Pages

  • RSS

26 October, 2009

என் செல்லக் கண்ணம்மாவுக்கு...

நலமா மக்கள்ஸ்?

என் பதிவில புது இடுகைன்னதுமே வாயில வாழ்த்தும் கையில கிஃப்ட்டுமா வந்தவங்க ரெண்டு ஸ்வீட் எடுத்துக்கோங்க. இன்னைக்கு என் கண்ணம்மாவுக்கு பிறந்த நாளுங்க. தம்பி பர்த்டேக்கு லீவ்ல நின்னீங்க எனக்கு என்ன பண்ண போறீங்கன்னு கேப்பாங்கன்னு தெரிஞ்சு நான் முன்னாடியே ஒரு வார லீவ் எடுத்திருக்கேன். ஏங்க... எங்க ஓடறீங்க? அதுக்குன்னு நான் தினமும் ஒரு பதிவெல்லாம் போட மாட்டேங்க. ப்ராமிஸ்.. நம்புங்கப்பா... தைரியமா இருங்க.

இவங்க பிறக்கும்போது எங்கள மட்டுமில்ல டாக்டருங்களையும் பதற வச்சிட்டாங்க. 25 ஆம் தேதி மாலை மூணு மணி சொச்சத்துக்கு நான் வரப் போறேனே மம்மீன்னு சிக்னல் குடுத்தவங்க, 26 காலை பத்து மணியோட சைலண்டாயிட்டாங்க. எத்தன டாக்டர்ஸ், எத்தன செக் அப், அப்பப்போ மெடிக்கல் ஸ்டூடண்ட்ஸ் வேற... கடைசியா வெயிட் பண்ணலாம்னு முடிவாகி ஒரு மிட்வைஃப் அப்பப்போ செக் பண்ணிட்டு என் கூடவே  பேசிட்டு இருந்தாங்க. கிடைச்ச காப்ல குணா ஃபோன் பேச வெளிய போய்ட்டார். திடீர்னு வெளிய போன மிட்வைஃப் ஒரு படையோட வந்து என்ன ஸ்ட்ரெச்சருக்கு ஷிஃப்ட்  பண்ணி நேரா ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு போய்ட்டாங்க. என்ன ஏதுன்னு நான் முழிக்க  எங்கள நம்பு, கடவுளை வேண்டிக்கோ, நல்லதே நடக்கும்னாங்க. பிள்ளையாரே.. மாரியம்மா.. என் குழந்தைக்கு.. அப்புறம் எதுவும் தெரியல...

நினைவு வந்தப்போ வலிக்குது இனிமே குழந்தை பிறக்க போதுன்னு நினைக்குறேன்னு  அதே மிட்வைஃப் கிட்ட சொன்னேன். சிரிச்சுக்கிட்டே உனக்கு 4450g + 49cm ல 12:35 க்கே பெண் குழந்தை பிறந்தாச்சு  நீ இப்போ ICU ல இருக்கேன்னாங்க. எங்க என் குழந்தைன்னப்போ ரெண்டு ஃபோட்டோவ காமிச்சா. ஒண்ணுல மலைப்போட குணா. பின்ன வெளிய போனவர் திரும்பி வந்தப்போ இந்தா உன் பொண்ணுன்னு குட்டிம்மாவ குடுத்தாங்களாம். அவர் மயக்கம் போடாத குறை.

குட்டிம்மா ஹார்ட் பீட் சடனா குறைஞ்சு  போய்ட்டதால  ஆப்பரேஷன் பண்ணினதாவும், அப்போ அவங்க திகைச்சுப் போனதில புரையேறி லங்க்ஸ்ல தண்ணீர் போய்ட்டதால சைல்ட் க்ளினிக்ல ட்ரீட்மென்ட்ல இருக்காங்கன்னும் சொன்னாங்க. பாக்கணுமேன்னேன். உனக்கு நிறைய ப்ளட் லாஸ் ஆயிருக்கு கொஞ்சம் பொறுத்துக்கோன்னு  சொல்லி மூணாவது நாள் தான் ஆம்புலன்ஸ்ல கொண்டு போய் காட்னாங்க. கடவுளே என் கண்மணிய அவ்ளோ வயருக்கும் மத்தியில பாத்தப்போ.... இப்போ நினைச்சா கூட மனசு அடிச்சிக்கும். என் வயர்களோட சிக்கிகிட்ட அவங்க வயர்களை பிரிச்செடுத்தத விட என்கிட்டே இருந்து அவங்கள வாங்கத்தான் நர்சுங்க கஷ்டப்பட்டு போய்ட்டாங்க.

நாலாம்நாள் கையில என் கண்மணிய குடுத்துட்டு மிட்வைஃப் சொன்னாங்க அன்னிக்கு ஒரு நிமிஷம் தாமதிச்சிருந்தா இந்த குட்டி தேவதைய உன் கிட்ட குடுக்கிற பாக்யம் எனக்கு கிடைச்சிருக்காதுன்னு. அன்னிலேர்ந்து தேவதை எங்க வீட்ட சொர்க்கம் ஆக்கிட்டா. அவளோட சின்ன அசைவு கூட கட்டளையாகி உடன் நிறைவேற்றப்பட்டது. அவளே எங்கள் உலகமாய். அவளுக்காகவே விழித்து அவள் தூங்கும் அழகை ரசித்தபடியே தூங்கி... இளவரசியின் அரசாட்சி வீட்டின் ஒவ்வொரு இயக்கத்திலும்... குணா சைட்ல முதல் பெண் பேரக் குழந்தைங்கிற பெருமை. என் சைட்ல முதல் பேரக் குழந்தையே அம்மணிதான். செல்லத்துக்கு கேக்கணுமா.

இவங்க அப்பா செல்லம். உருவம் மட்டுமில்ல பிடிவாதம் கோவம்னு குணமும் அப்பாவைக் கொண்டு. ஆனா அம்மா முகத்த வச்சே மனச கண்டு பிடிச்சுடுவா. தம்பி அம்மா கவலையா இருக்காங்க நாம சமத்தா இருக்கணும்னு சொல்வா. அக்காவா அவருக்கு அட்வைசும் நடக்கும். அம்மாவா இருக்கிறது நல்லதாம்மான்னு அடிக்கடி கேப்பா. அம்மாவாக  என் மனது அடையும் சந்தோஷம் எதோ ஒரு வகையில் அவங்களுக்கு புரியுதுன்னு நினைக்கிறேன். அடிக்கடி உலகத்திலேயே சிறந்த அம்மான்னு எனக்கு விருதும் குடுப்பாங்க.

என்னோட முதல் ரசிகை இவங்கதான். என்னோட சின்ன வயசு கதைகள் கேக்கிரதுன்னா ரொம்ப பிடிக்கும். மாமியார் வந்து நிக்கும்போது அப்பா பத்தி கேப்பாங்க. தான் தப்பு செய்யாதப்போ தைரியமா பேசுவாங்க. தப்பு தன் பேர்லன்னா குடுகுடுன்னு ஓடிப் போய்  ஹீரோயினாட்டம் பெட்ல  தொப்புன்னு விழுந்து அழுவாங்க. கொஞ்சம் அவங்க வழியிலே விட்டு பிடிச்சாதான் பிடிவாதத்த  விடுவாங்க. அவங்க நினைக்கிறது உடனையே நடந்தாகணும். சரியான காரணம் சொல்ற வரைக்கும் எதையும் ஒத்துக்க மாட்டாங்க.

என் செல்லக் கண்ணம்மா நீடூழி வாழணும். அவ வாழ்வில எல்லா சீரும் சிறப்பும் பெறணும். நீங்களும் அவங்கள மனதார வாழ்த்துங்க.

Hannaah Montana ங்கிற Miley Cyrus உடைய பரம விசிறி. வீடியோ போட முடியல. லிங்க்ல போய் பாருங்க. இதுதான் இப்போ அவங்க அதிகம் கேட்டு,பாடுற பாடல்.

http://www.youtube.com/watch?v=bo8tgpk7sOI

15 நல்லவங்க படிச்சாங்களாம்:

thiyaa said...

//
என் செல்லக் கண்ணம்மா நீடூழி வாழணும். அவ வாழ்வில எல்லா சீரும் சிறப்பும் பெறணும். நீங்களும் அவங்கள மனதார வாழ்த்துங்க.
//

நானும் வாழ்த்துறன்
நல்ல கதை

R.Gopi said...

//என் செல்லக் கண்ணம்மா நீடூழி வாழணும். அவ வாழ்வில எல்லா சீரும் சிறப்பும் பெறணும். நீங்களும் அவங்கள மனதார வாழ்த்துங்க. //

செல்ல கண்ணம்மா, வாழ்வில் எல்லா வளங்களும், நல்ல உடல் நலம்/ஆரோக்கியம் பெற்று சீரும், சிறப்புமாய் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்....

ராமலக்ஷ்மி said...

உங்கள் செல்லக் கண்ணம்மாவுக்கு என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சுசி.

இங்கிருந்து வாழ்த்துடன் நான் தரும் அன்புப் பரிசாக இந்தக் கவிதையும்:) : நீயெனதுன்னுயிர் கண்ணம்மா!

பித்தனின் வாக்கு said...

சுசி ஒரு பெண்ணுக்கு குழந்தை ஒரு வரம் என்றால், பிரசவம் மறுஜென்மம் என்பார்கள். கஷ்டப்பட்டுதான் காப்பாத்திருக்கீர்கள். மிகவும் நன்றாக வருவாள். பிடிவாதமும் கோபமும் உள்ள பெண்கள் நிறைய வெற்றிகளை சாதிப்பார்கள். என்ன ஒன்னு நாம் அதை முறையாக நல்ல வழியில் திருப்பிவிடனும். நீங்கள் மனம் நிறைந்து வாழ்த்தும் வண்ணம் நானும் வாழ்த்துகின்றேன்.
எல்லாம் வல்ல இறைவன் என் அப்பன் இராமபிரான் அருளால் எல்லாமும் பெற்று நிறை வாழ்வு வாழ்க. முதல் பெண் என்றால் அந்த வீட்டில் மங்களமும், சந்தொசமும் நிறைந்துருக்கும், அதுபோல உங்கள் வாழ்வும் வளம் பெற வாழ்த்துக்கள்.

Thamiz Priyan said...

Ellam aruge irunthu unarnthathu... :-) marumakalukku iniya pirantha naal vaazththukkal.

கார்க்கிபவா said...

என் வாழ்த்துகளும்..

ஒரு வித பதட்டத்தோடே படிச்சேன்..

பிள்ளையாருக்கு நன்றி

விக்னேஷ்வரி said...

உங்கள் செல்லக் கண்ணம்மாவிற்கு எனது வாழ்த்துக்களும்.
அவங்க புகைப்படம் போட்டிருக்கலாமே சுசி.

இது நம்ம ஆளு said...

பிரசவம் தாய்க்கு ஒரு மறு பிறவி !

செல்லக் கண்ணம்மா நீடூழி வாழணும். அவ வாழ்வில எல்லா சீரும் சிறப்பும் பெறணும்

செல்லக் கண்ணம்மாவிற்கு வாழ்த்துக்கள் !

நேசமித்ரன் said...

வெள்ளிப் பிறை வளர்ந்து விண்ணேகும் அழகில் மொட்டுக்குள் முகம் மூடும் காற்று வாசம் பெற்று மூச்சு தொடும் அழகில் பல்லாண்டு பல்லாண்டு எல்லாவளமும் சிறப்பும் பெற்று வளர்வாயாக சுட்டி பெண்ணே

சொல்லரசன் said...

உங்க செல்லக் கண்ணம்மாவிற்கு வாழ்த்துகள்

ப்ரியமுடன் வசந்த் said...

குட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஸ்வீட் எடுத்துகிட்டேன்

மெடிக்கல் ஸ்டூடெண்ட்ஸ் எல்லாம் சரியா பிராக்டிஸ் பண்ணிட்டாங்க போல ...அவ்வ்

கோபிநாத் said...

குட்டி அம்மணிக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

படிக்கும் போதே பக்குன்னு இருக்கு. கலக்குவாங்க ;)

மீண்டும் வாழ்த்துக்கள் ;)

சுசி said...

நன்றி தியா... ஆனா இது கதை இல்ல :(((


ரொம்ப நன்றி R.கோபி.


உங்களுக்கு வெறும் நன்றி போதாது அக்கா... அருமையான கவிதை. நிச்சயமா அவங்க வளர்ந்ததும் உங்க பரிச அவங்கள படிக்க வைப்பேன் :)))


நன்றி சுதாண்ணா. //பிடிவாதமும் கோபமும் உள்ள பெண்கள் நிறைய வெற்றிகளை சாதிப்பார்கள். என்ன ஒன்னு நாம் அதை முறையாக நல்ல வழியில் திருப்பிவிடனும்.// இதுதான் என் பயமும் :))) கட்டாயமா வழி காட்டுவேன்.


நன்றி தமிழ் பிரியன். என் குட்டி மருமகள் எப்டி இருக்காங்க?


நன்றி கார்க்கி. பதறாதீங்க. நானும் அவரைத்தான் வேண்டி இருக்கேன்... பாக்கலாம்.


நன்றி விக்னேஷ்வரி. புகைப்படம் போட்டிருக்கலாமோன்னு இப்போ தோணுது... :(((


நன்றி பாரதியார்.


நன்றி நேசமித்ரன். அழகான வாழ்த்து என் சுட்டிப்பெண்ணுக்கு.


நன்றி சொல்லரசன்.


நன்றி வசந்த். கரெக்டா என்ன பத்தி புரிஞ்சுகிட்டு ரெடியா வாழ்த்த வந்து ஸ்வீட் எடுத்துகிட்டத்துக்கு வாழ்த்துக்கள். மெடிக்கல் ஸ்டூடண்ட்ஸ் கிட்ட மாட்டி பாருங்கடி... அப்போ தெரியும்.. கிர்ர்ர்ர்ர்ர்...


நன்றி கோபிநாத். உங்க ஆசியோட கலக்கட்டும்... :)))

gayathri said...

உங்கள் செல்லக் கண்ணம்மாவிற்கு எனது வாழ்த்துக்களும்

Anonymous said...

குட்டிம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். எல்லா நலமும் வளமும் கிடைத்து வாழட்டும்.