Pages

  • RSS

16 June, 2010

சூரியனுக்க்கே லைட்டா..

இந்த வருஷமும் ஸ்ட்ரைக். ஆசிரியர்கள் உட்பட. பசங்க ஜாலியா வீட்ல இருந்து கும்மாளமோ கும்மாளம். வேலைல இதுக்குனு தனியா லீவெல்லாம் கிடையாதுனுட்டாங்க. முன்னல்லாம் என் கூட வேலைக்கு வருவாங்க. இல்லை அப்பா கூட போவாங்க. இல்லைனா என் ஆஃபீஸ் கிட்ட ஒரு ஃப்ரெண்டு இருக்காங்க. அவங்க வீட்ல விட்டுட்டு போம்போது கூட்டிப் போவேன். இந்த தடவை எங்க வீட்டு கிட்ட இருக்கிற ஒரு ஃப்ரெண்டு வீட்ல நின்னாங்க. ரெண்டு ஃப்ரெண்ட்சுக்கும் இவங்க வயசில பசங்க இருக்கிறதால ஒத்துப் போகும்.

streik

எங்க ஊரோட சேர்த்து ஒன்பது நகரங்களில ஸ்ட்ரைக் பண்ணாங்க. ஒரு நாளைக்கு 10,5 மில்லியன் குரோனர் சேமிச்சாங்களாம் அரசாங்கம். அதனாலயே ஒரு தீர்வும் சொல்லாம கொஞ்ச நாளைக்கு இழுத்தடிப்பாங்க. இந்த தடவை கொடுமை என்னனா முனிசிபாலிடி ஆளுங்க ஸ்ட்ரைக் பண்ணதுல குப்பை எடுக்க ஆளில்லாம ஊரே நாற ஆரம்பிச்சிடுச்சு. நல்ல வேளை டெம்ப்ரேச்சர் +15 கு மேல போகாததால நாற்றம் கம்மி. எங்க வீட்ல இந்த ரெண்டு வாரமும் சமையல் பெருசா செய்யலைங்கிறதால  தப்பிச்சோம்.  பெரிய அளவில போகாம கடவுளேனு ஒரு வழிக்கு வந்திட்டாங்க. இப்போ ஏர்போட் செக்யூரிட்டி திங்கள்ள இருந்து குதிக்க போறாங்களாம்.

søppel

டீச்சருங்க பத்தாவது எக்சாம் சமயமும், முனிசிபாலிடி ஆளுங்க வெயில் நேரமும், ஏர்போர்ட்காரங்க இப்போ எல்லாரும் சம்மர் வெகேஷன் போற சமயமும்னு கரெக்டா தான் பிளான போடறாங்கப்பா.

00000            

மானாட மயிலாட பாத்துட்டு இருந்தோம் நானும் சதுவும். ப்ரேக் வந்த காப்ல நான் இதை டைப்பிக் கிட்டிருந்தேன். ”இதில எந்த பொண்ணுப்பா அழகா இருக்காங்க”ன்னேன். கேள்வி முடியிறத்துக்குள்ள பதில் தெறிச்சு விழுந்துது. ”யாருமே இல்லம்மா”னு. ”ரம்பா, நமிதா இவங்க கூடவா அழகா இல்லை??”ன்னேன். “ம்ஹூம்.. யாருமில்ல.. நீங்கதான் அழகு” (அவ்வ்வ்..) கேக்க சந்தோஓஓஓஓஷமா இருந்தாலும் கேட்டேன் “ஏம்பா அப்டி சொல்றிங்க??”னு. “பாருங்க அத்தனை பேருமே நிறைய்ய்ய்ய்ய மேக் அப் போட்டிருக்காங்க.. (என் தோள்ல சாஞ்சுட்டு இருந்தவர் தலை தூக்கி என் முகத்த ஒரு லுக் விட்டார்) நீங்க எதுவுமே போட்டுக்காததால அழகா இருக்கிங்க”ன்னார். (ஆவ்வ்வ்..) குஞ்சுக் காக்காக்கும் அம்மாக் காக்கா பொன் காக்காவா?? சரி சரி.. விடுங்கப்பா.. காசா பணமா.. கொஞ்சூண்டு சந்தோஷப்பட்டுக்கிறேனே.

00000

ஆஃபீஸ் முடிஞ்சு வரும்போது வழியில ஒரு ரெண்டு கிமீ தூரத்துக்கு எதுத்தாப்ல வர வண்டிங்க சிலது ஹெட் லைட் போட்டு காமிச்சதுங்க. யாரோ நமக்கு தெரிஞ்சவங்க வேலை முடிஞ்சு போறாங்கன்னு நினைச்சுக்கிட்டேன். இருந்தாலும் இத்தனை பேரா ஹாய் சொல்வாங்க.. வீட்ல இருந்து கிட்டத்தட்ட ரெண்டு கிமீ தூரத்தில மறுபடி ஹெட் லைட். ட்ராஃபிக் இல்லாததால ட்ரைவர் சீட்ல யார்னு உத்துப் பாத்தேன். யார்னே தெரில. நாம பிளாக் எழுதுற விஷயம் ஊருக்குள்ள பரவிடுச்சோ?? ஆட்டோகிராஃப் கேட்டு வண்டிய நிறுத்தாத வரைக்கும் சரினு நினைக்க சந்தோஷமா இருந்துது. அதையும் மீறி ஸ்பீட் ப்ரேக்கர்ல வண்டி ஏறி இறங்கும்போது லைட் பவரா தெரிஞ்சிருக்கலாம்னு நினைச்சுட்டு விடமுடியாத படி இது அடுத்தடுத்த நாட்கள்லவும் தொடர்ந்துது. “என்னப்பா இது.. எதுக்கு எனக்கு இவ்ளோ பேர் ஹெட்லைட் போட்டு காட்றாங்க”ன்னு என்னவர் கிட்ட முறைப்பட்டேன். “முதல்ல லைட் போட்டிருக்கியானு பாரு” பஸ் ஸ்டாப்ல வண்டிய ஓரங்கட்டி பாத்துட்டு சொன்னேன். “போட்டிருக்குப்பா.. எரியுது” “அப்புறம் என்ன.. சரி நான் வீட்டுக்கு வந்ததும் பாக்கறேன்” பாத்தார். லைட் எரியுது. ஆனாலும் அடுத்த நாளும் ஹெட் லைட் சிக்னல் தொடர்ந்தது. கடுப்பாயிட்டேன். பதிலுக்கு நானும் ஹெட் லைட் போட்டுட்டே வீடு வந்து சேர்ந்தேன். அதுக்கு கூட ஃபைன். நல்ல வேளை மாட்ல.

அப்புறம் தான் விஷயம் புரிபட்டுதுங்க. இங்க விண்டர்ல இருட்டும், சம்மர்ல மிஸ்ட்டும் அதிகம். அதனால வண்டி ஓடும்போது கட்டாயம் ரன்னிங் லைட்ஸ் போட்டிருக்கணும்ங்கிறது எழுதப்பட்ட சட்டம். இல்லேன்னா ஃபைன் 2000 குரோனர்கள். Low beam, high beam, signal lights ல எதுனா பிழை இருந்தா கூட இந்த ஃபைன் செல்லுபடியாகும்.

mangler ett frontlys இப்டி ஒரு லைட் போட்டு போனாலும் ஃபைன்தான்.

யாராவது லைட் போடாம வண்டில போனா எதிர்ல வரவங்க அவங்க ஹெட் லைட் போட்டு சிக்னல் குடுப்பாங்க. தெரிஞ்சவங்க ஹலோ சொல்றத்துக்கு சமயத்தில ஹெட் லைட் போட்டு காமிக்கிறதும் உண்டு. இந்த வருஷ கொடுங்குளிரால பாட்டரி சிக்கல் குடுக்க ஆரம்பிச்சிடுச்சு. மெக்கானிக் ஷெட்ல அப்பாயிண்ட்மெண்ட் அடுத்த வாரம். அதனால பாட்டரி சார்ஜ் இறங்காம இருக்கனு லைட் auto ல செட் பண்ணி வச்சிருந்தார் என்னவர். ஷெட்ல இருந்து வண்டி வந்தப்புறமும் அத மறந்தாச்சு. இப்போ லைட்டா வெளிச்சம் வர ஆரம்பிச்சிடுச்சா.. மத்த இடங்கள்ல பிரச்சனை இல்லை. நான் சொன்ன ரெண்டு இடங்கள்லேம் கார் வரும்போது கரெக்டா சூரியன் எதுக்க வந்திடுவாரா.. சூரியனுக்க்க்க்கே லைட்டான்னுட்டு காரோட லைட்ஸ் ஆட்டோமேடிக்கா ஆஃபாய்டும். அதனாலதான் அவங்க அக்கறையோட சிக்னல் குடுத்தது. இப்போ நீங்க சிக்னல் குடுக்கிறது நல்லாவே புரியுதுங்க. இத்தோட வணக்கம் வச்சுக்கிறேன்.

வர்ட்டா..

27 நல்லவங்க படிச்சாங்களாம்:

அப்பாவி தங்கமணி said...

//இப்போ நீங்க சிக்னல் குடுக்கிறது நல்லாவே புரியுதுங்க//

இதானா மேட்டர்...ஆனாலும் அநியாயமா LK கதைல வெக்கற suspense மாதிரி வெச்சுருக்க வேண்டாம் போங்க...

அப்பாவி தங்கமணி said...

//குஞ்சுக் காக்காக்கும் அம்மாக் காக்கா பொன் காக்காவா?? //

பின்ன... அம்மானா சும்மாவா... (நான் உங்கள தான் சொன்னேன்... நீங்க வேற மாதிரி நெனச்சா நான் பொறுப்பில்ல...ஹி ஹி ஹி)

அப்பாவி தங்கமணி said...

//டீச்சருங்க பத்தாவது எக்சாம் சமயமும், முனிசிபாலிடி ஆளுங்க வெயில் நேரமும், ஏர்போர்ட்காரங்க இப்போ எல்லாரும் சம்மர் வெகேஷன் போற சமயமும்னு கரெக்டா தான் பிளான போடறாங்கப்பா///

வடிவேலு ரசிகர்களா இருப்பாங்களோ...

Chitra said...

நீங்க எதுவுமே போட்டுக்காததால அழகா இருக்கிங்க”ன்னார். (ஆவ்வ்வ்..) குஞ்சுக் காக்காக்கும் அம்மாக் காக்கா பொன் காக்காவா?? சரி சரி.. விடுங்கப்பா.. காசா பணமா.. கொஞ்சூண்டு சந்தோஷப்பட்டுக்கிறேனே.


...... Cherish these sweet moments.

LK said...

நடுவுல எங்க காணாம போய்டீங்க??

Sangkavi said...

நல்லாயிருக்குங்க... . உங்க எழுத்து நடை....

ஜெய்லானி said...

கலவை சூப்பர்....!!

ராமலக்ஷ்மி said...

"நாம பிளாக் எழுதுற விஷயம் ஊருக்குள்ள பரவிடுச்சோ?? ஆட்டோகிராஃப் கேட்டு வண்டிய நிறுத்தாத வரைக்கும் சரினு நினைக்க சந்தோஷமா இருந்துது."

பொன் காக்காவே பரவாயில்லை போலிருக்கே:)!

வழக்கம் போல கலக்கலான தொகுப்பு சுசி.

மயில் said...

நாம பிளாக் எழுதுற விஷயம் ஊருக்குள்ள பரவிடுச்சோ?? //

அதுக்குள்ள ரணகளம் ஆயிடுச்சா? ஆஆஆஅவ்வ்வ் :))

மயில் said...

நாம பிளாக் எழுதுற விஷயம் ஊருக்குள்ள பரவிடுச்சோ?? //

அதுக்குள்ள இம்புட்டு ரணகளமாயிடுச்சா? ஆஅவ்வ்வ்வ் :))))

அமுதா கிருஷ்ணா said...

லைட் பிரச்சனையில் இருந்துக் கொண்டு ப்ளாக் எழுதி ஃபேமசா லொள்ளுதான்...

sandhya said...

எங்கே ஆளே காணுமே என்று நினைச்சேன் வந்திங்களா... உங்க ஊரு விஷயங்கள் படிக்க எனகெப்போதும் ரொம்ப பிடிக்கும் ..இதும் நல்லா இருந்தது அதும் " குஞ்சுக் காக்காக்கும் அம்மாக் காக்கா பொன் காக்காவா?? சரி சரி.. விடுங்கப்பா.. காசா பணமா.. கொஞ்சூண்டு சந்தோஷப்பட்டுக்கிறேனே." சூப்பர் தான் போங்க ...

சின்ன அம்மிணி said...

எங்க ஆபீஸ்லயும் ஏதாவது ஸ்ட்ரைக் நடக்காதா. நாலு நாள் ஜாலியா வீட்ல இருக்கலாமான்னு நானும் ஆசையா காத்துக்கிட்டு இருக்கேன் :)

கோபிநாத் said...

;)))

Madumitha said...

அவங்க கேக்கலேன்னா என்ன
நான் கேக்குறேன் ஆட்டோகிராஃப்.

seemangani said...

//ஏர்போர்ட்காரங்க இப்போ எல்லாரும் சம்மர் வெகேஷன் போற சமயமும்னு கரெக்டா தான் பிளான போடறாங்கப்பா///
அவைங்களுக்குமா அது பொறுக்கல...ஹ்ம்ம்ம்...

//குஞ்சுக் காக்காக்கும் அம்மாக் காக்கா பொன் காக்காவா?? //

சந்தேகமே வேண்டாம்...கை காது மூக்குன்னு தனித்தனிய போட்டோ போடும்போதே நான் கண்டு பிடுச்சுடேன் சுசிக்கா பெண் காகம்ன்னு...இல்லை பொன் காகம்ன்னு...

//இப்போ நீங்க சிக்னல் குடுக்கிறது நல்லாவே புரியுதுங்க//

ஆமா நம்பர் ப்ளேட்டு இல்லாம ஊத்துன ஒண்ணுமே பன்னமாட்டங்களா???

பா.ராஜாராம் said...

நல்லாத்தானே போய்ட்டு இருந்தது.. :-)

வாசிக்கும் போதே ஒரு சந்தோசம் தொத்திக்கும். இப்பவும் அது.

தலைப்பில் ரெண்டு 'க்' meaningful. :-))

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//டீச்சருங்க பத்தாவது எக்சாம் சமயமும், முனிசிபாலிடி ஆளுங்க வெயில் நேரமும், ஏர்போர்ட்காரங்க இப்போ எல்லாரும் சம்மர் வெகேஷன் போற சமயமும்னு கரெக்டா தான் பிளான போடறாங்கப்பா///


ஏய் ஏய் ஏய் என்ன இது சின்னப்புள்ளத்தனமாவுல இருக்குது

ப்ரியமுடன்...வசந்த் said...

//குஞ்சுக் காக்காக்கும் அம்மாக் காக்கா பொன் காக்காவா??//

:)))

இதே போல துணுக்ஸா சேர்த்து ஒரு போஸ்ட் போடுங்களேன்...

சுசி said...

இருக்கலாம் புவனா.
ஹஹாஹா.. சேச்சே.. நான் அப்டில்லாம் நினைக்கல :))

Q Q Q Q Q

சித்ரா.. உங்க கண்ணாடி எனக்கு ஒரு பார்சேல் பிளீஸ்..

Q Q Q Q Q

இங்கதான் இருந்தேன் கார்த்திக்.

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி சங்கவி.. சரியா பெயர்??

Q Q Q Q Q

நன்றி ஜெய்லானி.

Q Q Q Q Q

ஹஹாஹா.. அக்கா.. நீங்களுமா.. :))

சுசி said...

மயில்.. ”இம்புட்டு” சேர்த்து சொன்னதை கன்ஃபார்ம் பண்ணணுமா.. ஆவ்வ்வ்..

Q Q Q Q Q

ஹிஹிஹி.. ககபோ அமுதா.

Q Q Q Q Q

அப்டியா சந்தியா.. இந்த ஊர பத்தி எவ்ளவோ எழுதலாம்.. நேரம் :((

சுசி said...

பேப்பர் கட் அடிக்கடி வருதுனு சொல்லி ஸ்ட்ரைக்ல குதிச்சு பாருங்களேன் அம்மிணி :))

Q Q Q Q Q

உங்க சிரிப்பு கியூட்டா இருக்கு கோபி.

Q Q Q Q Q

ஆட்டோகிராஃப் படம் பாக்கத்தானே முடியும்.. எப்டி கேக்கரிங்க மதுமிதா.. ஓ.. பாட்டா.. (ஆட்டோ இங்க வராதில்லை.. ஆவ்வ்..)

சுசி said...

ஆமாம் கனி.
கிர்ர்ர்ர்ர்ர்.. சந்தடி சாக்குல காக்கானுட்டிங்க இல்லை?? மைண்ட்ல போட்டாச்சு!!
ஹிஹிஹி.. அங்கவே இறக்கி விட்டுட்டு வண்டிய தூக்கிட்டு போயிடுவாங்கப்பா.

Q Q Q Q Q

ககபோ பாரா.. கரெக்டா தலைப்பை கண்டுபிடிச்சிட்டிங்க. நான் என்னமோ நீங்கதான் பிசினு நினைச்சேங்க :))

Q Q Q Q Q

சொல்லிடறேன் சங்கர்.. அடுத்த தடவை பெரிய புள்ளத்தனமா எதுனா செய்ய சொல்லி.

சுசி said...

அய்.. ஐடியா.. தாங்க்ஸ் வசந்து..

ஆனா ரெம்ப நாளாகும் நான் எழுத. ஏன்னா இது அப்பப்போ தானா வரது. வேணா நீங்க ட்ரை பண்ணுங்களேம்பா.. சூப்பரா எழுதுவிங்க :))

ஆதிமூலகிருஷ்ணன் said...

சுவாரசியமான எழுத்துதான். இரண்டாம் பகுதி கலக்கல். இருப்பினும் முதல் பாரா வழக்கமா வர்றவுங்களுக்குதான் புரியுமா என்ன?

//இந்த வருஷமும் ஸ்ட்ரைக். ஆசிரியர்கள் உட்பட. பசங்க ஜாலியா வீட்ல இருந்து கும்மாளமோ கும்மாளம். வேலைல இதுக்குனு தனியா லீவெல்லாம் கிடையாதுனுட்டாங்க. முன்னல்லாம் என் கூட வேலைக்கு வருவாங்க.
இல்லை அப்பா கூட போவாங்க. இல்லைனா என் ஆஃபீஸ் கிட்ட ஒரு ஃப்ரெண்டு இருக்காங்க. அவங்க வீட்ல விட்டுட்டு போம்போது கூட்டிப் போவேன். இந்த தடவை எங்க வீட்டு கிட்ட இருக்கிற ஒரு ஃப்ரெண்டு வீட்ல நின்னாங்க. ரெண்டு ஃப்ரெண்ட்சுக்கும் இவங்க வயசில பசங்க இருக்கிறதால ஒத்துப் போகும்//

எந்த ஊர்ல? எதுக்கு ஸ்ட்ரைக்? யாரு எங்க போனாங்க? யாரு யாருக்கு ஃபிரெண்ட்? ஒண்ணியும் புரியலை..

சுசி said...

ஆதி.. அதே அதே.

இருந்தாலும் முடிஞ்ச வரைக்கும் புரிய வைக்கிறேன்.

//எந்த ஊர்ல? //
இங்க நார்வேல.. நாங்க இருக்கிற ஊர்ல.

//எதுக்கு ஸ்ட்ரைக்? //
சம்ப்ளம் பத்தலையாம். இத போஸ்ட்ல சொல்லவே இல்லை நான் பாத்திங்களா. ஏன்னா இங்க அதுக்காகத்தான் ஸ்ட்ரைக் பண்ணுவாங்க. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும்..

//யாரு எங்க போனாங்க?//
என் பசங்க.. டீச்சருங்க ஸ்ட்ரைக்னு ஸ்கூல் மூடினா என் கூட வேலைக்கு வருவாங்க. வீட்ல தனியா இருக்கமாட்டாங்களே.. அதான். இந்த தடவை ஃப்ரெண்ட் வீட்ல நின்னாங்க.

//யாரு யாருக்கு ஃபிரெண்ட்? //எனக்கும் என்னவருக்கும் இங்க இருக்கிற ஃப்ரெண்ட்ஸ்.

//ஒண்ணியும் புரியலை..//
இப்போ??

ஸ்ஸப்பா.. மோதிரக் கையால குட்டு சரி.. இம்புட்டு கேள்வியாஆ.. ஆவ்வ்..