Pages

  • RSS

14 January, 2011

அம்மா செல்லமா.. அப்பா செல்லமா..

என் மனச் சிதறல்கள் பாலாஜி சரவணா போன வருஷம் நடைபெற்ற முக்கியமான நிகழ்வுகள் பற்றி எழுதச் சொல்லி ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். ரொம்ப நன்றி நண்பரே. எனக்கு தொடர் பதிவு எழுதுவதில் கஷ்டமில்லை. அதைத் தொடர யாரைக் கூப்பிடுவது என்பதில்தான் படு சிக்கல். நல்லவேளையாக இந்த வருஷம் வந்த முதல் தொடர்பதிவுக்கான அழைப்பில் எனக்கு அந்த சிக்கல் இல்லை. என்னைத் தவிர எல்லாரும் எழுதிவிட்டார்கள். உஸ்ஸ்ஸ்ஸ்..

போன வருஷம்.. ஊரில் உறவுகள் ஓரளவேனும் நிம்மதியாக இருக்கிறார்கள் என்பதே மிகப் பெரிய ஆசுவாசம். அது தவிர குறிப்பாக ஒரு விஷயம் மனதை புரட்டிப் போட்டு மாயை காட்டுகிறது.. சொன்னால் குவலயம் தாங்காது என்பதால் விட்டு விடுகிறேன்.. சும்மா பொத்தாம் பொதுவில் சொல்வதானால் சென்ற வருஷத்தில்

குறையாத கண்ணீர்..

நிறைவான சந்தோசம்..

மனம் நிறைந்த வலி..

உயிர் நிறைந்த காதல்..

சில புதிய நட்புகள்..

பல இனிய நாட்கள்..

பொய்த்துப்போன உறவுகள்  தந்த  ஏமாற்றங்கள்.. 

கூடவே ஆச்சரியங்கள்..

என பல வண்ணங்களின் கலவை ஓவியம் 2010.

எல்லாவற்றுக்கும் மேலாக இத்தனை விரைவாக ஓடிச் சென்ற நாட்கள் தந்த அதிர்ச்சி பெரிதாக உள்ளது. அதற்குள் ஒரு வருடம் போய்விட்டதா? என்ன சாதித்தேன் நான் என்று நினைக்கத் தோன்றவில்லை. மாறாக என்னை உயிருடன் வைத்திருக்கும் என் பிள்ளையாரப்பனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். ஒரு வருடம் உயிராபத்தில்லாமல் இருப்பதென்பதே எனக்கு பெரிய சாதனையாகத் தெரிகிறது, நடப்புலகில்.

பதிவுலகைப் பொறுத்தவரை வாசிக்கும் ஆர்வம் குறையவில்லை. எழுதும் ஆர்வம் என்னவோ வரவே காணோம். என் எழுத்துப் பற்றி எனக்குத் தெரிந்தாலும்.. ரைட்டு விடுங்க.. நேராவே சொல்லிடறேன். என்னதான் நான் மொக்கையா எழுதினாலும் அதைக் கூட எழுத வேண்டுமென்று இப்போதெல்லாம் முன்போல் தோன்றுவதில்லை. ஏதோ ஒரு அயர்ச்சி. வெறுப்பு. விருப்பமின்மை. சரி உங்களுக்காவது கமண்ட் போடுவோம் என்றால் ஆஃபீசில் டீ லீ யின் (சனிப்)பார்வை என் பக்கமே இருக்கிறது. படித்துவிடுகிறேன். அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் டைப்புவதில்தான் சிக்கலே. அதனால் பெரும்பாலும் ஒரு ஸ்மைலியோ, அருமையோ, நல்லா இருக்கோ போட்டுவிட்டு போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள். வீட்டுக்கு வந்து போடலாம் என்றால் அதற்குள் நீங்கள் அடுத்த பதிவு என்னவென்று நினைக்கத் தொடங்கிவிடுகிறீர்கள். நேர வேறுபாடு. இருந்தாலும் வீட்டுக்கு வந்து படித்து கமண்ட் போடும்போது கொஞ்சம் விரிவாக கருத்தைச் சொல்வேன்.

2004 அக்டோபரில் அம்மா அப்பாவை பார்த்தது. நாளை முதல் முறையாக அம்மாவும், இரண்டாம் முறையாக அப்பாவும் இங்கு வருகிறார்கள். அதுவும் ’ஷித்தி அப்புச்சி அம்மம்மாவை அங்கயே வச்சுக்கப் போறா.. இனிமே அவங்க இங்க வரமாட்டாங்க’ என்று அழுத கருணுக்கு சத்தியம் செய்து கொடுத்து அம்மா மூன்று மாதங்களும், அப்பா வேலை காரணமாக ஒரு மாதமும் இருப்பதாக முடிவாகியுள்ளது. இப்போது ஏர்போர்ட்டில் நிற்கிறார்கள். நாளை எங்கள் நேரம் பகல் மூன்றரை மணிக்கு விமானம் தரை இறங்கும். என் கால்கள் தரை பதியவில்லை. இரண்டு நாள் லீவு போட்டுவிட்டு வீட்டிலேயே இருக்கிறேன். அவ்வப்போது அம்முவும் சதுவும் வேறு அம்மா சந்தோஷமா உங்களுக்கு? எங்களுக்கும்னு சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். யார் எப்போது அம்மம்மாவுடன் தூக்கம், எங்கெல்லாம் போவது போன்று ஏகப்பட்ட பிளான் போட்டு முடித்தாயிற்று. போன வாரம் தங்கா அக்கா வீட்டில் நடந்த பேச்சு இது.

கண்ணாளன் – தங்கா அக்கா இவ மூஞ்சி பாத்திங்களா.. அம்மா வர குஷியிலை அப்பளம் மாதிரி எப்டி விரிஞ்சு போய் கிடக்கு.

நான் – கிர்ர்ர்ர்ர்ர் (பார்வை)

விஜய் அண்ணா(தங்கா அக்கா ஹபி) – அதுக்கு ஏங்க அந்தக் கால பக்திப் படத்திலை வரா மாதிரி அப்டியே கண்ணாலையே லேசர் கதிர்களை விட்டு அவர பொசுக்கறிங்க..

நானு – பின்ன என்னண்ணா.. உதாரணமா ஒரு பூவை சொல்ல வேணாம். அப்பளம்னு கைய விரிச்ச்ச்ச்சு வேற காட்டணுமோ..

கண்ஸ் – இப்போ நான் என்ன தப்பா சொல்லிட்டேன்.. உன் முகம் மாதிரி ஒரு பூ பேர் சொல்லு.. சொல்லிட்டுப் போறேன்.

இந்த மொக்கைசாமிக்கு இதுக்கு மேலை நான் என்ன சொல்ல. இருந்தாலும் அவர் கேட்ட கேள்வி ரொம்ப கரெக்டுங்க. கூகிளாண்டவர் தந்த அப்பளத்தை பாத்தா உதாரணம் சரின்னுதான் தோணுது.

Appalam

சரி அதை விடுங்க. இப்போ மறுபடி அம்மா பற்றி பேசலாம். பாத்ததும் அம்மாவை கட்டிக்கொண்டு கண்டிப்பாக அழுவேன். அப்பா உச்சி மோந்து ஒரு முத்தம் கொடுப்பார். சித்தி ஒரு வாரத்தில் ஊட்டி வளர்த்த வெயிட்டே இறங்கக் காணோம். இதில் மூணு மாசம் அம்மா சமையல். ’இங்க வந்துட்டு போங்களேன்’னு கண்ணாளன் பேச்செடுத்த உடனேயே அக்காச்சியிடம் பதியம் வைத்த மரங்களில் வேப்பங் கன்று ஒன்றை (ஊருக்கு போன பொழுது விதை கொண்டு வந்து பதியம் வச்சு முளைச்சிருக்காம். கனடாவில் வன்னி வேம்பு. அதுவும் பூச்சாடிக்குள்) ‘பாலித்தின்ல ஒழுங்கா பேக் செஞ்சு குடும்மா அங்க போய் நான் நடணும்’னு கேட்ட என் குழந்தை அம்மாவை கொஞ்சிச் சீராட்ட வேண்டும். ஊருக்கு போன ரெண்டு முறையும் என் கையால் ஒரு டீ கூட போட்டு குடுத்ததில்லை நான். எல்லாத்துக்கும் சேர்த்து இந்த மூன்று மாதங்களும் ஜமாய்த்துவிடலாம். அப்பாவின் என் கடைக்குட்டி பக்குவம் பாத்தியாப்பா என்ற புகழாரம் அம்மா அடிக்கடி கேக்க வேண்டியதும் வரும். 

இப்போ கால் செஞ்சப்போ ஆளாளுக்கு வாங்கிக் குவித்து ஓவர் வெயிட்டாகிப் போனதில் எதை குறைப்பதென்று தெரியாமல் முழித்துக் கொண்டு உனக்கு இது வேணுமா, அதை வச்சிட்டு வரவா, இல்லை இது அவளுக்கு ரொம்ப பிடிக்கும் கொண்டு போயே ஆகணும்னு பரபரப்பா கடைசி நேரத்திலை பேக் செஞ்சிட்டு இருக்காங்க. அப்டி என்னடிப்பா வாங்கினிங்கன்னு கேட்டேன். இல்லைடி நேத்து கரெக்டா இருந்திச்சு.. இன்னைக்கு என்னமோ கல்லு கனத்திலை இருக்குன்னு சொல்றா அக்காச்சி. நீ என்ன செய்வியோ எதையாச்சும் குறைச்சு சேரனை உள்ளை வச்சு அனுப்பிடுன்னேன். நீ வேற.. சூப்பரா ட்ரஸ் பண்ணிட்டு ஷித்திட்ட போகன்னு அவரும் ரெடியாத்தான் நிக்கறார்னா. ஸ்கைப்ல பேசும்போது அழுவார். என்ன சொல்லி சமாளிக்க போறேன்னு தெரிலைங்க.

எல்லாரும் அவங்க நல்லபடியா வந்து சேரணும்னு மனதார வேண்டிக்கொள்ளுங்க. நான் கொஞ்சமாவது தூங்க முயற்சிக்கறேன்.

எல்லாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!!

வர்ட்டா..

20 நல்லவங்க படிச்சாங்களாம்:

கவி அழகன் said...

அருமையான குடும்ப நிகழ்வுகளை அடுக்கடுக்காய் போட்டு மனச தொட்டிடிங்க சுசி
பொங்கல் வாழ்த்துக்கள்

மாணவன் said...

கடந்த வருட நிகழ்வுகளை ரொம்பவும் யதார்த்தமாக சொல்லியிருக்கீங்க அருமை

மாணவன் said...

//எல்லாரும் அவங்க நல்லபடியா வந்து சேரணும்னு மனதார வேண்டிக்கொள்ளுங்க. நான் கொஞ்சமாவது தூங்க முயற்சிக்கறேன். எல்லாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!//

பிரார்த்தனையுடன் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

எல் கே said...

சூப்பர் சுசி. அம்மா அப்பாவோட பொங்கலை என்ஜாய் பண்ணுங்க

ராமலக்ஷ்மி said...

நெகிழ்வான நினைவுகளுடன் நல்ல பகிர்வு சுசி. 2011 சிறப்பாக அமையவும் உழவர் திருநாளுக்கும் என் வாழ்த்துக்கள்!

vinu said...

manam mirainththa nalvaalthukkal

அருண் பிரசாத் said...

உங்க எழுத்துலயே அந்த EXCITEMENT தெரியுது

அம்மா, அப்பாவை கேட்டதா சொல்லுங்க....

அப்பளம் உதாரணம் சூப்பர்... என் மனைவிகிட்டயும் சொல்லி பாக்குறேன் :)

Anonymous said...

கடந்த ஆண்டு நிகழ்வையும் எதிர்வரும் சந்தோசக் கணங்களையும் சிறப்பாக ஒன்றுசேர்த்து சொல்லிட்டீங்க சுசி!
அம்மா அப்பாவுடன் இருக்கப் போகும் மூன்று மாத சந்தோஷ நிகழ்வுகளையும் அப்பப்போ எங்க கூட பகிர்ந்துக்கணும் :)
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சுசி

Madumitha said...

உங்கள் குழந்தைப் பருவத்திற்குத்
திரும்பிப் போய் பெற்றோருடன்
சந்தோஷமாய் இருங்கள்
உங்கள் குழந்தைகளையும்
சேர்த்துக் கொண்டு.

கார்க்கிபவா said...

பொங்கல் வாழ்த்துகள்

கோபிநாத் said...

\\ என்னதான் நான் மொக்கையா எழுதினாலும் அதைக் கூட எழுத வேண்டுமென்று இப்போதெல்லாம் முன்போல் தோன்றுவதில்லை\\

அக்கா இது கூட தெரியலியா நீங்க மூத்தப்பதிவர் ஆகிட்டிங்க...வாழ்த்துக்கள் ;)))

\\உன் முகம் மாதிரி ஒரு பூ பேர் சொல்லு.. சொல்லிட்டுப் போறேன்.\\

ஆகா ஆகா...மனசு கஷ்டப்படகூடாதேன்னு எம்புட்டு சரியாக சொல்லியிருக்காரு மாம்ஸ்..குட் குட் ;))

\\ஆளாளுக்கு வாங்கிக் குவித்து ஓவர் வெயிட்டாகிப் போனதில் \\

அப்படியே பாதியை இங்கிட்டு அனுப்பிடுங்க ;))

\\நீ என்ன செய்வியோ எதையாச்சும் குறைச்சு சேரனை உள்ளை வச்சு அனுப்பிடுன்னேன்\\\

ஆகா...அப்படி இப்படின்னு கடைசியில பிள்ளையவே கடத்த சொல்றிங்களா...;)))

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் - ஸ்பெசலாக அம்மா அப்பாவுக்கும் என்னோட மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் ;)

சுசி said...

நன்றி யாதவன். உங்களுக்கும் வாழ்த்துகள்.

@@

நன்றி மாணவன்.

@@

என்ஜாய் பண்ணேன் கார்த்திக்.

சுசி said...

ரொம்ப நன்றி அக்கா.

@@

நன்றி வினு.

@@

சொல்லிடறேன் அருண். எண்ணெய் சட்டி பக்கத்திலை நின்னு சொல்லிடாதிங்க நீங்க. அப்புறம் மருத்துவ செலவுக்கு கம்பேனி பொறுப்பாகாது :)

சுசி said...

கண்டிப்பா பகிர்ந்து கொள்கிறேன் பாலாஜி.

@@

அதேதான் நடக்குது மதுமிதா.. :)

@@

நன்றி கார்க்கி.

சுசி said...

கோப்ஸ்.. அம்மா அப்பாவுக்காக மன்னிப்பு இந்த தடவை. இருந்தாலும் மைண்ட்ல வச்சுட்டோம்ல.. கிர்ர்ர்ர்ர்ர்ர்..

R. Gopi said...

சுசி, நீங்க நிறைய பஸ் விட்டால் பதிவெழுத நேரம் கிடைக்காது.

உங்க கவிதை புடிச்சுப் போய்த்தான் உங்க வலைப்பதிவைத் தொடர ஆரம்பித்தேன். மறுபடி ஆரம்பிங்க. நன்றி.

'பரிவை' சே.குமார் said...

//குறையாத கண்ணீர்..

நிறைவான சந்தோசம்..

மனம் நிறைந்த வலி..

உயிர் நிறைந்த காதல்..

சில புதிய நட்புகள்..

பல இனிய நாட்கள்..

பொய்த்துப்போன உறவுகள் தந்த ஏமாற்றங்கள்..

கூடவே ஆச்சரியங்கள்.. //

கடந்த வருட நிகழ்வுகளை ரொம்பவும் யதார்த்தமாக சொல்லியிருக்கீங்க.

பத்மநாபன் said...

மனச்சிதறல் என்று ஆரம்பித்து எங்கள் மனம் ஒருமித்து படிக்கவைத்து விட்டீர்கள்.இனிய உணர்வு குவியல்..பாசமான பெற்றோருடன் இனிய நாட்கள்...வாழ்த்துகள்

பித்தனின் வாக்கு said...

Parents vanhthu sernhthacha?. kushiyila pathivu poda neram illaiyaa?. How r u? sir and kids.
Convay my wishes and greetings.

Thamira said...

குறையாத கண்ணீர்..
நிறைவான சந்தோசம்..
மனம் நிறைந்த வலி..
உயிர் நிறைந்த காதல்..
சில புதிய நட்புகள்..
பல இனிய நாட்கள்..//

ஆகா.. கவிதை கவிதைன்னு கிண்டல் பண்ணலாம்னு பார்த்தா..

பல வருடங்களுக்குப் பிறகு பெற்றோருடன் இருக்கப்போகும் சந்தோஷச் செய்தியால் கவர்ந்துவிட்டீர்கள். வாழ்த்துகள், மகிழ்ந்திருங்கள்.