காலேல ஒன்பது மணிக்கு எந்திரிச்சு வீட்ல தேசியக் கொடி பறக்க விட்டதோட சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இனிதே ஆரம்பமாச்சு. மழை இல்லை. ஆனா குளிர் + காத்து.
ஒரு வழியா ரெடி ஆகி.. குடை, குளிருக்கேத்த ட்ரஸ், வூல் மிக்ஸ்ட் கோட், பூட்ஸ் சகிதம் 15:45 கிளம்பி முதல்ல ஸ்கூல் போனோம்.
பொட்டிக் கடைல எல்லாம் ரெடியா அடுக்கி வச்சிருந்தாங்க. பரேட் வந்து தேசிய கீதம் பாடினதும் தான் வியாபாரம் ஆரம்பம்னு சொல்லியும் குளிர்ல சூடா hot dog சாப்ட நிறையப் பேர் அவசரப்பட்டாங்க. கிடைச்ச காப்ல எது என்ன விலைன்னு பாத்து வச்சுக்கிட்டேன். கண்ணாளன் முடியாதுன்னு சொன்னதால நான் களத்தில சாரி.. கடைக்குள்ள குதிக்க வேண்டியதாச்சு. கூட நாலு பேர். ஒருத்தர் hot dog ரெடியா தான் எடுத்து வைக்கிறதா சொன்னார். ஐஸ் கிரீம் பாக்ஸ் ஒருத்தர் ஓபன் பண்ணி குடுத்தார். க்ளவ்ஸ் மறந்துட்டேனா.. குளிர்ர்ர்.. ஒருத்தங்க மத்த இடங்கள்ல போயி சில்றை எடுத்து வரதா ஒத்துக்கிட்டாங்க. கண்டிப்பா நிறைய பேரு நோட்ட நீட்டுவாங்கனு தெரியும்.
அப்பப்போ எல்லாரும் வந்து எப்போ வியாபாரம் ஆரம்பம்னு கேக்கிறதோட விலையும் விசாரிச்சுட்டு போனாங்க. ”அப்போ இங்க இலவசமா எதுவும் கிடையாதா?”னு ஒருத்தர் கேட்டார். “ஏன் இல்லை.. ஹக், கிஸ் தாராளமா கிடைக்குமே”ன்னு சொன்னேன். “அய்யே.. நீங்கதான் குடுப்பிங்கன்னா இலவசம்னா கூட எனக்கு வேணாம்”னு சொன்னதோட எஸ்ஸாயிட்டார் கேட்டவர். அவர் பதில்ல இருந்து கேட்டது யாரா இருந்திருக்கும்னு நான் சொல்ல வேண்டியதில்லை உங்களுக்கு. அம்மு கேட்டா அவ ஃபேவரிட் urge சோடா என்ன விலைன்னு. 25குரோன்ஸ்னேன். என்னம்மா இவ்ளோ விலை சொல்றிங்கன்னா. கூட நின்னவர் கிட்ட அவ சொன்னத சொன்னேன். அவர் சொன்னார். அதான் சுதந்திரதின விலைனு. எல்லாம் அப்டிதான் கொஞ்சம் விலை ஜாஸ்தி. அதே சோடா கடேல 10 குரோன்ஸ் கம்மி.
பரேட் 16:17க்கு வந்து, தே கீ பாடின அடுத்த செக்கண்ட் வியாபாரம் சூடு பிடிச்சுது. கொஞ்ச நேரம் வேடிக்கை மட்டும் பாருங்க.
செம ஜாலியா இருந்துதுங்க. குட்டிப் பசங்க மட்டுமில்ல பெரியவங்க கூட எத வாங்குறதுனு முழிச்சுட்டு இருந்தாங்க.
”சோடானா எது?? கோக், பெப்ஸி, ஃபாண்டா??” ”பெப்ஸி.. இல்லை கோக்” கண்டிப்பா சொல்லியே ஆகணும் நானு. கோக் உடனவே தீர்ந்து போச்சுங்க. அவ்வ்..
”ஐஸ்னா எது?? சாக்லட் ஃப்ளேவர் இல்லை ஸ்ட்ராபெரி..” ”இது பிடிக்காது எனக்கு.. மாத்திக் குடுக்கறியா??” ”சரி.. போட் ஐஸ் இல்லை க்ளவுன் ஐஸ் குடுக்கட்டுமா??”
“எனக்கு hot dog ப்ரெட் இல்லாம சாசேஜ் மட்டும் வேணும்” “எனக்கு கெச் அப் வச்சு தனியா ப்ரெட் தான் வேணும்”
எத்தனை முகங்கள்.. ரொம்ப நேரம் நின்னு யோசிச்சவங்க, பட்னு சொல்லி வாங்கிட்டு போனவங்க, ஒரு தடவைக்கு ரெண்டு தடவை மீதி சில்றை சரி பாத்தவங்க, 20 குரோனுக்கு ஐஸ் வாங்கிட்டு 500 குரோன் நோட்ட நீட்னவங்க, எண்ணி எண்ணி சில்றைய கைல குடுத்தவங்க, நீயே எண்ணி எடுத்துக்கோன்னு குடுத்தவங்க, முன்னாடி டிஷ்யூ இருந்தும் எங்கேனு கேட்டவங்க, ஒரு ஐஸ் வாங்கிட்டு அஞ்சு டிஷ்யூ எடுத்துட்டு போனவங்க, என்ன வாங்கலாம்னு என் கிட்டவே ஐடியா கேட்டவங்க..
சில்லறை தட்டுப்பாடு வந்ததால சிலருக்கு அஞ்சு பத்து குரோன்ஸ் திடீர் கழிவு விலை. பறவால்ல ஸ்கூல் செலவுக்குதானே இருக்கட்டும்னு சொன்னவங்க சிலர்னா, அப்டியா ரொம்ப தாங்ஸ்னு சொன்னவங்க சிலர். ரொம்ப கஷ்டமான விஷயம் என்னன்னா மூணு குட்டிப் பசங்க திரும்பி மீதி சில்றை எடுக்குறத்துக்குள்ள போய்ட்டாங்க. ரெண்டு பேர தேடிட்டு போனேன். கூட்டத்துல கண்டு பிடிக்க முடில. ரெண்டு பேர தேட முடில, நிறைய பேர் வெயிட் பண்ணிட்டு இருந்ததால. கூட இருந்தவங்க சொன்னாங்க இந்த சமயத்துல இதெல்லாம் சகஜம். பேசாம விடு. மறுபடி வந்தா குடுக்கலாம்னு. இருங்க மீதி காசு குடுக்கறேன்னு சொல்லியும் அவங்க போனது எனக்கென்னமோ இன்னமும் மனசுக்கு கஷ்டமா இருக்கு.
அப்ப்ப்பா.. என் காய்ச்சல், தலைவலி எல்லாம் பறந்து போச்சு. ரெண்டு மணி நேரம் எப்டி போச்சுன்னு தெரில. இனிமே டவுனுக்கு போலாம் வானு என்னவர் வந்து சொன்னதும்தான் மணி ஆறானது தெரிஞ்சது. கார்ல எல்லாரும் ஏறியாச்சுல்ல.. சீட் பெல்ட் போட்டு சமத்தா இருக்கணும்.. ஏன்னா மறந்த தலைவலி எனக்கு மறுபடி வந்தாச்சு.
பூக்கள் நான் முன்னாடியே சொன்னா மாதிரி இல்லை. டுலிப்ஸ் வச்சு சமாளிச்சிருந்தாங்க. அதுவும் ஒரு சைட்ல சரியா பூக்கலை. மரங்கள் பாருங்க. இப்போதான் லைட்டா துளிர்க்க ஆரம்பிச்சிருக்கு. ஆனா ஒரு அதிசய மரம் பலூன் பூ பூத்து இருந்துது.
இந்த நேரம் ரெஸ்டாரண்ட்ல சாப்டுட்டோ இல்லை வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டோ மறுபடி நைட் வாண வேடிக்கை பார்க்க வருவாங்க. அதனால கூட்டம் கம்மியா இருக்கு. இந்த வருஷம் அவங்க கல்ச்சரல் டான்ஸ் Folkedans ம்பாங்க.. மிஸ் பண்ணிட்டேன்.
பூந்தொட்டி அருகில் குப்பைத்தொட்டி. நான் கவனிக்கல. அம்முதான் காட்டினாங்க.
இங்கதான் பாரஷூட்காரங்க லாண்ட் ஆவாங்க. இத சுத்திதான் fireworks நடக்கும்.
அடுத்து காசு குடுத்து அலறிட்டு வர்லாம்னு பசங்க போனாங்க. அதென்னமோ தெரில அதில உக்காந்து பேய் சுத்து சுத்தும்போது அந்த அலறு அலறுவாங்க. இறங்கி வரும்போது ஒரு வீரச் சிரிப்பு.
ரொம்ப அலைஞ்சதில பசி எடுக்க ஆரம்பிச்சிடுச்சு இல்லை.. வாங்க இப்போ ரெஸ்டாரண்ட் போலாம்.. பசியாத போது புசியாதேனு பெரியவங்க சொல்லி இருக்காங்க இல்லை. அதான் முன்னாடியே கூட்டிப் போல. இந்த வருஷம் தாய்லாந்து ரெஸ்டாரண்ட்.
உள்ள போனதுமே russ cards லாம் கடை பரப்பி எத்தனை சேர்ந்திச்சுன்னு எண்ண ஆரம்பிச்சிட்டாங்க அக்காவும் தம்பியும். அப்டியே கொஞ்சம் ஓவர் குறும்பான கார்ட்ஸ எங்களுக்கும் காட்டி ஒரே சிரிப்பு அலை. நாஷனல் டே ஸ்பெஷல் மெனுல ஸ்டார்ட்டர் கிடையாதுன்னுட்டாங்க. அம்புட்டு கூட்டம். வாய்ல நுழையாத அவங்க மெனுவுக்குள்ள தேடி மம்மா தாய் மின்ட் பெப்பர் மட்டன் பக்கம் நான் கை காட்னேன். அவர் எதுவோ பீஃப்ல ஆர்டர் பண்ணார். ரெண்டுமே நல்லாருந்துது. அப்டியே டீப் ஃப்ரைட் பனானா வித் வனிலா ஐஸ்க்றீம். அவங்க ஸ்பெஷல்.. எங்க ஃபேவரிட்..
உண்டது செரிக்க மறுபடி ஒரு ரவுண்டு வந்தோம். எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு கான்டி. ஷூ லேஸ்ங்கிராங்க.. ஸ்னேக்ங்கிராங்க.. சரியா பெயர் தெரில.. வாட்டர் மெலன், ஸ்ட்ராபெரி, டூட்டிஃப்ருட்டி ஃப்ளேவர்ல வாங்கினேன்.
அப்டியே இவங்களுக்கும் ஒரு ஹாய் சொல்லிட்டு எல்லாரும் போய்ட்டு வாங்க. மணி 21:20 ஆச்சு. நாங்க வீட்டுக்கு போய் தேசியக் கொடி இறக்கணும். 9 – 9 தான் கொடிக்கான நேரம். இப்போவே லேட்டாச்சு. அப்புறம் என்ன..
வர்ட்டா..
23 நல்லவங்க படிச்சாங்களாம்:
கொண்டாட்டத்தை பற்றி நன்கு தொகுத்து தந்து இருக்கீங்க. புகைப்படங்களும் அருமை.
Looks like, you all had great time. :-)
அருமையான விளக்கம் மற்றும் படங்கள். நல்லாத்தான் வியாபாரம் பண்ணி இருக்கீங்க
படங்களும்
சொன்ன விதமும்
நன்றாக இருந்தது.
உங்க
அச்..அச்..அச்ச்ச்ச்
என்னாச்சு?
படமெல்லாம் சூப்பர்..
இங்க எல்லாம் ஒரு சாக்லெட்தான் கிடைக்கும். அப்புறமா சன்டிவியில் சுதந்திர தின சிறப்பு படமாக வாஞ்சிநாதன் போடுவாங்க. பார்ப்போம். அப்புறம் சுதந்திரமா மானாட மயிலாட போடுவாங்க. அதையும் ஜாலியா பார்ப்போம்..
அடுத்த நாள் வந்து இதையெல்லாமா டிவில போடறதுன்னு பிளாகிலோ, ட்விட்டரிலோ திட்டிட்டு போயிடுவோம்
படமும் விளக்கங்களும் அருமை.
ஷூ லேஸ் கேண்டி நல்லா இருக்கு பாக்க :)
இது என்டா இது சுதந்திர தினம்...லீவு நாளும் அதுவுமாக வீட்டுல இல்லமால் ஒரு உலக தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் திரைப்படம் பார்க்கலாம்..இப்படி போயி அதுவும் ராத்திரி வரைக்கும் என்ஜாய் பண்ணிக்கிட்டு...;))
நானும் 5 வருஷமா ஒரு சுதந்திர தினத்தை கொண்டாடினேன். ஒரு மண்ணும் இல்லை...அந்த ஊர் ஆளுங்க எல்லாம் கொடியை வச்சிக்கிட்டு சுத்துவானுங்க அம்புட்டு தான்.
நம்ம ஊர்யாவது (இந்தியா)ஒரு மிட்டாய் கொடுப்பானுங்க அங்க ஒன்னும் இல்லை.
ஆனா நீங்க என்டான்னா கலர் கலராக படம் எல்லாம் எடுத்து பல மாதிரி கொண்டாடி இருக்கிங்க...என்ஜாய்.
இப்பதான் முழு வீடு தெரியுது...நல்லதான் இருக்கு ;)
\\hot dog\\\
அவ்வ்வ்வ்வ்வ்...எனக்கு கொஞ்ச கூட பிடிக்காத ஆயிட்டம் அது...உவே..;(
சொன்னபடியே அழகாய் தொகுத்து வழங்கிவிட்டீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சுசி. படங்களெல்லாம் அருமை.
அப்டின்னும் சொல்லலாம் சித்ரா.. எனக்கு உடம்பு சரியா இருந்து வெதரும் நல்லா இருந்துருந்தா இன்னும் நல்லா போயிருக்கும்.
K K K K K
அவ்ளோ கூட்டத்துக்கும் ஒரே ஒரு கடைனா கேக்கணுமா கார்த்திக்.
K K K K K
இப்போ சரி ஆயிடுச்சுங்க மதுமிதா.
//அதான் சுதந்திரதின விலைனு. எல்லாம் அப்டிதான் கொஞ்சம் விலை ஜாஸ்தி. அதே சோடா கடேல 10 குரோன்ஸ் கம்மி.//
அட கடவுளே அங்கயும் இந்த கொடுமை நடக்குதா...
நல்லா வேலை நான் நெனச்ச மாதிரியே உங்க உடல் நிலை சரியாகி இப்படி ஒரு கண்ணுக்கும் மனசுக்கும் குளிர்ச்சியான பதிவு தந்துடீங்க சுசிக்கா...கோக்,ஐஸ்க்ரீம்,ஹட்டாக்,,சாக்லெட் லிஸ்ட்ல இன்னும் நிறைய மிஸ்ஸிங் ஹ...ஹ....ஹா...ச்ஹ்ச்சு...
கவலைப்படாதிங்க கார்க்கி.. ஸ்வீடன்லவும் இப்டித்தானாம்..
K K K K K
நன்றி ஜெய்லானி.
K K K K K
பாக்க மட்டுமில்ல.. சாப்டவும் சூப்பரா இருக்கும் அம்மிணி. sweet & sour flavour..
கோபி.. ஒரு நார்வே பொண்ண பேசி முடிக்கட்டுமா உங்களுக்கு??
இதென்ன கலர்.. வெதர் மட்டும் நல்லா இருந்திருக்கணும் அப்போ வந்திருக்கும் கலரோ கலர் :)
(நீ பக்கத்து வீட்ட திருட்டுத்தனமா படம் எடுக்கும்போது இதுக்குத்தான்னு நான் கொஞ்சம் கூட நினைக்கலடி சுசி.. சமத்துடி நீ)
K K K K K
ரொம்ப ரொம்ப நன்றி அக்கா.
என்னது மிஸ் ஆச்சாஆ?? என்ன சொல்றிங்க சீமான்.. நாங்க போனதில இருந்து வந்தது வரைக்கும் எழுதிட்டேனே.. என்னமோ போங்க.
/ஒரு நார்வே பொண்ண பேசி முடிக்கட்டுமா உங்களுக்கு//
ஐ நான் ரெடி
அருமை...அருமை...வாழ்த்துகள்!
Imm romba joliya celiberate panni irukkkinga. susi naan singaporela work mudiththu once for all India vanthuvitten. ini India thaan vasikkap poren. Ennai singapore anuppiya companyla factory manager. viraivil ithu kuriththu pathivu podukinren.
nice photos and flow, congrats madam! happy independence day!!
படங்களுடன் அழகான விளக்கம்!
முதல்ல கமிஷன் ரெடியானு சொல்ங்க கார்த்திக் :))
K K K K K
முதல் வருகைக்கு நன்றி யாதவன்.
K K K K K
ஓ.. அப்டியா.. ரொம்ப சந்தோஷம் அண்ணா.. நான் நீங்க வெகேஷன்ல போயிருக்கிங்கனு நினைச்சுட்டேன். வாழ்த்துக்கள் அண்ணா. சீக்கிரம் எழுதுங்க.
முதல் வருகைக்கு நன்றி பாண்டி..
K K K K K
நன்றி ப்ரியா..
ரொம்ப நன்றி ஜெய்லானி..
பெற்றுக் கொண்டாச்சு :))))
கலர்புல் பதிவு...சூப்பர்... நல்ல வியாபாரம் போல... கலக்குங்க கலக்குங்க...
Post a Comment