வெள்ளி நைட் அம்மா வந்ததில் இருந்து சனி தொடங்கி ஞாயிறு வரை நான் தான் வ போ அத்தனை வீட்டு வேலையும் செய்தேன். அம்மா பாவம். ரெஸ்ட் எடுக்கணும் இல்லையா. திங்கள் நான் வேலைக்கு போனதிலிருந்து வீடு அவங்க கண்ட்ரோலில். அவ்வளவு இன்பமாகத்தான் இருக்கு. வீட்டுக்குள் வந்து கதவு திறந்ததுமே அம்மாவின் கைமண வாசனை. கூடவே ஃபுட்பால் மேச் சத்தம் அதிகமாக கேட்கும் வீட்டில் அப்பா பார்க்கும் கிரிக்கெட் மேச் சத்தம். கொடுத்து வைத்த நாட்கள்.
--
அம்மா சமையலின் ரெண்டாம் நாள். கருவாட்டு குழம்பு.
‘என்னம்மா சொன்னார் உங்க மருமகன்?’ நான் கேட்க
‘சாப்டு போய்ட்டார்மா. பாஆஆஆவமா இருந்திச்சு பார்க்க’ என்று அம்மா பதிலினார்.
ஒரு வேளை இத்தனை நாள் கழிச்சு நல்லதொரு சாப்பாடு சாப்டார் மனுஷன் என்ற அர்த்தத்தில் சொல்லி இருப்பாங்களோ?? கேள்வியை அடுத்த வாய் சோற்றோடு சேர்த்து முழுங்கிவிட்டேன். அம்மா இருக்கும் இந்த மூணு மாசத்துக்குள் தைரியமா எங்க வீட்டுக்கு சாப்பிட வாங்க. அப்புறம் சொல்லவே இல்லைன்னு சொல்லக் கூடாது.
--
ஸ்கைப்பில் அந்தப் பக்கம் அக்காச்சி. இந்தப் பக்கம் சோஃபாவில் கால் நீட்டியபடி அப்பா. அப்பாவின் அருகிலே இடது நெஞ்சில் சாய்ந்து படுத்தபடி நான். என் தலையில் ஆதரவாய் அப்பாவின் இடக்கரம். வலது நெஞ்சில் சாய்ந்து படுத்தபடி சதுர். சதுரை அணைத்துக் கொண்டு அப்பாவுக்கும் அவருக்கும் இடையில் எட்டிப் பார்த்தபடி அம்மா. காட்சி புரிந்ததா மக்கள்ஸ்?? ’என்னம்மா டல்லா இருக்கே’ என்று கேட்ட அப்பாவுக்கு ’ஒண்ணுமில்லைப்பா’ என்ற பதில் கொடுத்தாள் அக்காச்சி. ரெண்டு நிமிஷம் ஆனதும் ‘என்ன.. ஒருத்தங்க ரொம்ப பொழியறாங்க போலை` என்றாள். ’இவங்களா??’ என்று என் தலையில் கையால் சற்று அழுத்திக் காட்டினார் அப்பா.
‘ம்ம்.. அவங்களேதான். மவளே ஒரு மாசம் மட்டும்தான் உதெல்லாம் உனக்குன்னு நினைச்சுக்கோ’
என்று அவள் சொன்னதில் நான் அனுபவித்தது நினைவு வந்தது. உங்களுக்கு நினைவிருக்கா?? ஊருக்கு அக்காச்சி போயிருந்த பொழுது.. டவல் வச்சிருக்கிங்க இல்லை எல்லாரும். அதே உணர்வுதான் அவளுக்கு இப்போது. இந்த நேரத்தில் நானும் கூட இல்லையே என்ற ஏக்கம், கவலை, இத்தனூண்டு பொறாமை.
--
இப்போது தம்பதி டென்மார்க்கில். பத்து வருடத்தின் பின் சித்தியையும், முதல் முதலாக தம்பி, தங்கச்சியையும் அம்மா பார்த்திருக்கிறார். அதிகமா சித்தியை கவலைப்படுத்த கூடாது என்ற கட்டளை மாதிரியான எங்கள் வேண்டுதலுக்கு அடங்கி அம்மா அடக்கி வாசித்திருக்கிறார். வேலை முடிந்து வரும் தங்கச்சிக்கு அவளவு வரவேற்பு. ’அம்மாவுக்கு எதிர் பெரியம்மா, நிறைய்ய்ய பேசுறாங்க’ என்று என்னிடம் சொன்னவரிடம் ’என்னை மாதிரியாம்மா’ என்று கேட்டேன்.. சிரிக்கிறார். நேற்றுத்தான் யூனிவர்சிட்டியில் இருந்து தம்பி வந்தார். வெடித்து அழுத அம்மாவை அழாதிங்க பெரியம்மா என்று தேற்றியபடி அத்தனை பேரும் அழுதிருக்கிறார்கள். நான் எப்போதும் சொல்வது போல் கண்ணீரும் சமயத்தில் தேவைதான் இல்லையா. சித்தப்பா இப்போதும் எங்களோடு இருந்திருந்தால்..
--
அம்மு ஆல்ரெடி ஒரு நாள் அம்மம்மாவோடு தூக்கம். புதன் கிழமை அவர்கள் திரும்பி வந்ததும் போட்டு வைத்திருக்கும் டைம்டேபிளின் படி இனி தினமும் சதுரும், அம்முவும் அம்மம்மாவோடு தூக்கமாம். ’அப்போ நானு??’ என்று நான் கேட்ட கேள்வி யார் காதிலும் விழவில்லை. பொறுத்திருக்கிறேன். நான் ஒரு தனி பிளானோடு. ஹஹாஹா.. அப்படியே வில்லி சிரிப்பு மாதிரி இல்லை??
--
அக்காச்சி என்னிடம் கவனம்ம்ம்ம்மா சேர்க்கச் சொல்லி அம்மாவிடம் அனுப்பிவிட்டிருக்கா. யாரையென்று பாருங்கள். இவர்தானாம் அவங்க இடத்தில் இருக்கிற வரசித்தி விநாயகர். இப்படி எதுவாவது எழுதி, சொல்லி, செய்து என்னை கண்ணை கசக்க வைப்பதே அவள் வேலை. லவ் யூ அக்காச்சி.
அவர் அருள் கிடைத்து யாவரும் நலமா இருக்கணும்.
வர்ட்டா..
28 நல்லவங்க படிச்சாங்களாம்:
சில எழுத்துகள் படிக்க படிக்க சந்தோஷமா இருக்கும் மெல்லிசா சிரிச்சுகிட்டே படிப்போம் தெரியுமா அதுமாதிரி படிச்சேன் நான். அம்மாவுக்கு வணக்கம்.
அம்மா அப்டேட்ஸ் அருமை . விநாயகர் சூப்பர் ...அதை அபப்டியே பார்சல் பண்ணிடுங்க சுசி
அம்மா அப்பா அப்டேட்ஸ் ஆரம்பிச்சாச்சு! வாரம் ஒன்னாவது இந்த மாதிரி போடுங்க சுசி!
//ஹஹாஹா.. அப்படியே வில்லி சிரிப்பு மாதிரி இல்லை?? //
இல்லையே காமெடி சிரிப்பு மாதிரில இருக்கு ;)
enjoyed the way you enjoyed :)
அவர் அருள் கிடைத்து யாவரும் நலமா இருக்கணும்
athe athea atheathaaaaaaaaaaaaaaaan
நல்லா இருக்கு சுசி. பதிவு, வினயாகர் ரெண்டும்தான்:-)
பெற்றவர்களின் நிழலில்
இருப்பது சுகம்.
அந்த சுகம் தொடர
வரசித்தி விநாயகரைப்
ப்ரார்த்திக்கிறேன்.
அம்மா இருக்கும் இந்த மூணு மாசத்துக்குள் தைரியமா எங்க வீட்டுக்கு சாப்பிட வாங்க. அப்புறம் சொல்லவே இல்லைன்னு சொல்லக் கூடாது.
....அம்மாவை கூப்பிட்டு கொண்டு, எப்போ அமெரிக்கா வர போறீங்க? ஹி,ஹி,ஹி,ஹி...
//வரசித்தி விநாயகர். இப்படி எதுவாவது எழுதி, சொல்லி, செய்து என்னை கண்ணை கசக்க வைப்பதே அவள் வேலை. லவ் யூ அக்காச்சி. [Image] அவர் அருள் கிடைத்து யாவரும் நலமா இருக்கணும்.///
அனைவரும் நலமுடன் இருப்போம்...
பகிர்வுக்கு நன்றிங்க...
//கும்மியோ குத்தோ வாழ்த்தோ.. உங்க இஷ்டம் மக்கள்ஸ்..
ஆனா எழுதிட்டு மட்டும் போங்க.//
ஹா ஹா ஹா செம்ம கலக்கல்....
//அம்மா இருக்கும் இந்த மூணு மாசத்துக்குள் தைரியமா எங்க வீட்டுக்கு சாப்பிட வாங்க. அப்புறம் சொல்லவே இல்லைன்னு சொல்லக் கூடாது//
கண்டிப்பா வரேன்!!!!!
வரமாட்டேன்னு நினைகதீங்க! எனக்கு
இந்த வெக்கம் வேலாயுதம்,மானம் மாரியாத்தா
எல்லாம் கிடையாது!
அட்ரஸ் கொடுங்க!!
சந்தோசமா அம்மா அப்பாவோட இருடா. இது வாழ்நாளில் இனி எப்ப கிடைக்கும்னு தெரியாது, சந்தோசமா ஒவ்வொரு நொடியும் அனுபவி, என் வணக்கத்தையும் சொல்லுப்பா
நல்ல பகிர்வு..
அம்மா அப்டேட்ஸ் அருமை. அம்மாவுக்கு வணக்கம்.
//‘யாவரும் நலமா’ இருக்கணும்.//
ஆமாம் சுசி.
மூணு மாதம் கழிந்தால் தைரியமா வர முடியாதா:))?
நெகிழ்வான பதிவு.
மகிழ்ச்சி ;)
வரசித்தி விநாயகர் அருள் கிடைத்து யாவரும் நலமா இருக்கணும்.
sweet times :)
படிக்கும் போதே சந்தோஷமா இருக்கு சுசி
naa enga anuppinen? varasithiyar muththu muththaaa engkanavila vanthu ungidda po porennaaaru anuppiye vidden. unna kiddve irunthu paaththukkaddum
இனிமையான பகிர்வு..சுசி மீண்டும் சின்ன குழந்தையாகிவிட்டது மாதிரி தோன்றியது மனசுகுள்ள..
அருமை.
அம்மா கிட்ட சொல்லிடறேன் உபி. அப்போ அப்பாவுக்கு??
@@
ஹஹாஹா.. அனுப்பத்தான் நினைச்சேன் கார்த்திக்.. அக்காச்சி கமன்ட் பாருங்க :)
@@
பாலாஜி.. தொடர்ந்து அம்மா பத்தியே எழுதிடறேன் :) அப்புறம் அந்த சிரிப்புக்கு.. ரைட்டு!!
நலமா ஜமால்??
@@
வினு :)
@@
நன்றி கோபி.
நன்றி மதுமிதா.
@@
நீங்க டிக்கட் அனுப்பின உடனவே சித்ரா.. ஹஹாஹா..
@@
நன்றி மாணவன்.
மகாராஜன் எழுதிக்கோங்க.. நம்பர் , பாரதியார் தெரு, நார்வே.
@@
கண்டிப்பா சொல்றேன் விஜி.
@@
நன்றி ஜயந்த்.
நன்றி குமார்.
@@
அக்கா.. வரலாம்.. ஆனா சமையல் நான் :))))
@@
//மகிழ்ச்சி// படம் பாத்திங்களா கோப்ஸ்??
அதேதான் சரவணன்.
@@
குழந்தைகளும் பெத்தவங்களும் தான் இனிமேல் நமக்கு இனிமை இல்லையா அருண்.
@@
அக்காச்சி.. லவ் யூ.. லவ் யூ.. லவ் யூ.. லவ் யூ.. லவ் யூ..
நன்றி தமிழ்.. அது ஏன்னா பெத்தவங்க இப்போதும் எங்களை குழந்தையா தான் பாக்கராங்கப்பா :)
Post a Comment