’இண்டைக்கு சந்தேல மீன் குறைவு. கன்போட் நங்கூரம் போட்டிருக்காம்’
சந்தைக்குப் போய் வரும் அப்பாவோ, அப்புச்சியோ அம்மாவிடம் சொல்வார்கள். பின் எப்படி மீன் வந்தது? அவர்கள் வீட்டில் அடுப்பெரிய வேண்டுமே. உயிரை மறந்து படகோடு போவார்கள். பல சமயம் வள்ளம் மட்டும் எங்காவது கரை ஒதுங்கும். ’அப்பாவை நேவி சுட்டிட்டான் டீச்சர். அதான் கொப்பி வாங்கக் காசில்லை எண்டு அம்மா சொன்னவ’ என்று என் தோழி சொன்னதையே ’சோதினைக்காசு அம்மா அடுத்த கிழமை தாறாவாம். அப்பாவை நேவி சுட்டதாலை வீட்டிலை காசில்லை டீச்சர்’ என்று என் மாணவியும் சொன்னாள்.
நெய்தல் நிலம் எங்கள் ஊர். அலை ஓசையோடு அவ்வப்போது நேவியின் போர்க்கப்பல் ஓசையும் சேரும்போது உயிர் பதைக்கும். அடிக்கடலில் ஒரு புள்ளியாய் தெரியும் நங்கூரம் பாய்ச்சிய கப்பல். எக்கணமும் குண்டு பொழியும். தம் உயிர் சிதறடித்து எம் உயிர் காத்த கடற்கரும்புலிகள் இல்லாது போயிருந்தால் இன்று மிச்சமிருக்கும் தமிழர்கள் எண்ணிக்கையில் இன்னமும் குறைவாய் இருந்திருப்போம்.
கத்தினோம், கதறினோம், போராடினோம்.. எத்தனை முடியுமோ அத்தனையும் செய்தோம். காதில் போட்டானா காதகன்?? பெண்ணென்றால் பேயும் இரங்குமாம். பேயாய் ஒரு பெண் தன் பங்குக்கு அழித்தாள். தன் இனமே தன்னைக் காட்டிக் கொடுத்தும், கூட்டுச் சேர்ந்தும் அழிக்கும்போது என்னதான் செய்ய முடியும் எம்மால்??
அழிந்தோம்.. அழிகிறோம்.. அழிவோம்..
கடைசித் தமிழன் இருக்கும் வரை இதுதான் எம் நிலை. தமிழனாய் இரு போதும். நீ இந்தியனா இலங்கையனா என்பதை சிங்களவன் குண்டுகள் பார்ப்பதில்லை.
ஊரில் இப்போது எப்படி இருக்காங்க எல்லாரும்?? எவர் கேட்டாலும் என் பதில் ரொம்ப நல்லா இருக்காங்க. நிம்மதியா இருக்காங்க. அதற்கு மேல் சொல்லத் தோன்றுவதில்லை. முடிவதில்லை. உள்ளே உறுத்தும் உணர்வு வேறு சொல்கிறதே. எத்தனை நாளைக்கு என்ற கேள்வி முட்டி மோதுகிறதே. என் அண்ணன் குடும்பங்களின் உயிருக்கு உத்தரவாதம் அடுத்த நொடி கூட இல்லை. இந்த நொடி வரைதான். எந்த நொடியும் நிலமை தலைகீழாகலாம். எதிர்காலம் பற்றிய பயத்தையும் தன்மானத்தோடு சேர்த்துப் புதைத்து விட்டு நாளையை மறந்துவிட்டு, இன்றை வாழ்கிறார்கள் என் அண்ணன்கள் போலவே தமிழராம் எம் இனத்தவர்.
போன வாரம் நெகிழ்வான ஒரு பேச்சின்போது அண்ணா சொன்னார்.
“எல்லாம் பாத்தாச்சுடி. மத்தவங்களை விடு. நானே பசி, தாகம், வறுமை, நோய், பிரிவு, சாவு எல்லாம் அனுபவிச்சாச்சு. செத்துட்டேன்னு நினைச்சு, ஏண்டா இன்னும் சாகாம இருக்கேன்னு நினைச்சு அத்தனை அவமானமும் பட்டாச்சு. இனிமே மிச்சமா இருக்கிற இந்த வெத்து உயிரை வச்சுட்டு என்ன செய்யப் போறேன் தெரியுமா? என்னாலை எவளவு முடியுமோ.. அவளவு.. என் குடும்பம் மட்டுமில்லாம எல்லாரையும் சந்தோஷமா வச்சுக்கப் போறேன். நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்டி. நான் இனிமே அத மட்டும்தான் கேக்கணும். பாக்கணும்”
வார்த்தை வரவில்லை எனக்கு. அண்ணா எப்போதும் இப்படி பேசமாட்டார். என்றாவது தான் தன் மனம் திறப்பார். இன்னமும் மனதில் அண்ணாவின் வார்த்தைகள். வேண்டிக்கொண்டே இருக்கிறேன். அண்ணாவோடு அத்தனை பேருக்குமாக.
ரஜி முதல் முதல் சண்டைப் பகுதியில் இருந்து முகாமுக்குள் வந்ததும் பேசியபோது சொன்னான்
“நான் என்ன வேணா செய்வேண்டி.. குண்டுச் சத்தம் கேக்கிற ஒரு இடத்துக்குள்ளை என் வாழ்க்கேல இனிமே போகமாட்டேன்”
இதன் அர்த்தம் புரிகிறதா உங்களுக்கு?? அப்பா பிள்ளையாக இருந்தபோதும் உயிர்ப் பயம் இருந்தது. ஆனால் இப்போது போலில்லை. என் பிள்ளையாவது ஒரு வாய்க் கஞ்சி உயிர்ப் பயம் இல்லாமல் குடிக்க வேண்டுமே என்பதே அத்தனை பேரதும் தேவையாக ஆகிவிட்டது.
வந்தது வயிற்றுப் பிழைப்புக்கென அப்பாவித் தமிழக மீனவன் என்று சிங்களவனுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் அவனுக்கு இன்னமும் சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. எங்கேயோ தப்பிப் போன விடுதலைப்புலி வந்தான். அதான் சுட்டோம். உலகமும் அதை நம்பும். அவனை மன்னிக்கும். நாளையே மறந்தும் போகும். புதிதாய் எந்த நாட்டில் சண்டை மூட்டி ஆயுத ஏற்றுமதி செய்யலாம் என்று ஆதாயம் தேட யோசிக்கும். என் இந்தக் கருத்துத் தவறாக இருக்கலாம். எனக்கு அரசியல் புரிவதில்லை. ஈடுபாடும் இல்லை. ஆனால் மனம் கொதிக்கிறது. இது்ரை கண்ட, கேட்ட, அனுபவித்த கண்ணீர்க் கணங்கள் மீண்டும் மனதை நிறைக்கிறது. இதுவரை இழப்பைச் சந்தித்த மீனவக் குடும்பங்களின் கண்ணீருக்கும், எங்கள் கண்ணீருக்கும் வேறுபாடு இல்லாதது போலவே தீர்வும் இல்லை. தமிழ் வளர்க்கத் தெரிந்தவருக்குத் தமிழன் உயிர் காக்கத் துப்பில்லாது போனது தமிழரின் சாபக்கேடு.
அழிப்பான். கடைசி இலங்கைத் தமிழன் அழியும் வரை சிங்களவன் அழிப்பான். விடுதலைப்புலி என்ற பட்டத்தோடு அவன் குண்டுக்குத் தேவை ஒரு தமிழன்.
ஒருநாள். அவன் தனிப்பட்ட வாழ்வில் என்றாவது ஒருநாள். எல்லார் கண்ணீருக்கும் அனுபவிப்பான். ஏதோ ஒரு வகையில் வலி அவனாலும் உணரப்படும். யார் என்ன சொன்னாலும் எனக்கு அதில் நிறையவே நம்பிக்கை இருக்கிறது. என் தெய்வம் நின்று கொல்லும்!!
26 நல்லவங்க படிச்சாங்களாம்:
உடலெல்லாம் அதிர்கிறது. படிக்கும் நமக்கே இப்படியென்றால், தினந்தினம் அனுபவிக்கும் மக்களின் நிலையைப் பற்றி சொல்ல முடியவில்லை. கணத்துக் கொண்டிருந்த மனம், மறத்துப் போய்விடுமோ என்ற அச்சமும் தொடர்கிறது.
வயிற்றுப் பாட்டுக்காய் கடல் சென்ற நம் சொந்தங்கள் கயவர்கள் கொடூரத்தால் மரணவாசல் சேர்ந்தனரே!
//என் தெய்வம் நின்று கொல்லும்!!//
நம்பும் ஒரு கையாலாகாத தமிழன்!
வலிகள் கலந்த உணர்வுகளை பதிவு செய்து நெகிழவைத்துள்ளீர்கள் சகோ
//எல்லார் கண்ணீருக்கும் அனுபவிப்பான். ஏதோ ஒரு வகையில் வலி அவனாலும் உணரப்படும். யார் என்ன சொன்னாலும் எனக்கு அதில் நிறையவே நம்பிக்கை இருக்கிறது. என் தெய்வம் நின்று கொல்லும்!! ///
என் தெய்வம் நின்று கொல்லும்!!
//
நம்புவோம்..
:((!
:(((
lable.. :((
ஏதோ ஒரு இனம்புரியாத வலியால் உயிர் வாடுவது போல் தோன்றுகிறது! :-(
மக்களின் கூக்குரல் செவிகளை எட்டும் கதவு திறக்குமா? என்பது தான் கேள்விக்குறி..
:((((
presentttu
“எல்லாம் பாத்தாச்சுடி. மத்தவங்களை விடு. நானே பசி, தாகம், வறுமை, நோய், பிரிவு, சாவு எல்லாம் அனுபவிச்சாச்சு. செத்துட்டேன்னு நினைச்சு, ஏண்டா இன்னும் சாகாம இருக்கேன்னு நினைச்சு அத்தனை அவமானமும் பட்டாச்சு. இனிமே மிச்சமா இருக்கிற இந்த வெத்து உயிரை வச்சுட்டு என்ன செய்யப் போறேன் தெரியுமா? என்னாலை எவளவு முடியுமோ.. அவளவு.. என் குடும்பம் மட்டுமில்லாம எல்லாரையும் சந்தோஷமா வச்சுக்கப் போறேன். நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்டி. நான் இனிமே அத மட்டும்தான் கேக்கணும். பாக்கணும்”
......கண்ணீருடன் வாசிக்கிறேன்....
மனதைத் தொட்ட கட்டுரை என்று சாதாரணமாகச் சொல்லிவிட முடியவில்லை. கோபமும், வலியும் தருவதாக இருக்கிறது உண்மை.!
:((((
வலி நிறைந்த பதிவு...
ஒன்றுபடுவோம்... வெற்றி பெறுவோம்.
நெகிழ்ச்சியான பதிவு..
செம...... அப்படியே ஒரு வித உணர்ச்சி உடல் முழுதும் ஓடுது.
தெய்வம்.....இருந்தால்....இருக்கு......இவர்களை கொல்லவாவது பிறக்கும்
நாம திரும்ப தெருவுல இறங்கி போராடாத வரை இந்த சோகம் தொடரும்.. வட நாட்டில் செய்வது மாதிரி ஒரு நாள் மீனவர்கள் சென்னை பெண்களூரு national highwayஜ block செய்து பாருங்க அப்பறம் இவனுங்க ஓடி ஓடி நம்ம கிட்ட வருவானுங்க..
;((
முதன்முதலாய்...உணர்வுகளின் குழப்பம்..."நச்" சுசிக்கா.....
முதல் வருகைக்கு நன்றி ஆரூரன். அங்கு இருப்பவர்கள் எப்போதோ மரத்துப்போய் மறக்கவும் கற்றுக் கொண்டு விட்டார்கள்.
@@
பாலாஜி.. நம்புங்க. நம்பிக்கைக்கு சக்தி அதிகம்.
@@
மாணவன் :)
கண்டிப்பா நம்புவோம் ஜயந்த்.
@@
அக்கா :)
@@
கார்க்கி :)
புன்னகை.. நினைச்சேன்.. லேட் நைட்ல வீடியோ சாட்ல இருக்கும்போதே நினைச்சேன்.. இப்டியானதொரு கமண்ட்/கேள்வி வரும்னு :)
@@
திறக்கும்னுதான் நினைக்கறேன் தமிழ். திறக்கணும்.
@@
வாங்க அப்துல்லா.
வினு :)
@@
சித்ரா.. எல்லாம் சரியாயிடும். எனக்காக வேண்டிக்கோங்க.
@@
ஆதி.. எல்லாரும் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கோங்க.
விஜி.. ஏன்பா.. ஃப்ரீயா விடு.
@@
கண்டிப்பா வெல்லணும் குமார்.
@@
அமுதாக்கா :)
அருண்.. நம்பிக்கை வைப்போம்.
@@
முதல் வருகைக்கு நன்றி சந்தோஷ். நாங்க இங்க வெளிநாட்டுத் தெருக்களிலை போராடித் தோற்றோம். தமிழர்கள் இல்லையா.. அதான் போல.
@@
கோப்ஸ்..
\\அழிந்தோம்.. அழிகிறோம்.. அழிவோம்..\\
Ithu thappunga..
Alinthom.. aligirom..
meendu eluvom theeyai..
Post a Comment