Pages

  • RSS

01 September, 2010

வனவாசம்.

 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5

எப்போதாவது உன்னோடு வாழ்வேன்
இல்லை வாழ்ந்து விட்டுப் போகிறேன்
எப்போதும் போல் நினைவுகளில்..

 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5

par r உன் மூச்சு சத்தம்

கேட்காத எந்த இடமும்

ஏற்பாய் இல்லை

வைத்துக் கொள் என்னை

உன் கைகளின் வட்டத்துக்குள்

 

  5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5

நெகிழச் செய்யாதே..

நீ சொல்வதெல்லாம் சரியாகவும்

கூடவே கேட்பதெல்லாம் செய்யவும்

எனை மீறித் தோன்றுகிறது.

  5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5

sjø 1 என்னோடு நீயும்

உன்னோடு நானும்

நம்மோடு யாரோவுமாய்

வாழ்க்கை..

விதி..

படைப்பு..

 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5

இந்த உன் சிரிப்பு

இப்போதும் நினைவில்..

எப்போதும் இல்லை

எப்போதாவது சிரிக்கிறாய்

என்னை சிலிர்க்க வைத்த

அந்த முதல் சிரிப்பை..

 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5

உன் ஒற்றை நொடி உதட்டு முத்தம்
மனதோடு தலை வலிக்கும் மருந்தாக
நிம்மதியாய் ஒரு தூக்கம்
நன்றிக்கடன் தீர்க்க வேண்டும்
கிட்ட வா கண்ணா..

 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5 5

37 நல்லவங்க படிச்சாங்களாம்:

இராமசாமி கண்ணண் said...

படிச்சுட்டேங்க.. எல்லா கவிதைகளிலும் காதல் நிரம்பி வழிகிறது :)

ஜெய்லானி said...

கலக்கல் கவிதை..!!

சங்கவி said...

அனைத்தும் காதல் ரசம் சொட்ட சொட்ட தேனாக வழிகிறது.... ரசிச்சு ரசிச்சு படித்தேன்...

உங்க கவிதைகள் அனைத்தையும் நீங்க புத்தகமாக வெளியிட முயற்சி செய்யுங்களேன்..

Chitra said...

உன் ஒற்றை நொடி உதட்டு முத்தம்
மனதோடு தலை வலிக்கும் மருந்தாக
நிம்மதியாய் ஒரு தூக்கம்
நன்றிக்கடன் தீர்க்க வேண்டும்
கிட்ட வா கண்ணா..


...... காதல் ரசம், பாலாய் பொங்கி பன்னீராய் தெளிக்கிறதே..... :-)

நட்புடன் ஜமால் said...

அருமையான நன்றி கடன் ;)

Balaji saravana said...

அருமையான கவிதைகள் சுசி!

//நம்மோடு யாரோவுமாய் //

ஏதோ செய்கிறது இவ்வரிகள்..
நெடுநாள் நீங்காது மனதைவிட்டு..

வெறும்பய said...

இதில அது நல்லாயிருக்கு... இது நல்லாயிருக்கு அப்படின்னு சொல்ல தெரியல... அத்தனையும் அருமை...

sandhya said...

ஒ சுசி ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு பா உங்க காதல் கவிதை.

எப்போதாவது உன்னோடு வாழ்வேன்
இல்லை வாழ்ந்து விட்டுப் போகிறேன்
எப்போதும் போல் நினைவுகளில்"
இந்த வரிகள் சூப்பர் ஒ சூப்பர் .
..பகிர்வுக்கு நன்றி .

vinu said...

me seconduuuuuuuuuuu

vinu said...

appada vanthu seat podurathukkulla embuttu kastammmmmpa

vinu said...

sari sari kaluthai ellam nalaathaan irrukku enna onnea onnu konjam vayuthearichalla irrukku

[night saapitta gobimanjurian karanama irrukkumoooooo]

sakthi said...

நெகிழச் செய்யாதே.. நீ சொல்வதெல்லாம் சரியாகவும் கூடவே கேட்பதெல்லாம் செய்யவும் எனை மீறித் தோன்றுகிறது.

இது காதலில் சகஜமே
அழகு
ரசித்தேன்

sakthi said...

எங்கே இண்ட்லி பாக்ஸ் காணாமல்போயிடுச்சா

அருண் பிரசாத் said...

சுசி காட்டில் கவிதைக்கு பஞ்சம் இல்லை

கார்க்கி said...

காதல் ரசம் கொட்டுது.. இல்லயில்ல..

சொட்டுது

கோபிநாத் said...

என்னோட எண் 16ன்னு வருது ;))

Ananthi said...

கவிதை நல்லா இருக்குங்க..
///நன்றிக்கடன் தீர்க்க வா கண்ணா.../// சூப்பர் :-)))

வழிப்போக்கன் - யோகேஷ் said...

அருமை கவிதைகள்....

ப்ரியமுடன் வசந்த் said...

//எப்போதாவது சிரிக்கிறாய்

என்னை சிலிர்க்க வைத்த

அந்த முதல் சிரிப்பை..//

ம்ம் இந்த லைன்ஸ் பிடிச்சது...!

தலைப்பு விளக்கம் ப்ளீஸ்

சுசி said...

முதல் வருகைக்கு நன்றிங்க இராமசாமி கண்ணன்.

6 6 6 6 6

நன்றி ஜெய்லானி.

6 6 6 6 6

சங்கவி.. ஆவ்வ்வ்வவ்.. எதுக்கு இந்த தண்டனை எனக்கு??

சுசி said...

ஹிஹிஹி.. நன்றி சித்ரா.

6 6 6 6 6

நன்றி ஜமால்.

6 6 6 6 6

கடலையும் வானத்தையும் பார்க்கும்போது எனக்கு எப்போதும் இதுதான் தோணும் பாலாஜி சரவணா.

சுசி said...

இன்னும் ஒரு தடவை படிச்சு பாருங்க வெறும்பய.. நல்லா இல்லாதது எதுன்னு தெரியும் :)

6 6 6 6 6

நன்றி சந்தியா.

6 6 6 6 6

இதுக்கும் வயித்தெரிச்சலா வினு.. ரைட்டு.

சுசி said...

நன்றி சக்தி. அப்போ இது காதல்னு உறுதியாச்சு. அப்பாடா.
இல்லைங்க. நான் அவ்ளோ தரமா இன்னும் எழுதல :))

6 6 6 6 6

மட்டும் பஞ்சமில்லைன்னு சேர்த்து சொல்லுங்க அருண்.

6 6 6 6 6

மிளகு ரசம், தக்காளி ரசம் தெரியும். அது என்ன கார்க்கி காதல் ரசம்??

சுசி said...

.. பெற்றுப் பெரு வாழ்வு வாழுங்க கோப்ஸ்.

6 6 6 6 6

முதல் வருகைக்கு நன்றி ஆனந்தி.

6 6 6 6 6

நன்றி யோகேஷ்.

சுசி said...

லேட்டா வந்தா இப்டித்தான் விளக்கம் கேக்க தோணும் வசந்து :))

வனவாசம்ன்னா காட்டுல வாழுறது.. ராமாயணத்துல 14 வருஷம் ராமர் போனதுதான் வனவாசம்.. அதாவது கஷ்டமான வாழ்க்கை. எல்லாத்தையும் விட்டு விலகி வாழுறது..

அப்படி தனியா வாழுற இந்த வெளிநாட்டு வாழ்க்கையில பசுமையா இருக்கிறது காதல் தானே..

புரியுதா ப்ரியமுடன் வசந்த்??

சௌந்தர் said...

நன்றிக்கடன் தீர்க்க வேண்டும்////

இந்த கடனையாவது திருப்பி கொடுங்கள்

Priya said...

காதல் சொட்டும் கவிதைகள், அருமையா இருக்கு சுசி.
உங்க‌ க‌டைசி க‌விதை வ‌ரிக‌ளை போல‌வே நானும் எழுதி இருக்கேன்.. ம்ம், காத‌லில்தானே தலைவ‌லிக்கு கூட‌ முத்த‌ம் ம‌ருந்தாகிற‌து.

சே.குமார் said...

எல்லா கவிதைகளிலும் காதல் நிரம்பி வழிகிறது

இரா கோபி said...

சில இடங்கள் நல்லா இருக்கு.

ஆனா ஏன் stanza (பாருங்க கவிதைன்னு ஒத்துகிட்டேன், இல்லன்னா paragraph ன்னு சொல்லி இருப்பேன்!!!) alignment left, right, left அப்படின்னு மாறி மாறி இருக்கு? (வந்ததுக்கு ஏதானும் கேக்கனும்ல?!!!:)

சுசி said...

அதெல்லாம் அப்பப்ப குடுத்திடுவேன் சௌந்தர் :))

6 6 6 6 6

காதலே நோயாம் ப்ரியா. மருந்து இதானாம்.

6 6 6 6 6

நன்றி குமார்.

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி கோபி.

யாராச்சும் ஏன்னு கேக்கணும்னு தாங்க.

அப்பாடா.. இன்னைக்காவது நீங்க கேட்டிங்களே :)

vinu said...

eppavum bloggai open pannunathu and close pannum munnadiyum sila regular blogsai visit pannittu appurama logout kodukkurathu enaathu palakkam appudithaan innaikku unga blogukku vanthuttu thirumba porappooo thiru parical blog new post appudeenu unga blog side barla status apdate kaattuchu angea poi parthaaaa megappeariyya santhosam kaathukkondu irrunthuchuuuu

so ithukku neenga hthaan karanamgirathaal ungalukku niziland presidentkitta ippathaan phone panni oru viruthu kodukka solli irrukken neenga kaalaila office ponnathum illatti innaikku unga dy time la sure aha oru happy news ungalukku varummnu wish pannurean......


thanks suchi thanks a lotttttttttttttttt

சுசி said...

வினு.. நார்வே ப்ரைம் மினிஸ்டர் கிட்ட பேசுங்க.. :))

அதே போலத்தான் நானும்.. லாக் அவுட் செய்ய முன்னம் கமண்ட் வந்திருக்கான்னு செக் பண்ணுவேன்.. உங்க கமண்ட் இருந்துது.

பரிசல் போஸ்ட்ல உங்கள பத்தி இப்போ தான் படிச்சிட்டு வரேன்.. நீங்க எழுதி இருக்கிங்க..

உங்க வாழ்த்து பலிக்கட்டும். உங்களுக்கும் அதே விதமா ஒரு நல்லது நடக்கணும்னு நானும் வேண்டிக்கிறேன் :)

vinu said...

nandri suchi

r.v.saravanan said...

அத்தனையும் அருமை..

ஆதிமூலகிருஷ்ணன் said...

சுமாரான கவிதைகள். வார்த்தைப் பிரயோகம் இன்னும் பழகவேண்டும்.

சிட்டுக்குருவி said...

அச்சோ இதையெல்லாம் நான் படிக்கவே இல்லை :(