Pages

  • RSS

14 July, 2009

இளமைக் காலங்கள் தொடர்கின்றன....

எல்லாரும் நல்லா இருக்கீங்களாங்க? அப்போதான் நான் நல்லா இருக்க முடியும். ஆபீஸ்ல என் பிராஞ்ச்ல என்னத் தவிர எல்லாரும் லீவில போய்ட்டாங்கங்க. அட இந்த காப்ல பதிவா போட்டுத் தாக்கலாம்னா மத்தவங்க விட்டாதானே. ஹேய் சூஷீ! நீ தனியாவா இருக்கேன்னுட்டு வந்து ஆளாளுக்கு மொக்கையா போட்டுத் தாக்கராங்கங்க. நான் என்ன செய்யட்டும்? அலப்பரய பாரு இந்தப் புள்ளைக்கு. அது உன் நல்ல நேரம்டி. இல்லேன்னா அதுக்கப்புறம் உன் மொக்கைப் பதிவுப் பக்கம் யாருமே தல வச்சும் படுத்திருக்க மாட்டாங்கடியோய் ஏங்க இப்போ எதாவது உங்களுக்கு கேட்டிச்சு? ஏதும் கிராஸ் பதிவா இருக்கும். சரி நான் எங்க விட்டேன்?

முதலாம் வகுப்புக்கு போன முத நாளே அம்மா ஆர்டர போட்டுட்டாங்க. அட என் அம்மாவ சொன்னேங்க இனி தாத்தால்லாம் சைக்கிள்ள வச்சு மிதிக்க முடியாது. சின்னண்ணன் கூட சமத்தா நடந்து வந்துடு என் செல்லக் குட்டீன்னு. முதலாம் வகுப்பு வந்ததும் நடைங்கிறது எங்க வீட்ல எழுதாத சட்டம். இவ்ளோ நாள் ஜாலியா சைக்கிள்ள போகும்போது எதுவும் தெரீல. நடக்கும்போது எத்தன தொல்லை? ஊர்ல உள்ள ஆடு,மாடு,நாய்,பஸ்சு,லாரி,பெருசா மீச வச்ச ஆளுங்க,தடி தடியா பொம்பளைங்க எல்லாரும் என் எதிர்க்கவே வரணுமா என்ன? அதுவும் ரெண்டாவது வாரமே பஸ்சுக்கு ஒதுங்கறேன் பேர்வழின்னு கொஞ்சம் ஓவரா ஒதுங்கிட்டேன் குளத்தில முங்கி சாகப் பாத்தேன். சின்னண்ணன் மட்டும் சவுண்டு குடுக்கலேன்னா ஆள் க்ளோஸ். ஜஸ்ட்டு மிஸ்ஸு. இது நான் முன்னாடி சொன்ன கண்டம். இங்க டீச்சர் பேரு தேவி. சின்னண்ணனுக்கு அவங்க டீச்சர் சில சமயம் எக்ஸ்ட்ராவா ஒரு மணி நேரம் டியூஷன் வைப்பாங்க. அப்போ நான் அவன் பக்கத்தில உக்காந்துக்க எனக்கு பர்மிஷன் குடுத்தாங்க. சின்னண்ணன் ரொம்ப நோண்டி. ரெண்டு வாட்டி ஸ்கேலால அவன் கையில டீச்சர் நல்லாவே கவனிச்சு கிட்டாங்க. பொறுத்துக்கிட்டேன். மூணாவது வாட்டி அடிச்சதும் நான் அவ்வ்வ்வ்வ்... வீட்ல போயும் ஒரே அவ்வ்வ்.. என் க்ளாசிலேயும் அவ்வ்வ்வ்... அப்புறம் சின்னண்ணன் தான் இனிமே சமத்து பிள்ளையா அடி வாங்காம இருக்கேன்னு சொல்லி, அப்பா அம்மா டீச்சர் கிட்டயும் பேசி, டீச்சர் இனிமே அவனுக்கு வலிக்காம அடிக்கறதா என்கிட்ட சொல்லி ஒரு வழியா கண்ணீர் காண்டம் முற்றும்.

இனி எல்லாரும் ரெண்டாம் வகுப்புக்கு போவோமா. இங்க எல்லாரும் ரொம்ப சமத்தா சுசி மாதிரியே இருக்கணும். ஏன்னா புதுசா வந்த குறள்தாசன்கிற பிரின்சிபால்தான் நமக்கு டீச்சர். இப்பவும் இவருக்கு என் மேல ரொம்ப அன்பு. சின்னண்ணன் இப்போ இவர் ஸ்கூல்லதான் டீச்சரா இருக்கான்.சமீபத்துல நடந்த பள்ளி விழாவில சின்னண்ணன் பொண்ண பாத்திட்டு அப்டியே என்ன பாக்றா மாதிரி இருந்ததாவும் தான் எப்பவும் என்னோட ரசிகன்னும் பாராட்டி பேசினாராம். நம்பலைல்ல? எடுங்க சூடத்த!

மூணாம் வகுப்பு ஒரு வித கிலியோடவே முடிஞ்சுது. காரணம் ஸ்கேல் புகழ் சுகுணா டீச்சர். மறந்திட்டீங்களா? வேணா இன்னொரு தடவ எழுதிடட்டுமா? ஓகே ஓகே.... தொடர்ந்து படீங்க.

நாலாம் வகுப்பு நல்ல வகுப்பு. சுகந்தீன்னு ஒரு தேவதையே டீச்சரா வந்தாங்க. ரொம்ப நல்ல மிஸ். அவங்க மிஸ் ங்கிரதனாலயோ என்னமோ ரொம்ப அன்பா இருப்பாங்க எல்லார்கிட்டயும். கல்யாணம் ஆகிப் போயும் ஊருக்கு வர்றப்போ என்ன வந்து பாக்கும்படி சொல்லி விடுவாங்க. அவங்களோட பிரியமான மாணவி நானாக்கும்.

அஞ்சாவது கணேஷ்வரி டீச்சர், குறள்தாசன் சார், சுகந்தி டீச்சரோட ஜாலியா போய்டிச்சு. இப்போ எனக்கு யசோ,லதா, மலர், மின்னி, சுமதி, ராஜி,மதாங்கினி, ரட்ணம், குமார், ஆதி, செந்தில்னு ஒரு நெருங்கின நண்பர் கூட்டம் உருவாய்டிச்சு. சுமதி கூட ஏன்னு தெரியாமலே ப்ளஸ் டூ முடியிற வரைக்கும் பேசிக்கலை. அப்புறமா நாங்க டீச்சிங் இண்டர்வியூ போனப்போதான் பேசிக்கிட்டோம். அவளுக்கும் காரணம் என்னன்னு தெரீலன்னு சொன்னா. இதில இப்போ யசோ,செந்தில் ஊர்ல இருக்காங்க. சுமதி கானடா, லதா லண்டன், ஆதி ஆஸ்த்ரேலியான்னு போய்ட்டாங்க. அட பொருத்தமாத்தான் பயபுள்ளக போயிருக்கு மத்தவங்க எங்கன்னு தெரீல. ரட்ணம் எங்களை விட்டு ஒரேயடியா போய்ட்டான். எட்டாவது படிக்கும்போதே ஸ்கூல விட்டு நின்னுட்டான். நாங்க பத்தாவது வந்தப்போ அவன் உயிரோட இல்ல.
பொழுது போக்குன்னா பாட்டி வீடுதான். எப்பவும் தனியாதா விளையாடுவேன். ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்து சாப்டு பாட்டி வீடு போனேன்னா ரொம்ப இருட்டானத்துக்கு அப்புறமாதான் மறுபடி வீட்டுக்கு வருவேன். அதுவும் தாத்தா என்ன முதுகு மேல சுமந்துகிட்டு போவாரு. அஞ்சாவது வந்ததும் தாத்தா லைட்டா மூச்சு வாங்கறத பாத்ததும் நானாவே இறங்கி அவர் கைய்ய இறுக்கி புடிச்சு கிட்டே பக்கத்தில நடந்து போவேன். என் தைரியத்த பத்தி மறுபடி எழுத வேணாமேன்னு பாக்கிறேன்.
விளையாட்னா சுசிக்கு ரஸ்க்கு, போட்டீன்னா ரொம்ப ரிஸ்க்கு. அதென்னமோ தெரீலீங்க வரிசையா விட்டுட்டு பிகில ஊதினாங்கன்னா எனக்கு உதறும். எப்டியோ சிலபல மூணாவது பரிசுகள வாங்கி வச்சிருக்கேன்.

கலை எனக்கு கை வந்த கலை. சித்திரம் கைப் பழக்கம் வரல. அப்போ அதுமட்டும் கலை கிடையாதோ? ஆடல்,பாடல், நாடகம்னா கூப்டு சுசியம்பாங்க.

எனக்கு நினைவு தெரிஞ்சு இவ்ளோ வருஷத்திலேம் ஒரே ஒரு வாட்டி ஹோம் ஒர்க் பண்ணலேன்னு தோப்புக் கரணம் போட்ருக்கேன். நண்பர்கள காப்பாத்தப் போயி ஒரே ஒரு வாட்டி அடி வாங்கி இருக்கேன். யாரும் என்னைய அடிச்சதில்ல, நானும் யாரையும் அடிச்சதில்ல. சின்ன சின்ன வாய்ச் சண்டைகள் போட்டதுண்டு.இப்ப சொல்லுங்க நான் நல்லவளா கெட்டவளா?

நெஜமா நான் சந்ருவுக்கு நிறைய நன்றி சொல்லணும். அம்மாடி... இத தான் மலரும் நினைவுகள்ம்பாங்களா... மறுபடியும் அந்தந்த வயதில வாழ்ந்து பாக்கணும் போல ஆசையா இருக்கு. அது மட்டுமா? எங்க வீட்ல அப்பா, அம்மா, பெரியண்ணன், அக்கா, சின்னண்ணன், தாத்தா, பாட்டி மத்த உறவுக்காரங்க, ஊர்க்காரங்கன்னு எல்லாரோடான நினைவுகளும்....

அவ்வ்வ்வ்.... ரொம்ப பீலாயிட்டேன். சத்யமா சொல்றேங்க இன்னைக்கு என்னால தூங்க முடியாது. ரொம்ப அழுகாச்சியா இருக்கு....


இப்போ நான் யாரையாவது கோத்து விடணும்ல. தயவு செஞ்சு இத சாதாரணமா நினைக்காதீங்க. அனுபவிச்சு பாருங்க... நிச்சயமா புரியும். ஏய் போதும்டி உன் புலம்பல். யாரையாவது கூப்பிடுற வழிய பாரு பார்ரா, மறுபடியும் எனக்கு ஏதோ கேக்றாப்லையே இருக்கு. வாஸ்து சரியில்ல, டெம்ப்ளேட்ட மாத்தணும்.

அத்துக்கு மின்னே இத்த படீங்க.
விதிகள் : தொடக்கப் பள்ளிப் பருவத்தைப் பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் எழுத வேண்டும், தாங்கள் விரும்பும் மூவரை அழைத்து தொடரச் சொல்ல வேண்டும்

இது சுசியோட விதி : நான் அழைப்பவர்கள் முதலிலேயே இதை எழுதி இருந்தால் உடனடியாக எனக்கு பின்னூட்டத்தில் அறியத் தர வேண்டும். நான் அடுத்தவரை கோர்க்க சாரி அழைக்க இது உதவியாக இருக்கும்.

முதலாவதா நான் அழைக்கிறவர் என்னோட முதல் பதிவுக்கு, முதல் பின்னூட்டம் போட்டவர் என்னும் மதிப்பிற்குரியவர் ஏதோ சொல்கிறேன்! புகழ் திரு நாகை சிவா அவர்கள்.

இரண்டாவது கவிதை முத்துக்களை கோர்த்து எமக்கு தரும் முத்துச்சரம் புகழ் ராமலக்ஷ்மி அக்கா அவர்கள்.

மூணாவதா கொளுத்திப் போடுறதில வல்லவரான இது என்னோட இடம். புகழ் தமிழ் பிரியன் அவர்களை கூப்பிட்டுக்கிறேன்.

ஸ்ஸ்ஸ்ஸப்பா... ஜில்லுன்னு ஒரு சோடாவ உடச்சு கொண்டு வாங்கப்பா. எவ்ளோ எழுதி குவிச்சிட்டேன்.

அப்றமென்ன கிடைக்கிற காப்ல முட்டையும் பாலுமா உடம்பைத் தேத்திக்கிறேன். வந்து கும்மிய போட்டுட்டு போங்க மக்கள்...

24 நல்லவங்க படிச்சாங்களாம்:

நேசமித்ரன் said...

//விளையாட்னா சுசிக்கு ரஸ்க்கு, போட்டீன்னா ரொம்ப ரிஸ்க்கு. அதென்னமோ தெரீலீங்க வரிசையா விட்டுட்டு பிகில ஊதினாங்கன்னா எனக்கு உதறும்.//

சுசி
நீங்க சிரிப்பு டாக்டர் தான்
அருமைங்க
நானும் அப்புடியே ஒரு தடவ கொசுவத்தி சுத்தி
மூக்கொழுகிய அரை டவுசர் காலத்துக்கு போயிட்டு வந்தேனுங்க..!
சிரிச்சு சிரிச்சு அப்பாடி ..
நன்றிங்க..!

பிரியமுடன்.........வசந்த் said...

// சின்ன சின்ன வாய்ச் சண்டைகள் போட்டதுண்டு.இப்ப சொல்லுங்க நான் நல்லவளா கெட்டவளா?//


நம்பிட்டேனுங்க நீங்க ரொம்ப நல்லவள்ன்னு...

தமிழ் பிரியன் said...

ஆகா.. பதிவு எழுத முடியாம திணரும் நேரத்திலா... இபப்டி தொடர் பதிவுக்கு கூப்பிடுவீங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்(சுசி ஸ்டைலில் அழவும்).. முயற்சி செய்யலாம்.

சென்ஷி said...

:))

அசத்தல் சுசி!

சந்ரு said...

வெயிட் பண்ணுங்கோ வாசித்துட்டு வாறன்...

சந்ரு said...

//எனக்கு நினைவு தெரிஞ்சு இவ்ளோ வருஷத்திலேம் ஒரே ஒரு வாட்டி ஹோம் ஒர்க் பண்ணலேன்னு தோப்புக் கரணம் போட்ருக்கேன். நண்பர்கள காப்பாத்தப் போயி ஒரே ஒரு வாட்டி அடி வாங்கி இருக்கேன். யாரும் என்னைய அடிச்சதில்ல, நானும் யாரையும் அடிச்சதில்ல. சின்ன சின்ன வாய்ச் சண்டைகள் போட்டதுண்டு//

நம்பித்தமில்ல....

இப்ப சொல்லுங்க நான் நல்லவளா கெட்டவளா?


ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் .....................

கெட்டவள்................................

இல்ல ரொம்ப நல்லவள். நியமாகவேதான் சொல்றேன்....
உங்க கதை நன்றாகவே இருந்தது...

ஏதும் கேள்வி கேட்கனுமா?

சுசி said...

நன்றி நேசமித்ரன். உங்க எல்லோரையும் ஒரு வாட்டி பள்ளிக்கு அனுப்பி வைக்கணும்னுதான் என் ஆசை. ஆனா மூணு பேரதான் கூப்டணும்னு சொல்லிட்டாங்க. பரவால்ல எப்டியும் சுத்தி அடிச்சுகிட்டு வந்துரும்.


நன்றி வசந்த். மிரட்டி இல்ல நம்ப வைக்க வேண்டியதா இருக்கு.


நன்றி தமிழ் பிரியன். அழுதா மட்டும் விட்ருவோமா. சீக்கிரம் சீக்கிரம்...


நன்றி சென்ஷி.


நன்றி சந்ரு. ஓகே வெயிட்றோம்....
வந்துட்டீங்களா சார். நம்ப ரொம்ப கஷ்டமா இருக்கோ??? என்னது கதையா... ஹலோ! என்ன? இது கதை அல்ல நிஜம். எடுங்க அந்த சூடத்த, கொழுத்தி அப்டியே சந்ரு வாயில போட்ருல்லாம். என்னைய அழ விட்டது பத்தலைன்னு கேள்வி வேற கேட்கணுமோ கேள்வி.

சந்ரு said...

ஏய் என்ன ஓவரா சவுண்ட் உடுற... சவுண்ட் உட்ட... நடக்கிறதே வேற....

என்ன ஜோசிக்கிறிங்க சுசி நம்ம நாட்டு style ல சொன்னேன்...

கலையரசன் said...

//ஒரு வித கிலியோடவே முடிஞ்சுது//

கிளிகே.. கிலியா?

//தேவதையே டீச்சரா வந்தாங்க//

அவங்களுக்கு கால் இருந்துசுச்சா?

//கலை எனக்கு கை வந்த கலை//

அதான் வந்துடோமுல்ல!!

//கண்ணீர் காண்டம் முற்றும்//

இதுல ஒன்னும் உள்குத்து இல்லையே!!


நீங்க.. ரெரரரராம்ம்பபப.. நல்ட்டவள்!!
(நல்லவள் பாதி, கெட்டவள் பாதி, கலந்து செய்த டாக்குடரு!!)

கார்க்கி said...

ஸப்பா.. எவ்ளோ பெரிய மாத்திரை? (பஞ்சத்தந்திர்ம தேவயானி குரலில் படிக்கவும்)

ச்சே.. எவ்ளோ பெரிய பதிவு?

// வேணா இன்னொரு தடவ எழுதிடட்டுமா? //

இந்த இடத்துல மைல்டா ஒரு அட்டாக் வந்துச்சு. மத்த படி பதிவு சூப்பர் டாக்டர்..

சுசி said...

சூடம் ரொம்ப சுட்டுடிச்சா சந்ரு?

சுசி said...

நன்றி கலையரசன்.
//கிளிகே.. கிலியா?// இதில //கிளிகே// இத மட்டும் ஒன்ஸ் மோர் கேட்டுக்கிறேன்.

//அவங்களுக்கு கால் இருந்துசுச்சா?// இருந்துச்சு.அவங்க காலுள்ள தேவதையாக்கும்.

//அதான் வந்துடோமுல்ல!! // இதுக்கு அவங்கள விட்டே உதைக்கணும். கால் இருக்கானு கன்பார்மும் ஆய்டும்.

//இதுல ஒன்னும் உள்குத்து இல்லையே!! // இப்போதைக்கு எந்த குத்தும் இல்ல...

//நல்ட்டவள்!! // இல்லையே இங்க கெட்டவளோட பர்சன்ட் ஜாஸ்தியால்ல இருக்கு.

சுசி said...

ச்சே.. மைல்டுதானா கார்க்கி.
நா மட்டும் எழுதி இருந்தேன்னு வச்சுக்குங்க கார்க்கி. பதிவுலகம் பூரா "பாவம்பா கார்க்கி. இருபத்தாறு வயசிலேயே மேஜர் அட்டாக் வந்து பொட்னு போய்ட்டான்"னு சந்தோஷமா பேசி இருக்கும். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

ஆபிரகாம் said...

ம்ம்ம்... அந்த நாள் ஞபகம்!
வலிக்காமல் யாருமே ஊசி போட மாட்டங்களா???

சுசி said...

முதல் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி ஆபிரகாம்.
தெரீல, எந்த நர்சுமே இது வரை எனக்கு வலிக்காம போட்டதில்ல. மத்தவங்களையும் கேட்டுப் பாக்கணும்.

சந்ரு said...

ஆஹா.....

ராமலக்ஷ்மி said...

//தயவு செஞ்சு இத சாதாரணமா நினைக்காதீங்க. அனுபவிச்சு பாருங்க... நிச்சயமா புரியும்.//

புரியுதுங்க. திண்ணை நினைவுகள் எழுதிய போது எனக்கும் இப்படித்தான் இருந்தது.

//ஏன்னு தெரியாமலே ப்ளஸ் டூ முடியிற வரைக்கும் பேசிக்கலை. //

பலருக்கும் இப்படி ஆகியிருக்கிறதா? 3 முதல் 7 ஆம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்த லதாவுடன் வேறு செக்‌ஷன் மாறிப் போன பிறகு +2 வரை ஏனென்றே தெரியாமல் இருவரும் பேசிக்கவில்லை:(!

//யாரையாவது கூப்பிடுற வழிய பாரு//

உங்க காதில் கேட்ட குரல் என்னையக் கூப்பிட சொல்லிடுச்சா:))?

தொடர்பதிவு என்றாலே கழுவுகிற மீனிலே நழுவுகிற மீனாகி விடும் நான் இங்கே கொஞ்சம் ப்ரேக் போட்டுக்கிறேன். துளசி மேடத்தின் பள்ளி நினைவுகளைப் படித்ததிலிருந்தே எனக்கும் எழுத ஆசை உண்டு. அது உங்கள் அழைப்பு வாயிலாக நிர்ப்பந்திக்கப் பட்டதாக் எடுத்துக் கொண்டு முயற்சிக்கிறேன். ஆனால் கால அவகாசம் தேவை. சரிதானா? நன்றி சுசி.

gayathri said...

super nalla azaka kallakkala ezuthi iruka pa

சுசி said...

// சந்ரு said... ஆஹா.....// ஓஹோ...நன்றி ராமலக்ஷ்மி அக்கா. பாத்தீங்களா நான் சரியான ஆளத்தான் அழைச்சிருக்கேன். நிறைய கால அவகாசம் எடுத்துக் கிட்டு சீக்கிரமா எழுதிப் போட்ருங்க. ஆவலா இருக்கோம்...நன்றி காயத்ரி. உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள். தமிழ்லயே பின்னூட்டத்தையும் போட்டீங்கன்னா இன்னும் ரசிச்சு படிப்போமே.
அது சரி, அபு அஃப்ஸர் பக்கத்தில கும்மி கொஞ்சம் ஓவரா இருந்துதே. வேற ஒண்ணுமில்ல லேட்டா வந்திட்டதனால கலந்துக்க முடியலையேன்னு வருத்தம். அடுத்த தடவ சொல்லி அனுப்புங்க நானும் கொஞ்சம் கும்மிக்கிறேன்.

சந்ரு said...

அன்பின் சுசி....

உங்களுக்கு பட்டாம்பூச்சி விருது வழங்குவதில் பெருமை அடைகிறேன்....

http://shanthru.blogspot.com/2009/07/blog-post_9398.html

சந்ரு said...

பட்டாம் பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்..

நாகை சிவா said...

நல்லா இருக்கு உங்க நினைவுகள்! :)
என்னையும் நினைவு வைத்து அழைத்தமைக்கு நன்றி. விரைவில் பதிவிட முயல்கிறேன்.

சுசி said...

ரொம்ப நன்றி சந்ரு. முடிந்த வரை விரைவாக பதிவை போடுகின்றேன். மீண்டும் நன்றி.

சுசி said...

நன்றி சிவா. என் அழைப்பை ஏற்றுக் கொண்டதுக்கு. பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.