Pages

  • RSS

16 May, 2010

சுதந்திர தின வாழ்த்துக்கள்..

நாளை 17ம் திகதி.. நார்வே சுதந்திர தினம். இந்த நாட்டு பிரஜையா ஆனத்துக்கு அப்புறம் நானும் கொண்டாட்டத்துல பங்கெடுத்துக்கணும் இல்லை. இங்க  வந்ததில இருந்து வருஷா வருஷம் டவுணுக்கு போயி நாங்களும் வாய் பார்த்துட்டு வருவோம். இன, மத, மொழி பேதமில்லாம.. ஓ சாரி.. நிறத்த விட்டுட்டேன்.. சேர்த்து படிச்சுக்கோங்க.. எல்லாரும் சொல்லிக்குவாங்க.. Gratulerer med dagen (க்றாத்துலேறெர் மே டாகென்) இன்றைய நாளுக்கு வாழ்த்துக்கள். எல்லாவிதமான பரேடும் காலேலவே ஆரம்பிச்சிடும். கார்ல போயி ஒரு வழியா பார்க்கிங் பிடிச்சு பார்க் பண்ணிட்டு அப்டியே சுத்தோ சுத்துன்னு சுத்திட்டு.. எதாவது ஒரு ரெஸ்டாரெண்ட்ல துண்ட போட்டு இடம் பிடிச்சு சாப்டுட்டு லேட்டா வீட்டுக்கு வருவோம். கல்ச்சரல் டான்ஸ், மியூசிக்னு எல்லாம் செண்டரா ஒரு இடத்தில நடந்துட்டு இருக்கும்.

இவங்க தேசிய உடைய Bunad (பூனாட்) னு சொல்வாங்க. ஒவொரு இடத்துக்கும் ஒவொரு மாதிரி இருக்கும். அத பாத்து இன்ன இடம்னு என்னால கண்டு பிடிக்க முடியாதுங்கிறத விட இந்த நாட்டுக்காரங்களாலேயே அது முடியாது. குறைந்த பட்ஷம் 20,000 குரோன்ஸ்ல இருந்து பூனாடோட விலை ஆரம்பிக்கும். எங்கூர் கோயில் திருவிழா கடைகள் மாதிரி குட்டிக் கடைகள், குட்டியா பஞ்ஜி ஜம்பிங், tivoli னு அமர்க்களமா இருக்கும்.  சறுக்கு மரம் ஏறுற போட்டி நடக்கும். பெரும்பாலும் வெளிநாட்டவங்க தான் ஏறுவாங்க. ஒருத்தர் ஒரு பரிசுதான் எடுத்துட்டு இறங்கணும்ங்கிறத அவங்க கண்டுக்கவே மாட்டாங்க. ஆளாளுக்கு கைக்கெட்றதெல்லாம் பிச்சு போட்டுடுவாங்க. ஒரு க்ரூப் பாரஷூட்ல இருந்து இறங்குவாங்க. நடுவுல ஒரு குளம் இருக்கு. அதுக்குள்ள லாண்ட் ஆகணும். ரெஸ்கியூ எல்லாம் குட்டி போட் வச்சிட்டு ரெடியா இருப்பாங்க. சமயத்தில கூட்டத்தில குதிச்சு மக்கள் அலறி அடிச்சிட்டு ஓடினதும் உண்டு.

bergensbunad இந்த ஊரோட பூனாட்.

பசங்களுக்கு செம கொண்டாட்டம்ங்க. யார் ஜாஸ்தி ஐஸ்க்ரீம் சாப்டுறதுன்னு போட்டியே நடக்கும். ஸ்பெஷலா பஞ்சு மிட்டாய்க்காரங்க வருவாங்க. பலூன் ஒரு பக்கம். வாங்கிற பாதி பேரு காத்துல பறக்க விட்டுடுவாங்க. அறிந்தும் அறியாமலும். வானத்தில ஸ்பைடர்மேன், ஸ்னோவைட், மொபைல், புலினு வித விதமா பறந்துட்டு இருக்கும். பசங்க ஸ்கூல்ல ப்ரோக்ராம் சாயந்தரம் நடக்கும். பொறுப்பு மூணாங் கிளாஸ் பேரண்ட்ஸ். இந்த வருஷம் சதுவுக்காக நாங்க பொட்டிக் கடைல வியாபாரம் பண்ணணும்.

குட்டிப் பசங்களுக்கு அடுத்து சுதந்திர தினக் கொண்டாட்டங்களில பட்டையக் கிளப்புறது ஹை ஸ்கூல் பசங்க. கடைசி வருஷ படிப்பில இருக்கிறவங்கள russ (றுஸ்) னு சொல்வாங்க. அவங்க போடற அலப்பர தாங்காதுங்க. ஆளாளுக்கு வண்டி வாடகைக்கு எடுத்துட்டு க்ரூப் க்ரூப்பா சுத்திட்டு இருப்பாங்க. அவங்களுக்குள்ள அடிதடி சண்டை நடக்குறதுமில்லாம சமயத்தில குசும்பு ஓவராகி மத்தவங்களையும் தொல்லை பண்ணுவாங்க. அவங்க றுஸ் கார்ட்னு ஒண்ணு, விசிட்டிங் கார்ட் சைஸ்ல வச்சிருப்பாங்க. அத கலெக்ட் பண்றது குட்டிப் பசங்களோட சம்மர் ஹாபி. போன வருஷம் அம்மு முன்னூத்தி சொச்சம் சேர்த்திருந்தாங்க.

russekort1

இந்த வருஷம் ஓவர் குளிரால கண்ணுக்குக் குளிர்ச்சி கம்மியா இருக்கும். இல்லேன்னா கலர் கலரா பூக்கள் அவ்ளோ அழகா இருக்கும். ஸ்பெஷலா இந்த நாளுக்குன்னு வித விதமா நட்டு வச்சிருப்பாங்க. என்னால நாளைக்கு போக முடியுமா தெரிலங்க. காய்ச்சல், ஜலதோஷம்,  அதோட  த்ராட் இன்ஃபெக்‌ஷனும் இருக்கு போல இருக்கு.. அவ்வ்.. வெதர் நல்லா இருந்தா போகலாம். நாளைக்கு மழை + குளிர் இருக்கும்னு அவதானிங்க சொல்ட்டாங்க. குளிருக்கேத்த உடுப்பு, குடை, ரெயின் பூட்ஸ்லாம் போட்டு போகணுமாம்.

17 mai vær

போனேன்னா கண்டிப்பா போட்டா புடிச்சிட்டு வந்து இன்னொரு போஸ்ட்ல போடறேன். நைட் வாண வேடிக்கை பாக்க அவ்ளோ அழகா இருக்கும். இந்த வருஷம் அதையும் மிஸ் பண்ண போறேன். ஆவ்வ்..

ஹச்.. ஹச்.. ஹச்ச்ச்ச்..

வர்ட்டா..

18 நல்லவங்க படிச்சாங்களாம்:

சீமான்கனி said...

ஆஹா இவ்ளோ அற்புதமான விழாவ மிஸ் பண்ண போறீங்களா???
எனக்கு ஒரேஒரு சந்தோசம் எனக்கும் ஜலதோஷம் காயிச்சல் துணைக்கு ஒரு ஆள் இருக்கு விழாவ அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்...இப்போ உடம்பை பார்த்துகோங்க சுசிக்கா...ஹச்...ஹச்.....ஹ...ஹா....ஹாச்...

சீமான்கனி said...

ஹச்...ஹச்.....ஹ...ஹா....ஹாச்...நான்தான் பஸ்ட்டு...நான்தான் பஸ்ட்டு

எல் கே said...

//இந்த வருஷம் சதுவுக்காக நாங்க பொட்டிக் கடைல வியாபாரம் பண்ணணும். ///

வியாபாரத்த ஒழுங்கா பாருங்க

ராமலக்ஷ்மி said...

சுவாரஸ்யமான விவரங்கள் சுசி.

சுதந்திர தின வாழ்த்துக்கள்:)!

உடம்பைப் பார்த்துக்குங்க. ஸ்வெட்டர், குடை, ரெயின் பூட்ஸ் சகிதம் பத்திரமா போய் வந்து அடுத்த போஸ்ட் போடுங்க.

Anonymous said...

உங்க பதிவு படிச்ச பிறகு நார்வே வந்து இந்த கொண்டாட்டத்தில் பங்கு கொள்ள ஆசையா இருக்கு . சுதந்திர தின வாழ்த்துக்கள் ...உடம்பை பத்திரமாக பார்த்து கொள்ளவும் .

Chitra said...

நல்லா எழுதி இருக்கீங்க. சீக்கிரம் போய், இன்னும் நிறைய போட்டோஸ் போடுங்க..... சூப்பரா இருக்கும்......

Anonymous said...

இவங்க டான்ஸ் ஆடுவாங்களே அதை விடியோ புடிச்சு போடுங்க

Admin said...

வாழ்த்த்துக்கள்...

Madumitha said...

சுதந்திர தின வாழ்த்துக்கள்
உங்களுக்கு.

கோபிநாத் said...

வாழ்த்துக்கள்...;)

பித்தனின் வாக்கு said...

Hollo susi, how are u and kunalan sir?. how is your childrens.

Still time to take i will return to blogs.

I am fine and my job in India also going fine.

கார்க்கிபவா said...

//. யார் ஜாஸ்தி ஐஸ்க்ரீம் சாப்டுறதுன்னு போட்டியே நடக்கும். ஸ்பெஷலா பஞ்சு மிட்டாய்க்காரங்க வருவாங்க.//

ரைட்டு. இதுக்குதான் வ்ருஷம் முழுக்க நீங்க ட்ரியினிங் எடுத்துப்பிங்களா?

//ஆவ்வ்.. ஹச்.. ஹச்.. ஹச்ச்ச்ச்.. வர்ட்டா/

பார்த்து பார்த்து...

சுசி said...

இப்போ எப்டி இருக்கு சீமான்?? டாக்டர் கிட்ட போனிங்களா??

J J J J J

பாத்தாச்சு LK :)

J J J J J

ஹிஹிஹி.. நன்றி அக்கா.

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி சந்தியா..
அடுத்த வருஷம் வாங்க :))

J J J J J

அப்போ எழுத வேணாமா சித்ரா.. அவ்வ்வ்..

J J J J J

சாரி அம்மிணி நாங்க போக டான்ஸ் முடிஞ்சுது.. அடுத்த வருஷம் பாக்கலாம்.

சுசி said...

நன்றி சந்ரு.. நலமா??

J J J J J

நன்றி மதுமிதா.

J J J J J

நன்றி கோபிநாத்.

சுசி said...

ரொம்ப சந்தோஷம் அண்ணா.. எல்லாரும் நலமா இருக்காங்களா ஊர்ல.. வேலை எல்லாம் முடிச்சிட்டு ஆறுதலா வாங்க. ரொம்ப நன்றி.

J J J J J

கார்க்கி.. முதல்ல ட்ரீட் குடுங்கப்பா.. 500704 ஆச்சு இப்போ :))

எல் கே said...

உடம்பு பரவ இல்லையா

சுசி said...

இப்போ கொஞ்சம் பரவால்லை LK.