Pages

  • RSS

09 January, 2011

முத்தம்ம்ம்ம்மா..

தூறல் மழை

உன் அருகில் நான்

நம்மைச் சுமந்த கார்

தெரு சேர்ந்த நீரை மெதுவே கிழித்தபடி

அழகு பேச்சு சிரிப்பென்ற உன்

மும்முனைத் தாக்குதலில்

மோக முளைவிட்டது

உன்னை முத்தமிடும் ஆசை

இதழாயுதத்தை இயக்கிவிட்டேன்

கன்னத்தில் தொடங்கி

காது கழுத்து மூக்கு நெற்றி

தாடை தொட்டு தலை திருப்பி

உதடு வரை ஜெயித்தேன்

என் முத்தச் சத்தங்கள் வெளிக்கேளாமல்

கண்ணாடியில் சடசடத்தது

பெருமழை

இதழ்கள் விழி மறைத்தபோது மட்டும்

செல்லமாய் விலக்கி வைத்தாய்

மூர்க்கமானேன்

வலம் ஒடித்து மரத்தின் கீழ்

காருக்கு அடைக்கலம் கொடுத்தாய்

பொறுமை உடைத்து

முத்தப்போரில் நீ என் எதிராளியானாய்

ஆயுதங்கள் பலவாயின

சிலிர்த்துப் போய் தன் பங்குக்கு

சிலிர் நீரைக் கொட்டி வெட்கியது

மழை நின்ற பின்னும்

பெருமரம்.

23 நல்லவங்க படிச்சாங்களாம்:

கவி அழகன் said...

மனதை கட்டிபோட்ட கவிதை

cheena (சீனா) said...

அன்பின் சுசி - முத்த மழை பெரு மழையாகும் போது பெருமரம் கூட வெட்கப்படுகிறது. அருமையான கற்பனை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Anonymous said...

ஆஹா..ஒரு முடிவோட தான் காரை எடுத்த மாதிரியிருக்கே சுசு..ஆத்தி என்னை இன்னொரு கவிதை எழுத வச்சிடுவீங்க போல இருக்கே...முத்தம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா செம கிக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா

மாணவன் said...

"முத்தம்ம்ம்ம்மா..”

ஓ இதுதான் முத்தகவிதையா...

நல்லாருக்குங்க

மாணவன் said...

///பொறுமை உடைத்து முத்தப்போரில் நீ என் எதிராளியானாய் ஆயுதங்கள் பலவாயின சிலிர்த்துப் போய் தன் பங்குக்கு சிலிர் நீரைக் கொட்டி வெட்கியது மழை நின்ற பின்னும் பெருமரம்.

முத்தத்திலும் வன்முறையா...????

ரசித்த வரிகள்

விஜி said...

ம்ம்ம் அப்புறம்,,,,

vinu said...

mmmmmmmmmmmmmmm

mmmmmmmmmmmmmmmm


mmmmmmmmmmmmmmm


enjoy enjoy naduththunga nadaththungaaaaaaaaaaaaaaaaaa


[ore vayatherichallaaa irruku; innum baceloraavea irrukameannu;

nalla irrunga nalla irrunga]

Chitra said...

சிலிர்த்துப் போய் தன் பங்குக்கு

சிலிர் நீரைக் கொட்டி வெட்கியது

மழை நின்ற பின்னும்

பெருமரம்.

...Beautiful! Super!

கோபிநாத் said...

நல்லாயிருக்கு...! ;)

Anonymous said...

பெருமழையோடு முத்தமழையும் சேர்ந்து மனசையும் நனைச்சிடுச்சு சுசி.
காதல் தாண்டவமாடுது! அழகு :)
//இதழாயுதத்தை //
சூப்பர்!

ராமலக்ஷ்மி said...

சரிம்ம்ம்ம்ம்மா...:)!

அமுதா கிருஷ்ணா said...

சரி..சரி

எல் கே said...

கலக்கல் கவிதை சுசி. கார் பாவம்

Priya said...

முத்தக்கவிதை இனிமையா இருக்கு.... வாழ்த்துக்கள் சுசி!

ப்ரியமுடன் வசந்த் said...

இங்கே பாடுபொருள் முத்தமா? அன்பா?

சுசி said...

ரொம்ப நன்றி யாதவன்.

@@

ரொம்ப நன்றி சீனா ஐயா. உங்களுக்கும் புதுவருட வாழ்த்துகள்.

@@

ஹஹாஹா.. தமிழ்.. காரை எடுத்த அவர்தான் இந்த முடிவுக்கு கொண்டு வந்தார்ப்பா :))

சுசி said...

மாணவன்.. நீங்க மாணவன் தான்ங்க.

@@

அப்புறம்.. இரு விஜி.. மெயில்ல சொல்றேன்..

@@

வாழ்த்திய நீங்களும் நல்லா இருக்கணும் வினு.

சுசி said...

நன்றி சித்ரா.

@@

கோப்ஸ் வொய் ஆச்சரியக்குறி?? :)

@@

’காதல் தாண்டவம்’ அட.. இது நல்லாருக்கே பாலாஜி.

சுசி said...

நன்றி அக்க்க்க்க்க்க்க்கா.. :)

@@

சரின்னா சரி அமுதாக்கா :)

@@

கார்த்திக்.. கிர்ர்ர்ர்ர்ர்..

சுசி said...

நன்றி ப்ரியா. நலமா??

@@

வசந்து.. இதுக்கு என்ன நீங்க ரெண்டு வார்த்தை திட்டி இருக்கலாம். ஆஆவ்வ்வ்.. அன்புதான் உபி.

logu.. said...

ok..ok.. athellam irukattum..

Car rottulathane pochu?

Kavithai super.

r.v.saravanan said...

கலக்கல் கவிதை சுசி

Thamira said...

கவிதை நயம் கொஞ்சம் குறைவெனினும் கவிதையில் நிறைந்திருந்த உணர்வு தெறிக்கிறது. செமை.!