Pages

  • RSS

17 October, 2009

தீபாவளி ஸ்பெஷல் (அ) ஸ்பெஷல் தீபாவளி!!!

நலமா மக்களே...

நான் நலம். காயம் எல்லாம் ஆறிடிச்சு. உங்கள் ஆறுதல் வார்த்தைகளுக்கு ரொம்ப நன்றி. இந்த ஆதரவு எனக்கு என்னைக்கும் கிடைக்கணும்னு பிள்ளையார வேண்டிக்கிறேன். எனக்கு ஒரு நட்பு இருக்குங்க. பேருக்குத்தான் நட்பே தவிர என் மேல அக்கறையே கிடையாது. எப்பவும் நான்தான் பேசணும் அதுகூட. ஒரு தடவை எப்டி இருக்கேன்னு அதிசயமா கேட்டிச்சு. நல்லா இருக்கேன் ஆனா ட்ரெஸ் அயன் செய்யும்போது கைலதான் சுட்டுக்கிட்டேன்னு சொன்னதுக்கு வயசானா தோல் சுருங்கத்தானே செய்யும். அதுக்குன்னு அயன் செய்வாங்களான்னு கேட்டுச்சு. இப்போ என் வெடி விளையாட்டுக்கு  என்ன சொல்லி இருக்கும்னு நீங்களே கற்பனை ப்ளீஸ்...

எல்லாரும் தீபாவளி கொண்டாட்டத்துல இருக்கீங்களா? நல்லது நல்லது. நானும் தீபாவளிக்கு ஏதாவது எழுதணுமேன்னு ரொம்ப யோசிச்சேன். உடனவே பல்ப். இதுவரை நான் எந்த கதையுமே எழுதலை. தீபாவளிக்கு ஏன்  ஒரு கதை எழுதக் கூடாதுன்னு நினச்சு இதோ ஆரம்பிச்சுட்டேன். பயப்பிடாதீங்க. பசங்களுக்கு தினமும் ஒரு கதை சொல்றதால நல்லாவே சொல்வேன். குட்டிக் கதைதான். சோ கண்டினியூ...

அவளுக்கு நினைவு முழுவதும் அந்த ஊரின் அரசினர் வைத்யசாலையில்தான். ஆனால் அவளும் இன்னும் மூன்று பேரும் மட்டும் அரச அலுவலர்களுக்கான விடுதியில தனியா. நேரம் அதிகாலை ஐந்தை நெருங்கி கொண்டிருக்க  அவளால் கலைந்த தூக்கத்தை மீண்டும் தொடர முடியவில்லை. மூவரில் மூத்தவனுக்கு ஐந்து வயது, அடுத்தவளுக்கு நான்கு.  கடைசிக்கு ரெண்டு. என்னதான் அவங்க சத்தமே இல்லாம புறப்பட்டாலும் இவன் எழுந்து போட்ட கூச்சல ஒரு வழியா அடக்கி இப்போதான் மறுபடி தூங்க ஆரம்பிச்சிருக்கான். அதுக்குள்ளே அவங்க வந்திரணுமே. கடவுளே எல்லாம் நல்லபடியா நடக்.. அம்மா...ஆ... அவன்தான். இந்த தடவை கூட மற்ற இருவரும் எழுந்தாச்சு. பெரியவன் கேட்டான் சித்தி அம்மா எங்க? அப்பா காணம் இது நாலு வயசு. ஆஆ... இது ரெண்டு வயசு... அவள் செய்வதறியாமல் மலைக்க வெளியே கார் சத்தம். அப்பா என்றபடி ஓடின பெருசுகள்.

மணி அதிகாலை 5:31. நர்சக்கா ஓடி வந்து சொன்னாங்க உங்களுக்கு பெண் குழந்தைங்க. வெளியே  பதட்டத்துடன், நடப்பதும் இருப்பதுமாக ஒரு அரை மணி நேரத்தை அவஸ்தையுடன் கழித்தவர் காதில் அது தேனாய் பாய்ந்தது. நிம்மதியோடு குலதெய்வத்தை வேண்டிக்கொண்டார். உள்ளே சின்னதா ஒரு தடவை அழுதிட்டு சமத்தா இருந்த குழந்தை 4kg + 49cm ல இருந்தது. பட்டுக் கன்னத்தை வருடியபடி பக்கத்தில் பெருமையுடன் அம்மா. பக்கத்து பெட் பெண்ணோட பாட்டி சொன்னாங்க சமத்துக் குழந்தை எந்த கஷ்டமும் அம்மாவுக்கு குடுக்காம பிறந்திடுச்சேன்னு. எனக்கு மட்டுமில்ல யாருக்குமே என் பட்டுக்குட்டி  கஷ்டம் குடுக்கமாட்ட இல்லப்பா அம்மா சொன்னது அதன் அடி மனதில் அப்போதே பதிந்து விட்டதோ?

சித்தி சாக்லேட்.. கத்திக் கொண்டே ஓடி வந்தவங்க ஒண்ண மூணாவதுக்கு குடுத்தும் அழுகை நிக்கல. என்ன மாமா அக்கா எப்டி இருக்காங்க? இருக்காங்க. ப்ராப்ளம் ஒண்ணும் இல்ல. டேய் உங்களுக்கெல்லாம் தங்கச்சி பாப்பா பொறந்திருக்குடா... ஹைய்யா எனக்கு ரெண்டு தங்கச்சி பாப்பா இது பெரியவன். வாயில் வைத்த சாக்லட் கசப்பானது குட்டிப் பெண்ணுக்கு. ஒரே பெண் என்ற என் செல்லம் கெடுக்க வந்திட்டாளா ஒருத்தின்னு அப்பவே அதுக்கு தோணிச்சுதோ? சின்னது இன்னும் பெருஸ்...ஸா அழுகையோட வால்யூம கூட்டிச்சு. கடைக்குட்டி செல்லம் இனி தானில்லைன்னு அதுக்கு தெரிஞ்சிருக்கலாம். யார் கண்டா.

இப்போ என் கதையோட ஹீரோயின் வளந்தாச்சு. கணவன் ரெண்டு பசங்களோட சந்தோஷமா இருக்கா. அவளுக்கு குடும்பம், உறவுகள்,நண்பர்கள்தான் உலகம். இவ்ளோ ஏங்க நான் மேலே சொன்ன  என் ஃப்ரெண்டு கூட அவள பத்தி சொல்லி இருக்கு. கணவனுக்காக, குழந்தைகளுக்காக, உறவுகளுக்காக ஏன் நண்பர்களுக்காகன்னு பாத்து பாத்து செய்யிற பொண்ணு நிச்சயம் நல்லா இருப்பான்னு.

இப்போ நான் கதைய முடிச்சிட்டேன். நீங்க அவளுக்காக இன்னும் ரெண்டு வெடிய சேத்து வெடிச்சு, ஒரு பத்து ஸ்வீட்ட சாப்டுங்க. சாப்டாச்சா? அப்டியே சந்தோஷமா அவள வாழ்த்துங்க. எப்டீன்னா ஹாப்பி பர்த்டே சுசின்னு. இல்ல இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுசின்னு. ஹிஹிஹி... உங்கள பத்தி அவளுக்கு நல்லாவே தெரியும். அதான் ரெண்டையும் எழுத சொன்னா. தீபாவளியோட சேத்து உலகமே அவ பிறந்தநாள கொண்டாடுறதா ரொம்ப சந்தோஷத்தில இருக்கா. உங்க வாழ்த்து இன்னும் சந்தோஷத்த குடுக்கட்டும்.கிஃப்ட மறக்காம அனுப்பி வச்சிடுங்க.

நண்பர்களே, சகோதர சகோதரிகளே உங்க அனைவருக்கும் என் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன்.

பி.கு :- கதையோட ஆரம்பத்திலேயே எனக்கு பிறந்தநாள்னு புரிஞ்சுகிட்டவங்க சுத்த மக்கு. இடையில புரிஞ்சுகிட்டவங்க மக்கு. கடைசீ...வர படிச்சும் இன்னைக்கு எனக்கு பிறந்தநாள்னு இப்போ பின் குறிப்ப படிச்சு புரிஞ்சு கிட்டவங்கதான் என்ன மாதிரி அதி புத்திசாலிங்க. வரட்டுங்களா... நமக்கெல்லாம் நள்ளிரவு வாழ்த்து கிடையாதுங்க. நல்லா தூங்கி எந்திரிச்சு ஞாபகம் இருந்தா வாழ்த்துவாங்க. பின் குறிப்பு முடிஞ்சாச்சு.

21 நல்லவங்க படிச்சாங்களாம்:

இய‌ற்கை said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கார்க்கி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சொல்லரசன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்,உங்க‌ பிற‌ந்த‌நாளை இந்தியர்க‌ள் அனைவ‌ரும் வெடிவைத்து,இனிப்புட‌ன் கொண்டாடுவ‌து இர‌ட்டிப்பு ம‌கிழ்ச்சி.

திகழ் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

ஆயில்யன் said...

//கடைசீ...வர படிச்சும் இன்னைக்கு எனக்கு பிறந்தநாள்னு இப்போ பின் குறிப்ப படிச்சு புரிஞ்சு கிட்டவங்கதான் என்ன மாதிரி அதி புத்திசாலிங்க. வரட்டுங்களா...///

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :))

நான் கடைசி வரைக்கும் பதிவு படிக்காமலே உங்களுக்கு பிறந்த நாள்ன்னு தெரிஞ்சுக்கிட்டேன் நான் எந்த கேட்டகிரி பாஸ் :))))

கோபிநாத் said...

அக்காவுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)))

\\எப்டீன்னா ஹாப்பி பர்த்டே சுசின்னு. இல்ல இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுசின்னு. ஹிஹிஹி... உங்கள பத்தி அவளுக்கு நல்லாவே தெரியும்.\\


பிறந்தநாள் வாழ்த்துக்கள் - யாவரும் நலம் - சுசி

http://sangamwishes.blogspot.com/2009/10/blog-post_17.html

வாழ்த்திட்டோம்ல் ;)))

தமிழ் பிரியன் said...

Vaazththukkal akka!

நேசமித்ரன் said...

தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

எம்.எம்.அப்துல்லா said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :)

சின்ன அம்மிணி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தீபாவளி வாழ்த்துக்கள்

சின்ன அம்மிணி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தீபாவளி வாழ்த்துக்கள்

சுசி said...

நன்றி இயற்கை.


நன்றி கார்க்கி.நிறைய நிறைய...:))


நன்றி சொல்லரசன். அதே அதே :)))


நன்றி திகழ். முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்.


முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆயில்யன். நீங்க ஜீனியஸ் (போஸ்டர ஒட்டினது நீங்கதானே ஹிஹிஹி... )


பாசக்கார தம்பிக்கு அக்காவின் நன்றிகள். ரொம்ப சந்தோஷம் கோபி. சீர்ப் பணத்தில பாதிய அனுப்பி வச்சிடறேன். ஆயில்யன் பாக்கிய செட்டில் பண்ணிடுங்க. கடன் நட்புக்கு பகை ஆயிட கூடாதுப்பா..


நன்றி தமிழ்பிரியன்.


நன்றி நேசமித்ரன்.


முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அப்துல்லா.


நன்றி அம்மணி. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

R.Gopi said...

என் இனிய‌ ம‌ன‌ம் கனிந்த‌ பிறந்த‌ நாள் ம‌ற்றும் தீபாவளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்...சுசி...

என் தீபாவ‌ளி பதிவிற்கு வந்து "ஸ்பெஷ‌ல் கிஃப்ட்" பெற்று செல்ல‌வும்...

ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்... http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html

பித்தனின் வாக்கு said...

வாழ்த்துக்கள் சுசி, இரு அண்ணன் அக்கா என்றவுடன் அது நீங்கதான் முடிவுக்கு வந்தேன். என்னிடம் மடிக்கணினி இல்லாததால் இன்றுதான் அலுவலகத்தில் தங்களின் பதிவைப் படித்தேன். உடன் வாழ்த்துக்கள் சொல்லமுடியாமைக்கு வருந்துகின்றேன். மன்னிக்கவும். இருந்தாலும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இது நம்ம ஆளு said...

இன்னைக்கு எனக்கு பிறந்தநாள்னு இப்போ பின் குறிப்ப படிச்சு புரிஞ்சு கிட்டவங்கதான் என்ன மாதிரி அதி புத்திசாலிங்க. வரட்டுங்களா... நமக்கெல்லாம் நள்ளிரவு வாழ்த்து கிடையாதுங்க. நல்லா தூங்கி எந்திரிச்சு ஞாபகம் இருந்தா வாழ்த்துவாங்க. பின் குறிப்பு முடிஞ்சாச்சு.
:)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சந்ரு said...

வாழ்த்துக்கள்

நர்சிம் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்..கொஞ்சம் லேட்டா அல்லது அடுத்த பிறந்த நாளுக்கு ரொம்ப அட்வான்ஸா.

பின்குறிப்பு நன்றாக இருந்தது.பின்னூட்டம் இட காரணமும் அதுதான்.

ராமலக்ஷ்மி said...

நான் அதிபுத்திசாலி:)! தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுசி:)!

சுசி said...

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் பரிசுக்கும் நன்றி R.கோபி. பரிச பத்திரமா வச்சிருக்கேன் அடுத்த தீபாவளிக்காக :)))


பரவால்லை சுதாண்ணா... வாழ்த்துக்களுக்கு நன்றி.


நன்றி பாரதியார்.


நன்றி சந்ரு.


முதல் வருகைக்கும் ரொம்ப அட்வான்ஸான வாழ்த்துக்கும் நன்றி நர்சிம்.அப்டியா?இனி பின் குறிப்பாவே எழுதிடுறேன்.அவ்வ்வ்...


நன்றி என் அதி புத்திசாலி அக்கா... :))

விக்னேஷ்வரி said...

ஐயோ, காயம் பட்டுடுச்சா.. பார்த்துங்க.

நல்ல நட்பு. :) தேவையில்லாம வெடிய சீண்டினா அது அப்படி தான் பண்ணும்னு சொன்னாங்களா... :D

கதை நல்லா இருக்கு ;)

Belated Birthday Wishes Susi.

சுசி said...

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விக்னேஷ்வரி.

ஹிஹிஹி... அப்டியும் சொல்லி அக்கறையோட கொஞ்சம் திட்டினாங்க...

ஆனா அது கதையில்ல என்னப் பத்தின நிஜம்.. அவ்வ்வ்...