடைக்கல. நாங்க மட்டும் உள்ள போக அவர் தேடி பார்க் பண்ணி வரேன்னுட்டு போய்ட்டார். ஏமாற்றம் நான்கு.

டிக்கட் வாங்கி பாத்தா 5 வது ரோல 1-4 சீட். முன்னாடி அதுவும் செண்டர் சீட் இல்லாம ஓரத்தில உக்கார வேண்டியதா போச்சு. என்னதான் 5 எனக்கு பிடிச்ச நம்பர்னாலும் அந்த ஏமாற்றம் அஞ்சேய்.

சர்டிபிக்கேட் போட ஆரம்பிச்சும் கண்ணாளன் வர்ல. அப்பப்போ வராரான்னு திரும்பி திரும்பி பாத்ததுல கரெக்டா பாக்க வேண்டிய பேர் போயி தமன்னானு வந்திடுச்சு. எத்தனாவது ஏமாற்றம்? ஆறு.

ஆனா ‘தள’ மட்டும் என்ன ஏமாத்தலிங்க. என்ன டான்ஸு, என்ன பாட்டு, என்ன காமெடி, அடடடடா.. நல்லா எழுதுற பதிவர்களோட பதிவுல நல்லா இருக்குன்னு கமண்ட் போட்டு அலுத்துப்போனா மாதிரி எனக்கும் அவர் படத்தப் பத்தி நல்லாருக்குன்னு சொல்லி சொல்லி அலுத்துப் போச்சுங்க.

எனக்கு கவலையெல்லாம் விசில் சத்தம் பாக்ரவுண்ட்ல கேக்காம பாத்ததுதான். டிக்கட் புக் செய்யும்போது நார்மலாவும், தியேட்டர் உள்ள போம்போது ஸ்ட்ரிக்டாவும் சொல்லிட்டாங்க. விசில், இல்லை ஆனந்தக் கூச்சல், கைதட்டல் கூடாதுன்னு. இருந்தாலும் அப்பப்போ கேட்டுட்டு இருந்துது. லைட்டா. இருந்தாலும்..

இதான் முத தடவையா ஊர்ல சினிமா டிக்கட் பாத்த ஒரு ஃபீல் வந்துது. டிக்கட் செலவ சரி செய்யவோ என்னமோ விலைய 110kr இல இருந்து 130 kr க்கு ஏத்திட்டாங்க.

பாருங்க என் கைல ஒண்ணில்ல நாலு Sunrise :))))

Bilde035

வர்ட்டா..

23 நல்லவங்க படிச்சாங்களாம்:

LK said...

என்னது சுறா நல்ல இருந்துச்சா. அம்புட்டு நல்லவங்களா நீங்க avvvvvvvvvvvvvv

புலவன் புலிகேசி said...

அசல் ஒரு மொக்கப் படம்...ஆனா சுறாவுக்கு அசல் எவ்வளவோ மேல்...என்னமோ உங்களுக்குப் பிடிச்சிருக்கு...ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்

அப்பாவி தங்கமணி said...

தெய்வமே... உங்களுக்கு ஆனாலும் ஆகாய பொறுமை தான் சாமி. இந்த கொடுமைய தியேட்டர்ல வேற போய் பாத்தீகளா.... வாழ்க வாழ்க

Chitra said...

டொட்டொடொய்ங்.. டொட்டொடொய்ங்..

...... ha,ha,ha,ha,....

ராமலக்ஷ்மி said...

//டொட்டொடொய்ங்..// விமர்சனங்கள்:)!

அவற்றை விமர்சிக்கும் டொட்டொடொய்ங்.. பின்னூட்டங்கள்:))!

malarvizhi said...

எப்படிதான் இந்த படங்களை தியேட்டரில் போய் பார்த்தீங்களோ ?எனக்கு இந்த படங்கள் பிடிக்கவே இல்லை.பரவால்லை ,நீங்க ரொம்ப பொறுமைதான்.

கார்க்கி said...

//அசல் ஒரு மொக்கப் படம்...ஆனா சுறாவுக்கு அசல் எவ்வளவோ மேல்//

அதானே.. அசல் தேவி பேரடைஸ்ல பார்த்திஙக்ளா சகா? ஏன்னா சுறா தேவில ஓடுது :))))

//எப்படிதான் இந்த படங்களை தியேட்டரில் போய் பார்த்தீங்களோ/

கார்லதான் மேடம் போயிருப்பாங்க

சுசியக்கோவ்.. நிஜமா அசல் டிவில போட்டாங்களா? எனக்கு தெரியாம போயிடுச்சே.. வந்து 100 நாள் கூட ஆகல.. வாழ்க தல.. வளர்க அவர் தொப்பை.. ச்சே புகழ்..

சின்ன அம்மிணி said...

//பாருங்க என் கைல ஒண்ணில்ல நாலு Sunrise :))))//
ஆவ்வ்வ். கார்க்கி ஒரு ஆள் போதுங்க சுசி :)

*இயற்கை ராஜி* said...

nice:-)

சுசி said...

சுறா நல்லாதானே இருக்கும் LK. சாப்டதில்ல நீங்க.. ஆவ்வ்வ்..

G G G G G

என் ஃபீலிங்க புரிஞ்சுக்கிட்டத்துக்கு நன்றி புலவரே.

G G G G G

பின்ன.. தியேட்டர்லதாங்க தங்கமணி கண்டிப்பா பாக்கணும் இளைய தளபதினா சும்மாவா.

சுசி said...

அய்.. சித்ரா சிரிச்சிட்டாங்கப்பா..

G G G G G

ஹிஹிஹி.. நன்றி அக்கா.

G G G G G

எனக்கு பொறுமை ஜாஸ்தின்னு தான் எல்லாரும் சொல்வாங்க மலர்விழி.

சுசி said...

தம்பி கார்க்கி.. படிக்காமலே கமண்ட் போடுவிங்கனு தெரிஞ்சுதான் படத்தோட போட்டேன். அசல் டிவில எப்டி இருக்குன்னு மறுக்கா போயி முதல் ஃபோட்டோவ பாருங்கப்பா..
100 நாள் ஆகலேன்னா அப்போ அது புதுப் படம்தானாஆ..

G G G G G

எதுக்குங்க அம்மிணி?? உதயம் நாங்க பாக்க கூடாதா..

G G G G G

நன்றி ராஜி.

seemangani said...

சுசி கா நீங்க கெட்டுபோனதும் இல்லாம ஜுனியரையும் கெடுத்து வச்சு இருக்கீங்களே...உங்க முழு பெயர் சொல்லுங்க ஒரு கல்வெட்டு எழுதி வைக்கணும்...இருந்தாலும் இவளவு...இவளவு...இவளவு தைரியசாலியா இருக்ககூடாது...

complan surya said...

NALLA
COMMEDY PANRENGA..

HIO HIO...

ENNA ETHU CHINAPULATHANAMA ERUKKU.

"டொட்டொடொய்ங்.."
"டொட்டொடொய்ங்.."


VIJAY PADAM PARTHA
SUSIMA
VALGA VALGA
VALGA
VALGA...

V.V.S.
COMPLAN SURYA

விக்னேஷ்வரி said...

நீங்க ரொம்ப நல்லவங்க. சுறா நல்லாருந்ததா....

கோபிநாத் said...

சுறா ஊர்ல போயி தான் பார்க்கலாமுன்னு இருக்கேன். ஆனாலும் குடும்பத்துல அம்புட்டு பேருக்கும் தைரியர் அதிகம் ;))

சுசி said...

கல்வெட்டுல என்ன எழுத போறீங்க சீமான்..
இளைய தளபதியின் பரம ரசிகை நான்னா??

G G G G G

விஜய் படம் எப்போதும் விரும்பி பார்க்கும் பரம ரசிகை சுசி வாழ்கன்னு ரெண்டு பிட்ட சேர்த்துப் போட்டு வாழ்த்துங்க சூர்யா..

G G G G G

ம்ம்.. சூப்பர் விக்னேஷ்வரி.

சுசி said...

பின்ன.. கத்தி சண்டை போடுற (அந்தக் கத்தி இல்லை.. குத்துற கத்திப்பா) குல வழக்கத்தில பிறந்தவளாக்கும் நான் :))

ஊர்ல போய் பாத்துட்டு நீங்க என்ன சொல்வீங்கன்னு எனக்கு இப்போவே தெரியுமே கோபி :))))

complan surya said...

அனைத்து
சகபதிவர்களுக்கும்
உலகத்தில் உள்ள அனைத்து அம்மாவிருக்கும்
அன்னையர்
தின வாழ்த்துக்கள்வருத்தபடாத வாசிப்போர் சங்கம்
காம்ப்ளான் சூர்யா

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

அந்தப் படத்த தியேட்டர்ல பாத்ததுக்காகவே உங்களுக்கு தனியா கட் அவுட் வெக்கணும்..

சரி.. ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு ரசனை...

நன்றி..

சுசி said...

நன்றி சூர்யா..

G G G G G

பக்கத்திலவே ‘தள’ கட் அவுட்டும் இருக்கிறா மாதிரி பாத்துக்கோங்க பிரகாஷ் :)

ப்ரியமுடன் வசந்த் said...

டொட்டொடொய்ங் நான் இன்னும் அந்த படம் பார்க்கவே இல்லியே...

ப்ரியமுடன் வசந்த் said...

சுறா ஊர்ல பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகி அந்த படத்தோட டிக்கெட்ட பிரேம் பண்ணி மாட்டிவச்சுருக்கேன் வீட்ல ஆவ் ஆவ் ஆவ்வ்வ்வ்வ்