Pages

  • RSS

24 June, 2010

4-3, 4-0, 4-1, 4-2.

 voss cup போன வீகென்ட் சதுவுக்கு Voss Cup football tournament நடந்துது. Voss ங்கிற இடத்தில. எங்க வீட்ல இருந்து 120 கி.மீ தூரத்தில இருக்கு. 6 – 12 வயசு பசங்களுக்கான போட்டி. இந்த வருஷத்தோட போட்டிகள் ஆரம்பிச்சு இருபது வருஷம் ஆகிடுச்சு. வெள்ளி, சனி, ஞாயிறு மூணு நாளும் போட்டிகள் நடக்கும். ஒரு அணிக்கு நாலு போட்டிகள். போன வருஷம் நாங்க காட்டேஜ் வாடகைக்கு எடுத்து தங்கினோம். இந்த வருஷம் புக்கிங் லேட்டானதால ஒண்ணு பெருஸ்ஸ்ஸா இல்லை ரொம்ம்ப அழுக்கா தான் கிடைச்சுது. பெருசு வாடகை கைய கடிக்கும். மத்தது சுத்தம் பண்ணவே ஒரு மாசம் ஆகும் போல. இதில எப்டி மூணு நாள் தங்குறதுன்னு தினமும் கார்ல போய் வரலாம்னு முடிவாச்சு. அம்மு இஷ்டம் இல்லைனு சொன்னதால நாங்க வீட்ல. கண்ணாளன் விஜய் அண்ணானு ஒரு ஃப்ரெண்ட் கூட போனார். 

வெள்ளி ரெண்டு மணிக்கு அப்புறம் எல்லாரும் வொஸ்க்கு போவாங்க.  ஞாயிறு மாலை திரும்புவாங்க. அதனால போக்குவரத்து பயங்கர நெரிசலா இருக்கும். இந்த தடவை இவங்க ஏஜ் குரூப்கு சனி ரெண்டு, ஞாயிறு ரெண்டு மேச்கள். அதனால தினமும் போய் வர கூடுதல் வசதி ஆச்சு. காலநிலையும் அளவான வெயிலோட தன் பங்குக்கு உதவி செஞ்சது. இந்த வருஷம் மொத்தம் 675 குழுக்கள், 7000 வீர வீராங்கனைகள், 25 மணி நேரத்துக்குள்ள 1354 போட்டிகள். இருபதாவது வருஷ நிறைவுக்கு ஏற்றாற்போல ரெக்கார்ட் ஆகியிருக்கிறதுல ஒழுங்கமைப்பாளர்களுக்கு திருப்தி.

சதுரோட ஃபுட்பால் க்ளப்ல இவங்க ஏஜ் குரூப்ல ரெண்டு டீம் இருக்காங்க. டீமுக்கொரு வீராங்கனையும் இருக்காங்க. இவங்க டீம்ல இருக்கிறவங்க பேரு மறியா. விளையாடுறது தவிர எல்லாம் பண்ணுவாங்க. பாடல், ஆடல், சண்டை, கீழ உக்காந்து புல்லு பிடுங்குதல், சமயத்தில நடு கிரவுண்ட்ல படுத்துட்டு கூட இருப்பாங்க. இதில கொடுமை என்னன்னா பசங்கள வம்புக்கு இழுத்துட்டு அவங்க பதிலுக்கு திட்னதும் ஊர கூட்டி அழுவாங்க. இப்டியான பல தொல்லைகள் குடுக்குறதால அத்தனை பையன்களும் அவங்க மேல கொலை வெறில இருக்காங்க. நாங்க எவ்ளோ கஷ்டப்பட்டு விளையாடினாலும் தோல்விதான் அதிகமா கிடைக்கும். மறியாவால.. அப்டிங்கிற ஒரு எண்ணம் தானாவே இவங்களுக்கு இருக்கு. 

பாக்கும்போது சிரிப்பு வந்தாலும் கடைசி நேரத்தில ஒரே ஒரு கோல் வித்யாசத்தில தோத்து போயி வரும்போது பாவமா இருக்கும். இதே எண்ணத்தோட தான் காலேலவும் பை சொல்லிட்டு போனார். எப்டியாவது ஜெயிக்கணும்கிற ஆர்வம் இருந்ததாலையோ என்னமோ நாலு மேச்லவும் ஜெயிச்சிட்டாங்க. ஸ்கோர்தான் தலைப்பா எழுதி இருக்கேன்னு உங்களுக்கு எப்பவோ புரிஞ்சிருக்கும். அதனால அத மறுபடி டைப்பல. இந்த டூர்ணமென்ட்ல டீம் ரேங்கிங், பெஸ்ட் ப்ளேயர்லாம் கிடையாது. எல்லாருக்கும் ஒரு ட்ராஃபி, சர்டிஃபிக்கேட், டீஷர்ட் கிடைக்கும்.

Bilde002 (2) Bilde003

குட்டிப் பசங்களா இருந்தாலும்  விளையாடும் போது அவ்ளோ டென்ஷனா இருக்கும். அவங்க ஜெயிக்கணுமேன்னு. அவங்களும் கிரவுண்ட்ல இறங்கிட்டா தங்களை ஒரு பெக்காமாகவோ ஹென்றியாகவோதான் நினைச்சுப்பாங்க. நாங்க பெத்தவங்க, உற்றவங்க, நண்பர்கள் போடற உற்சாக கூச்சல்ல எதிர் அணிக்காரங்க மிரண்டுடுவாங்க. ஒரு மேச்ல ஒருத்தர் சொன்னார் இங்க என்னமோ லிவர்பூல், யூனைட்டட் மேச் நடக்குதோனு நினைச்சேன்னு. அவளவு  ஈடுபாடு எங்களுக்கும் தானாவே வந்திடும். ஒவொரு குட்டி வீரரும்  தன்னால முடிஞ்ச அளவுக்கு திறமையா விளையாடும்போது  எங்களுக்கு என்னமோ அவங்க உலகக் கோப்பைய ஜெயிச்சு வந்த சந்தோஷம் தான் கிடைக்கும்.

வர்ட்டா..

17 நல்லவங்க படிச்சாங்களாம்:

Chitra said...

ஒவொரு குட்டி வீரரும் தன்னால முடிஞ்ச அளவுக்கு திறமையா விளையாடும்போது எங்களுக்கு என்னமோ அவங்க உலகக் கோப்பைய ஜெயிச்சு வந்த சந்தோஷம் தான் கிடைக்கும்.

..... HURRAY! So true!
Cherish all these moments! :-)

சீமான்கனி said...

விளையாடுற குட்டீஸ்களைவிட பெற்றோர்களுக்குத்தான் டென்சன் அதிகமா இருக்கும் தோற்று போனா பீல் பன்னுவங்கலேன்னு... அக்காவுக்கும் அப்படித்தான் இருந்திருக்கும்னு நினைக்குறேன்....பகிர்வுக்கு நன்றி சுசிக்கா

Madumitha said...

வாழ்த்துக்கள்.
இப்படித்தான் ஒரு பெக்காமும்,
பீலேயும் உருவாகியிருப்பாங்க.
எங்க பக்கம் எப்ப பார்த்தாலும்
மூணு குச்சியும்
ஒரு பேட்,பால் தான்.

கார்க்கிபவா said...

லேபிள் சூப்பர்...

:)

Anonymous said...

ஹலோ சுசி எப்பிடி இருக்கீங்க எல்லோரும் நலம் தானே ???

வோஸ் கப் புட்பால் பத்தி நீங்க சொன்ன விதம் ரொம்ப நல்லா இருந்தது ...படிக்கச்சே நானும் கூட உட்காந்து பார்த்த போல் இருந்தது ..".சது"என்று சொன்னிங்களே உங்க பய்யன் தானே ...முகம் பார்க்காமல் தொடரற இந்த தோழமை எனக்கு பிடிச்சிருக்கு ...

Anonymous said...

இதையெல்லாம் சேமிச்சு வையுங்க. பெரியவங்க ஆனப்பறம் அவங்களாலயே நம்ப முடியாது.

ப்ரியமுடன் வசந்த் said...

சே இவ்ளோ சூப்பர் மேச் இந்தவாட்டி நீங்க போகலியா?

சூப்பரா இருந்துருக்குமே ஜெயிக்குறாங்களா இல்லியான்னு பாக்குறதைவிட அவங்களோட சேட்டைகள் முக பாவனைகள் இது பார்க்குறதுக்காவது போயிருக்கலாம்

சுசி said...

சித்ரா.. ஜோடி சூப்பரா இருக்குங்க.. சுத்திப் போடுங்க :))

U U U U U

அதேதான் கனி. சில பசங்க அழுவாங்க. இன்னும் பாவமா இருக்கும்.

U U U U U

ஹிஹிஹி.. மதுமிதா.. எங்க ஊர்லவும் அப்டித்தான்.

சுசி said...

அதானே.. கார்க்கியா கொக்கா.

U U U U U

எல்லோரும் நலம் சந்தியா. நீங்க நலம்தானே?? ஆமாம். அவர்தான் என் குட்டிக் கண்ணன். உங்க கிருஷ்ணா போல :) எனக்கும் அப்டித்தாங்க. என்னிக்காவது ஒரு நாள் சந்திப்பேன் எல்லாரையும்கிற ஒரு நப்பாசையும் கூடவே இருக்கு.

U U U U U

சரியா சொன்னிங்க அம்மிணி.

சுசி said...

வசந்து.. கஷ்டமாத்தான் இருக்கு. அவங்க அலப்பரை பாக்கணுமே.. அவ்ளோ சிரிப்பா இருக்கும்.

அடுத்த வருஷம் பாக்கலாம்.

கோபிநாத் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் ;-)))

லேபிள் !!! ;-))))))

சொல்லரசன் said...

//நாலு மேச்லவும் ஜெயிச்சிட்டாங்க. ஸ்கோர்தான் தலைப்பா எழுதி இருக்கேன்னு//


ஜெயிக்கிறவங்க எல்லாம் 4 கோல் போடனுமா?

Anonymous said...

கண்டிப்பா சென்னை வந்தா உங்களே என் வீட்டுக்கு அன்புடன் வரவேற்க காத்திரிகிறேன்...ஒரு நாள் சந்திப்போம் என்று சொன்னியே அதுவே போதும் ரொம்ப நன்றி சுசி...

Jeyamaran said...

**/..இதயங்கள் இடம்மாறிமாறி துடிக்கும்
இம்சையில்; வந்த தூக்கம் வாசலிலே
உறங்கிவிட்டு திரும்புகிறது தினமும்.
எப்போதும் இருப்பாய் என்றபோது
இருந்த இடம் தெரியாத அழுகை-இனி நீ
இல்லை என்றதும் இமைகளில்
இறங்கிவந்து என்னை இறந்துவிடச் சொல்கிறது.
இரவு நேரம் வந்துவிட்டால்
இதயக் காய்ச்சல் வந்து;
இறந்துவிடுகிறது ஒரு இதயம்.
எத்தனை முறைதான் செத்துப்போவேன்!!!???
எல்லோருக்கும் உயிர்வாங்க ஒருமுறை வரும் எமன்
எனக்குமட்டும் இன்னும் எத்தனை முறைதான் வருவானோ??..//*

இந்த பதிவ நான் படிக்கவில்லை அதற்க்கு மன்னிக்கவும் ஆனால் இந்த கவிதை மிகவும் அருமை.........

சுசி said...

கோபி நிஜமா நீங்கதானா?? லேபிள் பாத்து இவ்ளோ சிரிச்சிங்களா.. நம்பவே முடிலப்பா.

U U U U U

நலமா சொல்லரசன்.. அதான் எங்களுக்கும் ஷாக். நாலு மேச்லவும் இவங்க நாலு கோல்ஸ். எதிர் அணி 0,1,2,3. எப்பூடி??

U U U U U

நன்றி எல்லாம் எதுக்கு சந்தியா.. அன்பு போதும்.

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி ஜெயமாறன்.

நீங்க அந்த கவிதை நான் எழுதினதா நினைச்சிட்டிங்களா தெரில. வாரம் ஒரு பதிவரோட பிடித்த ஒரு பகுதியை சைட் பார்ல சேர்க்கிறது என் வழக்கம்.

அதை எழுதியவர் சீமான்கனி, கனவு பட்டறை என்ற பதிவுக்கு சொந்தக்காரர். அவர் பெயர்ல க்ளிக் செய்தா அவர் பதிவுக்கு போகலாம்.

ராமலக்ஷ்மி said...

//ஒவொரு குட்டி வீரரும் தன்னால முடிஞ்ச அளவுக்கு திறமையா விளையாடும்போது எங்களுக்கு என்னமோ அவங்க உலகக் கோப்பைய ஜெயிச்சு வந்த சந்தோஷம் தான் கிடைக்கும்//

நிச்சயமா. குட்டித் தளபதிக்கு வாழ்த்துக்கள்:)!