Pages

  • RSS

29 July, 2010

நீ ரொம்ப கேள்வி கேக்கறே..

அல்லாரும் நல்லா இருக்கிங்களா மக்கள்ஸ்.. உங்க கிட்ட இப்டி கேட்டு எத்த்த்த்த்தனை நாளாச்சு.

விடுமுறை இன்னமும் ஒரு நாள் தான் பாக்கி இருக்கிறதால கொஞ்சம் மனசு சரியா இல்லை.. அதனாலதான் என் பயணம் பத்தி இன்னமும் எழுதல. கண்டிப்பா எழுதுவேன். அதுவும் தொடர் கதையா.  என் கிட்ட பத்து கேள்விகள அனுப்பி வச்சிருக்காங்க நம்ம சின்ன அம்மிணி ஒரு தொடர் பதிவு வடிவில. நான் தான் எப்போதும் கேள்வி கேப்பேன்னு ஒருத்தர் சொல்வார். இதுவும் கேள்விதானே. அதான் அவர் சொல்றத அப்டியே தலைப்பா வச்சேன். உங்கள சொல்லல அம்மிணி. இத தொடர நானும் சிலர கோத்து விடறேன். அம்மிணி சொன்னா மாதிரி நேரமும் விருப்பமும் இருந்தா தொடருங்க, தொடர வைங்க.

@சந்தியா.

@ப்ரியா.

@புன்னகை.

@சீமான்கனி

@கயல்.

1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

சுசி.

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

சுசின்னு பேர் வைக்க பெருசா எந்த காரணமும் இல்லைங்க. அது என்னோட செல்ல பேரு மாதிரி. சின்ன வயசுல அப்டி கூப்பிடுவாங்க. அதனால் வச்சேன். அது உண்மையா என் பேருதான். ஆனா எனக்கு இன்னொரு பேரும் இருக்கு.. பாட்ஷா.. பாட்ஷா மாதிரி

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி.

காலடி எங்க வச்சேன்.. சாளரம் வழியா என் ஃப்ரெண்டி புடிச்சு தள்ளி விட்டுட்டா.. தொபுக்கடீர்னு வந்து விழுந்துட்டேன்.

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

ஒண்ணே ஒண்ணுதாங்க செய்தேன். போஸ்ட்டு போஸ்ட்ட்ட்ட்டா எழுதிப் போட்டேன்.

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

உண்டு. ஏனாஆஆ.. என்னப் பத்தி மட்டும் எழுதணும்கிறதுதாங்க என் எண்ணமே. விளைவு.. நீங்க நலமா இருக்கிங்க தானே??

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

என் மனத் திருப்திக்காக எழுதறேன். அது மூலமா உங்க அன்பை சம்பாதிக்க முடிஞ்சது நிறைவு.

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

கண்ணே கண்ணு.. இப்போதைக்கு.   இன்னமும் ஒரு எட்டுப் பத்துக்கு சொந்தக்காரி ஆகும் எண்ணம் இருக்கு.

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

உண்டு. எழுத தைரியம் இல்லை. அல்லாரும் என்னய பாருங்க.. பாத்திங்களா.. இப்போ சைகைல காட்னேனே.. அந்த பதிவர் தான்.  ஏன்னும் சொல்லணுமா.. இப்போ மறுபடி பாருங்க என்ன.. இதுக்குத்தான். யார் கிட்டவும் சொல்லிடாதிங்கப்பா.. நான் பாவம்.

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

அவ்வ்வ்.. பாராட்டலை. ஒருத்தங்க திட்டினாங்க. என் பதிவுக்குன்னா கூட பரவால்ல. அவங்க பதிவுக்கு கமண்ட் போட்டத்துக்கு. இங்க பாராட்டைப் பத்தி மட்டும் கேட்டிருக்கிறதால திட்டு பத்தி இதுக்கு மேல சொல்ல முடியாது.

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

ஆவ்வ்வ்வ்வ்.. இருங்க.. இன்னும் கொஞ்சம் அழுது மனச  தேத்திக்கிட்டு   சொல்றேன்.. முன்னாடி நான் குடுத்த டவல் வச்சிருக்கிங்க இல்லை.. என்னதும் எடுத்துட்டு வரேன்.. கிளம்பிடாதிங்க..

38 நல்லவங்க படிச்சாங்களாம்:

Madumitha said...

புன்னகைக்க வைக்கும் பதிலகள்.
100/100.

sathishsangkavi.blogspot.com said...

Me First..

சீமான்கனி said...

//என் மனத் திருப்திக்காக எழுதறேன். அது மூலமா உங்க அன்பை சம்பாதிக்க முடிஞ்சது நிறைவு.//

சூப்பர் சுசிக்கா...

ஆஹா என்னையும் மாட்டி விட்டுடீங்களே...அக்கா என் டவல இப்பதான் ஈரம் பண்ணேன்...வேற டவல் அனுப்பிட்டு கதைய சொல்லுங்க...வெய்டிங்...

Chitra said...

நல்ல பதில்கள்..... சூப்பர்!

Unknown said...

:(((

so sad..

சாந்தி மாரியப்பன் said...

சூப்பர் :-)))

Priya said...

//அது மூலமா உங்க அன்பை சம்பாதிக்க முடிஞ்சது நிறைவு.//... உண்மைதான்! நல்ல பதில்கள்!

தொடர்பதிவு அழைப்பிற்கு ந‌ன்றி சுசி... விரைவில் எழுத முயற்சி செய்றேன்.

Unknown said...

nanthan firstu...

varata..

சௌந்தர் said...

கலக்கல் பதில்கள்

அருண் பிரசாத் said...

காமெடியா பதில் சொல்லி இருக்கீங்க.

பாட்ஷா ஓகெ, ஆண்டணி யாருனு புரியலையே. விளக்கம் பிளிஸ்

Anonymous said...

சுசி உங்க பேட்டி பதில் சூப்பர் .என்னேயும் தொடருக்கு கூப்பிட்டதுக்கு ரொம்ப நன்றி ..

சுசி said...

அவ்ளோ மார்க்காஆஆ.. நன்றி மதுமிதா.

W W W W W

இல்லைங்க சங்கவி..

W W W W W

மணி ஆர்டர் அனுப்புங்க கனி. இல்லேன்னா அக்கவுண்ட் நம்பர் குடுக்கட்டுமா??

சுசி said...

நன்றி சித்ரா.

W W W W W

என்னாச்சு சிவா??

W W W W W

நன்றி அமைதிச்சாரல்.

சுசி said...

எழுதுங்க ப்ரியா.

W W W W W

இல்லை சிவா.

W W W W W

முதல் வருகைக்கு நன்றி சௌந்தர்.

சுசி said...

அத இங்க சொன்னா சுவாரஸ்யம் போய்டும் அருண். தனி போஸ்ட்ல சொல்றேன். ஓக்கேவா??

W W W W W

எழுதுங்க சந்தியா. வெயிட்டிங்.. :))

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்கு உங்கள் பதில்கள்.

ஜெய்லானி said...

அந்த பாட்சா மாதிரி யாரு ..யாரு..யாரு...!!!!

கோபிநாத் said...

ரொம்ப சுருக்கமாக வேகமாக முடிச்சிட்டிங்க ;))

Anonymous said...

பதிவோட தலைப்பு அப்படியே நீங்க என்கிட்ட கேக்கற மாதிரி இருக்கு. :)

டவல் இன்னும் பாவிக்கறேன் :)

ப்ரியமுடன் வசந்த் said...

சிம்பிளா ஜன்னல் ஏறி குதிச்சேன்னு சொல்லியிருக்கலாம்...! :)

vinu said...

cute and thanks for adding my blog at your recomendation list[avollo nallava irrukkuuuuuuuuuuuu]

இது நம்ம ஆளு said...

பாட்ஷா.. பாட்ஷா மாதிரி

தொபுக்கடீர்னு வந்து விழுந்துட்டேன்.

நீங்க நலமா இருக்கிங்க தானே??

ஆவ்வ்வ்வ்வ்..

:)

priya.r said...

நல்ல பதிவு ! எளிமையான தரமான சற்றே சிரிக்க வைக்கும் பதில்கள் !

I have a news to you about Norway pa!

சுசி said...

நன்றி குமார்.

W W W W W

ஜெய்லானி.. அது நானு.. நானு.. நானு..

W W W W W

கோபி.. பாவம் இல்லை மக்கள்ஸ்.. அதான்.

சுசி said...

நீங்க கோச்சுக்க மாட்டிங்கன்னு தெரியும் அம்மிணி :))

W W W W W

எதுக்கும் ஒரு பில்டப்பு இருக்கணும் வசந்து.

W W W W W

உங்களுக்கே டவுட்டா வினு??

சுசி said...

ஹிஹிஹி.. நன்றி பாரதியார்.

W W W W W

முதல் வருகைக்கு நன்றி ப்ரியா.

என்னதூஊஊஊஊஊ.. சீக்கிரம் சொல்லுங்கப்பா..

கார்க்கிபவா said...

இதென்ன கலாட்டா?????

மகக்ளே இந்த பாவத்து எல்லாம் நான் ஆளாக மாட்டேன்

சுசி said...

குருவே.. இது உங்களுக்கே நியாயமா படுதா??

ஆவ்வ்வ்..

priya.r said...

Kjære Sasi
vårt hovedkontor suituated i trondheim. Håper dette er aktuelt for deg!
Hilsen priya.r

Anonymous said...

:))

priya.r said...

தங்களின் வரவேற்புக்கு எனது நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்
ஊழல் அற்ற நாடுகளின் வரிசையில் நோர்வேக்கு முதலிடம்
உலக தனிநபர் வருமானத்தில் நோர்வேக்கு இரண்டாமிடம்
24 மணி நேரம் சூரியன் இருக்கும் நாடு( ட்ரோம்சோ க்கு அருகில்) .
அன்றும் இன்றும் ஈழ தமிழ் மக்களின் மேல் கருணை கொண்ட நாடு.
உங்களுக்கு தெரிந்த செய்திகளையும் சொல்லுங்கள் சசி.

priya.r said...

சுசிக்கு பதிலாக சசி என்று தவறுதலாக குறிப்பிட்டதற்கு வருந்துகிறேன் !

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... இதுதான் சுசி பதிவு வந்தா வரும் ஒரே எஃபெக்ட்.

சுசி said...

நன்றி பிரியா.ஆர்.

W W W W W

நன்றி குமரன்.

W W W W W

நன்றி விக்கி.

சாமக்கோடங்கி said...

சுசியின் பதில்கள் அனைத்தும் அருமை..

உங்கள் வலைப்பக்கத்தில் எனக்காக இணைப்பு கொடுத்த அன்புக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்..

பா.ராஜாராம் said...

சுசீஸ் பிராண்ட்!

:-))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//ஒருத்தங்க திட்டினாங்க. என் பதிவுக்குன்னா கூட பரவால்ல. அவங்க பதிவுக்கு கமண்ட் போட்டத்துக்கு//

அட கஷ்ட காலமே... ஏன் ஏன் இப்படி? இப்படி கூடவா?

சூப்பர் கேள்வி சூப்பர் பதில்கள்...

நட்புடன் ஜமால் said...

சுசின்னு பேர் வைக்க பெருசா எந்த காரணமும் இல்லைங்க]]

ஆமாமாம் சின்ன பெயர் வைக்க பெருசா காரணம் என்ன வேண்டியிருக்கு