Pages

  • RSS

21 July, 2010

நானும் ரவுடிதான்!!

ரொம்ப நாளாவே எனக்கொரு ஆசைங்க. பதிவுலகத்துக்குள்ள குதிச்சு ஒரு வருஷத்துக்கு மேலாகியும் இன்னமும் ஒரு சமையல் குறிப்பு கூட  எழுதலையேன்னு. தெரிஞ்சாத்தானேன்னு மனசாட்சிய முந்தி நானே சொல்லிட்டேன். அதிலும் இந்த ரெசிப்பி என்னவர் ஒரு அமெரிக்கன்  பொண்ணு குடுத்ததுன்னு கொண்டு வந்தார். அவருக்கு ரொம்ப பிடிக்கும். அட.. இந்த கேக்க சொன்னேங்க. இன்னும் பேர் சொல்லலை இல்லை. இது பேரு banana cake. நீங்க உங்க இஷ்டத்துக்கு வேற பெயர் வேணா வச்சுக்கலாம். இப்போ கம்மு.. சமையல ஸ்டார்ட் பண்ணலாம்.
DSCN0214
நல்ல்ல்லா படத்த பாத்துக்கோங்க. முட்டை, பால் எடுத்து வைக்க மறந்துட்டேன். oven தூக்கிட்டு வந்து இங்க வைக்க முடியல. அதுக்கு மேல இதை எல்லாம் அடுக்க முடியல. இப்போதான் மத்யான சமையல் முடிச்சதால hot plate சூடா இருக்கு. இம்புட்டுதான். கரெக்டா எல்லாம் எடுத்து வச்சுக்குங்க. அளவு அடுத்த பத்தி. முக்கியமா சாப்ட ஆள் வேணுங்க. உங்க வீட்டுக்கு குடும்பத்தோட ஆஜராக நான் தயார். டிக்கட் செலவு உங்களது. மருத்துவ செலவு என்னது.
ஆயில்  125g
சர்க்கரை  250g
முட்டை 2
வாழைப்பழம் (நன்கு கனிந்தது) 3 – 4
மா 500g
பேகிங் சோடா 1ts
உப்பு 1/2 ts
பேகிங் பவுடர் 1 ts
வெனிலா பவுடர் 1 ts
பால் 3 tabs
அப்டியே நான் சொல்லி இருக்கிற அளவில, ஒண்ணொண்ணா சேர்த்து நல்லா பீட் பண்ணிக்கோங்க. இதுல பால் அவங்க சொன்னத விட நான் ஒரு நாள் தப்பா 300ml சேர்த்துட்டேன். அது கூட நல்லாத்தான் இருந்துது. அப்டியே ஒரு ப்ரெட் ஃபோர்ம்ல விட்டுக்கோங்க.
DSCN0215
இப்போ oven 160c ல செட் செஞ்சுக்கோங்க. ஹீட் வந்ததும் அவனோட lowest rack ல வச்சு ஒண்ணரை மணி நேரம் பேக் செய்யணும். உங்களுக்கு விருப்பம்னா  90 நிமிஷமும் பேக் செய்யலாம். நான் எதுவும் சொல்ல மாட்டேன்.
DSCN0216
என்ன சிரிப்பு?? இதுக்குத்தான் சொன்னேன் பெயர் உங்க இஷ்டம்னு. இது ப்ரெட் ஃபோர்ம்ல செய்றதுனாலையோ என்னமோ பாக்குறத்துக்கு ப்ரெட் மாதிரியே இருக்கும்ங்க.
DSCN0220  DSCN0219
சமையல் எப்டி இருந்தாலும் ப்ரசண்டேஷன் நல்லா இருக்கணுமாம். இதிலயும் ரெண்டு ஆப்ஷன் குடுக்கறேன்.
ஒண்ணு - பாதி வெட்டின வெங்காயத்தை நடுவுல வச்சிங்கன்னா குட்டி விசிட் வரவங்க அத சாக்கு வச்சு அழுறத்துக்கு ஈஸியா இருக்கும்.
டூவு - அப்டியே நடுவுல ஒரு முழு வெங்காயத்தை வச்சிட்டிங்கன்னா உங்க மாலை நேரத்த முழுசா முழுங்க வந்தவங்க சாவகாசமா தோலுறிச்சு அழ வசதியா இருக்கும்.
இத பாத்து, படிச்சு அழுகை வருது ஆனா அழ முடியலைன்னு நினைக்கிறவங்க தயவு செஞ்சு அழுதிடுங்க. பிளீஸ்.. மனசுக்குள்ள கவலைய அடக்கி வச்சா உடம்புக்கு ஆகாதாம்.
வர்ட்டா..

9 நல்லவங்க படிச்சாங்களாம்:

Anonymous said...

பேக் புலவர் என்ன சொன்னாரு :)

vinu said...

me the firstuuuuuuuuu

ate the vengayam

கார்க்கிபவா said...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்


ம்ம்ம்ம்ம்ம்
ஊஊஊஉ
ம்ஹூம்
ம்மாஅ...


இருங்க அழுதுக்கிட்டு இருக்கேன். டிஸ்டர்ப் பண்ணாதிங்க

கார்க்கிபவா said...

//ஆயில் 125g/

ஆயில்ன்னா? என்ன ஆயில்? குரூட் ஆயிலா?

சாந்தி மாரியப்பன் said...

வெங்காய கேக் நல்லாருக்கு:-)))

அமுதா கிருஷ்ணா said...

கேக்கும் வெங்காயமும்..நல்ல காம்பினேஷன்..தொடரட்டும் உங்கள் பணி...

பித்தனின் வாக்கு said...

aakaa start music. nallayirukku. aammaa ithai sappittu, kunalan maama rendu nallu vayeiya thirakka villaiyama unmaiyaaaa?
anyway welcome and good opening.

கோபிநாத் said...

கொலைவெறி - நீங்களே சொல்லிட்டிங்க அப்புறம் என்னாத்த சொல்ல ;-)))

Anonymous said...

//டிக்கட் செலவு உங்களது. மருத்துவ செலவு என்னது. //
:))
useful tips