Pages

  • RSS

22 September, 2009

எல்லோரும் கொண்டாடுவோம்...

இப்போ கொஞ்சநாளாவே என் மெயில் பாக்ஸ் நிரம்பி வழிய ஆரம்பிச்சிடுச்சு. கேள்வி இதுதான் தலைவி என்ன செய்யப் போறீங்க? அதுதாங்க நம்ம கலை என்ன அனைத்துலக கார்க்கி ரசிகர் மன்ற தலைவீன்னு அறிவிச்சதால வந்த வினை. நல்லாருங்க கலை!!! முன்னாடியே உங்களுக்கு சொல்லி இருந்தேனே மன்ற வேலைகள் இருக்குன்னு. ஞாபகம் இருக்கில்ல? மன்றத்தோட திட்டங்கள ஒழுங்கா நடைமுறை படுத்திடணும் தம்பி. இல்லேன்னா கொபசெ பதவியில இருந்து தூக்கிடுவேன்.

இனி விஷயத்துக்கு போவோமா..

நம்ம பதிவுலக பிரபலம்,
மொக்கைகளின் சாமி,
சினிமா சின்னசாமி,
அப்பப்போ சீரியஸ் சாமி,
புட்டிக் கதைகளின் புகலிடம்,
அஞ்சா நெஞ்சன்,
ஏழுவை வாழ வைக்கும் தெய்வம்,
சிறுகதை, கவிதை, விமர்சனம், காதல், அரசியல் என்று கலந்து கட்டி அடிக்கும்
காக்டெயில் கார்க்கி
சாரி.. சாளரம் கார்க்கியின் பிறந்த நாள்....

அதை பதிவுலகமே அதிரும்படியா கொண்டாட
வேண்டாமா? வேண்டாமா? வேண்டாமா?

கொண்டாடிடுவோம்!


நிகழ்வுகள் பின்வருமாறு.

-மொக்கை குட்டி சாமி, வருங்கால பிரபல பதிவர் பப்லுவ சந்திச்சு கூட நின்னு போட்டோ எடுத்து அவரோட ஆட்டோக்ராஃப் வாங்கிக்கலாம். (இதுக்கு மட்டும் கட்டணம் கிடையாது)

-ஏழுவ சந்திச்சு பேசி அப்புறம் நீங்க ஏழரையோட வீட்டுக்கு போகலாம்.

-சைடு வாங்கிகிட்டு நிக்கிற கார்க்கியோட கட் அவுட்டுக்கு (இப்போ வேற ஃபோட்டோ போட்டிருக்காரா பிரஃபைல்ல) பால் அபிஷேகம்(?) பண்ண வசதியா சைடாவே ஏணி கட்டப்பட்டிருக்கும். மத்தபடி கொலைவெறியோடு வரும் ரசிகர்கள் அழுகின தக்காளி, முட்டை போன்ற 'தேவைப்பட்ட' பொருட்களை தாங்களே எடுத்துட்டு வரணும். இதுக்கான தனி வழி + கட்டண விபரம் அறிய கொலைவெறி கொபசெ வை அணுகவும்.

-அவர் உயிரை வாங்கிய காஜல் அகர்வால கூப்டா கார்க்கிய மறந்து கூட்டம் அங்க போய்டும்னு எச்சரிக்கப் பட்டதால அந்த திட்டம் அமுலாகலை. பதிலுக்கு ஷக்கீலா டக்கீலாவோட வந்து ஒரு குத்தாட்டம் போடுவாங்க.

-ஆண்ட்ரியா வந்து பாடினா இவர் ரெக்கை முளைச்சு பறந்து விடும் அபாயம் இருக்கிறதுனால பறவை முனியம்மா தேனீ குஞ்சரம்மாவோட சேர்ந்து கும்மி அடிச்சு குலவை பாடுவாங்க.

-ஆதி எடுத்த நீ எங்கே படம் முழு நாளும் தொடர்ச்சியா திரையிடப்படும். இது பார்க்காம யாரும் எஸ்கேப் ஆக முடியாது என்பது பின் குறிப்பு.

-முக்கியமா விழாவுக்கு வரும் அனைவருக்கும் குடும்பத்துக்கு ஒண்ணு படி ஒரு சாளரம் இவர் நினைவா குடுக்கப்படும்.

-குறிப்பா பாதுகாப்பு பொறுப்ப மன்றத்தோட தானை தளபதி என்ற ரீதியில என் கண்ணாளன் குணாளன் பாத்துப்பார்.

பி.கு- நான் அடுத்த பதிவு போடும்வரை கொண்டாட்டம் நடைபெறும்.
பி.கு டூவு - மக்கள் கொண்டு வரும் பரிசுகளும் பணமுடிப்பும் தலைவிக்கே சொந்தம். மத்த பிற டேமேஜுகள் விழா நாயகனையே சேரும்.
பி.கு மூணு-ஒரு பாட்டு அவருக்காக மன்றம் சார்பா போட்டிருக்கேன். இஷ்டப்பட்டவங்க பாத்துக்குங்க.
பி.கு லாஸ்ட்டு - அப்டியே அவங்க அவங்க பர்த்டே எப்பன்னும் மறக்காம பின்னூட்டத்தில போட்டுட்டு போங்க. உங்கள வாழ்த்திர சாக்கில நானும் ஒரு பதிவு போட்டுடுவேன் இல்ல... (நீ சமத்துடி சுசி விருதுக்கும் வாழ்த்துக்குமே பதிவ போட்டுடுரே.. கீப் இட் அப்.)

இப்போ இன்று பிறந்தநாள் காணும் விழா நாயகன் கார்க்கி அவர்களை சாளரம் வழியே ஜம்பி வந்து புட்டிய ஓபன் பண்ணி சாரி.. ரிப்பன கட் பண்ணி விழாவை தொடக்கி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...
சென்னையின் சிங்கமே ஹைதையின் தங்கமே வாங்க கார்க்கி வாங்க....


20 நல்லவங்க படிச்சாங்களாம்:

சுசி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்க்கி..
பேசிக் கிட்டத்துக்கு மேலா ரெண்டு பிட்ட சேத்துப் போட்டுருக்கேன்...
கவனிச்சுக்குங்க...

தியாவின் பேனா said...

வாழ்த்துக்கள்
பாட்டு சூப்பர்

ராமலக்ஷ்மி said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கார்க்கி!

கார்க்கி said...

சுசி... ஆச்சரியமும் ஆனந்தமும் தாங்கல.. உங்களுக்கு என்ன செய்ய போறேன்?????????????

ரொம்ப நன்றி.....

தியாவிற்கும், ராமலக்‌ஷ்மி மேடத்திற்கும் நன்றி..

ரியலி ஹெப்பி சுசி

சந்தான சங்கர் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்க்கி.
விழா தலைமை சுசிக்கும் வாழ்த்துக்கள்.

கோபிநாத் said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகா ;)))

யக்கோவ் அய்யோ சாரி...தலைவீ...கலக்கிட்டிங்க ;)

Anonymous said...

இப்படித்தான் ஜே கே. ரித்திஷுக்கு ஒரு மன்றம் ஆரம்பிச்சாங்க. இப்ப காணாமப்போச்சு

இது நம்ம ஆளு said...

வாழ்த்துக்கள்
:)
:)

கலையரசன் said...

பதிவுலக "இளைய தளபதி கார்க்கி" ரசிகர் மன்ற தலைவீன்னு மறுபடியும் ஒருகா ப்ரூவ் பண்ணதுக்கு நன்றி டாக்டரக்கா!!

வாழ்க வளமுடன் வித் நலமுடன் கார்க்கி!!!
அன்புடன் கலை....

பிரியமுடன்...வசந்த் said...

HAPPY BIRTHDAY சகா...

ஆதிமூலகிருஷ்ணன் said...

பின்னூட்டம் போட வர்றவங்க.. பேஷண்ட்ஸா? சரிதான்.!

வாழ்த்துகள் கார்க்கி.!

வினோத்கெளதம் said...

Happy Birthday karki..

சுசி said...

நன்றி தியா.


நன்றி அக்கா.


இது என்ன கேள்வி கார்க்கி. ஒரே ஒரு ப்ளாங்க் செக் அனுப்புங்க போதும்.


நன்றி சங்கர்.


நன்றி கோபி. தலை வீயா? இதுக்கு யக்கோவே தேவலை :)))


அப்டியா.. ஆனா இது யாவரும்நலம் பதிவுதான் அம்மணி.. அதில மாற்றம் கிடையாது.


நன்றி பாரதியார்.


வாங்க கலை. அன்னைக்கு அனைத்துலகம்னீங்க. இன்னைக்கு இளைய தளபதி கார்க்கியா? எல்லாப் புகழும் உங்களுக்கே கலை. மன்றம் தொடங்க காரணமே உங்க கமன்ட் தானே. இத வச்சும் ஒரு பதிவு போட்டுட்டா போச்சு.


நன்றி வசந்த்.


முதல் வருகைக்கு நன்றி ஆதி. என் பதிவு படிச்சத்துக்கு அப்புறம் பேஷன்ட் ஆகுவாங்கன்னு நினைச்சேன்...


முதல் வருகைக்கு நன்றி வினோத்கெளதம்.

பித்தன் said...

கார்க்கி பிறந்த நாள் வாழ்த்துக்கள்,

// -ஆதி எடுத்த நீ எங்கே படம் முழு நாளும் தொடர்ச்சியா திரையிடப்படும். இது பார்க்காம யாரும் எஸ்கேப் ஆக முடியாது என்பது பின் குறிப்பு.//

இது கொண்டாட்டமா இல்ல தண்டனையா? தானைத்தலைவி, அன்புசெம்மலுக்கு ஏன் இந்த கொலைவெறீ.

பித்தன் said...

நான் இன்றுதான் தங்கள் பதிவுகளை படித்தென். மிகவும் நன்றாக, இயல்பான நடையில் உள்ளது. இனியும் படிப்பதற்கு நிறைய எழுதுங்கள். நன்றி.

பித்தன் said...

நான் இன்றுதான் தங்கள் பதிவுகளை படித்தென். மிகவும் நன்றாக, இயல்பான நடையில் உள்ளது. இனியும் படிப்பதற்கு நிறைய எழுதுங்கள். நன்றி.

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி பித்தன்...
நமக்கு நிச்சயம் கொண்டாட்டம்தான்...:)))

கில்லிகள் said...

கார்க்கியை வாழ்த்திய சுசிக்கு நன்றி. ஆனாலும் இது ரொம்ப ஓவருங்க

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி கில்லிகள்...
எதுங்க... உங்கள மாதிரி போட்டா போட்டு வாழ்த்தாததா? :)))

பிரபா said...

தூள் ............கலக்கிடுவோம்...
வாழ்த்துக்கள் அப்பு..................