Pages

  • RSS

20 September, 2010

நிலா(வீட்டு)க்கு போய்ட்டேன் - 5

ஊர் சுத்தல் ஒண்ணு.     ரெண்டு.     மூணு.     நாலு.

IMG_0189 IMG_0193 திடீர்னு சைட்ல பாக்ஸ் மேல கால்கள் இளைப்பாறும். என்ன இப்டி திடீர்னு ஆரம்பிச்சேன் இந்த வாரம்னு பாக்கறிங்களா?? இதே மாதிரித்தான் திடீர்னு எங்க கைய தள்ளி விட்டுட்டு காலை வச்சுக்குவாங்க. அதிலயும் சண்டை வந்திட்டதால மணிக்கு ஒருத்தர் என்று முடிவாகி டைம் அவுட் சொல்ல வேண்டிய பொறுப்பு என் கிட்ட கொடுக்கப்பட்டது.

IMG_0201 இப்போ ஒரு வழியா சுவீடன் நாட்டுக்குள்ள வலது டயர் உருண்டு போயாச்சு. முன்னல்லாம் பார்டர்ல செக் பாயிண்ட் மாதிரி வச்சிருந்தாங்க. இப்போ எதையும் காணோம். அந்த இடம் வெறிச்னு இருந்திச்சு. இனிமே இப்படியே நேராஆஆஆ போயிட்டே இருக்கும் பாதை. ஸ்கண்டினேவியன் நாடுகளான நோர்வே, சுவீடன், டென்மார்க்கில பெரும்பாலும் ஹை வேல ரெண்டு லேன் இருக்கும். சில இடங்கள்ல மூணாவும், ஒண்ணாவும் மாறி மாறி வரும்.

 

IMG_0205 கண்ணாளன் முகத்தில இப்போ அவ்ளோ மலர்ச்சி. ஸ்பீட் குறைஞ்சது 110km என்ற சைன் பாத்துட்டார்ல. அதான் குஷி. இனி ரெக்கை கட்டிக்கும் டயர்களுக்கு. அவர் பாட்டுக்கு ஓவர் டேக் பண்ணிட்டு போயிட்டே இருப்பார். சில கார்கள் அடிக்கடி எங்களை ஓவர் டெக் செய்யும். அப்புறம் நாங்க அவங்களை. அப்படி அடிக்கடி சந்திக்கும்போது குட்டியா ஒரு சிரிப்பு பரிமாறிக்குவோம். சிலர் கடுப்ஸ். இந்த கருப்புங்க எங்கள முந்தவான்னு. அதிலயும் பசங்க இருந்தாங்கன்னா கை ஆட்டி சிரிச்சுட்டு போவாங்க.

IMG_0199 IMG_0204 பச்சையும் மஞ்சளுமாய் கம்பளம் விரித்து வைத்த வயல் வெளிகள். இந்த வருஷ காலநிலை சரியா இல்லாததால நிறைய இடங்கள் வரட்சியா இருந்துது.

IMG_0200 நோர்வே மண் கன்னங்கரேர்னு இருக்கும். சுவீடன்ல பழுப்பு நிறமா மண் மட்டுமில்லாம மலைகளும் பழுப்பாவே இருந்திச்சு. குட்டியா இருந்தா குன்றுன்னு சொல்லணுமோ??

IMG_0211 இது என்ன செடினு தெரியலை. ஆனா எங்க பாத்தாலும் சோளப் பொரி தூவி வச்ச மாதிரி இருந்துது.

IMG_0197 இது சுவீடன்ல தரை இறங்குற  ஏரோப்ளேன். நல்லா பாத்துக்கோங்க. பாத்திட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க. அடுத்த ஸ்டாப்பிங்ல மதிய சாப்பாடு.

வர்ட்டா..

25 நல்லவங்க படிச்சாங்களாம்:

Chitra said...

very nice photos.... Beautiful!

Anonymous said...

படங்கள் அருமை சுசி!

//சோளப் பொரி தூவி வச்ச மாதிரி //
என்னடா இந்த பதிவுல இன்னும் ஸ்நாக்ஸ் மேட்டர் பத்தி ஒன்னும் வரலேன்னு நினைச்சேன்.. வந்துருச்சு :)

//சுவீடன் நாட்டுக்குள்ள வலது டயர் உருண்டு போயாச்சு//
தேவையே இல்லாம கரகாட்டக்காரன் காமெடி நியாபகத்துக்கு வந்துட்டு போகுது சுசி.. அவ்... :)

ராமலக்ஷ்மி said...

அருமையான படங்களுடனான பகிர்வு. நன்றி சுசி.

//மணிக்கு ஒருத்தர் என்று முடிவாகி//

பிஞ்சுக்கால்கள் அழகு:)!

எல் கே said...

படங்கள் அருமை சுசி அக்கா. சாப்பாடு பார்சல்

R. Gopi said...

கடைசி போட்டோ சூப்பர்

தாரணி பிரியா said...

போட்டோ எல்லாம் அழகா இருக்கு சுசி. எழுதினதும் நல்லா இருக்கு

கார்க்கிபவா said...

சுவீடன்ல எல்லாமே அழகுதாங்க :)

நர்சிம் said...

Nice.

அருண் பிரசாத் said...

Lunch aaa?

Bon Appetite!

கோபிநாத் said...

\\இப்போ ஒரு வழியா சுவீடன் நாட்டுக்குள்ள வலது டயர் உருண்டு போயாச்சு\\

அய்யோ...அடி ஏதாச்சும் பட்டுச்சா!??

Ahamed irshad said...

Flight pic nice..

Unknown said...

படங்களுடன் பயணக்கட்டுரை அருமை
தொடருங்கள்

சீமான்கனி said...

\\இப்போ ஒரு வழியா சுவீடன் நாட்டுக்குள்ள வலது டயர் உருண்டு போயாச்சு\\

சுசிக்கா அங்க போயும் டயர் உருட்டி விளையாடுற பழக்கத்தை விடலையா நீங்க...

வழக்கம் போல படங்கள் எல்லாம் ஜூப்பர்...குட்டீஸ் கால்கள் இன்னும் ஸ்பெஸல்....

Madumitha said...

படங்களுடன் பதிவும் அழகு.

'பரிவை' சே.குமார் said...

படங்கள் அருமை.

பதிவும் அழகு.

Unknown said...

:)

Unknown said...

swiss pogavenum endru ninchen..

unga photos parthapiragu antha aasiya neriveritu..

Unknown said...

antha photos ulla konna partha payama erukku..

mathunga..etho pei padam pola erukku background.(ethu unga photos ellaiey)

சுசி said...

நன்றி சித்ரா..

| | | | |

கிர்ர்ர்ர்.. உங்களுக்கு லஞ்ச் கட் பாலாஜி..

| | | | |

ரொம்ப நன்றி அக்கா.

சுசி said...

தம்பி எல்கே.. இன்னும் மணி ஆர்டர் வர்ல..

| | | | |

நன்றி கோபி.

| | | | |

நன்றி தாரணி.

சுசி said...

எப்போ போய் வந்திங்க கார்க்கி?? சொல்லவே இல்லை..

| | | | |

நன்றி நர்சிம்.

| | | | |

லஞ்சா இல்லை அருண். லஞ்ச்.

sakthi said...

அழகாய் பதிவிட்டுள்ளீர்கள் விவரித்துள்ள விதம் அழகு!!!

சுசி said...

கோப்ஸ்.. இத நான் எதிர்பார்க்கலை :))

| | | | |

நன்றி இர்ஷாத். முதல் வருகைக்கும்.

| | | | |

முதல் வருகைக்கு நன்றி பாலன்.

சுசி said...

ஹிஹிஹி.. கனி.. அது ஒரு காலம்பா.. நன்றிப்பா.

| | | | |

நன்றி மதுமிதா.

| | | | |

நன்றி குமார்.

சுசி said...

சிவா.. இப்போ தான் சுவீடன் வந்திருக்கோம்.. இன்னமும் சுவிஸ் போகலை :)
இதுக்கே பயந்தா எப்டிங்க??

| | | | |

நன்றி சக்தி.