இன்னமும் பேசிக் கொண்டே இருக்கிறோம். ஏதாவதொன்றில் காவலன் வந்து போகிறான். ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் அறிந்த எல்லோரையும் திருப்திப்படுத்தி இருக்கிறார் விஜய் எனும்போது என் சந்தோஷம் பற்றி சொல்லத் தேவையில்லை. தியேட்டர் வந்திருந்தவர்களில் யாரும் படத்தை குறைவாக சொல்லவில்லை. வெளியே வரும்போது பின்னால் வந்த ஒருவர் சொல்லியது ‘நல்லவேளை.. வீக் எண்ட்ல மட்டும் போட்டிருந்தா லேட்டா வந்த எனக்கு சீட் கிடைச்சிருக்காது’ வேலை நாளையும் பொருட்படுத்தாமல் நிறைவான கூட்டம். இன்னொருவர் ‘இன்னொரு ஷோ ஓட சொல்ணும்பா. மனுஷன் அசத்திட்டான் போ’ என்பதாய் சொல்லிக் கொண்டு போனார்.
பெரிய ஒரு குறை. டிக்கட் வந்து சேரவில்லையாம். குட்டியாக ஒரு சீட்டுத்தான் கொடுத்தார்கள். டிக்கட்டை போட்டா பிடிச்சு பிளாக்கில் போடுவதை அவர்களிடம் சொல்ல முடியாதே. 6 மணிக்கு படம். நாங்கள் உள்ளே போனபோது மணி 5:15. அப்படியும் பின் வரிசைகள் முழுவதும் ஃபுல். ஜாக்கெட், மஃப்ளர், சீட்டுக்கொன்றாக ஒரு கிளவ்ஸ், பாப்கார்ன் பாக்ஸ் என்று வைத்து சகட்டுமேனிக்கு இடம் பிடித்து வைத்திருந்தார்கள். இடையிடையே ஒன்றிரண்டு காலியாக இருந்ததே ஒழிய 6 சீட் மொத்தமாக கிடைக்கவில்லை. வேறு வழியின்றி முன்னிருந்து ஐந்தாவது வரிசையில் 6 சீட்களில் நானும் துண்டை போட்டேன்.
நேற்று கிளம்பும்போதே அப்பா என்ன சொல்வாரோ என்ற எதிர்பார்ப்போடுதான் போனேன். அப்பாவுக்கு விஜய் பிடிக்காது. ரொம்ப நாளைக்கு அப்புறம் தியேட்டர் போவதன் மகிழ்வு ரேகைகள் அம்மா முகத்திலும் தெரிந்தது. அம்மாவுக்கும் விஜய்.. ம்ஹூம்.. கண்ணாளன் அசின் ரசிகன் என்பதால் கவலை இல்லை. ஆனால் அசின் கொஞ்சம் பெரிய பொண்ணா ஆயிட்டாங்க போலன்னு எனக்கு போலவே அவருக்கும் தோணிச்சாம்.
’பரவால்லை.. விஜய் இந்த படத்திலை நல்ல நடிப்பு. முடிவு கொஞ்சம் வேற மாதிரி இருந்திருக்கலாம். மத்தபடி எல்லாமே நல்லாருக்கு’ என்று அப்பா சொன்னார். கடைசிக் காட்சிகளில் அம்மா அடிக்கடி கண்ணாடி கழற்றி கண்ணீரை துடைத்துக்கொண்டு இருந்தது என் கண்ணீர்க் கண்களுக்குள் நன்றாகத் தெரிந்தது. வீட்டுக்கு வந்ததும் ஸ்கைப்பில் அம்மா படம் பற்றி அக்காச்சியிடம் புகழ்ந்து கொண்டிருந்தார். ’விடுங்கம்மா. அவளே போய் பார்க்கட்டும். அப்போதான் இன்னும் நல்லாருக்கும். ஆனா கட்சில அம்ஸ் அழுதிச்சு அக்காச்சி. பக்கத்திலை மருமகன் இருக்கும்போதே இந்த பொண்ணு விஜய இவ்ளோ சைட் அடிக்குதேன்னு நினைச்சுது போல. அப்பா கைல வேற அடிக்கடி எட்டி எட்டி தட்டிட்டே இருந்துச்சு’ என்றேன். ‘அய்யோ அப்டில்லாம் இல்லைம்மா. அது அப்பாவுக்கு சாக்லெட், பாப்கார்ன் குடுத்தேன். அதோட எனக்கு ரொம்ப கவலையா போச்சும்மா.. அந்த குட்டிப் பையன் வந்ததும்.. அதுக்கு பின்னாடி நடக்குறதும்’னாங்க.
எனக்கும் ஒரு சின்னக் குறை. ஸ்டெப் ஸ்டெப் பாடல் இன்னும் கொஞ்ஞ்ஞ்சம் நல்லா வந்திருக்கலாம். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் இந்த பாடல் வருவதால் என் எதிர்பார்ப்போடு பொருந்தவில்லை. வடிவேலும் விஜயும் சேர்ந்து செய்யும் காமெடியில் வயிறு புண். சதுவும், அம்முவும் அத்தனை சிரிப்ப்ப்ப்பு. இந்தப் படத்தை யாராச்சும் ரீமேக் செய்யலாமேன்னு நான் ரத்த சரித்திரம் பாத்திட்டு எழுதினது போல எதாவது உளறி வச்சிடுவேன்னு நினைச்சுதோ என்னவோ ரெண்டு நாள் முன்னதாகவே ஒரு நட்பு அடிக்கடி சொல்லிச்சு இதோட ஒரிஜினல் நான் பாத்திருக்கேன்னு.
நீ எப்டி இருந்தா என்ன. எனக்கு உன் மனம்தான் முக்கியம். நீ இல்லை என்பதாய் அம்முவிடம் சொல்லும்போது என் பள்ளி நாட்களில் எனக்கும் என் உயிர் நட்புக்கும் நடந்த ஒரு நிகழ்வு நினைவு வந்திச்சு. அவ கிட்ட சொன்னேன் உதைக்காத குறை எனக்கு. அது பத்தி தனி போஸ்ட்ல சொல்றேன். யாரது பாடலில் ரெண்டு விஜயும் வேறுபட்ட நடிப்பில் அவ்ளோ அசத்துறாங்க. பார்க்கில் அசினை அம்முக்குட்டியாக நினைத்து பேசிப் பார்க்கும் இடம் அருமை. இப்போ நீங்க எனக்காக வேண்டிக்கோங்கன்னு அசினிடம் சொல்லும்போது மூக்கை சுழிப்பது செம க்யூட். பாருங்க. இத்தோட நான் முடிக்கலைன்னா அப்புறம் முழு படத்தையும் இங்க சொல்லிடுவேன். அதனால இந்த படத்தை இப்போ பாருங்க. இஷ்டப்பட்டவங்க தியேட்டர்ல போய் படத்தை பாருங்க. காவலன் கலக்கல். விஜய் விஜய் தான்.
26 நல்லவங்க படிச்சாங்களாம்:
//அதனால இந்த படத்தை இப்போ பாருங்க. இஷ்டப்பட்டவங்க தியேட்டர்ல போய் படத்தை பாருங்க. காவலன் கலக்கல். விஜய் விஜய் தான்.//
ஓகே ரைட்டு பார்த்துடலாம்.....
நீங்க ரசித்ததை அழகாக பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றிங்க...
ஹ்ம்ம் விதி வலியது
கண்ணாடி கழற்றி கண்ணீரை துடைத்துக்கொண்டு இருந்தது என் கண்ணீர்க் கண்களுக்குள் நன்றாகத் தெரிந்தது.
கவிதை போல காவலனுக்கு நல்ல விமர்சனம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்.
அசத்தல் வரிகள்
enjoy enjoy
onnum solla mudiyalaaa
சூப்பர் ................
காவலனை பார்க்கும் போது எனக்கும் இதே உணர்வுகள் தான் விஜய் நடிப்பு பிரமாதம்
Hats of vijay anna
சோ, படம் நல்லா இருக்குன்னு சொல்றீங்க. இங்கே ரிலீஸ் ஆகலை:(
அப்போ படம் பரக்கலாமுனு சொல்லுறீங்க!!!!!!!!!
சுசி மேடம் கிட்ட நான் இங்கே வந்துட்டு போனேன்னு சொல்லிடுங்க. :-)
step step paatula bodyguardla dressle vara vendiyirunthathu. athaan avlo catchya illai..
super review
இனிமேல் தான் பார்க்கணும். என் பசங்க பார்த்துட்டு நல்லாயிருக்குன்னு சொன்னாங்க.
ம்ம்ம்.. கண்டிப்பா பார்க்கிறேன், சிடில ;)
அப்போ படம் பரக்கலாமுனு சொல்லுறீங்க??????????????
ipdi oru nalla padam marupadiyum parka mudiyumanu theriyala.. vijay huh.. enna solrathune theriyala.. amaithiya irunthu thanai porichithalinavangala amaithiakitaru.. poruthar bhoomi alwar, bhoominathanai ne nindru vendru vittai.. ovovoru chinna chinna mugabavangal vera yaaralayum kodukave mudiyathu ungalai pola.. avolo ishtam.. en mela, enakaga vendikanga, ipdi pala idangla avara paarata vaarthai kidaikala..intha kathaiku thevaiya aatam iruku ithu pothum.. kadaisila diarya padichitu unmai therinjathum asin kaiya pidichu varutham, manipu, kaadhal ipdi oru kalavaiyoda avaroda muga bavatha paakura anaivarum purinjukuvanga avaru en ivalo periya mass herova irukarunu..ivalo periya thadaikalayum thaandi thanga rathathil oorvalam varukiran bhoominathan. hatss off vijay.
படம் நல்லாத்தான் இருக்குது.
நல்ல விமர்சனம் வாழ்த்துக்கள்.
நல்ல அனுபவ விமர்சனம் கொடுத்திருக்கிங்க ;) சூப்பரு ;)
இந்த வாரயிருதியில் போயிடுவோம் ;)
சித்திக் - விஜய் வெற்றி கூட்டணியாக அமைவது 2 வது படம்...வளர்க அவர்க்ள கூட்டணி ;)
\\அசினிடம் சொல்லும்போது மூக்கை சுழிப்பது செம க்யூட். \\
மூக்கை சுழிப்பதுல என்ன செம க்யூட் ;))) (சும்மா என்னோட பங்கு)
பாத்துட்டு சொல்லுங்க மாணவன்.
@@
கார்த்திக்.. விஜய்க்காக கிர்ர்ர்ர்ர்ர்ரோட விட்டிடறேன் :)
@@
நன்றி யாதவன். நீங்க பாத்திங்களா??
வினு.. ப்ரஃபைல்ல விஜய் அசத்தறார்.
@@
ஓ.. சிடி வாங்கி பாருங்க கோபி.
@@
முதல் வருகைக்கு நன்றி மஹாராஜன். பார்க்கலாமே.
ஹஹாஹா.. சித்ரா.. :)
@@
அதெல்லாம் சூப்பரா இருந்தது கார்க்கி. நான் இன்னும் கொஞ்சம் வித்தியாசமான சிச்சுவேஷன் நினைச்சிருந்தேன் :)
@@
பாருங்க அமுதா.
பாருங்க பாலாஜி.
@@
முதல் வருகைக்கும் விரிவான கருத்துப் பகிர்வுக்கும் நன்றி லோரா. எல்லாத்தையும் சொல்லிட்டா இனிமே பாக்கிறவங்களுக்கு நல்லா இருக்காதேன்னு தான் எல்லாம் எழுதலை. அதோட நான் விமர்சனமா எழுதலைங்க :)
@@
அமைதிச்சாரல்.. அதை ஏங்க மெதுவா சொல்றிங்க :)
நன்றி சரவணன்.
@@
கோப்ஸ்.. போனா போதாது.. பாக்கணும் :) ஹிஹிஹி.. அந்த மூக்கை சுழிக்கிற பழக்கம் எனக்கும் இருக்குதாக்கும். அதான் விஜய் சுழிச்சதும் பிடிச்சு போச்சு.
உங்க பங்குக்கு விஜய்க்காக பாங்கா பதில் சொல்லிட்டேன். ஓடி போய்டுங்க.
நான் நோ கமெண்ட்ஸ்னு போட்டதால எனக்கு படம் பிடிக்காம போயிடுச்சோன்னு நீங்க நினைச்சுப்பீங்களோனு நான் நினைக்குறதா நீங்க சந்தேகப்படுவீஙக்ளோன்னு எனக்கு சந்தேகமா.. சே.! படம் நல்லாருக்குதுபா.!
ம்ம் ஒரு வழியா காவலன் பார்த்துட்டீங்க. சார் அசின் இரசிகரா?. அசின் லண்டனில் ஒரு கார் விபத்தில் அடிபட்டு மூக்கு கண்ணம் எல்லாம் பிலாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்கள் என்று ஒரு செய்தி. அதுதான் ஆள் சிலைட்டா மாற்றம்.
நேற்றுதான் பார்த்தேன்;எனக்கும் இதே உணர்வுகள்தான்!
நல்ல விமர்சனம்!
Post a Comment