நான் இங்க வந்ததுக்கு அப்புறம் இது வரைக்கும் ரெண்டு தடவை ஊருக்கு போய் வந்திருக்கேன். சொந்த ஊருக்கு போற சுகம் இருக்கே.. அப்பப்பா.. என் அக்காச்சி கனடா போனதுக்கு இது தான் முதல் தடவை ஊருக்கு போயிருக்கா. அவள விட எனக்குத்தான் டென்ஷன். அத எடுத்தியா இத எடுத்தியானு தினமும் கேப்பேன். கடைசி நேரம் அவள பிடிக்கவே முடியலை. அதுவும் கிளம்பின அன்னைக்கு பசங்களுக்கும், அத்தானுக்கும் (நாங்க அக்கா புருஷன அப்டித்தான் சொல்வோம்), அம்மாவுக்கும் ஹாப்பி ஜர்னி சொல்லியாச்சு. அதுக்கும் மேலவும் இருந்தா அடுத்த நாள் நான் வேலைக்கு போக முடியாதுங்கிறதால நைட்டு ஒண்ணரை மணியோட தூங்க போய்ட்டேன். அவ மொபைல வேற வீட்ல வச்சிட்டு போய்ட்டா.
அம்மா போனாங்கன்னும் சொன்னேன்ல. அதை ஏங்க கேக்கறிங்க. போறதா பேச்சு தொடங்கின அன்னையில இருந்து அப்பாவ எப்டிம்மா தனியா விட்டு போறது. பாவம் சரியா சாப்டுவாரோ. தூங்குவாரோ. இன்னும் சில பல ரோக்கள்தான் அவங்க பேச்சா இருந்துது. என்னம்மா நீங்க அப்பா என்ன குழந்தையா. அவர் பாத்துப்பார். நீங்க முதல்ல போய் அண்ணன்கள பாத்துட்டு வாங்கன்னு சொன்னா.. இல்லடாம்மா நான்னா நேரத்துக்கு எல்லாம் செஞ்சு குடுப்பேன். சாப்பாடு சரியா எடுத்து போக மாட்டார் வேலைக்கும்பாங்க. உங்க வளர்ப்பு சரி இல்லைம்மா. ஒரு அவசரத்துக்கு செய்யும்படியா இதெல்லாம் கத்துக் குடுத்திருக்கணும்னு நான் சொல்ல.. அப்டியா அப்போ நீங்க உங்க அவர சரியா வளர்க்கறிங்களானு அவங்க கேக்க சிரிப்போட பேச்சு ட்ராக் மாறும்.
ஏர்போட்ல அம்மா அழ ஆரம்பிச்சிட்டாங்களாம். லக்கேஜும் வெயிட் ஜாஸ்தினு கொஞ்சம் சிக்கலாகி பசங்களோட ஃபீடிங் பாட்லவும் மறந்துட்டு ஃப்ளைட் ஏறிட்டாங்க. அப்பா ஆஃபீஸ்கு காலேல ஃபோன் பண்ணி சொன்னார். வீட்டுக்குப் போனதும் ஸ்கைப்ல கால் பண்ணேன். அப்பா எதுனா கூத்து பண்ணுவார்னு தெரிஞ்சு ரெடியா கைல ஒரு டவல நீட்டிக்கிட்டே சோகமா உக்காந்திருந்தேன். அங்க அவர் தாடையில கை வச்சுட்டு என்ன விட சோக ஃபீலோட உக்காந்திருந்தார். இத எதிர் பார்க்காததால சிரியோ சிரினு சிரிச்சார். அப்டியே அம்மா கேக்க சொன்ன சாப்டிங்களா, தூங்கினிங்களா கேள்விகளையும் கேட்டேன்.
நைட்தான் அண்ணா ஸ்கைப்ல வந்தார். இங்கயும் அங்கயுமா எல்லாரும் ஓடிட்டு இருந்தாங்க. அக்காச்சிய காணோம். குளிக்கறாளாம். ஆளாளுக்கு ஒரு வணக்கத்த வச்சிட்டு மறுபடி ஓட்டம். அண்ணா அப்பப்போ வந்து லைன்லவே இருடி.. யாரு ஃப்ரீ ஆகராங்களோ அவங்க வருவாங்கனு சொல்லிட்டு கேமரா ஆங்கிள் சேஞ்ச் பண்ணிட்டு போனார். எல்லாரையும் பாக்கும்படியா. ரஜி சாப்டுட்டு இருந்தான். அக்காச்சியோட மூத்த வாரிசு ஓடி வந்து ஷித்தி.. நான் பெரிய மாமா வீட்ல இருக்கேன்னு பேசிட்டு இருந்தார். அண்ணன் பசங்க அத்தைனு ஒரு சவுண்டு விட்டுட்டு ஓடிட்டாங்க. அக்காச்சியோட ரெண்டாவது பூனைக் குட்டி பின்னாடி. அண்ணா சொன்னார் ஏர்போர்ட்ல இருந்து வெளிய வந்ததுமே ஒரு சொறி நாய பாத்து டோகினு கத்த ஆரம்பிச்சவர் இப்போ கிற்றினு ஓடறார்னு.
அத்தான் சாப்டுட்டு இருந்தார். பக்கத்தில மாமி (அத்தானோட அம்மா). அம்மா வந்து பேசிட்டு சாப்ட போனாங்க. ரஜி சாப்டு வந்து பேசிட்டு இருந்தான். என்னடா பண்ணா அக்காச்சி பாத்ததும்னேன். அதை ஏண்டி கேக்கறே.. ரொம்ப வருஷம் ஆச்சில்லையா பிரிச்சு எடுத்து.. போதும்காச்சி.. எல்லாரும் பாக்கறாங்கனு சொல்ற அளவுக்கு அழுகை. அம்மா பத்தி உனக்கே தெரியும்னு சொல்லி கெக்கே பிக்கேனு சிரிச்சுட்டு இருந்தோம். என்னடா.. கிணத்து தண்ணி முடிச்சுத்தான் ஆள் வருவா போலனு நானும் சொல்ல அவளும் கடைசிய தூக்கிட்டு வந்து இருடி இவனுக்கு சாப்பாடு குடுத்துட்டு வரேன். யார் கிட்டவும் போக மாட்டேங்கறான்னா. அவர் என்ன ஒரு லுக்கு விட்டதோட சரி. ரஜி கூட பேச்சு தொடர்ந்துது. முடி வெட்னத கிண்டல் பண்ணான். எங்க வெக்கேஷன் பத்தி பேசினான். மேச் பாத்திட்டு இருந்த என்னவர் கிட்டவும் பேசினான்.
இப்போ திரும்பி வந்த அக்காச்சி ஏய் இங்க பார்டினுட்டு உக்காந்துட்டு இருந்த ரஜிய பின்னாடி இருந்து கட்டிக்கிட்டு ஒரு உம்மா குடுத்தா.. எனக்கு என்ன ஆச்சுன்னு தெரிலங்க.. அவ்வ்வ்வ்.. பொலு பொலுனு கண்ணீர்.. ரஜி முகத்தில எதுவோ ஒண்ணு முன்னாடியே தெரிஞ்சது எனக்கு. அவனுக்கும் அந்த நேரம் நானும் அங்க இல்லாதது கஷ்டமா இருந்திருக்கு. என்னடி நீ.. அழாதடி.. இதோ பாரு.. அக்காச்சி பாவம்ல.. எத்தனை வருஷம் கழிச்சு வந்திருக்கா.. அண்ணா இவள வந்து பாருண்ணா என்ன பண்றானு.. சாப்டுட்டு இருந்த அண்ணாவ கூப்டான். அவர் சொன்னா நான் கேப்பேன்னு தெரியும். ஏய்.. இப்போ பாரேன்னா அக்காச்சி. கண்ணீருக்குள்ளால மங்கலா தெரிஞ்சுது.. அண்ணாக்கு உம்மா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. வீட்ல இருந்த அத்தனை பேரும் டெஸ்க் டாப் முன்னாடி. அத்தை எதுக்கு அழறாங்க.. அழறீங்க.. அழாதிங்க.. don’t cry shithi.. எதுக்கும்மா அழறே.. அம்மாச்சி அழாதடானு ஏகப்பட்ட குரல்.
கேக்கக் கேக்க கண்ணீர் பெருகிச்சுதே தவிர குறையிறதா காணோம்.. பாவம் அவங்கள எதுக்கு கஷ்டப்படுத்தணும்னுட்டு கண்ணாளன பேச சொல்லிட்டு ஒரு பாட்டம் தூரப் போயி அழுது முடிச்சேன். வந்தவ அக்காச்சிய கூப்டு மறுபடி ரஜி, அண்ணாக்கு மட்டுமில்லாம அண்ணிங்க, பசங்க, அத்தை(அப்பா தங்கை) எல்லாருக்கும் ஒரு உம்மா என் சார்பா குடுக்க வச்சிட்டுத்தான் அவள சாப்டவே விட்டேன். என் கண்ணீர்ல உப்பு மட்டுமில்ல.. கொஞ்சம் கவலை, கொஞ்சம் பொறாமை, கொஞ்சம் கோவம், நிறைய்ய சந்தோஷம் சேர்ந்து ருசிச்சுது.
இது ஆச்சா.. எல்லாம் சரியாதாங்க இருந்திச்சு.. இங்க பாரு உன்னையனு அண்ணாவோட குட்டிப் பொண்ணை அக்காச்சி மடில வச்சிட்டு இருந்தா. அவ ஆறு வயசில நான் இருந்தது போலவே இருக்கா. ரஜியோட குட்டிப்பொண்ணு அப்டியே அக்காச்சிதான். அண்ணாவோட ரெண்டாவது பையன் வந்தார். அத்தை.. எதுக்கு நீங்க அழுதிங்க.. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ.. நான் என்னங்க செய்ய.. அது தானா வருது.. அழுகையச் சொன்னேன்.
அப்பா கேக்கறார்.. யாரோ எனக்கு டவல் குடுத்தாங்கம்மா.. அவங்களுக்கு என்ன பெட் ஷீட் கிடைச்சுதான்னு. இப்போ ஆளாளுக்கு ஃபோன், ஸ்கைப், சாட்னு பல வழிகள்லவும் டவல் டவலா அனுப்பிட்டு இருக்காங்க. அதுக்கே ஒரு வீடு வாங்கணும் போல. உங்களுக்கு யாருக்காவது பார்சல் அனுப்பணும்னா உடனவே ஒரு மணியார்டர் அனுப்புங்க. போஸ்டல் செலவு போதும்.. டவல் ஃப்ரீஈஈஈஈஈ..
வர்ட்டா..
19 நல்லவங்க படிச்சாங்களாம்:
அந்த டவலை வச்சு நாங்களும் அழுது கண்ணீரை தொடைச்சுக்கறோம் :)
ஒரு உணர்வு பூர்வமான
அனுபவத்தை மெலிதான
புன்னகையுடன் படிக்கவைத்தது
உங்கள் எழுத்தின் வெற்றி.
எல்லார் வீட்லயும் இதமாதிரி
டவல் கொஞ்சம் இருக்கும் சுசி.
அவ். நீங்க அக்காவ அக்காசினுதன் சொல்லுவீங்கள
வட்டார பேச்சு வழக்கில், கலக்குறீங்க. :-)
வெளிநாடு,குழந்தைகள்,வெப் கேம் உம்மாக்கள்.,கண்ணீர் என்று எல்லாம் உள்நாட்டுக்குள்ளே அனுபவித்ததுண்டு....அதனால் எனக்கு முதல் பார்சல் டவல் எனக்கு!
//அத்தை.. எதுக்கு நீங்க அழுதிங்க.. ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ.. நான் என்னங்க செய்ய.. அது தானா வருது.. அழுகையச் சொன்னேன்.//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//இங்க பாரு உன்னையனு அண்ணாவோட குட்டிப் பொண்ணை அக்காச்சி மடில வச்சிட்டு இருந்தா. அவ ஆறு வயசில நான் இருந்தது போலவே இருக்கா//
நினைவு இருக்கா ?.. !!
நேரில பார்த்த உணர்வு வருது . அழகா எழுதி இருக்கீங்க ,,
அழகான அனுபவம் ;-)) பாதுகாப்பாக வச்சிக்கோங்க ;)
// என் கண்ணீர்ல உப்பு மட்டுமில்ல.. கொஞ்சம் கவலை, கொஞ்சம் பொறாமை, கொஞ்சம் கோவம், நிறைய்ய சந்தோஷம் சேர்ந்து ருசிச்சுது. இது ஆச்சா..//
appo sari..
neenga azarathula thappe illa :)
இன்னமும் மணி ஆர்டர் வர்லையே அம்மிணி :))
S S S S S
மதுமிதா.. இனிமே வீட்டுக்கு வீடு வாசல் படி இல்லை. டவல்னு மாத்திடலாம் :))
S S S S S
ஏன் எல்கே.. தப்பா?? அக்காசி இல்லை. அக்காச்சி.
நன்றி சித்ரா.
S S S S S
முதல் வருகைக்கு நன்றி அருணா. உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.
S S S S S
காசு வேணாம்.. அழுவாம டவல் எடுத்துக்கோங்க ஜெய்லானி.
கண்டிப்பா நினைவிருக்கு. வயசானா குழந்தை பருவம் தானா நினைவு வருமாம்.
அவ்வ்வ்வ்.. பாசக்காரப் பயபுள்ளைகளோட எப்டி அழுவாம இருக்கிறது.. இப்டி டச்சிங்காவா கமண்ட் போடுவிங்க கோபி.. ஆவ்வ்வ்வ்..
S S S S S
அப்போ.. இன்னமும்.. அழ.. சொல்றிங்களா.. கார்க்கி..
இது நல்லால்ல சொல்ட்டேன் :))
//கேக்கக் கேக்க கண்ணீர் பெருகிச்சுதே தவிர குறையிறதா காணோம்.. பாவம் அவங்கள எதுக்கு கஷ்டப்படுத்தணும்னுட்டு கண்ணாளன பேச சொல்லிட்டு ஒரு பாட்டம் தூரப் போயி அழுது முடிச்சேன்//
அக்காச்சி பாவம்ல...
சுசிக்கா ரூம் போட்டு அழுகுறது இதுதானா ..???டவல் எவ்ளோநாள் கழிச்சு வரும்??டவல் மட்டும்தான் ப்ரீயா கூடவே சோப்பு சீப்புலாம் இல்லையா...???
//ஏன் எல்கே.. தப்பா?? அக்காசி இல்லை. அக்காச்சி.//
எனக்குத் தெரியாது புதுசா இருக்கு அதான் கேட்டேன்
சுசி ஒரு டவல் எனக்கும் அனுப்பிடு மணி ஆர்டர் எதுக்கு ஊருக்கு வந்தா நேரில் வந்து தரேன் சரியா ....
வெப் காம் இருக்கறது எவ்ளோ நல்லதா போச்சு இல்லே ?ஊரில் இருகரவங்களை பார்த்து பேசி மகிழ வேறே என்ன வேண்டும்
கனி.. கூடவே பவுடர் டப்பாவும் அனுப்பி இருக்கேன்.. கிர்ர்ர்ர்..
S S S S S
ஓ.. அதானா.. நாங்க அப்டித்தான் அவள செல்ல்ல்ல்லமா கூப்டுவோம் எல்கே :))
S S S S S
சந்தியா.. ஊருக்கு வந்தா நானே வந்து வாங்கிக்கிறேன்..
ஹிஹிஹி.. உங்க சமையல் குறிப்பு ஒண்ணு படிச்சிருக்கேன்ல.
நடை மாறாமல் ரசிக்கும்படி எழுதுவதும் ஒரு கலைதான் . பகிர்வுக்கு நன்றி
நன்றி சங்கர்.
போ சுசி..... நானும் இப்ப டவல் தான் தேடணும்.... இது அடிக்கடி எங்க வீட்ல நடக்கறது தான்.... என்னோட தங்கச்சி சிங்கப்பூர்ல இருந்து மூணு மாசத்துக்கு ஒரு தரம் "நான் ஊருக்கு போறேனே"னு கிளம்பிடுவா... கனடால இருந்து மூணு வருசத்துக்கு ஒரு தரம் போற நான்.... வேற என்ன செய்ய.... டவல் தான்... அதையும் அழகா நகைச்சுவை இழையோட சொல்லி இருக்கீங்க....
Post a Comment