Pages

  • RSS

30 June, 2010

கணக்கு.

sad-woman

இருப்பதாய் நீ சொன்னபோது

உண்மையாய் உணர்ந்ததாலோ என்னவோ

இல்லவே இல்லையென்ற போது

அழத் தோன்றவில்லை எனக்கு

நீதான் பொய் பேசுவதில்லையாமே

சொல்லி இருக்கிறாய்.

@ @ @ @ @

                   இனிமேல் என் கதைகள்

                   கேட்கக் காதுகளில்லாமல்

                   அலையப் போவதில்லை

                    இல்லாத ஒன்றைப் பற்றி

                    இனியும் கதை சொல்லமாட்டாள்

                    இந்தக் கதைகாரி.

@ @ @ @ @ @ @ @ @ @

                                         நீ நிம்மதியாய் இருப்பாய்

                                         என்ற ஒன்றுதான்

                                         என் நினைவாக இப்போது

                                         குற்ற உணர்வு

                                         உனக்கு இது வரை இருந்ததாய்

                                         என் மனது அறியவில்லை

                                         கொஞ்சமேனும் இருந்திருந்தால்

                                         இன்றோடு அதுவும்

                                         இல்லை என்பதாய் எடுத்துக்கொள்

                                         மகிழ்வாய் இரு.

@ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @

                                                                 சந்தேகம்

                                                                 +

                                                                 பயம்

                                                                 x

                                                                 சுயநலம்

                                                                 /

                                                                 பிடிவாதம்

                                                                 =

                                                                நான்.

                                                               கணக்காளன்

                                                               என்னைப் புரிந்து கொண்ட

                                                               நீயானதால்

                                                               பதில்

                                                               தப்பாய்ப் போக

                                                               வாய்ப்புக்கள் இல்லவே இல்லை!!

@ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @ @

                                                                                      j 019

24 நல்லவங்க படிச்சாங்களாம்:

சீமான்கனி said...

நான்தான் பஸ்ட்டு ஊ...ஊ...ஊ ...ஊ ..ஊ ...ஊ

சீமான்கனி said...

//நீ நிம்மதியாய் இருப்பாய்
என்ற ஒன்றுதான்
என் நினைவாக இப்போது
குற்ற உணர்வு //

கணக்குனாலே கொஞ்சம் தகராருதானோ???போய்பேசாத கவிதை அழகு சுசிக்கா சூப்பர்....

Chitra said...

கணக்காளன்

என்னைப் புரிந்து கொண்ட

நீயானதால்

பதில்

தப்பாய்ப் போக

வாய்ப்புக்கள் இல்லவே இல்லை!!


..... அருமையான வரிகளில், நேர்த்தியான விளக்கம். :-)

எல் கே said...

arumai

Anonymous said...

குட் :)) நல்லாருக்கு

ஜெய்லானி said...

காதல் சோகமா இருக்கே. லேபில் கொண்டாட்டமுனு இருக்கு.

பித்தனின் வாக்கு said...

Good susi. nice.

amma eppdi eppudi ellam,,,

How is kids and kin?. i am fine.

Anonymous said...

"அழத் தோன்றவில்லை எனக்கு

நீதான் பொய் பேசுவதில்லையாமே

சொல்லி இருக்கிறாய்."

அருமையா இருக்கு சுசி ..

அதென்ன கருப்பு காபி தானே எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி

தாரணி பிரியா said...

நல்லாயிருக்குங்க :)

Anonymous said...

எல்லாமே நல்லா இருக்கு. ரெண்டாவது கொஞ்சம் சோகம்

கார்க்கிபவா said...

//கும்மியோ குத்தோ வாழ்த்தோ.. உங்க இஷ்டம் மக்கள்ஸ்..
ஆனா எழுதிட்டு மட்டும் போங்க..
/

இப்படி கமெண்ட் போட வழியில்லாம பண்ணிட்டிங்களே..

*இயற்கை ராஜி* said...

very nice:-)

கோபிநாத் said...

\\கார்க்கி said...
//கும்மியோ குத்தோ வாழ்த்தோ.. உங்க இஷ்டம் மக்கள்ஸ்..
ஆனா எழுதிட்டு மட்டும் போங்க..
/

இப்படி கமெண்ட் போட வழியில்லாம பண்ணிட்டிங்களே..\\

சகா...இதையும் நீ போட்டுட்டு போயிட்டா அப்புறம் நான் எல்லாம் என்னாத்த சொல்றது...;))

ராமலக்ஷ்மி said...

எல்லாமே நல்லாயிருக்கு சுசி.

சுசி said...

கனி.. உங்களுக்கும் தகராறா?? ஹிஹிஹி..

V V V V V

நன்றி சித்ரா.

V V V V V

எல்கே.. சட்னு முதல் எழுத்த eனு படிச்சிட்டேன்..

சுசி said...

நன்றி மயில்.

V V V V V

ஒருத்தர் சோகம் இன்னொருத்தருக்கு கொண்டாட்டம் ஜெய்லானி.

V V V V V

அண்ணாஆஆஆ.. நாங்க நல்லா இருக்கோம்ணா.. ஊர்ல எல்லாரும் நலமா?? எப்டி போது வேலைல்லாம்??

சுசி said...

தாரளமா சாப்டுங்க சந்தியா.

V V V V V

நன்றிங்க தாரணி பிரியா.

V V V V V

அம்மிணி.. ஹிஹிஹி..

சுசி said...

கார்க்கி.. உங்களுக்கா வழி இல்லை?? ரைட்டு!!

V V V V V

நன்றி ராஜி.

V V V V V

கோபி.. மைண்ட்ல போட்டாச்சு!!

சுசி said...

ரொம்ப நன்றி அக்கா.

ப்ரியமுடன் வசந்த் said...

முதல் கவிதை புரிதல் அ அறியாமை

இரண்டாவது கவிதை பின் நவீனமா? இருந்துட்டு போகட்டும் வாசிக்க யோசிக்க நல்லாருக்கு...

மூன்றாவது கவிதை தோல்வி

நாலாவது செம்ம சூப்பர்...

மங்குனி அமைச்சர் said...

ரொம்ப அருமையா இருக்கு

கயல் said...

ரொம்ப அழகா இருந்ததுங்க!

கயல் said...

உங்கள நான் தொடர்ந்து படிச்சிட்டு வர்றேன்.. இப்பல்லாம் கவிதைகள் எல்லாம் ரொம்ப அருமையா இருக்கு. வாழ்த்துக்கள்.

முனியாண்டி பெ. said...

Good one

http://adisuvadu.blogspot.com/2010/06/blog-post_27.html