Pages

  • RSS

28 September, 2009

என் செல்லக் கண்ணனுக்கு...

நாளைக்கு  என் குண்டுக் கண்ணனுக்கு பிறந்த நாள். நான் வேறு சில காரணங்களுக்காக லீவில வீட்ல இருக்கிறதுல அவருக்கு கூடுதல் கொண்டாட்டம்.  எனக்காகவா  லீவ்  போட்டீங்கன்னு துளைச்சு எடுத்திட்டார்.

அவர் ஒரு அம்மா செல்லம். பிறக்கும்போதே அம்மாவுக்கு ஜாஸ்தி கஷ்டம் குடுக்காதவர். அவர் பிறந்த அன்னிக்கு காலேல இருந்தே எனக்கு ஒரு மாதிரியா இருந்துது. சாயந்தரம் வரை வலி எடுக்கல. இருந்தாலும் ஹாஸ்பிடலுக்கு ஃபோன் பண்ணி பேசினப்போ உடனவே வரசொன்னாங்க. குணா மான்செஸ்டர் யுனைட்டட் மாச் பாத்துட்டு இருந்தாரு. இதோ முடிஞ்சிரும் போயிரலாம்னு கடைசீல மாச் முடிஞ்சு, ஹை லைட்ஸ் பாத்து, ஃப்ரெண்ட்ஸ் கூட ப்ளேயர்ஸ்  திறமைய பத்தி பேசி, அதுக்கும் மேல ஷேவ் செஞ்சு (தேவையே இருக்கலை. அன்னிக்கு எந்த அழகான நர்சுமே வரலை) ஒருவழியா போனப்போ நேரம் இரவு 20:50 சொச்சம். அவங்க கடுப்பாயிட்டாங்க. உனக்கு டெலிவரீல ப்ராப்ளம் இருக்குன்னு தெரியும்ல இப்டியா அசண்டையா இருப்பேன்னு கேட்டப்போதான் எனக்கு குளிர் எடுத்திடுச்சு. அப்புறம் பொண்ண ஒரு ஃபிரண்ட் மூலமா வீட்டுக்கு அப்பா கிட்ட அனுப்பி வச்சுட்டு, (ஏன்னா சாதாரண செக் அப்னு அவங்களையும் தூக்கிட்டு போய்ட்டோம்)  நேரா ஆபரேஷன் தியேட்டர் போயாச்சு. சரியா 21:38 க்கு ஹேய்ய் உங்களுக்கு ஒரு baby boy கிடையாது  ஒரு boy baby யா வந்து பொறந்திருக்குன்னு குறுக்க போட்டிருந்த திரைக்கு மேலால எட்டி பாத்து சொன்னாங்க. 4570g + 52cm ல பிறந்த என் கண்ணன நர்ஸ் கொண்டு வந்து காட்டினப்போ தான் எனக்கு போன உயிர் திரும்பி வந்துது.

என் மறுபிறவி... அந்த நிமிடம்.... அவரை என் கைகளில் ஏந்திய நொடி... பிசுபிசுன்னு இருந்த என் கண்ணனோட நெத்தியில நான் கொடுத்த முதல் முத்தம்... 
என் பிறவிப் பயன்!!!


இவர் என்ன மாதிரி கொஞ்சம் சாஃப்ட் காரக்டர். அடுத்தவங்க மனசு நோகாம நடக்கணும்கிற அக்கறை இப்பவே இருக்கு. மன்னிப்பு, நன்றி ரெண்டும் இவர் அகராதியில ரொம்ப முக்கியம். அவரும் சொல்றதோட அடுத்தவங்களும் சொல்லணும்னு அதிகம் எதிர் பார்ப்பார். உலகத்திலேயே அதி புத்திசாலியாவும்  (அவருக்கு தெரியாதத சொல்லும்போது) அதி முட்டாளாவும் (மறுபடி மறுபடி சொல்லும்போது)  சிலவேளை நான் இருக்க வேண்டியதிருக்கும். அன்பா அவருக்கேத்தா மாதிரி சொன்னா எதுவும் எடுபடும். கத்தல், கோபம்னு போனா ஒரு வாரம் கழிச்சு கூட கேப்பார் அன்னிக்கு நீங்க அப்டி என்னைய திட்டினீங்க உங்களுக்கு எம் மேல அன்பில்லையான்னு.

அம்மா இந்த பொட்டு உங்களுக்கு நல்லால்ல, இந்த ட்ரெஸ் உங்களுக்கு நல்லாருக்குன்னு அக்கறையோட சொல்ற ரெண்டாவது ஆள் அவர்தான். செல்லமா முகத்த வச்சுகிட்டு ஏதாவது கேக்கும்போது கடவுளே என்னால மறுக்கவே முடியாது... கூடவே ஒரு ப்ளீஸ் வேற. என்ன பண்ண அவர் நன்மைக்காக சிலதுக்கு மறுப்பு சொல்ல வேண்டி வருதே.  உடனேயே அப்பா செல்லம் ஆய்டுவார்.

பேசும்போது விஷயத்த சொல்லி முடிச்சு ஒரு பத்து இருபது செகண்ட்ஸ்  கழிச்சு அம்மா ன்னு அழுத்தமா சொல்வார். அதில இதுக்கு என்ன செய்யப் போறீங்கன்ற கேள்வியோட நான் சொன்னது புரிஞ்சுதாங்கிற கேள்வியும் சேர்ந்து இருக்கும். அக்கா ஸ்கூல் தவிர மீதி நேரம்லாம் தம்பின்னுதான்   கூப்டணும்னு ஆர்டர் போட்டுருக்கார். ஸ்கூல்ல எல்லாரும் தன்ன தம்பின்னு கூப்ட ஆரம்பிச்சிட்டாங்களாம்.

அவருக்கு பிடிச்ச கிஃப்ட் லிஸ்ட் போட்டு போன வாரமே குடுத்துட்டார். அதில எது நாங்க வாங்கி இருப்போம்னு தனக்கு இப்பவே தெரியுமாம்னு  காலேலையே  சொல்லியாச்சு. கட்டாயம் தூங்கியே ஆகணுமா, பனிரெண்டு மணி வரைக்கும் முழிச்சு இருக்க கூடாதா, எனக்கு தூக்கமே வரலை, நான் டயர்டாவும் இல்லைன்னு சொல்லிட்டு இருந்தவர் இப்போ அசந்து  தூங்கிட்டு இருக்கார். இனி அவர எழுப்பி நாங்க வாழ்த்தப்போறோம்.

என் செல்லக் கண்ணன் எல்லா சீரும் பெற்று, சிறப்போட மன நிறைவா வாழணும்னு என் பிள்ளையாரை வேண்டிக்கிறேன். நீங்களும் வாழ்த்துங்க.

அவர் ஒரு விஜய் விசிறி. வெக்கேஷனுக்கு கார்ல ட்ராவல் பண்ணப்போறோம்னு சொன்னா  அம்மா எனக்கு விஜய் படம் எடுத்து வச்சீங்களான்னுதான் முதல்ல கேப்பார்.  வீடியோ சாங் போடுறதில சிக்கல் இருக்கிறதால அவர் கேட்ட ராமா ராமா சாங் (எனக்கு மட்டும் இல்லைன்னு தோணுது) போட முடியலை. அதனால விஜய் ஸ்டில் மட்டும் போடறேன். முடிஞ்சா புலி உறுமுது பாட்ட ஒரு தடவை கேளுங்க அவருக்கு அது ரொம்ப பிடிச்சிருக்கு.

17 நல்லவங்க படிச்சாங்களாம்:

ராமலக்ஷ்மி said...

உங்கள் கண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

//மன்னிப்பு, நன்றி ரெண்டும் இவர் அகராதியில ரொம்ப முக்கியம். அவரும் சொல்றதோட அடுத்தவங்களும் சொல்லணும்னு அதிகம் எதிர் பார்ப்பார்.//

Good.

//இந்த ட்ரெஸ் உங்களுக்கு நல்லாருக்குன்னு அக்கறையோட சொல்ற ரெண்டாவது ஆள் அவர்தான்.//

Very Good.

//பேசும்போது விஷயத்த சொல்லி முடிச்சு ஒரு பத்து இருபது செகண்ட்ஸ் கழிச்சு அம்மா ன்னு அழுத்தமா சொல்வார்.//

Cute.

//ஸ்கூல்ல எல்லாரும் தன்ன தம்பின்னு கூப்ட ஆரம்பிச்சிட்டாங்களாம்.//

:))!

//அக்கா ஸ்கூல் தவிர மீதி நேரம்லாம் தம்பின்னுதான் கூப்டணும்னு ஆர்டர் போட்டுருக்கார். //

So cute.

//இனி அவர எழுப்பி நாங்க வாழ்த்தப்போறோம். //

எங்கள் வாழ்த்துக்களையும் சேர்த்துச் சொல்லுங்கள்!

இய‌ற்கை said...

உங்க கண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்:)

பித்தன் said...

குட்டிக்கண்ணனுக்கு கோடி வாழ்த்துக்கள், குழந்தைகளின் சிரிப்பும் அவர்களின் கனவுகளும் தான் நமது எதிர்காலம். வாழ்க்கையில் எல்லா நலமும் பெற எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக்கொள்கின்றேன். (அப்புறம் பிறந்த நாள் இனிப்பு மற்றும் காரம் காணேம், ஓகே. ஓகே.ஸ்டார் ஓட்டல் பார்ட்டி இருக்கா நாந்தான் முத ஆளு). வாழ்த்துக்கள்.

கார்க்கி said...

கண்ணனுக்கு அண்ணனின் வாழ்த்துகள் சொல்லிடுங்க... புலி உறுமுது எனக்கும் ஃபேவரிட்.. :))

கலையரசன் said...

கண்ணன் (உண்மையான பேரு அதுதானே சுசி?) வாழ்வில் எல்லா வளமும் பெற்று, சீரும், சிறப்புடன், நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ உங்களுக்கு பிடித்த வினாயகரையும், எனக்கு பிடித்த திருவக்கரை காளியம்மனையும் வேண்டுகிறேன்...

பெற்றோரின் அன்பு கொள்ளடா - நீ
அகந்தை கொல்லடா நட்பினில்

ஆற்றல் கொள்ளடா - நீ
ஆத்திரம் கொல்லடா இல்லத்தில்

இன்பம் கொள்ளடா - நீ
இச்சை கொல்லடா பருவத்தில்

ஈகை கொள்ளடா - நீ
ஈனம் கொல்லடா வளர்ச்சியில்

உழைப்பு கொள்ளடா - நீ
உறக்கம் கொல்லடா பயிற்சியில்

ஊக்கம் கொள்ளடா - நீ
ஊதாரி கொல்லடா செலவில்

எளிமை கொள்ளடா - நீ
எதிர்ப்பு கொல்லடா உலகில்

ஏற்றம் கொள்ளடா - நீ
ஏழ்மை கொல்லடா...படிப்பினில்

ஒழுக்கம் கொள்ளடா - நீ
ஒதுங்கி கொல்லுடா -- தீமையில்!!

அன்பு மாமன்..
கலையரசன்.

(எப்டி பிழிச்சேன் பாத்தியா பீலிங்ஸ்ச..?)

சுசி said...

ரொம்ப நன்றி அக்கா. ஒரு அம்மாவைப் புரிந்து கொண்ட இன்னொரு அம்மா :)))


நன்றி இயற்கை.


நன்றி பித்தன். அவருக்கு peppes pizza restaurant போணுமாம். அங்க வந்திடுங்க..:))


கண்ணனுக்கு அண்ணன் மட்டுமில்ல மாமனும் ரைமிங்காதான் இருக்கு. சோ கார்க்கி அங்கிளோட வாழ்த்துக்களை சொல்லிடுறேன்.
ஒக்கேவா?


கலை என்ன கலை இது? பீலிங்க்ஸ்ல பின்னிட்டீங்க தம்பி.. அவ்வ்வ்வ்.. (இது ஆ.க) கண்ணன் செல்லப் பெயர். அவருக்கு என் விநாயகர் பெயரையே வச்சிருக்கோம். நன்றி கலை. (இந்த அன்பு மாமன வச்சே ஒரு பதிவு போட்டுடலாம்... டாங்க்ஸ்ஸுப்பா)

சொல்லரசன் said...

உங்க செல்லக் கண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

கோபிநாத் said...

ஆகா...ஆகா...! ! !

முதல்ல குட்டி மாப்பிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ;) ;) ;)

தல கலை மாதிரி எல்லாம் கவிதை பாடி மாப்பியை பயமுற்ற மாட்டேன். ;)

மாப்பி நல்லா என்ஜாய் பண்ணு..அம்புட்டு தான் ;)

லேட்டுக்கு ஒரு சாரி ;)

சந்ரு said...

உங்க கண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

நேசமித்ரன் said...

நிறைந்த செல்வம் நோயற்ற வாழ்வும்
குறையாத கல்வியும் பிணக்கற்ற உறவும்
தீராத அன்பும் திரள்கின்ற சுற்றமும்
பாராளும பெருவேந்தர் போற்றும் மணி வண்ண கண்ணா
சீராளும் சுசி பெற்ற செல்வமே வாழ்க நீ பல்லாண்டு

தமிழ் பிரியன் said...

Marumakanukku spl vaazthukkal.

பிரியமுடன்...வசந்த் said...

செல்லம்....ஹேப்பி பர்த்டே டா

கண்ணா

நீயும் இந்த மாமாவ மாதிரியே விஜய் ரசிகனா இனிமேல் நீயும் நானும் ஃப்ரண்ட்

சுசியோட இனிமே நான் கா விட்டுக்கிறேன்.....

சுசி said...

நன்றி சொல்லரசன்.


நன்றி கோபி. அவர் நல்லா என்ஜாய் பண்ணினார். கிரெடிட் கார்டுக்கு சூடு வச்சிட்டு இப்போ அசந்து தூங்கிட்டு இருக்கார் :)))


நன்றி சந்ரு.


அருமையான கவிதை வாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி நேசமித்ரன்.


வாங்க தமிழ் பிரியன். வாழ்த்துக்கு நன்றி. spl gift எங்கேன்னு மருமகன் கேட்கிறார்.


நன்றி வசந்த். இது நியாயமா வசந்த்? நானும் உங்க ஃப்ரென்ட் + விஜய் விசிறிதானே...

சின்ன அம்மிணி said...

குட்டிக்கண்ணனுக்கு ஸ்வீட் பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்ன வாங்கிக்குடுத்தீங்க பிறந்தநாளுக்கு?

சென்ஷி said...

:-))

மகிழ்வான செய்தி.. பிறந்த நாள் வாழ்த்துக்களில் நானும் இணைகிறேன்!

சுசி said...

நன்றி அம்மணி. அவர் குடுத்த லிஸ்ட்ல இருந்த டாப் த்ரீ... ரெண்டு nintendo ds game cards, ஒரு படம்.


நன்றி சென்ஷி.

பித்தன் said...

பெப்சி பிசா இரண்டும் ரொம்ப கொடுதல். உங்களுக்கு தெரியும். ஸோ எப்படியவது கண்ணனின் டேஸ்ட்ட மாத்துங்க டாக்டர். பிற்காலத்தில் உபாதைகள் அதிகம். தயவு செய்து இதை மார்டனா நினைக்காம கொத்துக்கடலை சுண்டலும், நம்ம பாரம்பரிய நல்ல விசயங்களுக்கு மாத்துங்க. நான் எங்க அம்மா பத்தி மூன்று பதிவுகள் போட்டு இருக்கேன். படித்துப்பாருங்கள். நன்றி.