Pages

  • RSS

06 February, 2011

அம்ம்ம்ம்மா..

அம்மா அக்காச்சியோடு ஸ்கைப்பில் பேசும்போது ‘எனக்குத்தான்மா பெரிய்ய்ய்ய கவலை’ என்றார்கள். கிச்சன் நோக்கி போய்க்கொண்டிருந்த நான் ஃப்ரீஸ் ஆகி நின்று தொடர்ந்து கேட்டதில் தெரிய வந்தது. இங்கு வந்ததில் இரண்டு கிலோ வெயிட் போட்டு விட்டார்களாம். அம்மா சாப்பாட்டு நேரத்தை தள்ளிப் போடுவதில் ரொம்ப சமத்து. நொறுக்ஸ் இருந்தால் போதும். டீயும் ரெண்டு பிஸ்கட்டும் கடித்துவிட்டு மதியச் சாப்பாட்டை மாலையில் சாப்பிடுவாங்க. இரவுச் சாப்பாடு தூங்க முன். போதாதென்று டீ குடிக்கப் போகும்போது எங்களுக்கும் வேண்டுமா என்று தவறாமல் கேட்பாங்க. வயிறு கும்மென்று இருந்தாலும் அம்மா டீயின் சுவை ஆம் சொல்ல வைக்கும். நேற்று எதேச்சையாகக் கவனித்தேன். தன் பங்கு டீக்குள் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு போலவே பால் சேர்த்தார்கள். ஏனென்றேன்.

‘எடை கூடுதும்மா. இதிலை நிறைய பால் வேற குடிச்சா இன்னமும் எடை கூடிடும் இல்லை’

#####

ஏறிப் போகும் எடையைப் பார்த்து நானும் மிரண்டு கொண்டு இருக்கிறேன். அம்மா எடையை அல்ல. என் எடையை. அம்மா தான் குண்ண்ண்டா இருப்பதாகவே எப்போதும் சொல்வாங்க. இப்போது என் பக்கத்திலை குட்ட்ட்டியா இருக்காங்க. வேலை எல்லாம் அம்மாவே முடித்துவிடுவார்கள். வீட்டில் வெட்டியாக இருக்கிறேன். அதனால் அம்மா வந்ததிலிருந்து பயத்தில் எடை பார்க்கவில்லை. ஆஃபீஸ்ல இருந்து வந்து சாப்பிட்டு நேராக அப்பா பக்கத்தில் சோஃபாவில் உக்கார்ந்து விடுவேன். மடியில் லாப் டாப். அவர்களோட பேசியபடியே லைட்டாக கண் சொக்கும், த்லை சாயும், ஆனால் காது நன்றாகக் கேட்கும். இதுதான் உண்ட களையென்றால் அதுதான் அப்போது எனக்கும். அம்மா அப்பாவிடம் சொன்னார்.

‘பாவம்ங்க என் பொண்ணு. நான் வந்ததுக்கு இளைச்ச்ச்ச்சுப் போய்ட்டா. முகமெல்லாம் எப்டி ஒட்டிப் போச்சு பாருங்க. ஆஃபீஸ்ல நாள் முழுக்க வேலை. அது முடிச்சு வீட்டுக்கு வந்தா இந்த எழுதுகோலை மடில வச்சு எழுத்துவேலை.. ரெஸ்ட் எடுக்கவே மாட்றா’

#####

எங்களுக்கு நிறைய வாங்கி வந்ததில் லக்கேஜில் இடம் இல்லாமல் அம்மாவின் சாரி ஒன்றுதான் வந்து சேர்ந்திருக்கிறது. கோயிலுக்குப் போக இன்னம் கொஞ்சம் நல்லதாக ஒன்று கட்டச் சொல்லி என்னிடம் இருந்த சாரிகளைக் காட்டினேன். ஆரஞ்சில் ஒன்றை எடுத்தார்கள். வேறும் சிலதும் எடுத்துக்கொள்ளச் சொன்னேன். அங்கே கிளாசெட் நிறைய வைத்திருக்கும் சாரிகளோடு இதையும் கொண்டு போனால் அக்காச்சி திட்டுக்கு ஆளாகும் அபாயம் நினைவு வந்ததோ என்னவோ, அப்பாவிடம் காட்டிச் சொன்னார்கள்.

‘என்ன பொண்ணுங்க இவ. என் வயசுக்காரங்க கட்ற சாரில்லாம் கட்டிட்டு இருக்கா. இத நானே எடுத்துட்டு போறேன். அங்க போயி இத விட நல்லதா இவளுக்கு ஏத்தாப்ல பார்சல் பண்றேன் பாருங்க’

#####

காரில் போய்க்கொண்டிருக்கும்போது இங்கே எந்த காருக்கு மவுசு ஜாஸ்தி, விண்டர் வெதர் + மலைப்பாதைக்கு ஏற்றது எது என்று கண்சும் அப்பாவும் பேசிக்கொண்டு வந்தார்கள். எல்லாம் கேட்டுக் கொண்டு வந்த அம்மா கடைசியில் சொன்னார்கள்.

‘கனடாலன்னா Honda CRV தான் நல்லதுன்னு எல்லாரும் சொல்வாங்க’

அப்பா அம்மாவுக்கு ஏறி இறங்கக் கஷ்டமில்லாமல் இருக்கவென்று பார்த்துப் பார்த்து வாங்கிய வண்டியின் பெயர் என்னவென்று இப்போ நான் சொல்லணுமா என்ன.

#####

நான் டைனிங்டேபிளில் இருந்து எழுதுகோலில் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். அம்மா அப்பாவுக்கு ரொட்டி (மாவை பரோட்டாவுக்குப் போல குழைத்து, சப்பாத்தி போல் தட்டையாகச் சுட்டால் எங்கள் ஊரில் ரொட்டி) சுட்டுக்கொண்டிருந்தார். கொஞ்சம் கருகிய வாசம் வந்ததால் என்னவென்று கேட்டேன். அதெல்லாம் இல்லை எல்லாம் பதமாக இருப்பதாகச் சொன்னவர்கள் என்னைக் கடந்து அப்பாவுக்கு எடுத்துப் போகும்போது சொல்லிக் கொண்டு போகிறார்கள்.

‘கொஞ்சம் கருகிப் போச்சுத்தான். ஆனா அப்பாவுக்கு அதுதான் பிடிக்கும்’

#####

j 014 (3)

22 நல்லவங்க படிச்சாங்களாம்:

Chitra said...

உங்கள் அம்மாவை உடனே சந்திக்க வேண்டும் போல இருந்தது.... She is so sweet! You are blessed!

Chitra said...

கொஞ்சம் கருகிய வாசம் வந்ததால் என்னவென்று கேட்டேன். அதெல்லாம் இல்லை எல்லாம் பதமாக இருப்பதாகச் சொன்னவர்கள் என்னைக் கடந்து அப்பாவுக்கு எடுத்துப் போகும்போது சொல்லிக் கொண்டு போகிறார்கள்.

‘கொஞ்சம் கருகிப் போச்சுத்தான். ஆனா அப்பாவுக்கு அதுதான் பிடிக்கும்’


....That shows that they are HAPPILY married... Praise the Lord!

Chitra said...

ஹையோ..... இன்னைக்கு உங்கள் போஸ்ட் ரசித்து ரசித்து வாசித்தேன்....இரண்டு தடவை... ரொம்ப பிடிச்சு போயிருச்சு!

எல் கே said...

/அது முடிச்சு வீட்டுக்கு வந்தா இந்த எழுதுகோலை மடில வச்சு எழுத்துவேலை.///

எல்லாம் ஒகே சுசி .. இந்த லைன்ஸ் மட்டும் ஜீரணிக்க முடியலை

Balaji saravana said...

அம்மாவுக்கு நாம எப்பவும் இளைச்சுப் போன மாதிரி தான் இருக்கும்! அவ்வளவு பாசம், ஆனா நமக்கு சாரி உங்களுக்குத் தான தெரியும் எவ்வளவு மாஸ்ன்னு! ஹி ஹி..

//அங்க போயி இத விட நல்லதா இவளுக்கு ஏத்தாப்ல பார்சல் பண்றேன் பாருங்க //
ரைட்டு! :)

ப்ரியமுடன் வசந்த் said...

எதார்த்தமா நடக்குற நிகழ்வுகளையும் சுவாரஸ்யமா எழுதிடுறீங்களே இதான் உங்க ஸ்டைல்...

//அது முடிச்சு வீட்டுக்கு வந்தா இந்த எழுதுகோலை மடில வச்சு எழுத்துவேலை//

ஹ ஹ ஹா எப்டியெல்லாம் நடிச்சு அம்மாவ நம்ப வச்சுருக்கீங்க ..

தமிழரசி said...

சுசியின் எழுத்துக்களில் பாசம் கலந்த அம்மா தான் தெரியறாங்க..அம்மாவின் மேல் சுசியின் பாசம் பெருமையாவும் பொறாமையாவும் இருக்கு..

logu.. said...

ammmmmmmmmmmmmmaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa............................................................................

விஜி said...

என்ஜாய் மாடி செல்லம் :)

கோபிநாத் said...

மம்மிஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ;))

\\‘பாவம்ங்க என் பொண்ணு. நான் வந்ததுக்கு இளைச்ச்ச்ச்சுப் போய்ட்டா. முகமெல்லாம் எப்டி ஒட்டிப் போச்சு பாருங்க. ஆஃபீஸ்ல நாள் முழுக்க வேலை. அது முடிச்சு வீட்டுக்கு வந்தா இந்த எழுதுகோலை மடில வச்சு எழுத்துவேலை.. ரெஸ்ட் எடுக்கவே மாட்றா’\\

எங்க அக்காவுக்கு ரெஸ்ட்டுக்கு நடுவுல தான் வேலையேன்னு அம்மாவுக்கு எப்போ தான் தெரிய போகுதோ!! ;)))

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு சுசி:)!

Gopi Ramamoorthy said...

அம்மா எப்பவுமே ஸ்பெஷல்தான் சுசி. நல்லா எழுதி இருக்கீங்க.

கொஞ்சம் கருகி இருந்தால்தான் அவருக்குப் பிடிக்கும். அங்க நிக்கிறாங்க உங்க அம்மா.

r.v.saravanan said...

பகிர்வு அருமை சுசி

சீமான்கனி said...

//ஆஃபீஸ்ல நாள் முழுக்க வேலை. அது முடிச்சு வீட்டுக்கு வந்தா இந்த எழுதுகோலை மடில வச்சு எழுத்துவேலை.. ரெஸ்ட் எடுக்கவே மாட்றா’//

அம்மா நம்பிட்டீங்களா!!!!?????

அக்கா அம்மா நல்லவங்கனு தெரியும் ஆனால் இம்பூட்டு நல்லவங்கனு இப்போதான் தெரிஞ்சுகிட்டேன்...

சுசி said...

சித்ரா.. ரொம்ப நன்றி. வார்த்தை வர்லை எனக்கு.

@@

உங்க சமையல் சாப்பிட்ட உடன படிச்சிங்களா கார்த்திக் :)

@@

பாலாஜி.. கிர்ர்ர்ர்ர்.. :)

சுசி said...

ஹிஹிஹி.. வசந்து.. உங்க உடன் பிறப்பாச்சே நானு.

@@

தமிழ்.. அம்மா ஒரு குழந்தைப்பா. அவங்களுக்கு தெரிஞ்சது அன்பு மட்டும்தான்.

@@

லோகு :)

சுசி said...

உனக்கும் சேர்த்துதான் விஜி :)

@@

கோப்ஸ்.. நல்லாருங்கோ.

@@

நன்றி அக்கா.

சுசி said...

வயசும் சேர்ந்து குடுக்கிற புரிந்துணர்வுக்கு அளவு அதிகம் இல்லையா கோபி.

@@

நன்றி சரவணன்.

@@

கனி.. ஹஹாஹா.

siva said...

Meeeee the first..
akka.

siva said...

சுசி அக்காச்சி அம்மாவை பத்தி அழகா சொல்லி இருக்கீங்க..

பாரத்... பாரதி... said...

உங்கள் எழுத்துப் நடை வித்தியாசமான ரசனையில் இருக்கிறது..

அப்பாவி தங்கமணி said...

//பாவம்ங்க என் பொண்ணு. நான் வந்ததுக்கு இளைச்ச்ச்ச்சுப் போய்ட்டா//
என்ன மாறினாலும் அம்மாக்கள் மாறுவதில்லைங்கறதுக்கு இந்த ஒரு டயலாக் தான் சான்று... :)))

//‘கொஞ்சம் கருகிப் போச்சுத்தான். ஆனா அப்பாவுக்கு அதுதான் பிடிக்கும்’ //
:))))

அம்மா அப்பா என் கூட வந்து இருக்கணும் ரெம்ப நாள் ஆசை சுசி... அவங்களுக்கு ஒன்னு மாத்தி ஒன்னு பொறுப்புகள் வேலைகள்... இன்னும் என் ஆசை நிறைவேறலை... உங்க பதிவு அந்த ஆசைய இன்னும் கூட்டிடுச்சு...