Pages

  • RSS

22 June, 2009

விஜய் வாழ்த்து மழையில் - சுசி வருத்த மழையில்....


சுசிக்கு கண்ணு பட்டு போச்சுங்க! குளிர் ஜூரம், உடம்பு பூரா வலி, தலை வலி, தொண்டை நோவு, லைட்டா ஜலதோஷம் அப்புறம் ரொம்ப பசிக்குது, கொடுமை சாப்ட முடில. சிக் லீவ்ல இருந்தாலும் நம்ம விஜய்க்கு சின்னதா ஒரு வாழ்த்து சொல்லிடலாமேன்னு நினச்சேன். சொந்தமா எழுத உடம்பில தெம்பில்ல. அதனால விடுப்பு.காம்ல ஆட்டைய போட்டுட்டேன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய். உங்க கொள்கைகள்ல அரசியல்+சினிமாத்தனம் புகாம பாத்துக்கோங்க. வாழ்க நலமுடனும் வளமுடனும்.

இனி சுட்ட பழம்.....விஜய் பிறந்தநாள் செய்தி !!!

எதிர்பார்த்தபடியே தனது நற்பணி இயக்கத்தை மக்களின் இயக்கம் என அறிவித்துவிட்டார் விஜய்.
விஜய்க்கு இன்று பிறந்தநாள். தமிழ்நாடு முழுவதும் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு பஞ்சமில்லாமல் நடந்துகொண்டிருக்க, தனது பிறந்தநாள் செய்தியாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

"எனது முதல் படம் வெளியானபோது ரசிகர் மன்றம் ஆரம்பித்து, படிப்படியாக சினிமாவையும் தாண்டிய நற்பணி இயக்கமாக வளர்த்தீர்கள். ஏழைகளுக்கு இலவச வேட்டி,சேலை கொடுப்பதில் ஆரம்பித்த உங்கள் நற்பணி, இலவச திருமணம் நடத்தி வைப்பது, பள்ளிக்கூடங்கள் கட்டிக்கொடுப்பது, ஏழை பிள்ளைகளை படிக்க வைப்பது போன்ற பணிகளை செய்து சமூக தொண்டர்களாக உயர்ந்து இருக்கிறீர்கள்.

நாடு முன்னேற முதுகெலும்பாக இருப்பது கல்வி. அதனால் நான் கல்விப் பணியில் அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறேன். பல நூறு ஏழை குழந்தைகளை படிக்க வைப்பதுடன் அவர்களுக்கு ஆண்டுதோறும் இலவச நோட்டு புத்தகங்களை வழங்கி வருகிறேன். இந்த ஆண்டு என் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் 2 இடங்களில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சிப் பள்ளி தொடங்குகிறேன். இந்த கம்ப்யூட்டர் பயிற்சிப் பள்ளி தமிழகம் முழுவதும் உருவாக வேண்டும். இரண்டு இருபதாகி, இருபது இரண்டாயிரமாக வளர்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. இதைத்தான் பிறந்தநாள் பரிசாக உங்களிடம் கேட்கிறேன்.

நேற்றைய தொண்டன், இன்றைய தலைவனாக இருக்கிறான். அதேபோல இன்றைய தொண்டன் நாளைய தலைவனாக மாறலாம். இந்த விதி உங்களுக்கும் பொருந்தும். இது சமூகம் தரும் நாளைய தீர்ப்பு. இதை ஆழமாக மனதில் பதிய வைத்து மேலும் உங்கள் சமூக பணியை வளர்த்துக் கொள்ள வேண்டும். இனிவரும் காலத்தில் தமிழ் மக்களின் நன்மைக்காக பாடுபடும் ஒரு மக்கள் இயக்கமாக செயல்பட்டு, வளமிக்க இளைஞர் சக்தியாக உருவெடுப்போம்.

முக்கியமா இவ்ளோ உடம்புக்கு முடியாம போன நெலமேலேம் எனக்கு வாழ்த்து சொன்ன சுசிக்கு என்னோட மனம் நிறைந்த நன்றிகளை தெரிவிச்சுக்கிறேன். அவங்க சீக்கிரம் குணமடைய பிரார்த்திப்போம்."

ஏன்.... ஏன்... ஏம்பா.... ஏன் இந்த கொலைவெறி? நமக்குள்ள என்ன. சத்தியம்மா விஜய் இத சொன்னாருங்க. ( என் கனவுல)

10 நல்லவங்க படிச்சாங்களாம்:

லோகு said...

ஊர்ல இருந்து எப்ப வந்தீங்க..

Get well soon...

தமிழ் பிரியன் said...

சுகமா இல்லாதப்பவும் சேவையா.. கலக்கிட்டீங்க சுசி!

தமிழ் பிரியன் said...

அறிக்கை கலக்கலா இருக்கே.. கடைசியில் வரும் பிரார்த்தனையே எங்களோடதும்..நீங்க சீக்கிரம் குணமடைய பிரார்த்தனைகள்.

கார்க்கி said...

விஜய்க்கு வாழ்த்துகள்.. உஙக்ளுக்கும் தான்

தேனீ - சுந்தர் said...

நீங்கள் குணமடைய வாழ்த்துக்கள்.

சுசி said...

//ஊர்ல இருந்து எப்ப வந்தீங்க.. //
அது ஆச்சுங்க ஒரு வாரம். என்னைய்யா நடக்குது இங்க? யூ டூ லோகு? எப்போ நீங்க காதல் கடல்ல தொபுக்கடீர்னு குதிச்சீங்க?

சுசி said...

நன்றி தமிழ் பிரியன்!
என் கடன் பணி செய்து கிடப்பதேன்னு சொன்னா அப்டியாங்கறாங்க. உங்க பிரார்த்தனைக்கு நன்றி.

சுசி said...

//விஜய்க்கு வாழ்த்துகள்.. உஙக்ளுக்கும் தான்//
வாங்க கார்க்கி! நன்றி.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். விஜய்க்கு வாழ்த்து சரி,எனக்கு எதுக்கு? நான் நொந்து நூடுல்ஸ் ஆனதுக்கா? (சும்மா விளையாட்டுக்கு)

சென்ஷி said...

சுசி said...

நன்றி தமிழ் பிரியன்!
என் கடன் பணி செய்து கிடப்பதேன்னு சொன்னா அப்டியாங்கறாங்க. உங்க பிரார்த்தனைக்கு நன்றி.
//////////


:))))

சுசி said...

//:))))//
வருகைக்கு நன்றி சென்ஷி. சுகமா இல்லாதப்பவும் சேவையான்னு நம்ம தமிழ் பிரியன் கேட்டாப்ல, அதுக்குதான் அந்த பதில்... நாம அன்னை தெரசா பரம்பரையாக்கும்...