Pages

  • RSS

22 June, 2010

நாங்களும் பூவு குடுப்போம்ல..

Vijay அக்காச்சி கிட்ட இருந்து இந்தப் படம் எனக்கு மெயில்ல வந்திருந்துது. அடடடடா.. என் உபியோட அன்பே அன்பு. எனக்காக இவ்ளோ செய்த அவளுக்கு என்ன செய்யலாம்னு நினைச்சுக்கிட்டே படத்தில இருக்கிறவர கொஞ்சூண்டு சைட் அடிச்சிட்டு.. அப்டியே படத்துக் கீழ எழுதி இருந்தத படிக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் அதுக்காக அவள என்ன செய்யலாம்னு நினைச்சுக்கிட்டே மறுபடி படத்தில இருக்கிறவர சைட் அடிக்காமலே பாத்தேன். பல்ப்.. இது அந்த பல்ப் கிடையாது. ஐடியா பல்ப். ஜகஜ்ஜோதியா எரிஞ்சுது தலைக்கு மேல. இப்போ கண்டிப்பா நீங்க அவ என்ன எழுதி இருந்தானு படிச்சிருக்க முடியாது. ஏன்னா நாந்தான் படத்துக்குக் கீழ இத டைப்பிட்டேனே. அப்டியே அடுத்த பத்திக்கு வாங்க. அவ என்ன எழுதி இருந்தான்னு சொல்றேன்.. சாரி.. டைப்புறேன்.

”ஏய்ய்ய்ய்.. நேத்து செமையா ஒரு கனவுடி. அதில விஜய்  வந்தாரு..  ஜாலியா பேசினாரு.. பூல்லாம் குடுத்தார்டி.. என்ன பேசினோம்னு நினைவில்ல..  ஹைய்ய்ய்ய்ய்யோஓஓஒ.. எனக்கு அது கனவு மாதிரியே தோணலை. நீதான அவரோட பரம ரசிகை. அப்புறம் எப்டி?? நார்வேக்கு பதில் கனடாக்கு டிக்கட் போட்டுட்டார் போல. இருந்தாலும் உன்னை நினைச்சா பாவமா இல்லை.. ரெம்ம்ம்ப பாவமா இருந்துதா.. அத்தோட உனக்கு இப்போ கோவம், வயித்தெரிச்சல்னு கலவையா ஒரு பீலிங்ஸ் வரும்னு தெரிஞ்சுதா.. அதான் இத ஃபோன்ல சொல்லை.. உன் ஆறுதலுக்காக இந்த படம். கோச்சுக்காத பூக்குட்டி..”

அவளோட இந்த பூக்குட்டி ஐஸுக்கும் ஒரு பின்னணி இருக்கு. பயம் வேண்டாம் மக்கள்ஸ். அத இன்னொரு நாளைக்கு சொல்றேன். இப்போ நான் அவளுக்கு ஒரு படம் அனுப்பி, அதுக்கு மேல இத எழுதினேன்.

“போக்காச்சி.. உன்னால திரையுலகமே ஆஆஆடிப் போயிருக்காம். பின்ன.. இருக்காதா. அவர் பாட்டுக்கு யாருக்கும் சொல்லாம உனக்கு பூக் கொடுத்துட்டு போயிட்டாரு. சொல்லி இருந்தா நாங்களும் வந்திருப்போமேன்னு மத்த ஹீரோஸ் ஆளாளுக்கு சண்டை போடறாங்களாம். இப்போ தினமும் ஒருத்தர் வரதா முடிவாகி சீட்டுப் போட்டுப் பாத்ததில இவர் இன்னைக்கு வருவார்னு உளவுத்துறை தகவல் சொல்லியிருக்கு. உன் முன்னாடி சொதப்பல்ஸ் கூடாதுனு அவர் கண்ணாடி முன்னாடி பூ குடுக்கிறாப்ல ரிஹர்சல் பாத்தத மொபைல்ல சுட்டு எனக்கு அனுப்பி இருக்காங்க. நேத்து மாதிரி முழிக்காம சமத்தா நடந்துக்கோ.  ஓக்கேவா.. ரெடியா இரு மினிம்மா..”

அவளோட பதில் மெயில்ல இருந்த திட்டுக்கள் பப்ளிக்கா நாட் அப்ளிக்கபிள்.. அதனால கடைசி லைன மட்டும் எழுதறேன்.

“.. இருந்தாலும் உனக்கு இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ வயித்தெரிச்சல் ஆகாதுடீஈஈஈஈஈ.. நல்லாரு!!!”

நான் என்ன சொல்ல.. நல்லதுக்கு காலமில்லாத நானிலத்துல பிறந்து தொலைச்சிட்டேன். ஹூம்.. சரி போகட்டும் விடுங்க. அப்டியே நீங்க இங்க போய் அந்த பூக்காரன் யாருன்னு பாத்துக்கோங்க.

# # # # # # # # # #

இளைய தளபதி விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் பிறந்த நாள் பரிசா எங்க ஊர்ல முதல் முதலா உள்ளூர் ரயில் சேவை ஆரம்பமாகுது. இந்த நாட்டு ராணி சோன்யா வந்து ஆரம்பிச்சு வைக்கப் போறாங்க. நிகழ்வுகள் பகல் பனிரெண்டு மணிக்கு ஆரம்பமாகுது. எல்லாரையும் திருட்டு ஃப்ளைட் ஏறியாவது வந்து கலந்து சிறப்பிக்குமாறு யாவரும் நலம் சார்பாக அன்பாகவும், பண்பாகவும், தாழ்மையாகவும் வேண்டிக் கொள்கிறேன்.

வர்ட்டா..

20 நல்லவங்க படிச்சாங்களாம்:

அப்பாவி தங்கமணி said...

ஒண்ணும் சொல்றதுகில்ல....நல்லாலாலாலாலாரு............................ (நல்ல அக்காச்சி நல்ல தொங்காச்சி.......)

(கனடாவுக்கா வந்தாக.... ஒரு வார்த்த சொல்லி இருந்தா என்ன கொறஞ்சா போயிருவீக.... எப்படி தொடர்ந்து flop படமே குடுக்கரதுங்கர ரகசியத்த நானும் கேட்டுருப்பனல்ல... ஓ நீங்க ரசிகை அல்ல.... சாரி சாரி.... நானும் ஒரு காலத்துல அவிக ரசிகை தான்... ஹும்... அது ஒரு "சச்சின்" காலம்....ஹும்....)

LK said...

//உள்ளூர் ரயில் சேவை ஆரம்பமாகுது. //

வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

நல்லாக் கொடுக்கிறாங்க பூவு:)!

சரி விழா கொண்டாட பதிவர்கள் எல்லோருமா ஸ்பெஷல் ஃப்ளைட்டில் அங்கே வந்துக்கிட்டே இருக்கோம்ல:)! ஏற்பாடெல்லாம் சிறப்பா இருக்கணும், ஆமா.

ப்ரியமுடன்...வசந்த் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

தலைவருக்காக திருட்டுஃப்ளைட் ஏறக்கூட தயங்காதோர் சங்கம்...

ஜெய்லானி said...

விஜய் ரசிகையா ....சொல்லவே இல்லை...எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கேப்.....ஹி..ஹி..

sandhya said...

"இளைய தளபதி விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் பிறந்த நாள் பரிசா எங்க ஊர்ல முதல் முதலா உள்ளூர் ரயில் சேவை ஆரம்பமாகுது. இந்த நாட்டு ராணி சோன்யா வந்து ஆரம்பிச்சு வைக்கப் போறாங்க. நிகழ்வுகள் பகல் பனிரெண்டு மணிக்கு ஆரம்பமாகுது. எல்லாரையும் திருட்டு ஃப்ளைட் ஏறியாவது வந்து கலந்து சிறப்பிக்குமாறு யாவரும் நலம் சார்பாக அன்பாகவும், பண்பாகவும், தாழ்மையாகவும் வேண்டிக் கொள்கிறேன்."

MANY MANY HAPPY RETURNS OF THE DAY VIJAY

உள்ளூர் ரயில் சேவை ஆரம்பம் ..வாழ்த்துக்கள் ..

நீங்க கூப்பிட்டு நான் வராமல் இருப்பேனா ...கிளம்பிட்டேன் திருட்டு ஃப்ளைட் பிடிக்க ...

கார்க்கி said...

இங்கேயும் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்..

உஙக்ளுக்கும் சேர்த்து

கோபிநாத் said...

;-)))))) வாழ்த்துக்கள் !

சுசி said...

புவனா.. எத்தனை ஃப்ளாப் வந்தாலும் நான் அவர் ரசிகைதான்.. :))

T T T T T

ஓஹோ.. ரைட்டு எல்கே. நன்றி.

T T T T T

ஏற்பாடு பக்காவா அரசியார் தலைமையில (செலவிலயும்) செஞ்சாச்சு.. இதோ நானும் ஏர்போர்ட் கிளம்பியாச்சு அக்கா.

சுசி said...

வசந்து.. தலைவருக்காக சொந்தமா ஃப்ளைட்டு வாங்கக் கூட தயங்காதோர் சங்கம்னு சொல்லுங்கப்பா.

T T T T T

நான் விஜய்க்கு தானே ரசிகை.. நீங்க எதுக்கு எஸ்கேப்பிங் ஜெய்லானி??

T T T T T

ஹிஹிஹி.. வாங்க சந்தியா.. பாத்துட்டு இருக்கேன்.

Madumitha said...

விஜய் ரசிகையா நீங்க?
ரயிலைப் பிடிச்சு வந்துடறோம்.

சுசி said...

நன்றி கார்க்கி.

T T T T T

நன்றி கோபி.

சுசி said...

ஆமாம் மதுமிதா ஆமாம்..

கண்டிப்பா வந்திடுங்க.

seemangani said...

இருந்தாலும் உங்களுக்கு இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்ளோ வயித்தெரிச்சல் ஆகாதுஊஊஊஊஊஊஊஊஊ....


நான் மினிமா அக்காச்சி கட்சி.

LK said...

//எத்தனை ஃப்ளாப் வந்தாலும் நான் அவர் ரசிகைதான்.//

விதி வலியது

ஜெய்லானி said...

@@@ LK---//எத்தனை ஃப்ளாப் வந்தாலும் நான் அவர் ரசிகைதான்.//

விதி வலியது //

கரெக்ட் , ஆமாங்னா

சுசி said...

கட்சி பேர் என்ன கனி??

T T T T T

எல்கே.. என் ப்ளாக் படிக்கிறது அவளவு கஷ்டமாவா இருக்கு?? அவ்வவ்..

T T T T T

உங்களுக்குமா ஜெய்லானி?? ஆவ்வ்வ்..

seemangani said...

மாப்பி வசந்து மாதிரி சங்கம் வச்சு சவுடால் காட்டுரவங்க நாங்க இல்ல சுசிக்கா....

சுசி said...

தம்பி வசந்து.. கனி என்னமோ சொல்றார்..

ஆமா.. அது என்ன சங்கம்??

vinu said...

innuma neenga eallam vijay fann appadinu sollittu thiriyareengasame same puppy same.