Pages

  • RSS

01 July, 2009

இது ரெம்ப அநியாயம்...

குடி உடல்நலத்துக்கு கேடானதுங்கறது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். தெரிஞ்சும் (குணா உட்பட) ஏன் குடிக்கிறீங்க என்பது எனக்கு புரியாத புதிர். இருந்தும் ஏன் இந்த பதிவு சுசீன்னு நீங்க கேக்கறது எனக்கு கேக்குது. கார்க்கி கார்க்கின்னு ஒருத்தர் எழுதின (சத்யமா ஒருத்தர்தான். ரெண்டு கார்க்கிய பூமி தாங்காது) இன்னைய பதிவ படிச்சதோட விளைவு இது. போனாப் போவுது யாருக்காவது யூஸ்புல்லா இருக்கட்டுமேன்னுட்டு போடறேன்.

பி.கு:- முன்னாடியே இத பாத்தவங்க கடுப்பாயிடாதீங்க. ஏன்னா இது எனக்கு ஈ மெயில்ல கிடைச்சது. இதுக்கு எந்த விதத்திலேம் நான் உரிமை கொண்டாடப் போறதில்ல. உரிமை உள்ளவங்க மன்னிச்சுக்கோங்கோ....

பின் குறிப்புக்கு பி.கு:- அவரோட பதிவு படிக்காதவங்க இங்க சொடுக்குங்க....

http://www.karkibava.com/2009/07/blog-post.html

இனி அநியாயத்த பாருங்க....பின் குறிப்புக்கு பின் குறிப்புக்கு பி.கு:-
இப்டி ஒரு பதிவ போட்டுட்டு உங்க கிட்ட நலம்தானான்னு கேக்க மனசே வரலங்க... அவ்வ்வ்வ்.......

33 நல்லவங்க படிச்சாங்களாம்:

லோகு said...

//ஒருத்தரோட இன்னைய பதிவ படிச்சதோட //

R u alright???

//தெரிஞ்சும் (குணா உட்பட) ஏன் குடிக்கிறீங்க என்பது எனக்கு புரியாத புதிர்.//

அது எப்டி உடலுக்கு தீங்கு விளைவிக்குதுனு தெரிஞ்சுக்கத்தான்..

சப்ராஸ் அபூ பக்கர் said...

அருமையாக இருந்தது நீங்கள் நலம் விசாரித்த விதம் (லொள்ளு.....லொள்ளு....)

அப்படியே என்னோட வலைக்குள்ளும் வந்து போங்க.....

சுசி said...

////ஒருத்தரோட இன்னைய பதிவ படிச்சதோட //
R u alright???//
என்ன லோகு? ஏன் இந்த குழப்பம்? பாட்டில பாத்ததுக்கே இப்டியா ராஜா... தெளிவாதானே எழுதி இருந்தேன்? நோ கன்பியூஷன் கண்ணா. ((இதெல்லாம் சும்மா உதாருக்கு. என்னவோ ஏதோன்னு பயந்து போயி இப்ப வசனத்தையே மாத்தி எழுதிட்டேம்பா. மறுபடி படிச்சு பாருங்க, ப்ளீஸ்.....)

//அது எப்டி உடலுக்கு தீங்கு விளைவிக்குதுனு தெரிஞ்சுக்கத்தான்..//
இதில மட்டும் ரெம்ப தெளிவா இருக்கீங்க. வெளங்கீரும்...

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி அபூ.
கண்டிப்பா உங்க வலைக்கும் வந்து அட்டன்ச போட்டுர்றேன். அப்டியே நம்ம பதிவோட சிறப்பையும் மக்களுக்கு அறிவிச்சிடுங்க அறிவிப்பாளரே....

நட்புடன் ஜமால் said...

\\பெரிசா ஒண்ணும் இல்லேங்க என்ன பத்தி சொல்ல\\

அப்படின்னு துவங்கி ஒரு கதா காலட்சேபமே நடத்தி இருக்கீங்க ...

சுந்தர் said...

//குடி உடல்நலத்துக்கு கேடானதுங்கறது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம். தெரிஞ்சும் (குணா உட்பட) ஏன் குடிக்கிறீங்க என்பது எனக்கு புரியாத புதிர்.//
கேட்டோம்னா , ஆயிரம் காரணம் சொல்லுவாங்க , டாக்டர்.

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி ஜமால், நானும் உங்களுக்கு ஒரு வந்தனத்த போட்டுக்கிறேன். வந்ததுமேவா.... இன்னி வரைக்கும் யாரும் அத கண்டுக்கவே இல்ல. நான் வாரியார் விசிறியாக்கும்.

கலையரசன் said...

போலி டாக்டரம்மா... என்னா ஃபீலிங்கா?
இந்த போட்டோஸ் எல்லாம் உங்க ஆபீஸ்லயா எடுத்தீங்க?

சுசி said...

சரியா சொன்னீங்க சுந்தர். அத விட புரியாத புதிரா இருக்குறது பெட்டர்.
//கேட்டோம்னா , ஆயிரம் காரணம் சொல்லுவாங்க//
அப்டியா!!! அப்ப நீங்க???

சுசி said...

ஆஹா எனக்கேவா.... பக்காவா பிளான் பண்ணறதெல்லாம் நீங்க, பழி நம்ம மேலவா.... முகத்த அஷ்ட கோணலாக்கிகிட்டு அந்த கருமாந்தரத்த நீங்க குடிக்கிறத பாத்து நாம பீல் வேற பண்ணணுமோ?
ரெம்ப சின்னப் புள்ளத் தனமால்ல இருக்கு.

சுசி said...

ஒரு விஷயம் மறந்துட்டேன் கலையரசன். என்னோட ஆபீஸ் மேஜை மேல என் பசங்களோட படங்கள் + அவங்க வரைஞ்ச படங்கள் + குட்டியா மூணு சாமி சிலைதான் இருக்கு. நம்பலேன்னா நீங்களே வந்து பாத்துக்கோங்க.

இது நம்ம ஆளு said...

இப்டி ஒரு பதிவ போட்டுட்டு உங்க கிட்ட நலம்தானான்னு கேக்க மனசே வரலங்க... அவ்வ்வ்வ்.......

வாங்க வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி பாரதியார். ரெண்டு பேருமா சேர்ந்தே நல்லதா நாலென்ன நெறயவே சொல்லலாம்...

சந்ரு said...

இன்றைய இளைஜர்கள் குடிப்பதை ஒரு நாகரிகமாகவே பார்க்கின்றனர் எங்கு போய் முடயுமோ தெரியல்ல....

கார்க்கி said...

//(சத்யமா ஒருத்தர்தான். ரெண்டு கார்க்கிய பூமி தாங்காது)//

ஹிஹிஹி.. ரொம்ப புகழறீங்க .கூச்சமா இருக்கு.. போலி டாக்டரம்மா நீங்க வாழ்க...

சுசி said...

நன்றி சந்ரு. சரியா சொன்னீங்க.

கார்க்கி said...

ஹலோ.. சந்ருக்கு மட்டும்தான் பதில் சொல்லுவிஙக்ளா?

சுசி said...

//சுசி said...
ஆஹா எனக்கேவா.... பக்காவா பிளான் பண்ணறதெல்லாம் நீங்க, பழி நம்ம மேலவா.... முகத்த அஷ்ட கோணலாக்கிகிட்டு அந்த கருமாந்தரத்த நீங்க குடிக்கிறத பாத்து நாம பீல் வேற பண்ணணுமோ?
ரெம்ப சின்னப் புள்ளத் தனமால்ல இருக்கு.//

நன்றி கலையரசன்!
இது நான் உங்களுக்கு எழுதினது, பேர போட மறந்துட்டன்....

சுசி said...

இதோ எழுதிட்டே இருக்கேம்பா... மேடம்கிட்ட (அவ்வ்வ்வ்வ்...) இப்டில்லாம் சண்ட போடக் கூடாது....
உங்க ஸ்டைல்லயே போடறேன்...
நன்றி கார்க்கி....

சுசி said...

இப்போ என் ஸ்டைல் கார்க்கி!
//ஹிஹிஹி.. ரொம்ப புகழறீங்க .கூச்சமா இருக்கு..//
அப்டியா??? அதெல்லாம் உங்களுக்கு இருக்கான்ன? நம்ப முடியவில்லை.... இல்லை... இல்லை... (இது எக்கோவாக்கும்)

இது நம்ம ஆளு said...

வருகைக்கு நன்றி
நம்ம பதிவுக்கு வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க

பிரபா said...

வாழ்த்துக்கள், தொடருங்கள், முடிந்தால் விழியும் செவியும் என்ன சொல்கிறது என்று பாருங்கள்

தேவன் மாயம் said...

அம்மா!!
நானும் டாக்டர்தான் !! என் பதிவுக்கும் வாங்க!!

தேவன் மாயம் said...

வரலை ஊசி போட்டுடுவேன்!!!

சுசி said...

வணக்கம் பிரபா! முதல் வருகைக்கு நன்றி. உங்க வலைப் பக்கமும் என் அட்டன்ச போட்டுட்டேன்.

சுசி said...

வணக்கம் டாக்டர் சார்! முதல் வருகைக்கு நன்றி.
நான் ஊசிக்கு ரொம்ப பயந்தவ சார். நீங்க ஊசி போட்டுடுவேன்னு சொன்னதுக்கே ரெண்டு நாளா என் வலைப் பக்கம் தலை வச்சும் படுக்கல. நீங்க வேற. நான்தான் தெளீவா போலி டாக்டர்னு போட்ருக்கேனே. ஊசி லெவலுக்கெல்லாம் போக வேணாம். நான் கட்டாயமா உங்க பதிவ படிக்கிறேன்.

நேசமித்ரன் said...

உங்க பதிவு உண்மையிலேயே மருத்துவம் தாங்க
சிரிப்பு மருத்துவம்
இந்த நடை 'அங்கத நடை'
ரொம்ப நல்லா இருக்குங்க..

இது நம்ம ஆளு said...

வருகைக்கு நன்றி.இன்னும் உங்களிடம் நிறைய எதிர்பார்கிறோம்

சந்ரு said...

சுசி உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கிறேன் வந்து தொடருங்கள்...

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி நேசமித்ரன். பின்னூட்டத்துக்கும் நன்றி.

சுசி said...

வாங்க பாரதியாரே!
என்ன பாரதியாரே இப்டி ஒரு பேர வச்சிருக்கீங்க. நம்ம ஆளுன்னு எழுதினா என் குடும்பத்துக்க களேபரம் ஆய்டாது? பாரதியார் உங்களுக்கு ஓகே தானே?
அப்புறம் நெற....ய்ய எழுதி உங்கள எல்லாம் ஒரு வழி பண்ணனும்னுதான் எனக்கும் ரொம்....ப ஆசை. நேரம் கிடைக்க மாட்டேங்குதே.

சுசி said...

கோத்து விட்டுட்டீங்களே சந்ரு. நான் உங்கள ரொம்ப நல்லவன்னு நெனச்சேன். உங்கள சகலகலா வல்லவர்னு பாராட்டினது ஒரு தப்பா? சரி தோ வர்றேன்...

சந்ரு said...

இப்படி எல்லாம் சொல்லப்படாது.....