Pages

  • RSS

12 July, 2009

இளமைக் காலங்கள்.....

எப்டீங்க? எல்லாரும் நலமா இருக்கீங்களா? அதான் நீ வந்திட்டியே இனி எங்க இருந்து அப்டீங்கரவங்க தொடர்ந்து படீங்க. என் பதிவை படிச்சத்துக்கு அப்புறமும் ஒழுங்கா இருக்கீங்கன்னா நீங்க ஸ்ட்ராங் பார்ட்டீங்கதான். இப்போ சொல்லுங்க நீங்க ஸ்ட்ராங் தானே?

இனி விஷயத்துக்கு வருவோமா. இப்போதான் வரவே போறியா, வெளங்கும். முன்னம் ஒரு காலத்தில சந்ருன்னு ஒரு சக பதிவர் என்னய ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தாரு. அதுக்காக அவர் ரொம்ப வருத்தப் படப் போறாருங்கோ அவருக்கே ஞாபகம் வருதோ என்னவோ. இன்னிக்கு அத எழுதிர்லாமேன்னுட்டு களத்தில குதிச்சிட்டேன். உங்க கெட்ட காலம்
என்னோட கல்விப் பயணம் நான் ரெண்டு வயசா இருக்கும்போதே ஆரம்பிச்சிடுச்சாம். என் முன்னாடி பிறந்த மூணு வாலுங்களும் பள்ளி போறது பெரும் அக்கப் போராம், என்னால. அவங்க கைய பிடிச்சுக் கிட்டு நானும் கூல் வாடேன் அப்டின்னு கிட்டு அடம் பிடிப்பேனாம். அப்புறம் அம்மா ஏதாவது பண்ணி என்ன அப்புறப் படுத்தினதும் அவங்க கிரேட் எஸ்கேப். அப்றமா ரொம்ப நேரத்துக்கு வெளி கேட்ட பாத்தாப்லையே வாசப் படீல உக்காந்திட்டிருப்பேனாம். அங்கனையே தூக்கம் கூட உண்டாம். அதனால அம்மா தொல்லையே இல்லாம வீட்டு வேல எல்லாம் முடிச்சிருவாங்களாம்.


இப்போ நான் உக்காந்து முழிச்சிட்டிருக்கேன். வாசப் படீலன்னு அவசரப் பட்டு நினைச்சிடாதீங்க. எனக்கு நாலு வயசு ஆய்டிச்சு. நர்சரி ஸ்கூல் மர பெஞ்சில கிட்டத்தட்ட ஒரு இருபது வாலுங்க புடை சூழ உக்காந்து அழலாமா வேணாமான்னு யோச்சுகிட்டு இருக்கேன்.அவனவன் போடற சௌண்ட பாக்கும்போது தப்பா ஆசப் பட்டுட்டோமோ, ஸ்கூலுன்னா ஏதோ எசகு பிசகா நடக்குமோன்னு லைட்டா பயம் வந்திச்சு. மூத்த வாலுங்க ஒரு வார்த்த சொல்லாம விட்டாங்களேன்னு அவங்கள திட்டினேன். அம்மாவும் அப்பாவும் ரொம்ப பெருமையா பாத்திட்டு நின்னாங்களா சரி போனா போகுதுன்னு உக்காந்திட்டேன். ராஜினின்னு ஒரு பொண்ணுதான் என் பெஸ்டு பிரென்ட். அவ அம்மாதான் டீச்சர். என் தாத்தாதான் எனக்கு இலவச டாக்சி. டீச்சர் பேரு தெரீல. ராஜினி அம்மான்னுதான் சொல்லுவேன். இப்டி ஒரு நெலம வரும்னு தெரிஞ்சிருந்தா அறிஞ்சு வச்சிருப்பேன். இப்போ அம்மாவுக்கு ஃபோன போட்டு கேட்டேனா அவங்க பேரு பவளராணின்னு சொன்னாங்க. அது மட்டுமா! ஏண்டாம்மா நேத்து கூட நல்லா தானே பேசினே. மறுபடியும் ஜூரமான்னு கூடவே ரெண்டு கேள்விய சேத்துக் கேட்டாங்க. அவங்களுக்கு தெரியுமா என் நிலை?

அடுத்து எல்கேஜி. டீச்சர் பேரு கணேஷ்வரி. அம்மாவோட உறவுக்காரங்க. ராஜினி க்ளாஸ்ல மிஸ்ஸுங்கறதால ஸ்டார்டிங் கொஞ்சம் ப்ராப்ளம் ஆயிடிச்சு. அவ என்ன விட ஒரு வயசு கம்மி, டீச்சர் பொண்ணுங்கறதால அங்க வந்தாங்கிறது இப்போ மாதிரி அப்போ புரியலையே. நான் சமத்தா எல்லாம் எழுதி முடிச்சிடுவேன். அதனால மிச்ச நேரம் பூரா மத்தவங்கள சும்மா பாத்துகிட்டே இருப்பேன். சுசி நீ ரொம்ப சமத்து குழந்தடி திடீர்னு டீச்சர் ஒரு புது டெக்னிக்க கொண்டு வந்ததும் மறுபடி ப்ராப்ளம். ஸ்கூல் போக மாட்டேன்னு ஒரே அடம். டீச்சர் மணல தர மேல பரப்பிட்டு அது மேல விரலால அ, ஆ ன்னு எழுத வைப்பாங்க. விரல் எல்லாம் சிவந்து போய் அவங்க அடிக்கடி கைய உதறிக்கிறத பாக்க முடியாத நான், வேற என்ன? அவ்வ்வ்வ்வ்வ்... தான்.அப்புறம் டீச்சர் என்ன ஏதுன்னு விசாரிச்சப்போ ஏன் டீச்சர் எங்கிட்ட நல்லா, அன்பா நடந்துக்கறீங்க மத்தவங்கள அழ விடறீங்க. நீங்க நல்லவளா கெட்டவளான்னு கேட்டேன். ஐய்யய்யோ! அடிப் பாவி மகளே ஏண்டி அப்டி கேட்டே. டீச்சர் அடி பின்னீருப்பாங்களே அப்டீன்னு அவசரப் பட்டு நினைக்கப்படாது. டீச்சர் ரொம்ப பீலாகி ரொம்ப நேரம் என்ன மடி மேல உக்காத்தி வச்சிட்டு இருந்தாங்க. என்ன சொன்னாங்கன்னு நினைவில இல்ல. ஆனா நெறைய சொன்னாங்க. அதோட அந்த பனிஷ்மேண்டும் அப்றமா இல்ல. என் சமூக சேவை அப்போதான் ஸ்டார்ட் ஆச்சு. ரொம்ப புகழாதீங்க. பதிலுக்கு மேல படிச்சிட்டே போங்க.

இப்போ முதல் வகுப்பு. இங்கேதான் எனக்கு அடுத்த கண்டம் + அடுத்த கண்ணீர் காண்டம். என்னன்னு அறிய இன்னும் ஒரு கொஞ்சநாள் பொறுத்துக்கோங்க. சத்தியமா தொடர்ந்து எழுதுவேன். தண்டனைய ஒரே தடவேல குடுக்க கூடாதில்ல. அப்புறம் நீங்க எங்கிட்டவே ரிப்பீட்டு போட்ற மாட்டீங்க. அதாங்க... சுசி எங்க பதிவுக்கு பின்னூட்டம் போடும்போது கொஞ்சூண்டு(?) எழுதுறே. உன் பதிவுன்னா மட்டும் இவ்ளோ எழுதிறியே. நீ நல்லவளா கெட்டவளா???
மீண்டும் சந்திப்போமுங்க... அது வரை நலமா இருங்க.

14 நல்லவங்க படிச்சாங்களாம்:

ராமலக்ஷ்மி said...

//என் தாத்தாதான் எனக்கு இலவச டாக்சி//

தாத்தாவை டாக்ஸின்னுட்டீங்களே:)! சரி, நர்சரி வரை சொல்லிட்டீங்க. உங்களுடன் முதல் வகுப்புக்கும் வர ரெடியா இருக்கோம், சீக்கிரம் எழுதுங்க!

சந்ரு said...

ஆஹா சுசி நீங்களும் படு சுட்டியோ....

தொடருங்க மிகுதியையும் படித்துவிட்டு கேள்வி கேட்க ரெடியா இருக்கிறோம்....

கேள்விகள் தொடரும் கதை நிறைவு பெற்றதும்..

அதுவரை வணக்கமுங்க.....

தமிழ் பிரியன் said...

உண்மையில் சுசி நல்லவங்களா கெட்டவங்களா???
தெரியலியே தமிழ் பிரியான்னு மட்டும் சொல்லப்படாது.. ;-))

பிரியமுடன்.........வசந்த் said...

// நீங்க நல்லவளா கெட்டவளான்னு//

டீச்சரயே கேள்வி கேட்டீங்களா?

பிரியமுடன்.........வசந்த் said...

இன்னும் முடியலையா உங்க சேட்டை

ஒண்ணாவதுக்கே இம்புட்டா?

கார்க்கி said...

தண்டனையை மொத்தமா கொடுத்திடுங்க.. எவ்ளோ அடிச்சாலும் நாஙக்ளாம் தாங்குவோம்ங்க....

கலையரசன் said...

//இப்போ அம்மாவுக்கு ஃபோன போட்டு கேட்டேனா//

அதுக்கு அம்மாவுக்கு போன்-னா? பட்!, உங்க ஃபிலீங் எனக்கு ரெரரராம்ம்பப பிடிச்சிருக்கு!!

//சத்தியமா தொடர்ந்து எழுதுவேன்//

அந்த கொடும வேறயா?.. என்னடா பதிவு சின்னதா இருக்கேன்னு பார்த்தேன்? இப்பயில்ல புர்து..

ம்ம் நடத்துங்க டாக்குடரு!!

சப்ராஸ் அபூ பக்கர் said...

//சத்தியமா தொடர்ந்து எழுதுவேன்//

ஏங்க?... நாங்க நல்லா இருக்கிறது உங்களுக்கு சுத்தமாப் பிடிக்கலையா?... (லொள்...)
மிகுதியையும் எதிர் பார்க்கிறேன்...
லேட் பண்ணாம எழுதி விடுங்க... அல்லது மிகுதியை கனவுல கண்டு விட்டு ஏடா குடமா பின்னூட்டல் இட்டுருவேன்.... (எப்படி நம்ம ஐடியா???)

அருமையாக இருந்தது... தொடருங்கள் உங்கள் பயணத்தை....

சுசி said...

நன்றி ராமலக்ஷ்மி அக்கா. தாத்தா இத படிச்சதும் மீசைய ஒரு வாட்டி முறுக்கி விட்டுக் கிட்டு சிரிக்கிறாப்ல இருக்கு. சீக்கிரமா உங்கள முதல் வகுப்பும் பாசாக்கிர்றேன்.


நன்றி சந்ரு. சுசி உனக்கு வந்த சோதனைய பாரேண்டி. நா சோதனை படிக்கிற உங்களுக்குன்னுல்ல நினச்சேன்.


நன்றி தமிழ் பிரியன். ம்ஹூம். நிச்சயமா தெரியலியே தமிழ் பிரியான்னு சொல்லவே மாட்டேன். ஏன்னா அது ஒரு பொண்ணோட பேராக்கும். நான் தெரியலியே தமிழ் பிரியன்னுதான் சொல்வேனாக்கும்.


நன்றி வசந்த். கேட்டுட்டேன் வசந்த். அவங்க அம்மாவோட உறவுங்கறதால வந்த தைரியம்னு நினைக்கிறேன். நாம ஒவ்வொரு வருஷமும் எவ்வளவோ பண்ணி இருக்கோம். இவ்வளவ கூட சொல்லலேன்னா எப்டீங்க?


நன்றி கார்க்கி. நீங்க தாங்குவீங்க கார்க்கி. ஆனா என் மனசு தாங்கலையே... என்ன பண்ணட்டும்... நீங்கதானே என்ன ரொம்ப அப்பாவின்னு சொன்னீங்க. அதுக்கு அப்புறமுமா?


நன்றி கலையரசன். தொட்டில ஆட்டி விட்டுட்டு அப்புறமா புள்ளைய கிள்ளி விடறீங்களா?


நன்றி அபூ. நீங்க என்ன மாதிரியே நல்லா இருக்கணும்னு தாங்க நான் நல்லா(?) எழுதுறதே. ஐடியால்லாம் நல்லாதா இருக்கு. ஆனா சுசியோட காரக்டற கனவுலல்லாம் காண முடியாது. வேற வழி இல்லாம படிச்சுதான் தெரிஞ்சுக்கணும்.

இய‌ற்கை said...

:-))) nalla anupavagal..continue..continue..

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி இயற்கை. அட உங்க பேர் ரொம்ப வித்யாசமா இருக்கே!நீங்களும் படிக்கிறத கண்டினியூ கண்டினியூ...

நேசமித்ரன் said...

சிரிக்கனும்னா உங்க பதிவுப் பக்கம் வந்துடறேன் இப்போ எல்லாம்
உண்மையிலேயே ரொம்ப நல்லா பதிவுகள் எழுதுறீங்க
இந்த நடை அருமைங்க...

சொல்லரசன் said...

//என்னோட கல்விப் பயணம் நான் ரெண்டு வயசா இருக்கும்போதே ஆரம்பிச்சிடுச்சாம். //


இரண்டு வயசுல நடந்தது இவ்வளவு ஞாபகமா வைச்சிருங்கிங்க.
தொட‌ர‌ட்டும் உங்க‌ இள‌மை கால‌ங்க‌ள்.

சுசி said...

ரொம்ப நன்றி நேசமித்ரன். சிரிச்சா ஆயுள் கூடும்குவாங்க. அப்போ நான் என்னைய (சிரிப்பு) டாக்டர்னு சொல்லிக்கலாம்ல.


நன்றி சொல்லரசன். நீங்க என் பதிவு சரியா படிக்கலையோன்னு சின்னதா ஒரு டவுட்டுங்க. முதல்ல அம்மா சொன்னத ஞாபகம் வச்சு எழுதி இருக்கேன். அப்புறமா நானே ஞாபகம் வச்சு எழுதி இருக்கேன். ரெம்ப கண்ண கட்டுதோ?