Pages

  • RSS

28 October, 2009

என் அன்புக் கணவருக்கு...


தவிர்க்க முடியாத காரணத்தால என்னோட வழக்கத்தையும் மீறி அடுத்த இடுகைய ரெண்டு நாள் காப்ல போட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயிட்டேன் மக்கள்ஸ். நலமா இருக்கீங்கதானே? தலைப்பை பாத்ததும் புரிஞ்சு கிட்டவங்க முதுக சொறிஞ்சு விட்டுக்கலாம். அதேதான் இன்னைக்கு என் கண்ணாளன் பிறந்தநாள். அவர பத்தி எழுத ஆரம்பிச்சா என்னால நிறுத்த முடியாதுங்கிற பாயிண்ட மைண்ட்ல வச்சுக்கிட்டு படிக்கிறத தொடருங்க. ஏன்னா எங்க  ரெண்டு குடும்பமும் நான் பிறக்கிறத்துக்கு முன்னாடி இருந்தே நட்பானவங்க. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில இருந்து கண்ணாளன எனக்கு தெரியும். அண்ணன்களோட மட்டுமில்லாம இவர் அப்பாவோட ஃப்ரென்ட் கூட.

ம்.. பிறக்கும்போது மூணரை கிலோ, அப்பவே உன்ன விட வெயிட்டு கம்மி 51 cm ல இருந்தாராம்.ரெண்டாவது பையன். அடுத்ததாவது பொண்ணா பிறக்காதான்னு ஏங்கி பஞ்ச பாண்டவர்கள பெத்து போட்டதுதான் மிச்சம்னு அத்தையம்மா இப்பவும் சொல்லி கவலைப்படுவாங்க. இவர் ரெண்டாவது. பெரியண்ணா சின்ன வயசிலேயே வெளிநாடு போக வேண்டிய நிர்ப்பந்தம். மாமாவ காலன் பறிச்சுக்கிட்டான். பதினேழாவது வயசில அம்மா தம்பீங்க இவர் பொறுப்பில. அத்தையம்மா இழப்பில இருந்து மீண்டு வரும் வரைக்கும் முழுப் பொறுப்பும் இவர்தான். தம்பீங்க மூணு பேரும்  இன்னைக்கும் சின்னண்ணன் கிட்ட கலந்து பேசித்தான் எதையும் செய்வாங்க. மாமியார் கிட்ட இவர் பேச்சுத்தான் எப்பவுமே எடுபடும். எப்பிடியாவது அவங்கள சமாளிச்சு தன் காரியத்த சாதிச்சுக்குவார்.

கிரிக்கட், ஃபுட்பால், வாலிபால் விளையாடுறதில புலி சிங்கம் ரேஞ்சு.  இப்போ கூட யாராவது ஒண்ணு ஃபோன்ல டேய் மச்சான் நீ அந்த மாச்ல அடிச்சியே ஒரு சிக்சர்னு மலரும் நினைவுகள் பேசும். இங்க கிரிக்கட் கிடையாதுங்கிரதால மத்தது ரெண்டும் தொடருது. அதிலேம் ஃபுட்பால் முதல் பொண்டாட்டி லெவலுக்கு போய்டிச்சு.

வேட்டைப் பிரியர். ஒரு தடவை வேட்டைக்கு போன இடத்தில பாம்பு கூட கடிச்சிருக்கு. தான் நினைச்சத செய்து முடிச்சிட்டு தான் அடுத்த வேலை. மனசுல பட்டத மறைக்காம பேசுறதால கொஞ்சம் தலைக்கனம்னு சொல்வாங்க.

நல்ல வேளை சிக்ஸ் பாக் அளவுக்கு போகலேன்னாலும் வெயிட் கிலோ இல்ல கிராம் அளவுக்கு கூட ஏற விடமாட்டார். அண்ணனும் தம்பீங்களும் கொஞ்சம் புஷ்டியா இருப்பாங்களா போட்டு கடிச்சு குதறிடுவார். இந்த சம்மர்ல லண்டன் போறத்துக்கு ஒரு மாதம் முன்னாடியே கடைசி தம்பி சொன்னார் அண்ணி என்னவாவது பண்ணி வரும்போது சின்னண்ணா வெயிட்ட கொஞ்சம் ஏத்திடுங்கன்னு.

சரியான மொக்கைசாமி. இவர் இருக்கிற இடத்தில மொக்கையும் சிரிப்பும் கொடி கட்டிப் பறக்கும். பேச்சால சட்னு அடுத்தவங்கள இம்ப்ரெஸ் பண்ணிடுவார். குறிப்பா எதிர்ப்பாலார.. கடலை மன்னன். அதனால மத்தவங்க மட்டுமில்ல  நானும் பொறுக்கீன்னு சொல்லி இருக்கேன். பின்ன என்னங்க. சும்மாவே ஊருக்குள்ள சேத்து வச்சு பேசி கிண்டல் பண்ணுவாங்க. இவர் வேற ரோட்ல எதிர்ல பைக்ல வந்தா சைக்கிள்ள போற எனக்கு ஹாரன் அடிக்கிறது, எங்க வீட்டுக்காங்கிறது, ஊருக்கே கேக்கிறா மாதிரி சத்தமா அண்ணன ரெடியா இருக்க சொல்லுங்க இதோ அஞ்சு நிமிஷத்தில வந்திடறேன் ஊர் சுத்தப் போணும்னு ஏய் அவர் விளையாட போணும்னு சொல்வார்டி...  யார் இல்லேன்னா ஆறு மணி விளையாட்டுக்கு நாலு மணிக்கே கிளம்பி மூணு பேர கூட்டு சேத்துக்கிட்டு ரெண்டு பேரும் என்ன பண்ணுவாங்களாம்? ஊரோட இந்த கோடீலேர்ந்து அந்த கோடி வரைக்கும் ஒரு ரவுண்டு வருவாங்கல்ல. மனச்சாட்சியே மனச்சாட்சி  இல்லாம பேச கூடாது சொல்லிட்டேன்  முட்டு சந்தில உக்காந்து கிட்டே சவுண்டு குடுக்கிறதுன்னு கொலைவெறி ஆக்கிட்டார். ஒருநாள் வந்த கோவத்தில நேரா அம்மா கிட்ட வந்து ஏம்மா இந்த மாமனார் பேர சொல்லி அங்கிளோட பொறுக்கி அடங்கவே மாட்டுதான்னு ஒரே கத்தல். இப்போ கூட எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க. நீ கொட்ற குப்பைய 'பொறுக்கி' எடுக்கப் போறாருன்னு சரியா சொல்லி இருக்கேன்னு. 

கோவம் வந்துதுன்னு வச்சுக்குங்க.. அது யாரா இருந்தாலும் நோ எக்ஸ்கியூஸ்... ஊர்ல எனக்கு தெரிஞ்சு ஒரு எட்டு பத்து பேர், இங்க ஒரு நாலஞ்சு பேர்னு இன மத நிற வேறுபாடில்லாம 'கவனிக்கப்பட்டிருக்காங்க'. அதனால மத்தவங்க லைட்டா ரவுடியாட்டம்  பாப்பாங்க. 

ஒரு இடத்தில சும்மா உக்காந்து இருக்கிறது மட்டும் இவரால முடியாது. லீவ் நாள்ல கூட டான்னு ஆறு மணிக்கு எழுந்து நின்னு எங்க கிட்ட திட்டு வாங்குவார். அதிலையும் பேசாம இருக்கிறது முடியவே முடியாது.

என்னதான் கோவம் வந்தாலும் அத சாப்பாடு மேல காட்றது மட்டும் பிடிக்கவே பிடிக்காது. சாப்பாடு இன்னதுதான் வேணும்னு இல்ல. எண்ணை கம்மியா, தேங்காய் சேர்க்காததுன்னா சரி. ஸ்வீட் பிடிக்காது. white chocolate கொஞ்சம் பிடிக்கும். பிடிக்காத ஒண்ண யாருக்காகவும் செய்ய மாட்டார்.

எப்பவும் கலகலன்னு இருக்கிறவர் சோகமா இருக்கார்னா ஒண்ணு Manchester  United இல்ல Brann ங்கிற லோகல் டீம் மாச்ல தோத்திடுச்சுனு அர்த்தம். இசை ஈடுபாடு அவருக்கு இல்லைங்கிரதால பாட்டெல்லாம் போடல.

என் கண்ணாளன் இன்னைக்கு போலவே என்னைக்கும் சந்தோஷமா வாழணும்னு என் அப்பன் விநாயகன வேண்டிக்கிறேன்.

அப்டியே அவருக்காக ரெண்டு க்ளப் படம்ஸ்.... இப்போ ஓக்கேவாப்பா ??? அப்பா.. பாருங்க இப்போதான் சிரிக்கிறார்.14 நல்லவங்க படிச்சாங்களாம்:

கோபிநாத் said...

நான் தான் முதல் ஆளா..;))

வாழ்த்துக்கள் மாமாஸ் ;))

இருங்க பதிவை படிச்சிட்டு வரேன் ;)

கோபிநாத் said...

\\அவர பத்தி எழுத ஆரம்பிச்சா என்னால நிறுத்த முடியாதுங்கிற பாயிண்ட மைண்ட்ல வச்சுக்கிட்டு படிக்கிறத தொடருங்க\\

\\குறிப்பா எதிர்ப்பாலார\\


\\ பிடிக்காத ஒண்ண யாருக்காகவும் செய்ய மாட்டார். \\

ஆகா..ஆகா...எல்லாம் நோட் பண்ணியாச்சி ;)))))

உங்க திருமணக்கதையை தொடராக எழுதினிங்க செம ஹூட் ஆகும் ;))

என்னோட மனமார்ந்த வாழ்த்துக்களும் ;))

என்ஜாய் ;)

கார்க்கி said...

வாழ்த்துகள்.. ஆனா நான் லிவர்பூல் ஃபேன் ஆச்சே!!!!

சந்ரு said...

வாழ்த்துகள்..

பித்தனின் வாக்கு said...

எங்கள் மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள், எல்லா குணங்களையும் எழுதிட்டிங்க ஆனா ஒன்னை மட்டும் விட்டுவிட்டாய், அவரின் பொறுமை பத்தி, உங்க கூட அன்பா குடும்பம் நடத்துகின்றார் இல்லையா? நீங்கள் இருவரும் இன்று போல என்றும் இணைபிரியாமல் பல்லாண்டும், பதினாறும் பெற்று வாழ்க. எங்க கண்ணம்மாவும், கண்ணனுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

நல்வாழ்த்துக்கள்!

நேசமித்ரன் said...

நல்வாழ்த்துக்கள்

:)

சின்ன அம்மிணி said...

உங்க வூட்டுக்காரருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுசி.

இன்று போல் என்றும் சந்தோஷமாய் வாழ்க :)

சின்ன அம்மிணி said...

//தலைப்பை பாத்ததும் புரிஞ்சு கிட்டவங்க முதுக சொறிஞ்சு விட்டுக்கலாம்.//

இப்படியெல்லாம் எச்சரிக்கை விட்டதும் மனசைத்தேத்திட்டுதான் படிச்சேன். :)

பிரியமுடன்...வசந்த் said...

குணாவுக்கு வாழ்த்துக்கள்

பித்தனின் வாக்கு said...

சுசி என்னம்மா ஆச்சு, நாலு நாளா பதிவுகளை படிக்கவில்லை, பின்னூட்டத்திற்கும் பதில் இல்லை. உடல் நலம் சரியில்லையா?. நான் சுனாமி பதிவு தொடரை ஆரம்பித்துவிட்டேன். மாப்பிள்ளையும்,குழந்தைகளும் நலமா?

தமிழ் பிரியன் said...

Vaazththukkal mams!

R.Gopi said...

மாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள்...

//தலைப்பை பாத்ததும் புரிஞ்சு கிட்டவங்க முதுக சொறிஞ்சு விட்டுக்கலாம்.//

உஷாராயிட்டோமில்ல.....

சுசி said...

நன்றி கோபி. ஹூட் தான் ஆகுமா? ஹிட் ஆகாதா? எழுதலாம்... ஆனா அதனால நிறைய பேர் ஹீட் ஆகிடுவாங்களே. அதான் யோசிக்கிறேன். இருந்தாலும் சூப்பர் ஐடியா தம்பி.


அப்டியா கார்க்கி? அப்போ குணா கூட பேச உங்களுக்கு ஒரு டாப்பிக் கிடைச்சாச்சுன்னு சொல்லுங்க.


நன்றி சந்ரு.


நன்றி சுதாண்ணா. அவர் பொறுமை பத்திதான் ஒரு இடத்தில சும்மா இருக்க மாட்டார்னு சொல்லி இருக்கேனே. இதையே நிறுத்த முடியல இதில அன்பு பத்தி எழுதினா நான் ஸ்டாப்பா போகும். பாவம் மக்கள். அது பத்தி அப்புறமா எழுதறேன்.


நன்றி அக்கா.நன்றி நேசமித்ரன்.


நன்றி அம்மிணி. நீங்க புத்திசாலி. எச்சரிக்கைய ககபோ செஞ்சுட்டீங்க...


நன்றி வசந்த்.


உங்க அன்புக்கு நன்றி சுதாண்ணா.உங்க பதிவும் படிச்சாச்சு.


நன்றி தமிழ் பிரியன்.


நன்றி R. கோபி. நீங்களும் புத்திசாலிதானா.. அவ்வ்வ்...