
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா.
என்னோட வழக்கமான ஸ்பெஷல் கிரீடிங் இந்த தடவை பதிவு வடிவில. உங்களோட வழக்கமான முறுவலோட படிக்கிறீங்களா? படிங்க...
முன்னல்லாம் எங்களுக்குள்ள பெரிய போட்டியே நடக்கும். யார் உங்களை முறைக்க வைக்கிறதுன்னு. நீங்க எங்களை அடிச்சதில்ல. (நான் மட்டும் ஒரே ஒரு வாட்டி மழைல நனைஞ்சுட்டு ரொம்ப லேட்டா தனியா வீட்டுக்கு வந்ததுக்கு ஒரு அடி வாங்கி இருக்கேன். அந்த பாக்யம் மத்தவங்களுக்கு கிடைக்கல) அடி குடுக்காத வலிய உங்க பார்வை குடுத்திடும்பா. எப்பவும் அன்பும் சிரிப்புமான உங்க முகத்தில கோபத்தை நாங்க அதிகம் பார்த்ததில்லை.
உங்களை தெரிஞ்சவங்க அப்டியே உன் அப்பாவோட குணம் உன்கிட்ட வந்திருக்குன்னு சொல்லும்போது உடனேயே குட்டிப் பொண்ணா ஆயிடறேன்பா. ஏன்னா அப்போ ஆரம்பிச்சது இந்த பெருமிதம்.
சமயத்தில எங்களுக்கே டவுட்டாருக்கும் இவங்க எங்க ஃபிரண்ட்சான்னு, உங்ககிட்ட அவ்ளோ உரிமை அவங்களுக்கு. அதிலேயும் ஒருத்தர் மருமகன்னு ஆனதும் நீங்க வெட்கத்தோட திடீர்னு மரியாதை குடுக்க ஆரம்பிச்சதும் நாங்க இப்பவும் கிண்டல் பண்ற ஒரு விஷயமாச்சே.
எங்களுக்கு நீங்க குடுத்த சுதந்திரமே வேலியாய் எங்களை காப்பாத்திச்சு. இது என்னால முடியலப்பான்னு உங்க கிட்ட சொல்லும் வரை தான் அது முடியாத காரியம்.
அம்மாவை சில சமயம் நீங்க புரிஞ்சுக்காம நடந்துக்கிறதா சொல்லப்படும் குற்றச்சாட்டு அவங்க தலைவலீன்னு படுத்த அடுத்த நிமிஷமே சூடா ஒரு கப் டீயும், டாப்லட்டுமா அவங்க பக்கத்தில உங்கள பாக்கிறப்போ மன்னிக்கப்படும்.
பெரியண்ணன் தோளை மிஞ்சுமுன்னரே உங்க தோழன் ஆன பெருமைக்குரியவன். இன்றும் உங்க மந்திரி அவன்தானே.
அக்கா பேச்சுக்கு எப்பவுமே மதிப்பு குடுப்பீங்க. ஆனா இப்போ ரெண்டு நாள் பேசலைன்னா கூட எங்க என் குட்டிப் பொண்ணோட குரலைக் காணோம்னு நீங்க கேக்கறப்போ புரிஞ்சுக்கிட்டேன்பா.. உங்கள பொறுத்த வரைக்கும் நான் இன்னும் குழந்தைதான்னு. சின்னண்ணனுக்கு காதல் தவிர அத்தனைக்கும் உங்க வழிகாட்டுதல் தேவைப்பட்டுது.
என்னைய மட்டும் முதல் ஆளா கட்டிக் குடுத்து விரட்ட பாக்கிறீங்களே என்ற கோபம் கணவன் என்ற புது உறவோட அப்பா என்ற அன்பு நண்பனும் எனக்கு கிடைச்சப்போ
காணாமலே போய்டுச்சுப்பா. நீங்களும் அத புரிஞ்சுகிட்டீங்கங்கிறது ஆசீர்வாதம் பண்ணும்போது நீங்க சிரிச்ச சிரிப்புல தெரிஞ்சுதுப்பா.
ஞாபகம் இருக்கா... நிறைமாத கர்ப்பத்தோட ஏர்போட்ல என்னப் பாத்தப்போ கண்கள் பனிக்க என் தலையை வருடிய நொடியிலிருந்து நீங்க எனக்கு தாயுமானவர். அம்மா கூட ரெண்டு பொண்ணுங்களையும் அப்டி பாத்ததில்லையே.
இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் இதே அண்ணன்கள், அக்கா, அம்மா, நீங்க, கணவன், குழந்தைகளோட வாழணும்.. ஆனா இப்டி திக்குக்கு ஒருத்தரா இல்லாம எல்லாரும் ஒண்ணா. உங்களுக்கு நீண்ட ஆயுள், மன நிறைவோட வழக்கம்போல கடவுள் கிட்ட இதையும் கேக்கப் போறேன்..
நீங்க எப்பவும் சொல்றத சொல்லி முடிச்சுக்கிறேன். நீங்க யாருக்கும் தீங்கு செய்யலை.. செய்யவும் போறதில்லை.. உங்களுக்கு கிடைக்க வேண்டியது இன்னைக்கு இல்லேன்னாலும் நாளைக்கு கண்டிப்பா கிடைக்கும். அது வரை பொறுத்திருப்போம்.
ஹாப்பி பர்த்டே அப்பா..
அன்பு முத்தங்களுடன்..
கடைக்குட்டி.




முதலாம் வகுப்புக்கு போன முத நாளே அம்மா ஆர்டர போட்டுட்டாங்க.
இனி எல்லாரும் ரெண்டாம் வகுப்புக்கு போவோமா. இங்க எல்லாரும் ரொம்ப சமத்தா சுசி மாதிரியே இருக்கணும். ஏன்னா புதுசா வந்த குறள்தாசன்கிற பிரின்சிபால்தான் நமக்கு டீச்சர். இப்பவும் இவருக்கு என் மேல ரொம்ப அன்பு. சின்னண்ணன் இப்போ இவர் ஸ்கூல்லதான் டீச்சரா இருக்கான்.சமீபத்துல நடந்த பள்ளி விழாவில சின்னண்ணன் பொண்ண பாத்திட்டு அப்டியே என்ன பாக்றா மாதிரி இருந்ததாவும் தான் எப்பவும் என்னோட ரசிகன்னும் பாராட்டி பேசினாராம். நம்பலைல்ல? எடுங்க சூடத்த!
மூணாம் வகுப்பு ஒரு வித கிலியோடவே முடிஞ்சுது. காரணம் ஸ்கேல் புகழ் சுகுணா டீச்சர். மறந்திட்டீங்களா? வேணா இன்னொரு தடவ எழுதிடட்டுமா? ஓகே ஓகே.... தொடர்ந்து படீங்க.
நாலாம் வகுப்பு நல்ல வகுப்பு. சுகந்தீன்னு ஒரு தேவதையே டீச்சரா வந்தாங்க. ரொம்ப நல்ல மிஸ். அவங்க மிஸ் ங்கிரதனாலயோ என்னமோ ரொம்ப அன்பா இருப்பாங்க எல்லார்கிட்டயும். கல்யாணம் ஆகிப் போயும் ஊருக்கு வர்றப்போ என்ன வந்து பாக்கும்படி சொல்லி விடுவாங்க. அவங்களோட பிரியமான மாணவி நானாக்கும்.
அஞ்சாவது கணேஷ்வரி டீச்சர், குறள்தாசன் சார், சுகந்தி டீச்சரோட ஜாலியா போய்டிச்சு. இப்போ எனக்கு யசோ,லதா, மலர், மின்னி, சுமதி, ராஜி,மதாங்கினி, ரட்ணம், குமார், ஆதி, செந்தில்னு ஒரு நெருங்கின நண்பர் கூட்டம் உருவாய்டிச்சு. சுமதி கூட ஏன்னு தெரியாமலே ப்ளஸ் டூ முடியிற வரைக்கும் பேசிக்கலை. அப்புறமா நாங்க டீச்சிங் இண்டர்வியூ போனப்போதான் பேசிக்கிட்டோம். அவளுக்கும் காரணம் என்னன்னு தெரீலன்னு சொன்னா. இதில இப்போ யசோ,செந்தில்
பொழுது போக்குன்னா பாட்டி வீடுதான். எப்பவும் தனியாதா விளையாடுவேன். ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்து சாப்டு பாட்டி வீடு போனேன்னா ரொம்ப இருட்டானத்துக்கு அப்புறமாதான் மறுபடி வீட்டுக்கு வருவேன். அதுவும் தாத்தா என்ன முதுகு மேல சுமந்துகிட்டு போவாரு. அஞ்சாவது வந்ததும் தாத்தா லைட்டா மூச்சு வாங்கறத பாத்ததும் நானாவே இறங்கி அவர் கைய்ய இறுக்கி புடிச்சு கிட்டே பக்கத்தில நடந்து போவேன். என் தைரியத்த பத்தி மறுபடி எழுத வேணாமேன்னு பாக்கிறேன். 
கலை எனக்கு கை வந்த கலை. சித்திரம் கைப் பழக்கம் வரல.
நெஜமா நான் சந்ருவுக்கு நிறைய நன்றி சொல்லணும். அம்மாடி... இத தான் மலரும் நினைவுகள்ம்பாங்களா... மறுபடியும் அந்தந்த வயதில வாழ்ந்து பாக்கணும் போல ஆசையா இருக்கு. அது மட்டுமா? எங்க வீட்ல அப்பா, அம்மா, பெரியண்ணன், அக்கா, சின்னண்ணன், தாத்தா, பாட்டி மத்த உறவுக்காரங்க, ஊர்க்காரங்கன்னு எல்லாரோடான நினைவுகளும்....
என்னோட கல்விப் பயணம் நான் ரெண்டு வயசா இருக்கும்போதே ஆரம்பிச்சிடுச்சாம். என் முன்னாடி பிறந்த மூணு வாலுங்களும் பள்ளி போறது பெரும் அக்கப் போராம், என்னால. அவங்க கைய பிடிச்சுக் கிட்டு நானும் கூல் வாடேன் அப்டின்னு கிட்டு அடம் பிடிப்பேனாம். அப்புறம் அம்மா ஏதாவது பண்ணி என்ன அப்புறப் படுத்தினதும் அவங்க கிரேட் எஸ்கேப். அப்றமா ரொம்ப நேரத்துக்கு வெளி கேட்ட பாத்தாப்லையே வாசப் படீல உக்காந்திட்டிருப்பேனாம். அங்கனையே தூக்கம் கூட உண்டாம். அதனால அம்மா தொல்லையே இல்லாம வீட்டு வேல எல்லாம் முடிச்சிருவாங்களாம்.
இப்போ நான் உக்காந்து முழிச்சிட்டிருக்கேன். வாசப் படீலன்னு அவசரப் பட்டு நினைச்சிடாதீங்க. எனக்கு நாலு வயசு ஆய்டிச்சு. நர்சரி ஸ்கூல் மர பெஞ்சில கிட்டத்தட்ட ஒரு இருபது வாலுங்க புடை சூழ உக்காந்து அழலாமா வேணாமான்னு யோச்சுகிட்டு இருக்கேன்.அவனவன் போடற சௌண்ட பாக்கும்போது தப்பா ஆசப் பட்டுட்டோமோ, ஸ்கூலுன்னா ஏதோ எசகு பிசகா நடக்குமோன்னு லைட்டா பயம் வந்திச்சு. மூத்த வாலுங்க ஒரு வார்த்த சொல்லாம விட்டாங்களேன்னு அவங்கள திட்டினேன். அம்மாவும் அப்பாவும் ரொம்ப பெருமையா பாத்திட்டு நின்னாங்களா சரி போனா போகுதுன்னு உக்காந்திட்டேன். ராஜினின்னு ஒரு பொண்ணுதான் என் பெஸ்டு பிரென்ட். அவ அம்மாதான் டீச்சர். என் தாத்தாதான் எனக்கு இலவச டாக்சி. டீச்சர் பேரு தெரீல. ராஜினி அம்மான்னுதான் சொல்லுவேன்.
அடுத்து எல்கேஜி. டீச்சர் பேரு கணேஷ்வரி. அம்மாவோட உறவுக்காரங்க. ராஜினி க்ளாஸ்ல மிஸ்ஸுங்கறதால ஸ்டார்டிங் கொஞ்சம் ப்ராப்ளம் ஆயிடிச்சு. அவ என்ன விட ஒரு வயசு 












