Pages

  • RSS

04 July, 2010

அம்மா.. பேயி..

jailani's awards ஜெய்லானி ரொம்ப நல்லவருன்னு மறுபடி நிரூபிச்சிருக்கார். இந்த தடவையும் அலுக்காம எத்தனை பேருக்கு விருது கொடுத்திருக்கார் தெரியுமா.. இங்க போய்தான் பாருங்களேன். பதிவுலக கர்ணன் நீங்கதான் ஜெய்லானி. (அடுத்த விருதும் கிடைக்க வழி பண்ணிட்டே. என்ன ஒரு நல் மனம்) இந்த தடவை தங்க மகள்/ன் விருது. ரொம்ப நன்றி நண்பரே.

இப்போ நானும் விருத பகிர்ந்துக்கணும்ல. எனக்கு பிடிச்ச நம்பர்ல குடுத்திடறேன். நீங்க உங்க இஷ்டத்துக்கு வாரி வழங்குங்க. இல்லை நைஸா.. ஓக்கேவா.. அப்புறம் எல்லாத்துக்கும் காரணம் கேக்குறவ நான்னு சொன்னார் ஒருத்தர். யார்னு கேக்க மாட்டிங்க இல்லை.. சமத்து நண்பர்ஸ் நீங்க. விருதுக்கான காரணத்தை சொல்லிடறேன் கூடவே.

கயல்விழி – கவிதைகளுக்காக. கூர்வாள்ங்கிற தலைப்புக்கேற்றாற் போல அவளவு கூர்மை வார்த்தைகளில்.

ஆதி – ரமா, சுபாவுக்காக. நீங்க இவ்ளோ அழகா எழுதுறத்துக்கான மனநிலைய கொடுக்கிறதில பெரும் பங்கு அவங்களதுதானே.

மயில் – அன்புக்காக. இப்போதான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன் உங்கள. அதான் இப்போதைக்கு இது.

மதுமிதா – கவிதைகளுக்காக. குட்டிக் குட்டியா வார்த்தைகள் கூடவே பெரிய அளவிலான சிந்தனை.

சந்தியா – தமிழுக்காக. தமிழ்ல எழுதணும்ன்ற உங்க ஆர்வத்துக்கு இந்த ஒரு விருது போதாது.

]]]     ]]]     ]]]     ]]]     ]]]

வாரத்துக்கு ஒரு தடவை ப்ரஃபைல் ஃபோட்டோ மாத்துறது என் வழக்கம். கை கால்னு ஃபோட்டா புடிக்காம நல்லா முகம் தெரியுறாப்ல ஒரு ஃபோட்டா போடலாமேன்னு திடீர் ஆசை வந்துச்சு. சரினு செயல் படுத்தினேன். அப்போ பாத்து என் கஸின் ஆன்லைன்ல வந்தா. இது நல்லா இருக்கா பார்டினு அனுப்பி வச்சேன். பட்னு ஆஃப்லைன்ல போய்ட்டா. ரெண்டு நாளா ஆன்லைன்ல வரவே இல்லை அவ. ஃபோன போட்டு என்னாச்சுன்னு கேட்டா லைட்டா ஜூரம். இப்போ பரவால்லன்னா. நீங்க ஒண்ணும் நினைக்காதிங்க மச்சாள். இங்க வெதர் சரி இல்லைனு ஒரு பி.கு வேற. ரைட்டு!!

அவ தங்கை ஊர்ல இருக்கா. அவளும் என் கஸின் தான். இவ ஸ்கைப்ல அவ கூட பேசும்போது இந்த ஃபோட்டோவ அனுப்பினாளாம். அதாவது நான் மேலே சொன்னது. பாத்துட்டு அவ குடுத்த ரீயாக்‌ஷன் தான் தலைப்புக்கு உதவிச்சு. மச்சாளுக்கு உன் ஐடி குடுக்கட்டுமான்னு கேட்டத்துக்கு வேணாம்கா.. நான் கேட்டதா சொல்லுனாளாம். ஆகட்டும் ஆகட்டும். அவ ஸ்விட்சர்லாண்ட் தான் வர இருக்கா. கல்யாணம் முடிவாகி இருக்கு. நேர்ல போய் பாத்திட மாட்டேன். வரட்டும் வரட்டும். என்னமோ தெரில. என் உறவுகள் பக்கத்து நாட்டுக்கு வந்தா கூட பக்கத்து வீட்டுக்கே வந்தா மாதிரி ஒரு சந்தோஷம்.

]]]     ]]]     ]]]     ]]]     ]]]

grill-too-hot-716044

இந்த வருஷ சம்மர்க்குரிய முதல் பார்பகியூ நேத்து தான் செய்ய முடிஞ்சுது. +18 ல வெதரும் அம்சமா இருந்துது. நான் உங்களுக்கு சுலோச்சனா அக்கா விஜய் அண்ணா பத்தி இதுவரை சொல்லை இல்லை?? இப்போ சொல்றேன். அவங்க என்னவர் அண்ணா முன்னாடி இங்க இருந்தப்போ ஃப்ரெண்ட்ஸ் ஆகி, என்னவர் இங்க வந்ததும் அவர் ஃப்ரெண்ட்ஸ் ஆகி. அப்டியே என் ஃப்ரெண்ட்ஸ் ஆனவங்க. என் ஃப்ரெண்ட்ஸ்னு இவர் கை காட்டி விட்டவங்களுக்குள்ள எனக்கு பட்னு பிடிச்சு போனவங்க தங்கா அக்கா. அவங்கள அப்டித்தான் கூப்டுவோம். நானோ என்னவரோ மனம் விட்டு பேசுறது அவங்க கிட்ட மட்டும்தான்.

நினைச்சதும் அவங்க வீட்டுக்கு நாங்களோ இல்லை எங்க வீட்டுக்கு அவங்களோ போவோம், வருவோம். எங்க பசங்க கூட அவங்கள பெரியம்மா, பெரியப்பானு தான் சொல்வாங்க. என்னோட வழிகாட்டி மட்டுமில்லை என் உயிர் நட்பும் அவங்கதான். சமயத்தில என்ன அம்மா மாதிரி கவனிச்சுக்குவாங்க. சண்டை போடுவேன் எப்போ நீங்க எனக்காக பேச போறிங்கனு. அவ்ளோத்துக்கு என்னோட எதிர்வாதம் பண்ணுவாங்க. கடைசில சொல்வாங்க. உங்க கூட ஒத்துப் பேசினா இந்த விஷயத்தில உங்க குழப்பம் போயிருக்காது. அதான் அப்டி பேசினேன்னு. சரியாத்தான் இருக்கும்.

அப்புறம் நேத்து இந்த ட்ரெஸ்ல பின்னாடி இருந்து பாக்கும்போது பதினாறு வயசு பொண்ணு மாதிரி இருக்கிங்கன்னு அவங்க சொன்னத்துக்காக நான் இதையெல்லாம் எழுதினதா நினைச்ச்ச்சுக்காதிங்க நண்பர்ஸ். அவங்க சொன்ன உடனவே என்னவர் “தங்காக்கா.. அத நீங்க சொல்லக் கூடாது. நாங்க சொல்ணும்”னும், விஜய் அண்ணா ”நான் நினைக்கிறேன் உன்னை ஐ செக் அப் கூட்டிப் போகணும்”னும் சொல்லியாச்சு. அப்போ முன்னாடி இருந்து பாத்தா எப்டி இருப்பேன்னு கமண்ட்ல கும்ம நினைச்ச நண்பர்ஸ் தலைப்பை தைரியமா காப்பி பேஸ்ட் பண்ணுங்க. சில உண்மைகள் வலிச்சாலும் நான் தாங்கிப்பேன்.

வர்ட்டா..

27 நல்லவங்க படிச்சாங்களாம்:

மயில் said...

சுசி கவுத்திட்டையே. இது ரெண்டு தங்க விருது.. ஜெய்லானி ஒண்ணு நீங்க ஒண்ணு நீங்க ஒண்ணு... ரொம்ப நல்லவங்க :)) நன்றிப்பா

Madumitha said...

நீங்ள் பெற்ற விருதுக்கு
வாழ்த்துக்கள்.

நீங்கள் கொடுத்த விருதுக்கு நன்றி.
இது நீங்கள் கொடுக்கும் இரண்டாவது
விருது.

இப்படி ஒரு குடும்பமே
மனசுக்கு இதமாய் இருப்பது
ரொம்ப நல்ல விஷயம்.

sandhya said...

விருதுக்கு ரொம்ப நன்றி சுசி உங்க மனசு யார்க்கு தான் வரும் .
என்றும் உங்க மனது பதினாறு வயது போல் இருக்க நான் வாழ்த்துகிறேன்

Madumitha said...

என் கவிதையை
முகப்பில் போட்டதற்கு
மிக்க நன்றி.

ராமலக்ஷ்மி said...

விருது பெற்ற உங்களுக்கும், உங்களிடமிருந்து வாங்கியிருக்கும் மற்றவருக்கும் வாழ்த்துக்கள்:)!

தலைப்புக்கான காரணமும், முடிக்கும் போது மறுபடி தலைப்பை இழுத்ததும் ம்ம்..ம் :))!

கோபிநாத் said...

விருது பெற்றமைக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

உங்களிடம் இருந்து விருது பெற்ற அனைவரும் என்னோட வாழ்த்துக்களும் ;))

கடைசி பத்திக்கு ;-)))))

கோபிநாத் said...

விருது பெற்றமைக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

உங்களிடம் இருந்து விருது பெற்ற அனைவரும் என்னோட வாழ்த்துக்களும் ;))

கடைசி பத்திக்கு ;-)))))

கார்க்கி said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்..

ஆமா அது என்ன தங்கமகன்? அதுக்கு எதுனா கதை இருக்கா?

சே.குமார் said...

viruthu petratharkkum, matravarkalukku koduththathukkum vazhththukkal.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

விருது பெற்ற அனைவருக்கும் நன்றி . பகிர்வுக்கு நன்றி

கயல் said...

நன்றி சுசி.... எனக்கும் விருது குடுக்குறாங்கப்பா! ஆனந்த கண்ணீர் சுசி!
தங்கம் விக்குற விலையில.. ரொம்ப ..... ரொம்ப நன்றிங்கோ!

ஜெய்லானி said...

விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்..!!

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள்..வாழ்த்துக்கள்.. இன்னும் இது மாதிரி நிறைய விருதுகள் கிடைக்க அட்வாண்ஸ் வாழ்த்துக்கள்..!!

//என் உறவுகள் பக்கத்து நாட்டுக்கு வந்தா கூட பக்கத்து வீட்டுக்கே வந்தா மாதிரி ஒரு சந்தோஷம்.//

அதுக்கு பேருதான் பாசமுங்க..!!

seemangani said...

விருதுக்கும் பகிர்வுக்கும் வாழ்த்துகள்....சுசிக்கா சுசிக்கா எனக்கு ரெம்பநாளா ஒரு சந்தேகம் பேய்ய போட்டா பிடிக்கமுடியுமானு...உங்கபதிவு படிச்சதும் ஆர்வம் அதிகமா போச்சு...ஜன்னியே வந்தாலும் பரவா இல்ல அந்த போட்டோவ அனுப்பி விடுங்க...

ப்ரியமுடன் வசந்த் said...

//ரெண்டு நாளா ஆன்லைன்ல வரவே இல்லை அவ. ஃபோன போட்டு என்னாச்சுன்னு கேட்டா லைட்டா ஜூரம். //

:))

ப்ரியமுடன் வசந்த் said...

// “தங்காக்கா.. அத நீங்க சொல்லக் கூடாது. நாங்க சொல்ணும்”னும், //

கரெக்ட் மச்சான்..

// ”நான் நினைக்கிறேன் உன்னை ஐ செக் அப் கூட்டிப் போகணும்”னும் சொல்லியாச்சு.//

மச்சான் இந்த மனுசனுக்கு அடுத்த தடவ வரும்போது கொஞ்சூண்டு சுசி செஞ்ச சாப்பாடு போட்டு கொன்னுடுங்க....

malarvizhi said...

"இந்த ட்ரெஸ்ல பின்னாடி இருந்து பாக்கும்போது பதினாறு வயசு பொண்ணு மாதிரி இருக்கிங்க"


ஹா...ஹா ...ஹா.....பதிவு நல்லா இருக்கு.நிச்சயம் சின்ன பொண்ணு மாதிரி தான் இருப்பிங்க. அவங்களுக்கு பொறாமை .அதான் அப்பிடி சொல்லுறாங்க.(எனக்கு அடிக்கடி நடக்கும் என்பதால் உங்களுக்கு ஆதரவு தருகிறேன்.)ஹா....ஹா...ஹா.....

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

இங்க கரியெல்லாம் போட்டு பார்பகியூ செய்ய வேண்டாம்!!!
வெயில்ல வச்சாலே போதும் +50!!!

தக்குடுபாண்டி said...

விருது பெற்ற உங்களுக்கும், உங்களிடமிருந்து வாங்கியிருக்கும் மற்றவருக்கும் வாழ்த்துக்கள்:)

நட்புடன் ஜமால் said...

விருது - அனைவருக்கும் வாழ்த்துகள்

Priya said...

விருதுக்கு வாழ்த்துக்கள் சுசி.

என்ன ஒரு தலைப்பு:)அப்புறம் இப்போ உங்க கஸின் நலமா?:)

goma said...

கும்மியோ குத்தோ வாழ்த்தோ.. உங்க இஷ்டம் மக்கள்ஸ்..
ஆனா எழுதிட்டு மட்டும் போங்க...


அதுக்கென்ன எழுதிட்டா போச்சு
கர்ணன் வழங்கியதை வாரி வாரி வழங்கி விட்டீர்கள்....
கர்ண பரம்பரை வந்தவர்களே நாங்கள் ,விருது வழங்கவும் ஒரு சிலரை விட்டு வையுங்களேன்....ப்ப்.ப்..ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

அப்பாவி தங்கமணி said...

தலைப்பு சூப்பர்... ஹி ஹி ஹி... (no more comments...நாம தனியா பின்னாடி பேசலாம்...இது அந்த "பின்னாடி" இல்ல... ஹி ஹி ஹி)

ஆதிமூலகிருஷ்ணன் said...

விருதுக்கு நன்றிகள்.

நாங்கெல்லாம் நிஜ பேயே பார்த்தும் பயப்படாதவர்களாக்கும். :-))

சந்ரு said...

விருதுபெற்ற உங்களுக்கும், உங்களிடம் இருந்து விருது பேரும் அனைவருக்கும் வாழ்த்த்துக்கள்.

சின்ன அம்மிணி said...

விருது பெற்றவர்கள் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்

சின்ன அம்மிணி said...

//நீங்க ஒண்ணும் நினைக்காதிங்க மச்சாள். இங்க வெதர் சரி இல்லைனு ஒரு பி.கு வேற. ரைட்டு!!//

ஹிஹி, இப்படியா உங்களை நீங்களே கவுத்திக்கறது :)