கடவுள் எனக்கு எப்ப பரிச்சயமானார்னு எனக்கு நினைவில்ல.. நினைவு தெரிஞ்ச நாள்ள இருந்தே எனக்கு அவர தெரியும். கோயில், கடவுள்னா வெறும் கூட்டம், பஜனை, பிரசாதம் இல்லை. அதுக்கும் மேல எதுவோ ஒண்ணுன்னு எப்ப இருந்து நினைக்க ஆரம்பிச்சேன்னு தெரில. எப்போதும் அம்மா கூடவே சுத்துனதால அவங்க செஞ்சத பாத்து நானும் சாமி கும்பிட ஆரம்பிச்சு அப்டியே வழக்கத்துல வந்துதா இதுன்னு எனக்கு புரியலை. ஆனா எனக்கு கடவுள் மேல நிறைய்ய்ய்ய்ய நம்பிக்கை இருக்கு. எப்போதும் என் வேண்டுதல் இதுவா தான் இருக்கும்.
கடவுளே.. எல்லாரும் நல்லா இருக்கோணும்.. ஒருத்தர்க்கும் ஒரு வருத்தமோ.. கஷ்டமோ வரக் கூடாது.. எல்லாரையும் நல்லபடியா பாத்துக்கோங்க.
இதுக்கு அப்புறம் தான் எனக்கான வேண்டுதல் வரும். தேவை இருந்தா மட்டும். இல்லேன்னா நான் சாமி கிட்ட கேக்குறது இவ்ளோதான். இதனால தான் என் ப்ளாக் பேரு கூட யாவரும் நலமாச்சு.
எப்போதும் எங்க வீட்ல வெள்ளிக்கிழமை குடும்பமா கோயிலுக்கு போய் வருவோம். வந்து வீட்ல பஞ்சபுராணம் சொல்வோம். அப்பா தீபம் காட்டுவார். நான் இங்க வர வரைக்கும் இது நடந்தது. தவிர விசேஷ நாட்கள்லவும் இது நடக்கும். பூஜை ரூம்ல ஒரு உண்டியல் இருக்கும். எதுனா வேண்டுதல்னா, யாருக்காவது உடம்புக்கு முடியலைன்னா உடன பணம் எடுத்து வைப்பாங்க அம்மா.
அம்மா வழி தாத்தாவ அப்புச்சின்னு சொல்வோம், அவர் குல தெய்வம் வைரவர். எங்க வீட்டுக்கு மூணாவது வீடு அப்புச்சி வீடு. அவங்க வீடு முன்னாடி வைரவர் கோயில். அங்க போம்போதும் வரும்போதும் ஒரு தடவை நின்னு வணக்கம் போட மறக்கிறதில்லை. பரீட்சைக்கோ, வெளியூருக்கோ, இல்லை எதுனா முக்கிய, நல்ல விஷயத்துக்கோ போக முன்னம் ஓடிப் போய் அவர ஒரு வணக்கம் வச்சுக்குவோம். அஞ்சாவது வரைக்கும் வைரவருக்கு பூமாலை கட்டி பாமாலை பாடுறது என் வழக்கம். அப்புச்சி எனக்காகவே நிறைய்ய பூக்கள் வளர்ப்பார். பக்கத்து வீடுகள்லயும் பூப்பறிக்க எனக்கு உரிமை கிடைச்சுது. அதனால அவருக்கு எப்போதும் பூவுக்கு குறைவில்லை. ஆறாவது வந்ததும் டியூஷன் போக ஆரம்பிச்சதால என் கோயில் தொண்டு குறைஞ்சாலும் நேரம் கிடைக்கும்போது மாலை கட்டி எடுத்துட்டு போக மறக்கிறதில்லை.
அப்பா கிராமத்தில அப்பப்பா குல தெய்வம் வீரபத்ரர். அப்பப்பா,அப்பாச்சி, இன்னும் சில அப்பா வழி உறவுக்காரங்களுக்கு சாமி வரும். வருஷத்தில ஒரு தடவை வீரபத்ரருக்கு திருவிழா நடக்கும். மடை போடுறதுன்னு சொல்வாங்க. நாலு ஜாம பூஜையோட காலேல பெரிய பூஜை நடக்கும். அங்கயே மரத்துக்கீழ நைட்டு பூரா இருப்போம். சமையலுக்கு பாவிக்கிற பானைங்க தொடக்கம் மீதமான அரிசி, காய்கறி, நேந்து விட்ட கோழி, ஆடுங்க வரைக்கும் மதியம் ஏலம் நடக்கும். அத்தனை உறவுக்காரங்களும் வந்து அவ்ளோ சந்தோஷமா இருக்கும். இப்போ அடுத்த தலைமுறையா அத்தை, சித்தப்பாவுக்கு சாமி வருது. அப்பாவுக்கும் ஒரே ஒரு தடவை வந்துதாம். நான் இங்க வந்ததுக்கு அப்புறம்.
எம் மதமும் சம்மதமே கொள்கை எங்களது. எங்க ஊர்ல முன்னாடி முஸ்லிம்கள் இருந்தப்போ பள்ளிவாசல் கடந்துதான் நாங்க நிறைய இடத்துக்குப் போக வேண்டி இருந்துது. அப்டி போம்போது அல்லானு மனசுக்குள்ள ஒவொரு தடவையும் நினைச்சுப்பேன். பீச்சுக்கு போறப்போல்லாம் தேவாலயம், மாதா கோயில் போய் மெழுகுவத்தி ஏத்த மறக்கிறதில்லை. குழந்தை யேசுவுக்கு வேண்டுதல் வச்சு அம்மா பன், பிஸ்கட்னு வாங்கிப்போய் குடுப்பாங்க. அதை விட கொஞ்சம் தூரத்தில பிள்ளையார் கோயில். அவரையும் அப்பப்போ போய் பார்ப்போம்.
ஊர விட்டு போய் வேற ஊர்ல இருக்க வேண்டி வந்தப்போல்லாம் அந்தந்த ஊர் கோயில்களுக்கு வெள்ளியானா போவோம். சாய்பாபா பஜனை.. ஒரு தடவை யெகோவா பிரார்த்தனை கூட போனோம். நான் பதினோராம் வகுப்பு வேற ஊர்ல அப்பா ஃப்ரெண்ட் வீட்ல தங்கி படிக்க வேண்டி வந்தப்போ எனக்கு துணையா இருந்தது நாகபூஷணி அம்மன். செவ்வாய்க் கிழமை விரதம் இருந்து ஸ்கூல் போய் வந்து சாயந்தரம் பூஜைக்கு போவேன். ஒரு அம்மாதான் பூஜை செய்வாங்க. அவங்க சாமி வந்து அருள் சொல்வாங்க. அது தவிர யார் கிட்டவும் பேச மாட்டாங்க. வேப்பிலை, மஞ்சள் அரைச்சு விட்ட தண்ணிய ஒரு சொம்பு தலைமேல வார்த்து, கைல பூ குடுப்பாங்க. கோவில சுத்தி வந்து அம்மனுக்கு பூவை வைக்கணும். என்னோட மனசில இருக்கிற அத்தனை விஷயங்களையும் அம்மன் கிட்ட சொல்ல ஆரம்பிச்சேன். அப்போதான் கடவுள் எனக்கு ஃப்ரெண்டாயும் ஆனது.
முதல்ல அக்காவும், அப்புறம் எல்லாருமா அதே ஊருக்கு வந்தப்போ வாரம் ஒரு கோயில் போய் வருவோம். அந்த சமயம் ஒரு பெரிய பிரச்சனை எனக்கு வந்தது. மனசுக்குள்ள அழுதிட்டே ஒருநாள் வேண்டிக்கிட்டு இருந்தப்போ திடீர்னு வந்து சொன்னாங்க ”எதுக்கு கலங்கறே.. தெளிவா இரு. இதுல உன் தப்பு எதுவும் இல்லை”ன்னு. எனக்கு சிலிர்த்துப் போச்சு. கல்யாணம் பேசி முடிவானதும் ஊர் எல்லையில இருந்த ஐய்யனாருக்கு அப்பா வாழைத்தார் நேந்து வச்சிருந்தார். அம்மா வர முடியாததால நான் ரஜி கூட போனேன். மனசுக்குள்ள ஆரம்பிச்ச அழுகை ஒரு கட்டத்தில கண் வழியா பொலபொலனு கொட்ட ஆரம்பிச்சிடுச்சு. அங்கேயும் ஒரு அம்மாதான் பூஜை பண்ணுவாங்க. உடம்புக்கு முடியலைன்னு அவங்க அன்னைக்கு கோயில் வர்லை. அவங்க மகன் பூஜை பண்ணிட்டு இருந்தார். திடீர்னு விபூதி குடுக்குற சமயம் வந்து என் கைல நூல் முடிஞ்சு கிட்டே சொன்னாங்க ”எதுக்கு இந்த கலக்கம்? எல்லாம் நல்லதே நடக்கும். தெளிவா போ. ஐய்யனார் இருக்கார்ல. அதுக்கும் மேல உன் அப்பா இருக்கார்”ன்னு. நாங்க வீட்டுக்கு போனதும் எதோ அலுவலா வெளியூர் போய்ட்டு லேட்டா போன அப்பா கிட்ட சொன்னாங்களாம் “உடம்பு சரி இல்லைடா தம்பி. இருந்தாலும் ஐய்யன் என்ன கோயில் போன்னு சொன்னார். வந்தேன். உன் பொண்ணுக்காகத்தான் சொன்னார்னு வந்ததும் தெரிஞ்சுக்கிட்டேன்” ன்னு. இப்போ நினைச்சாலும் மயிர் சிலிர்க்கும்.
மாத விலக்கு சமயத்தில எங்களுக்கு பூஜை ரூம் தவிர வீடு பூரா போய் வர முழு சுதந்திரம் இருந்துது. கிணத்துல தண்ணி எடுக்க மாட்டோம். வீட்ல யாருமில்லாதப்போ எதுனா எடுக்க பூஜைரூம் போக வேண்டிய கட்டாயம் வந்தா போவோம். அப்புறம் அம்மா மஞ்சத்தண்ணி தெளிச்சு கழுவி சுத்தம் பண்ணுவாங்க. உள்ள போனோம்கிறத சொல்ல மறந்த சந்தர்ப்பங்களும் உண்டு. பொதுவாவே நான் பசி தாங்க மாட்டேன். அதனால சனி பகவானுக்காக சில சமயம், நவராத்ரி சமயம் தவிர நான் விரதம் இருந்ததில்லை. எனக்கும் சேர்த்து அப்பா, அம்மா, இப்போ மாமியார் இருப்பாங்க.
இங்க வந்ததுக்கு வீட்ல செஞ்ச அதே வெள்ளி பூஜை செஞ்சிட்டு வந்தேன். என்னவர் சில சமயம் வருவார். பல சமயம் தனியா. அத்தோட வெள்ளி, மற்றும் விசேஷ தினங்கள், விரத காலங்கள்ல வெஜிடேரியன் சாப்டேன். என்ன ப்ராப்ளம்னா இங்க பெரும்பாலும் நண்பர்களோட விருந்தோ, விசிட்டோ வெள்ளிக்கிழமைதான் நடக்கும். எனக்காக அவங்க மெனுவ எக்ஸ்ட்ராவா பண்ண வேண்டியதாச்சு. எதுக்கு தேவை இல்லாத கஷ்டம் அவங்களுக்குன்னுட்டு கோயில் போனா வெஜ் போகலேன்னா நான்வெஜ்ங்கிற பாலிசிக்கு வந்துட்டேன். தனியா இருந்த பூஜை ரூம் பசங்க தனி ரூம்கு ஷிஃப்ட்டானதும் ஸ்டோர் ரூம்கு ஷிஃப்ட் ஆயிடுச்சு. கெஸ்ட் ரூம பூஜை ரூமா பாவிக்கிறதில எங்களுக்கு உடன்பாடில்லை. விசேஷ நாள்ல தேவாரம் சொல்லி வேண்டிக்குவோம் எல்லாருமா. மத்தபடி நாந்தான் தினமும் குளிச்சதும், தூங்க முன்னும் பூஜைரூம் போவேன். மாமியார் வரும்போது விரதம் இருந்தா சமைக்க, மாமனார் திதி, இல்லை கோயிலுக்கு எதுனா பிரசாதம் செஞ்சு எடுத்துட்டு போகன்னு கட்டிங் பிளேட் தொடக்கம் அத்தனையும் தனியா வெஜ் சமையலுக்குன்னு வச்சிருக்கேன்.
ஊருக்கு போனப்போ முதல்ல போறது கோயில்தான். இங்க ஒரு பிள்ளையார் இருக்கார். ஏழுமலை ஆனந்த சித்தி விநாயகர். இப்போ அவர்தான் எனக்கு எல்லாமே. 21ம் தேதில இருந்து அவருக்கு வருடாந்திர பத்து நாள் திருவிழா ஆரம்பம். நாங்க முதல் நாள் பூஜை உபயம் எடுத்திருக்கோம்.
என்னவருக்கும் நம்பிக்கை இருக்குன்னாலும் அவர் மனமுருகி கும்பிட்டு நான் பாத்ததில்லை. ஆனா புதுசா வண்டி வாங்கினா முதல்ல கோயில் தான் போவோம். கெட்ட கனவு கண்டேன் சாமிக்கு காசு எடுத்து வைக்கிறியாம்பார். எப்பவுமே பரீட்சை, தவிர முக்கியமான எதுனா, முதல்ல பிள்ளையார் சுழி போட்டு எழுத ஆரம்பிக்கிறது மட்டுமில்லாம சட்னு ஒரு தடவை கடவுளை மனசுக்குள்ள நினைச்சுக்கிறது என் வழக்கம். கோயில் போய் வந்தா என்னவோ ஒரு நிம்மதி. கொஞ்ச நேரம் பொறுப்பை எல்லாம் சாமி கிட்ட ஒப்படைச்சுட்டதா ஒரு இலகுவான மனநிலை. எல்லாம் அவர் பார்த்துப்பார்ன்ற திருப்தி. தலையணையில தலை சாய்க்கும்போது எப்போதும் சொல்வேன் அம்மாளாச்சி, தெய்வமே, முருகா, என் பிள்ளையாரப்பா எல்லாரையும் காப்பாத்து.. அதே வேண்டுதலோடவே எந்திரிப்பேன்.
கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்தி எனக்குத் துணையாய் எப்போதும் என் கூட இருக்கிறதான அந்த நினைவு எனக்கு வேண்டி இருக்கு. பசங்களுக்கு கோயில்னா பூஜை முடிஞ்சதும் ஓடி விளையாடுற, ஃப்ரெண்ட்ஸ் யாரும் வராத நாட்கள்ல உலகத்திலயே போரான ஒரு இடம். அவ்ளோதான். நான் அவங்க கோயிலுக்கு வரணும்னு விரும்புவேன். சமயத்தில அப்பா கூட பிளான் பண்ணி முக்கா குடும்பமும் மட்டம் போட்றுவாங்க. நான் தனியா போய் வருவேன். என் கடவுள் நம்பிக்கை பத்தி அவங்களுக்கு சொல்வேன். பணம் எடுத்து வைக்கிறது உட்பட. ஆனா நம்புறதும் விடுறதும் அவங்க இஷ்டம்.
இம்மாம் பெருஸ்ஸா எழுதிட்டேன். திட்டணும்னா சின்ன அம்மிணிய திட்டுங்கப்பா.. அவங்கதான் தெரியாத்தனமா என்னய இத எழுத சொன்னாங்க. அம்மிணி.. எழுத ஆரம்பிச்சதும் நிறைய்ய விஷயங்கள் நினைவுக்கு வந்து தொடர் பதிவே தொடர் பதிவு ரேஞ்சுக்கு ஆகி போச்சு. இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயத்தை எழுத வைச்சத்துக்கு நன்றி.
சீமான் கனி, , அப்பாவி தங்கமணி, இயற்கை ராஜி, மங்குனி அமைச்சர், ஜெய்லானி நீங்க இந்த தொடர தொடரணும்னு கேட்டுக்கிறேன்.
வர்ட்டா..
24 நல்லவங்க படிச்சாங்களாம்:
பெரியாய் பெரிய விஷயங்களை, ரொம்ப சாதாரணமாக சொல்லி இருப்பது அழகு.... நல்லா எழுதி இருக்கீங்க.....
நல்லா எழுதியிருக்கீங்க சுசி.. உங்கள மாதிரி வளர்ந்ததில்லை நான்..
ஆனாலும் கடவுள் நம்பிக்கை இருக்கு.
ரொம்ப நல்ல இருக்குங்க
உண்ண உணவு
உடுத்த உடை
இருக்க இடம்
எல்லாவற்றுக்கும்
முதலாவதாய்
மனசுக்கு ஒரு கடவுள்.
உங்கள் இடுகையை
படித்தவுடன் தோணிச்சு.
நன்றி சுசி.
நல்ல விஷ்யம்..
அட தொடரா.....ஒக்கே!! போட்டுடலாம்..
உங்க எழுத்துக்கள் படிக்க ரொம்ப இண்ட்ரஸ்டா இருக்கு. நேரில் பேசுவது போல :))
பிள்ளையாரப்பா....
நல்லா எழுதி இருக்கீங்க..
ஆஹா.. நானா.. ம்ம்..எழுதிடறேன்
சுசிகா இப்போதான் தெரியுது
//என்ன இது.. பிள்ளையாரே.. அப்டில்லாம் எதுவும் ஆகாது..//னு..
என்னை ஏன் சொன்னீங்கனு...
எங்கூட்டுக்கு எத்தினி ஆட்டோ வருதோ :)
பெரிசா இருந்தாலும் படிக்க நல்லா இருக்குங்க சுசி.
கடவுள் பெருசா இருந்தாலும் நம்ம கடவுள் தானே சித்ரா.
M M M M M
ஓ.. எப்டி வளர்ந்தாலும் கடவுள் நம்பிக்கை இருக்குல்ல முகிலன் :))
M M M M M
நன்றி கார்த்திக்.
//
உண்ண உணவு
உடுத்த உடை
இருக்க இடம்
எல்லாவற்றுக்கும்
முதலாவதாய்
மனசுக்கு ஒரு கடவுள்.
//
ரொம்ப நல்லா இருக்கு மதுமிதா.
M M M M M
அட தொடராதாங்க ஜெய்லானி..
அடடடடானு சொல்றா மாதிரி எழுதுங்க.
M M M M M
முதல் வருகைக்கு நன்றி மயில்.
அவர் உங்க மாமானு கேள்விப்பட்டேனே கார்க்கி..
M M M M M
நீங்களேதான்..
எழுதிடுங்க ராஜி..
M M M M M
பின்ன நீங்க ஆகாசத்துல பட்டுனு வெடிச்சு பொட்டுனு போய்டுவேன்னு கவிதை எழுதினா?? உங்க கூட பறக்கிறவங்களையும் சேர்த்துக் காப்பாத்தணும்ல சீமான்..
ஆட்டோ என்ன ஆட்டோ.. ஃப்ளைட்டே வரும் பாருங்க அம்மிணி.
M M M M M
தாரணி பிரியா.. முழுக்க படிச்சிங்க இல்லை?? இல்லேன்னா சாமி குத்தம் ஆய்டும்.
சுசி ரொம்ப அருமையான பதிவு ...உங்க விசுவாசம் அது சொன்ன விதம் ரொம்ப அழகு..தினவும் கோவில் போகற வழக்கம் எனக்கு கிடையாது ஆனா கடவுள் நம்பிக்கை நிறையே இருக்கு..காலையில் எழுந்த உடன் ஹரே கிருஷ்ணா என்று சொல்லி தான் தொடங்கும் ..
நல்ல பதிவு சுசி.... சொன்ன விதம் இன்னும் அழகு.. என்னையும் தொடர அழைச்சதுக்கு ரெம்ப நன்றிங்கோ...சீக்கரம் போட்டுடறேன்
(ஏன் அழைச்சோம்னு பின்னாடி வருந்தினா சாமி கண்ணை குத்தும் ....)
அப்போ நீங்களும் நம்ம கட்சி சந்தியா..
M M M M M
சேச்சே.. அப்டில்லாம் வருந்த மாட்டேன்.. என் அக்கா கனடாலதான் இருக்கா.. ஜஸ்டு ஒரு கால்.. கார் வீட்டுக்கு வரும்.
சாரி , லேட்டா வந்துட்டேன்
நம்மளையும் கோத்து விட்டிக , நன்றி , நமக்கு இதிலே கொஞ்சம் முரன்பாடு உண்டு , விடுங்க போட்டு தாக்குவோம்
நன்றி.. தலைவர் வாழ்க!!!
M M M M M
முரண்பாடோ உடன்பாடோ.. நீங்க நினைக்கிறத எழுதுங்க அமைச்சரே..
நல்ல பதிவு...முதல் கடவுள் பிள்ளையாரே உங்க நெருங்கிய நண்பர் பிறகு என்ன எல்லாம் சுபம் தான் ;))
நீங்க சொன்னாதில் இருந்து மீண்டும் ஒன்னு மட்டும் சொல்ல தோணுது...எங்க இருந்தாலும் சில பழக்கங்களை விட்டுடாதிங்க...கஷ்டமாக இருந்தாலும் அது கடைபிடிங்க. அதுவே ஒரு அழகான பயிற்சி..உடலும் மனசுக்கும் ;))
ரொம்ப நல்லா வந்திருக்கு பதிவு...வாழ்த்துக்கள் ;)
நீங்க சொல்லிட்டிங்க இல்லை.. கண்டிப்பா விடமாட்டேன்..
ரொம்ப நன்றி கோபி. (நன்றி சொல்லியாச்சு.. பணம்லாம் கொடுக்க முடியாது. அடுத்த தடவை இன்னும் ரெண்டு பிட்டு சேர்த்துப் போடணும்)
பெருசா இருந்தாலும் படிச்சேன்..
சாமி பெருசில்லையா பிரகாஷ்..
Post a Comment