இந்த வருஷத்துக்குரிய முதல் விருது.. வழங்கிய நண்பர் ஜெய்லானிக்கு என்னோட நன்றிகள். வா அழகே வானு கூப்டு அல்லாருக்கும் குடுத்திருக்காரு.
வழக்கமான எந்த ரூல்சும் போடலை ஜெய்லானி. அதாங்க.. எத்தனை பேருக்கு குடுக்கணும் நான்னு சொல்லல. இருந்தாலும் எனக்கு பிடிச்ச அஞ்சாம் நம்பர் சட்னு மைண்ட்ல வந்ததால அஞ்சு பேருக்கு குடுக்கலாம்னு இருக்கேன்.
இதையும் விட போன வருஷம் சின்ன அம்மிணியும், சுதா அண்ணாவும் விருது கொடுத்திருந்தீங்க. மறந்தே போய்ட்டேங்க. மன்னிச்சுக்கோங்க. ரொம்ப நன்றி ரெண்டு பேருக்கும். தவறித் திருந்துவது மனித இயல்புதானே. (அடிங்.. நீயும் தத்துவம் சொல்ல ஆரம்பிச்சிட்டியா.. மொத்துவம் கிடைக்க முன்னாடி ஓடிப் போய்டு)
ஆங்.. சொல்ல மறந்துட்டேன்.. அதான் மறந்துட்டேனே.. அப்புறம் எங்கனு சொல்றது.
போய்டாதிங்க. இருங்கஅஅஅஅ.. இது சொல்ல மறந்த விஷயம் இல்லை. வேற. கொஞ்சம் ஒரு மாதிரியா.. மனக் கஷ்டமா இருந்த, இருக்கிற விஷயம் பத்தி உங்க கிட்ட சொல்லலாம்னு நினைக்கிறேன்.
கார்க்கி.. நேற்றைய நர்சிம் பதிவு.. நான் என்ன சொல்ல வரேனு உங்களுக்கு புரியலைன்னா அத நான் நம்பமாட்டேன். ஏன்னா என்ன விட உங்களுக்கு பதிவர்கள், பதிவுலகம் பரிச்சயமானது. என்னதான் நான் இவ்ளோ தூரம் வந்திட்டாலும் பதிவுலகத்தில நடக்கிற பல பிரச்சனைகள் எனக்கு தெரியல, புரியல.
அவர் வயசில என்ன விட சின்னவரா இருந்தாலும் நான் இந்த பதிவுலகத்துக்குள்ள குதிக்க காரணமானவர். இதுக்கு முன்னாடியும் அவர பத்தி எழுதி இருக்கேன்.. ஆனா இப்டி ஒரு விஷயம் அதாவது குருவுக்கு அட்வைஸ் பண்றா மாதிரி எழுதுவேன்னு நினைக்கல.
இருந்தாலும் அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்றதில்லைங்கிற என் கொள்கையையும் மீறி அவருக்காக சில வரிகள். தயவு செஞ்சு யாரும், முக்கியமா கார்க்கி.. அவரோட சகா/சகிகள்.. தப்பா எடுத்துக்காதிங்க. அவங்க பிரச்சனை எனக்கு புரிந்தும் புரியாமலுமா ஓரளவுக்கு புரிஞ்சுது. ஓரளவுக்கு புரிஞ்ச விஷயம் பத்தி பேசக் கூடாதுன்னுதான் நான் எந்தக் கருத்துமே, எங்கேயுமே சொல்லல. ஆனா நான் மதிப்பும் மரியாதையும் வச்சிருக்கிற ஒரு நல்ல பதிவர் கார்க்கி இப்டி செய்தது சரி இல்லை. அவர் கமண்ட்ஸ் இன்னமும் பிரச்சனைய பெருசாக்கினா மாதிரி எனக்கு தோணுது. அவர் கோபம், துணிவு, இடுக்கண் களையும் நட்பு எல்லாம் பதிவுகள் மூலமா தெரிஞ்சிருந்தாலும் நேத்து அவர் காட்டியது கொஞ்சம் அதிகப்படியான அக்கறையோனு தோணுது.. இன்னொரு வகையில பாத்தா அவர் இத சீரியஸா எடுத்துக்காம விளையாட்டா கமண்ட்ஸ்ல கும்மினாரான்னும் தெரியல.
அவர் பதிவ அதிகம் படிக்கிற ஒரு வாசகி என்கின்ற முறையில இத எழுத நினைச்சேன். இருந்தாலும் இது சரியா, தவறா, இல்லை நாந்தான் தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கேனா.. எனக்குத் தெரியல.. என் நண்பர்கள் நீங்களும்தானே மக்கள்ஸ்.. அதான் உங்க கிட்ட பகிர்ந்துக்கிட்டேன். உங்களுக்கு தோணுறதை சொல்லுங்க. சண்டை வேண்டாம். ரத்தம் வேண்டவே வேண்டாம். திட்டு?? பாத்து.. பாவம் நான்.
என் வழக்கமான ’வர்ட்டா’ சொல்ல மனசு வர்லை.. என்னமோ போங்கப்பா.. இந்த பதிவர்களையே புரிஞ்சுக்க முடியல..