Pages

  • RSS

03 February, 2011

புது வருஷம்.

வருஷம் பிறந்து ஒரு மாதம் ஆன பின்பு அட அதுக்குள்ளை இவளவு நாள் போயிடிச்சே என்று கவலைப்படுபவர்கள் பலர். அப்பாடா ஒரு மாசம் போயாச்சு என்று நிம்மதி அடைபவர்கள் சிலர். சிலரும் பலரும் மாறலாம். புது வருஷம் தரும் நினைவுகள், சந்தோஷங்கள் இலகுவில் மனம் விட்டுப் போவதில்லை. வருடத்தின் தொடரும் நாட்களில் இடையில் எங்காவது அவை வந்து வந்து போகும். ’வருஷம் பிறக்கும்போதே தெரியும் எனக்கு நல்லா இருக்கும்னு’ என்று சிரிப்பவர்களும், ’ச்சே.. வருஷம் பிறக்கும்போதே தெரியும் இந்த வருஷம் இப்படித்தான் இருக்கும்னு’ என்று சலிப்பவர்களும் ஒன்றில் நாமாகவோ, இல்லை வேறு யாராகவோ இருக்கலாம். ஏதோ சொல்ல வந்தேன். ரொம்பக் குழப்பமா இருப்பதாக எனக்கே தோன்றுவதால் இதை இத்தோடு விட்டு விடலாம்.

ஒவொரு நியூ இயர் ஈவ்க்கும் கண்ஸ் ஃப்ரெண்ட் வீட்டில் டின்னர். ஃப்ரெண்ட் பிறந்த உடனே நர்சுக்குப் பதில் கடிகாரம்தான் கண்ணில் பட்டிருக்கும்போல. இம் முறை(யாவது) சொன்ன டைமுக்கு போக வேண்டுமென்று கண்ஸ் சபதம் போடாத குறை. ‘நாலு முப்பதுக்கு நீ ரெடி ஆகலைன்னா பெரிய வண்டி எடுத்துட்டு வருவே நீ. நான் கிளம்பிடுவேன்’ என்ற அவரின் மிரட்டலை கொலைமிரட்டலாக்கியது குவிந்திருந்த ஸ்னோவும், உறைந்திருந்த தெருக்களும். சரியாக 16:50 க்கு காலிங் பெல்லை அடித்தவர்களைப் பார்த்து நண்பர் குடும்பம் மயக்கம் போடாத குறை. ஒரு நண்பியின் மூன்று மாதக் குழந்தையோடு நான் ஐக்கியம். குழந்தைகள் என்றும் சொர்க்கம்.

நண்பர்கள் பாட்டிலோடு ஒன்று கூடியபோது நண்பிகள் சாப்பிட்டு முடித்தோம். ‘எங்கேங்க என் ரெண்டாவது பையன். கண்லவே காண்லை நான்’ என்று மேலே சொன்ன மூன்று மாதக் குழந்தையை தூக்கி வைத்திருந்த என்னைப் பார்த்து நண்பர் கேட்டதும் விளையாட்டு என்றுதான் நானும் முதலில் நினைத்தேன். இரகசியமாக அவரை கட்டிலில் படுக்க வைத்துவிட்டு மற்றவர்கள் வந்தபோதுதான் அவர் நிலை புரிந்தது. யாராவது ஒருத்தர் இப்படியான டின்னர்களில் மட்டையைப் போட்டுவிட்டால் அவர் தலை அல்ல ஆளே உருட்டப்படும் என்ற நியதிக்கும், அவரின் மனைவி உடனேயே மூட்டையைக் கட்டிக்கொண்டு கிளம்ப முயல்வார் என்ற வழக்குக்கும் ஏற்ப நிலைமை கொஞ்சம் மோசமாகியது.

அவரை தெளி நிலைக்குக் கொண்டு வரவென்று அவரவர் அனுபவத்தை சொல்லி பிளாக் காஃபி, சாக்லெட், ஜில்லென்று தண்ணீரில் தொடங்கி என்னென்னவோ எல்லாம் செய்து வாந்தியில் கொண்டுவந்து தூக்கத்தில் முடித்தார்கள். அவரை வாரியது அலுத்துப் போய் ஏதாவது பாடலாமே என்று ஆரம்பித்தோம். அவர்கள் எல்லோருக்கும் பழைய/80 களின் பாடல்களே பிடித்திருந்தது. புதுப் பாடல் பக்கம் யாரும் வரவில்லை. ஒரு குத்துப்பாடல் கூட இல்லாமல் காது வலித்தது. அட சாமிகளா.. ஏன் இப்டி அழுது வடியறிங்க. வேற பாடுங்களேன்’ என்றேன். என்னையே பாடச் சொன்னார்கள். ‘சூப்பரா ஒரு சிணுங்கல் பாட்டு பாடலாமா’ என்று கேட்டு ஒட்டு மொத்த ஆமோதிப்பையும் வாங்கிக் கொண்டு ஆரம்பித்தேன்..

‘நிலாக் காயுது.. நேரம் நல்ல நேரம்..’

சிரிப்புச் சத்தத்தில் ‘பித்தம்’ தெளிந்து எழுந்து வந்தார் மட்டையைப் போட்ட நண்பர். மீண்டும் களைகட்டியது அவர் தலை உருட்டும் படலம். கூடவே ஸ்வீட், காரம், சூடா டீ வேறு. சொல்ல மறந்துவிட்டேன். நண்பரின் ஸ்பெஷலே அவர் செய்யும் டெசர்ட்தான். ஒவொரு வருஷமும் புதிது புதிதாகத் தேடிப் பிடித்துச் செய்வார். அதை அவர் ப்ரசண்ட் பண்ணும் விதமும் அற்புதமாக இருக்கும். அந்த நேரத்தில் யாருக்கும் கிச்சனுக்குள் நுழைய அனுமதி இல்லை. இராணுவ ரகசியம் ரேஞ்சுக்கு ரெசிப்பியையும் பாதுகாப்பார்.

புது வருஷம் பிறக்கும் நேரம் எங்கள் வீட்டில் சாமி விளக்கு ஏற்றுவோம் என்பதால் நாங்கள் அரை மணி முன்னதாகவே கிளம்ப ஆயத்தமானோம். மற்றையவர்களும் கிளம்புவதற்குத் தயாரானார்கள். அப்போது முழுத் தெளிவானாலும் சிந்தனை வசப்பட்டிருந்த நண்பர் கேட்டார்..

‘நீங்க குடிச்ச வைன் தானேடா நானும் குடிச்சேன். எனக்கு மட்டும் ஏன் இப்டி ஆச்சு??’

உங்களுக்கு பதில் தெரிஞ்சா சொல்லுங்கள் நண்பர்ஸ்.

அத்தனை அழகாய், வண்ண வண்ணமாய் வெடிகள் வானை அலங்கரித்தன. நான் எடுத்த ஃபோட்டோவில் எல்லாம் நீஈஈஈஈளமாக மஞ்சள் வண்ணக் கோடுகள் மட்டுமே தெரிந்தன. சதுர் கொளுத்திப் போட்ட வெடிகளை விட பனி காரணமாகப் புகையே அதிகமாகத்  தெரிகிறது.

107 108

வர்ட்டா..

19 நல்லவங்க படிச்சாங்களாம்:

எல் கே said...

ரொம்பாஆஆ சீக்கிரமா புத்தாண்டு போஸ்ட் போட்டு இருக்கீங்க சுசி

Chitra said...

அமர்க்களமா.....கலக்கலா ....புது வருடம் ஆரம்பாயிருக்குதே.... Super!

Balaji saravana said...

//நிலா காயுது//
சிச்சுவேசன் சாங்?! ஹி ஹி..
வைன் குடிச்சே மட்டையாகிட்டாரா?! ரைட்டு!

பாலா said...

முதல் முதலா வடை வாங்கி இருக்கேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

:-))))

கோபிநாத் said...

:))

ப்ரியமுடன் வசந்த் said...

:-))

பா.ராஜாராம் said...

:-)) கலக்கல் சுசி!

//‘நீங்க குடிச்ச வைன் தானேடா நானும் குடிச்சேன். எனக்கு மட்டும் ஏன் இப்டி ஆச்சு??’//

"எல்லோரும் குடிச்ச வைன்தான் நானும் குடிச்சேன். நான் மட்டும் எங்கெல்லாம் போய்ட்டு வந்தேன் தெரியுமா? வீட்லயே இருக்கவா குடிக்கிறது?" என்று கேட்டு பழகுங்க பாசு.

--செயலாளர், மட்டையாளர்கள் சங்கம்.

Priya said...

மிக அமர்களமா ஆரம்பித்து இருக்கு உங்க புத்தாண்டு!
தொடக்க வரிகளில் ஏதோ முக்கியமா சொல்ல வறிங்கன்னு நினைச்சேன்... ஏன் சுசி? நீங்களே குழம்பி போயிட்டீங்களா:)

மாணவன் said...

ரொம்ப சிறப்பாகவே ஆரம்பித்திருக்கிறது உங்க புது வருஷம்...

:))

Gopi Ramamoorthy said...

ஹாப்பி நியூ இயர்:-)

அப்பாவி தங்கமணி said...

ஹா ஹா ஹா... parties எப்பவும் ரகளை தான் சுசி... இங்கயும் பாட்டுக்கு பாட்டு, சினிமா பேரு சொல்லி விளையாட்டு, யார் மனசுல யாரு எல்லாம் விளையாடுவோம்... செம ரகளையா இருக்கும்... நட்புகள் இன்னும் நெருங்க இது போன்ற informal மிக பெரிய காரணம்...

malarvizhi said...

ரொம்ப சிறப்புடன் ஆரம்பித்து இருக்கு புத்தாண்டு.புத்தாண்டு வாழ்த்துக்கள்.

சீமான்கனி said...

கலாட்டாவும் கலக்கலுமாய் புதுவருட கொண்டாட்டம் என்ன..... கொஞ்சம் தாமதமாய் தெரிஞ்சுகிட்டேன்... வாழ்த்துகள் சுசிக்......கா,,...

சுசி said...

கார்த்திக்.. போன வருஷம் போன சம்மர் ஹாலிடே மீதி இனிமேதான் எழுதணும்.

@@

நன்றி சித்ரா.

@@

ஹிஹிஹி.. அதான் எங்களுக்கு இப்போதும் சிரிப்பு பாலாஜி.

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி பாலா.

@@

ஆதி சிரிச்சிட்டிங்களா.. அப்பாடா..

@@

இன்னும் கொஞ்சம் சத்தமா சிரிங்க கோப்ஸ்.

சுசி said...

நீங்களும் சிரிப்புத்தானா உ பி..

@@

ஹஹாஹா.. பாரா.. இதுக்கு சங்கமே இருக்குங்களா :)

@@

அதேதான் பிரியா. குழப்பத்திலை எழுத வந்தது மறந்து போச்சு.

சுசி said...

நன்றி மாணவன்.

@@

உங்களுக்கும் அட்வான்ஸ் நியூ இயர் விஷஸ் கோபி :)

@@

சரியா சொன்னிங்க புவனா.

சுசி said...

நன்றி மலர்விழி. நலமா??

@@

ஹிஹிஹி.. பரவால்லை கனி. நானே லேட்டா தான் எழுதி இருக்கேன்.