Pages

  • RSS

02 May, 2010

நான் பழகி நாள் பல ஆச்சு..

ஒரு சனிக்கிழமை.. 

எப்போன்னு இப்போ நினைவில்ல.. 

நீ லேட்டா தூங்கப் போற எண்ணத்தில இருந்தே..

தற்செயலா நான் அங்க வந்தப்போ பேசினோம்.. 

நீ பேசினத நான் கேட்டுட்டு இருந்தேன்னும் சொல்லலாம்..

இன்றும் ஒரு சனிக்கிழமை..

உன் கிட்ட பேசணும் போல இருக்கு..

உயிரோட ஒவொரு அணுவும் தவிக்குது..

ஃபோன் பண்ணி பார்க்க கை துடிக்குது..

மனசு ஒத்துக்க மாட்டேங்குது..

இன்னைக்கு நீ சீக்கிரம் தூங்கியிருந்தா..

என்னால உன் தூக்கம் கெட்டுப் போச்சுன்னா..

கேள்வியோடு பதிலும் தயாரா இருந்துது..

 

woman on a couch

தூக்கம் தொலைந்த இன்னொரு இரவுக்கு..

நான் பழகி நாள் பல ஆச்சு..

கனவில கண்ணாமூச்சி ஆடும் உன் வழக்கம்..

நனவுல நடக்காது பொல்லாத என் கண்ணா..

இன்னும் ஒரு சனிக்கிழமை..

தேதி கிழிக்கப்படும் எனக்கே எனக்குன்னு..

அன்னிக்கு வரேன் உன்கூட நான் பேச..

அதுவரைக்கும்?!

22 நல்லவங்க படிச்சாங்களாம்:

Anonymous said...

ஓகே. நல்லா நடத்துங்க :)

ராமலக்ஷ்மி said...

சரி சரி :))!!

Chitra said...

////தூக்கம் தொலைந்த இன்னொரு இரவுக்கு..

நான் பழகி நாள் பல ஆச்சு..

கனவில கண்ணாமூச்சி ஆடும் உன் வழக்கம்..

நனவுல நடக்காது பொல்லாத என் கண்ணா..////


.......ம்ம்ம்ம்........ ;-)

எல் கே said...

//இன்னைக்கு நீ சீக்கிரம் தூங்கியிருந்தா..

என்னால உன் தூக்கம் கெட்டுப் போச்சுன்னா///

நடக்கட்டும்

புலவன் புலிகேசி said...

ரைட்டு.....

Thamiz Priyan said...

இது முடியலத்துவ வகையில் வரக் கூடிய கவிதை போல இருக்கே.. எல்லாருமே வலது பக்கம் போட்டு எண்டர் தட்டுவாங்க.. நீங்க வித்தியாசமா இடது பக்கம் போட்டு எண்டர் தட்டி இருக்கீங்க.. கலக்குங்க!

ஜெய்லானி said...

டைபிங்குமில்ல வித்தியாசமா இருக்கு.

கோபிநாத் said...

ம்ம்மம்..சனிக்கிழமை சனிக்கிழமை இந்த மாதிரி ஆகிடும் போல இருக்கு இனிமேல் சனிக்கிழமை இந்த பக்கம் வரக்கூடாது ;))

\\தூக்கம் தொலைந்த இன்னொரு இரவுக்கு..

நான் பழகி நாள் பல ஆச்சு..

கனவில கண்ணாமூச்சி ஆடும் உன் வழக்கம்..

நனவுல நடக்காது பொல்லாத என் கண்ணா..

இன்னும் ஒரு சனிக்கிழமை..

தேதி கிழிக்கப்படும் எனக்கே எனக்குன்னு..

அன்னிக்கு வரேன் உன்கூட நான் பேச..

அதுவரைக்கும்?!
\\

யப்பா சாமீ...எனக்கு மயக்கம் வருதே யாராச்சும் என்னை பிடிங்களோன்!!! ;)

பதிவுல படிக்கிறதை விட பின்னூட்டம் போடும் இடத்தில் (Hide original Post) click பண்ண படிக்கிறதுக்கு ரொம்ப ஈசியாக இருக்கு ! ;))

கார்க்கிபவா said...

சனிக்கிழமை தனிக்கிழமை ஆயிடுச்சா?

சீமான்கனி said...

உங்க பேச்சும் வீச்சும்...ஏதோ சொல்லுது...ஓகே அடுத்த சனிகிழமை வரட்டும்.....

///கனவில கண்ணாமூச்சி ஆடும் உன் வழக்கம்..
நனவுல நடக்காது பொல்லாத என் கண்ணா..//

சூப்பர் வரிகள்..

சுசி said...

நடத்துறேங்க அம்மிணி.. சைடு பார் பாத்திங்களா??

F F F F F

போன வாரம் நீங்க சைடு பார்ல வந்தத சொல்றிங்களா அக்கா??

F F F F F

நல்ல வேளை கடசில சிரிச்சு வச்சிங்க சித்ரா.. மிரட்டுறிங்களோனு நினைச்சுட்டேன்..

சுசி said...

சரிங்க LK..

F F F F F

அப்பாடா.. ராங் இல்லைனு சொல்லிட்டிங்க புலவரே..

F F F F F

நீங்க பிரியாணி பார்சல் அனுப்பி இருந்தா இப்டி ஆயிருக்குமா தமிழ் பிரியன்??

சுசி said...

அப்டியா ஜெய்லானி.. நன்றி.

F F F F F

கோபி.. வொய் மயக்கம்?? சென்ஷி பர்த்டே ட்ரீட்??
ரைட்டு!! மைண்ட்ல போட்டாச்சு.

F F F F F

பின்ன.. உங்களுக்கு தோழிப் பண்ணை இருக்கு.. எனக்கு ஒரே ஒரு தோழன் தானே இருக்கு கார்க்கி :(

சுசி said...

என்ன சொல்லுது சீமான்?? எனக்கு மட்டும் சொல்லுங்களேன்..

தாரணி பிரியா said...

ம்ம்

Anonymous said...

ம்ம்..

NALLA ERUKKU...

VARIGAL.

CUTE...WAY OF TELLING.

SURYA

நட்புடன் ஜமால் said...

இன்னைக்கு நீ சீக்கிரம் தூங்கியிருந்தா..

என்னால உன் தூக்கம் கெட்டுப் போச்சுன்னா..

கேள்வியோடு பதிலும் தயாரா இருந்துது..]]

புரிதல்
ஆரோக்கியம்
அக்கறை

Anonymous said...

//சுசி said...

நடத்துறேங்க அம்மிணி.. சைடு பார் பாத்திங்களா??//

ஹை சைட் பார்ல நானு.

அப்பவே பாத்தப்ப ராமலஷ்மி இருந்தாங்களே

ராமலக்ஷ்மி said...

@ சின்ன அம்மிணி,

//ஹை சைட் பார்ல நானு.//

அட ஆமாம்:)!

//அப்பவே பாத்தப்ப ராமலஷ்மி இருந்தாங்களே//

அடடே, என்னை நான் பார்க்கலியே:))!

சுசி said...

மிரட்டாதிங்க தாரணி பிரியா.

F F F F F

நன்றி சூர்யா.

F F F F F

ரொம்ப நன்றி ஜமால்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

யதார்த்த நடை... நல்லா இருக்குங்க கோர்வை

சுசி said...

ஹிஹிஹி.. பாங்க் பாலன்ஸ் பாத்ததும் மாத்திட்டேன் அம்மிணி.. பேசிக்கிட்டத விட போட்டுக் குடுத்திருக்கிங்க.. உங்களுக்கு இது கூட செய்யலைன்னா எப்டி?? :))

F F F F F

பாக்கலியா அக்கா.. இன்னொருமுறை போட்டுட்டு கண்டிப்பா சொல்றேன்.

F F F F F

நன்றி தங்கமணி..