Pages

  • RSS

31 May, 2010

எங்க போன?

kyss r

உன் ஒற்றைக் கேள்வி!!

என் மீது உனக்கான

அத்தனை உரிமையையும்

இரட்டைச் சொல்லில் அடக்கிவிட்டாய்.

நான் வருவேன்னு தெரியாதா..

இன்னும் எவ்ளோ நேரம் வெயிட் பண்ண..

வருவியா மாட்டியா..

வழக்கமா எனக்கு முன்னாடி வந்திடுவே..

அதான் சொன்னேனே நான் வருவேன்னு..

நீ வந்திருப்பேன்னு நினைச்சேன்..

வரது கஷ்டம்னா அப்போவே சொல்லி இருக்கலாமே..

நான் வந்தாச்சு..

எப்போ வருவே நீ..

எத்தனை அர்த்தங்கள்

உன் ஒற்றைக் கேள்வியில்

உன்னைப் போலவே உன் பேச்சுக்கும்

என்னை ஆட்டுவிக்கும் சக்தி அதிகம்

நீ விட்டுப் போன பின்னும்

தட்டிப் போன அர்த்தம்

இன்னும் ஏதும் இருக்குமா என்று

உற்றுக் கேட்கிறேன் மனதுக்குள் மறுபடி

எ.. ங்..க.. போ.. ன.. ?..

sad women

25 நல்லவங்க படிச்சாங்களாம்:

அ.முத்து பிரகாஷ் said...

" தட்டிப் போன அர்த்தம்

ஏதும் இருக்குமா என்று
உற்றுக் கேட்கிறேன் மனதுக்குள்... "

அப்படியேதும் இருக்காமலிருக்கட்டுமென
விரும்புகிறது இந்த வாசகன் மனம் ...

எல் கே said...

//தட்டிப் போன அர்த்தம்

இன்னும் ஏதும் இருக்குமா என்று

உற்றுக் கேட்கிறேன் மனதுக்குள் மறுபடி

எ.. ங்..க.. போ.. ன.. ?.//

அருமை வாழ்த்துக்கள் சுசி

ராமலக்ஷ்மி said...

மிக அருமை சுசி.

சீமான்கனி said...

//உன்னைப் போலவே உன் பேச்சுக்கும்

என்னை ஆட்டுவிக்கும் சக்தி அதிகம்//

பேசாத மெளனத்துக்கு அதைவிட கொடூர சக்தி சுசிக்கா...பேசா படம் பேசும் கவிதை ரெண்டுமே சூப்பர்....சுசிக்கா கலக்கல்... வாழ்த்துகள்...

கோபிநாத் said...

குட் ;)

*இயற்கை ராஜி* said...

ம்ம்,, கலக்கறீங்க..




ஹைய்... என் கவிதையா.. என் கவிதையேவா..:-)

ஜெய்லானி said...

நல்லா இருக்கு..

:-))

Anonymous said...

கவிதை நல்லா இருக்கு ...சகலகலா வல்லி தான் நீங்க ...

ப்ரியமுடன் வசந்த் said...

கவிதையும் மிக அழகா எழுதுறீங்க சகோ...

Unknown said...

:)
NICE

கவி அழகன் said...

நல்ல படைப்பு

Anonymous said...

நான் இங்கதான் இருக்கேன் சுசி!!! :)

Priya said...

அழகான காதல் கவிதை!

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி நியோ.

N N N N N

எதுக்கு எல்.கே??

N N N N N

நன்றி அக்கா.

சுசி said...

//பேசாத மெளனத்துக்கு அதைவிட கொடூர சக்தி சுசிக்கா.//
ஹிஹிஹி.. சீமான்.. இது நம்ம ஆயுதமாக்கும்.

N N N N N

குட்டு வைக்கிறிங்களா கோபி?? ரைட்டு!!

N N N N N

உங்க கவிதையே தான் ராஜி.

சுசி said...

நன்றி ஜெய்லானி.

N N N N N

ஐ லைக் யூ சந்தியா.. :))

N N N N N

கிண்டல் பண்ணக் கூடாது வசந்த்.

சுசி said...

நன்றி சிவா.

N N N N N

நன்றி யாதவன்.

N N N N N

அம்மணி அம்மணிதான் :)) சிரிச்சிட்டே இருக்கேன் போங்க.

சுசி said...

நன்றி ப்ரியா.

thiyaa said...

சூப்பர்.வாழ்த்துக்கள்

சுசி said...

நன்றி தியா.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ரெம்ப அழகான கவிதை.... நெறைய பேசறவங்களை விட ரெண்டு வார்த்தைல கொல்றவங்க கூட ரெம்ப கஷ்டங்க...எல்லாம் அனுபவம் தான்...

சுசி said...

புவனா.. ஹிஹிஹி.. ரங்ஸ்ங்க எல்லாமே இப்டித்தான் போல..

Matangi Mawley said...

arumaiya ezhuthiyirukkeenga!

Anonymous said...

என்னாச்சு சுசி உங்க ப்ளாக் லே புது பதிவு போடவே இல்லை ?ரொம்ப பிசியா?

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி மாதங்கி.

N N N N N

இதோ இப்போதான் பப்ளிஷ் பண்ணேன் சந்தியா.. நன்றி.