Pages

  • RSS

11 October, 2009

வாழ்த்து + சரவெடி + தீபாவளி.

எல்லோரும் நலமா இருக்கீங்களா நல்லவர்களே?
நான் நலமில்லை. மறுபடியுமா அப்டீன்னு கேட்டவங்களும் கேக்காதவங்களும் அப்டியே தொடர்ந்து படிச்சிட்டு போங்க.


முதல்ல வாழ்த்திடலாம். இன்னைக்கு குணாவோட பெரியண்ணனுக்கு பிறந்தநாள். அவர் எனக்கும் பெரியண்ணாதான். சின்ன வயசில எனக்கு குணா குடும்பத்தில ரொம்ப பிடிச்சது யாரன்னு கேட்டா இவர்தாம்பேன். என்ன எங்க பார்த்தாலும் பிடிச்சு வச்சிடுவார். ஒரு தடவை பெயர் வச்சு குடுங்கம்மான்னு மாமியார்கிட்ட  யாரோ வந்தப்போ அங்கிளோட என் அப்பா கடைக்குட்டி நானு பேர வைக்கலாம்னு இவர் சொல்லி என் பேர்ல ஒண்ணு இப்போ அவங்க ஊர்ல சுத்திகிட்டிருக்கு பாவம். ரொம்ப ஜாலியானவர். கொஞ்சம் முன்கோபி. அண்ணி மேல உயிரையே வச்சிருக்கார். அவரோட அன்புத் தங்கை நான். என் பொண்ணு அவங்களுக்கும்  பெண் செல்வம். ஏன்னா அவங்களுக்கு ரெண்டு பையன்கள் . பெரியப்பா இருக்கும்போது பொண்ணோட  அட்டகாசம் தூள் பறக்கும். நியூசீலண்ட்ல இருக்காங்க. ரெண்டு வருஷம் முன்னாடி மாமியார் இங்க வந்திருந்தப்போ காலிங் பெல் சத்தம் கேட்டு கதவ திறந்தா இவர் சிரிச்சுகிட்டே நிக்கிறார் சர்ப்ரைஸ்னு. மாமியாரும் மருமகளும் மயக்கம் போடாத குறை. அடுத்த வருஷம் குடும்பமா வரப் போறதா சொல்லி இருக்காங்க. பழைய பாட்டுன்னா உயிர். ரீமிக்ஸ் பழையபாடல் வந்தா நான் அனுப்பி வைக்கணும்.

ஹாப்பி பர்த்டே பெரியண்ணா.


நேத்து ஒரு பூப்பு நீராட்டு விழாவுக்கும்  ஒரு பர்த்டே பார்ட்டிக்கும் போயிருந்தோம். அத்தனை பேரும் என்ன பத்தி ரெண்டு விஷயத்துக்காக  பேசினாங்க. ஒண்ணு எப்டி வசந்த் இப்டீன்னு நம்ம பிரியமுடன் வசந்துக்கு பின்னூட்டம் போடற நம்மள  மாதிரி எப்டீங்க இவ்ளோ அழகா ஐசிங் போடறீங்கன்னு கேட்டது. ரெண்டாவதுதான் சரவெடி. கார்க்கியோட அடுத்த படம் கிடையாது. இது என்னோட அதி புத்திசாலித்தனத்தால நடந்தது.  என்னங்க ஆச்சு ஏற்கனவே குணா மூலமா தெரிஞ்சுகிட்டாலும் கன்ஃபார்ம் பண்றாங்களாம், உங்களுக்கு போயி இப்டியா அப்போ உங்களுக்குன்னா பரவால்லயா?, இருந்தாலும் குணாவுக்கு இவ்ளோ கோவம் வரும்படியா நீங்க நடந்திருக்க  கூடாது அவர எதுக்கு இதுக்க இழுக்கறீங்க  இப்டி பல தரப்பட்ட விசாரிப்புக்கள். என்ன ஆச்சுன்னு அறிய ரொம்ப ஆவலா இருக்கீங்களா? சொல்றேன் சொல்றேன். இன்னைக்கு ஞாயித்துக்கிழமை. நேத்து சனிக்கிழமை. சரியா? அதுக்கும் முன்னாடி வந்த வெள்ளிக் கிழமை அடிங் அவங்க தொடர்ந்து படிக்கணுமா வேணாமா?  வேலை  முடிச்சு வந்து சமையல கடுப்போடவ விட்டுட்டே  செஞ்சுகிட்டிருக்கும்போது மாமியார் கிட்ட இருந்து ஃபோன். என் சின்னண்ணனும் அவங்க வீட்ல வந்து நின்னதால அப்டியே கீழ போய் குணா கூட சேர்ந்து பேசினோம். பேசி முடிச்சு மேல வந்தா கிச்சனோட கண்ணாடி கதவு வழியா வழக்கமா தெரியற டைனிங் டேபிள காணோம். ஒரே புகை மூட்டம். அடுப்புல எதுவோ ஜகஜ்ஜோதியா எரிஞ்சு கிட்டிருக்கு. என்னடீ இதுன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டு கிட்டப் போய் பாத்தா வெண்டிலேஷன்ல இருந்த அத்தனை பிளாஸ்டிக் பார்ட்ஸும் உருகி எரிய ஆரம்பிச்சதுமில்லாம சுத்தி இருந்த மரப் பகுதிகளும் லைட்டா எரிய ஆரம்பிச்சிடுச்சு. அப்போதாங்க என் மூளையில அது உனக்கு இருக்கா என்ன  பல்ப் நெருப்ப அணைக்க தண்ணி ஊத்தணும்னு சட்டுன்னு ஸ்விச் ஆனாச்சு. அப்டியே அந்த தீச்சட்டிய தூக்கிட்டு போய் (ஜ்வாலை கைகள பதம் பாக்க) சிங் மேல வச்சு டாப்ப திறந்து விட்... அப்புறமென்ன சரவெடிதான்...  சுத்தி இருந்த பொருட்கள், மேல கூரை, அப்டியே முன்னாடி நான்னு முழு இடமும் பறந்தது சூடான எண்ணை. கொழுந்து விட்டு எரிஞ்சது அப்பளாம் பொரிக்க நான் காய வச்சிருந்த எண்ணைங்கிறது  இந்த அறிவுக் கொழுந்துக்கு மறந்து போச்சே. கதவு மூடி இருந்ததால மணம், சவுண்ட், புகை எதுவுமே வெளிய போகலேன்னாலும் கேட்ட டீ வந்து சேரலியேன்னு பாக்கிறத்துக்காக குணா அட்டன்ச போட்டாரு. என்னடீ பண்றேன்னு கேட்டவர் நிலமையோட தீவிரம் புரிஞ்சு மிச்சமீதி வேலைய பொறுப்பேத்துக்கிடாரு. அப்புறம் என்ன அப்பளம் சுடப் போய் கொப்பளம்தான். மூக்கு கண்ணாடியால கண் தப்பிச்சு. காது கன்னத்தில சில துளிகள். ஃபங்க்ஷன்ல பரவால்லையே திருஷ்டிப் பொட்டு வச்சா மாதிரி உங்களுக்கு இதுவும் அழகாதான் இருக்குன்னு ஒரு ஃப்ரெண்டன்  சொல்ல சுத்தி இருந்த ஃ
ப்ரெண்டிகள் எல்லாம் என்ன அமுக்கி புடிச்சு பர்மனண்டாவே மெழுகுவத்தியால சூடு வைக்க பாத்ததுல கொஞ்சம் பயந்துட்டேன். உங்க  கிச்சன்ல ஃபயர் அலாரம் கிடையாதான்னு முன்னாடியே யாரோ கேட்டீங்க இல்லை? ஒரு ஃப்ளோல சொல்லிட்டு போனதால விட்டுபோச்சு. இப்போ பதில் சொல்றேன். இதுநாள் வரைக்கும் அதுக்கு வேலையே இல்லாம போனதில பாட்டரிய மாத்தலை. ஹிஹிஹி....


இனி தீபாவளி. ஏற்கனவே வைரஸ் காய்ச்சல். இப்போ கொதி எண்ணை சூடு. அதோட குணாவோட திடீர் கண்டிஷன். என் எழுத்துலகுக்கு டாட்டா சொல்ல சொல்லி இருப்பார்னு நினைச்சவங்களுக்கு சாரி. இது வேற. குறிப்பா என் பதிவுலக தம்பிகளுக்கானது. என் அன்புத் தம்பிகள்  கலை, கோபி மற்றும் மின்னல் மாதிரி அப்பப்போ வந்துட்டு போகும் தமிழ் பிரியன். நல்லா கேட்டுக்குங்கப்பா. மாமா தெளீவா சொல்லிட்டாரு. உன் தம்பிங்க சீர் அனுப்பி வச்சாங்கன்னாதான் இந்த வருஷம் தீபாவளி கொண்டாட்டம்னு. அக்கா பாவம் இல்லையா? உங்க மருமக்கள யோசிச்சு பாருங்க? இன்னும் ஒரு வாரம் இருக்கில்ல. கடன உடன வாங்கியாவது ஆவன செய்யுங்கப்பா. நல்ல  நாள் அதுவுமா அக்கா கண்கலங்கி நிக்கணுமா? நிக்கணுமா?நிக்கணுமா? அக்கவுண்ட் நம்பரும், அட்ரசும் மெயில்ல வந்துட்டே இருக்கு. ப்ளீஸ் ஹெல்ப் மீ தம்பீஸ்....



இந்த வருடம் என் ராசிய  சனிபகவான் கொடும்பார்வை பாக்க போறாராம். கோபி என்ன தொடர்பதிவுக்கு கூப்பிடும்போதே நினைச்சேன். அத்தோட அதற்கான முன்னறிவிப்புதான் இந்த வெடி  விளையாட்டுன்னு சாஸ்திர வல்லுனர்கள் சொல்லுறாங்க. இல்லேன்னா ஒரு அதிமேதாவியால இவ்ளோ முட்டாள்தனமா நடந்துக்க முடியாதாம். ரைட்டு! புரியுது. இதுக்கு மேலயும் எழுதணும்னு  தோணினாலும் அடிப்பாவி நல்லவங்கள இப்டியா சோதிப்பே  கை  வலிக்குது. அப்டியும் ஏன் இவ்....ளோ எழுதறேன்னு கேட்டீங்கதானே? சொல்றேன். யாம் பெற்ற துன்பம் பெறுக இவ் வையகம்தாங்க.

போறத்துக்கு முன்னாடி பெரியண்ணாவுக்கு கிஃப்டா ஒரு சாங் போடலாம்னா டவுன்லோட் பண்ண முடியல. அதனால லிங்க் மட்டும் குடுத்துடறேன். பாருங்க. வரட்டுங்களா?
http://www.youtube.com/watch?v=h4jbjnsr60U 

24 நல்லவங்க படிச்சாங்களாம்:

ராமலக்ஷ்மி said...

உங்கள் பெரியண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். பதிவே சரவெடி போல இருக்கிறது:)!
[சீர் தம்பிகளிடமிருந்துதானே வேண்டும். அப்பாடி தப்பிச்சேன்:)!]

கோபிநாத் said...

பெரியண்ணாவுக்கு வாழ்த்துக்கள் ;)

இவரு விஜயகாந்த் பட பெரியண்ணா மாதிரி இருப்பாரா!? ;))

யக்கா..இன்னாது இது இப்படி அடுத்து அடுத்து சுத்தி சுத்தி அடிச்சிக்கிறங்க ;(

தீபாவளி சீர் தானே!!!!...தானே...தானே..தானே...தானே...கண்டிப்பா அனுப்பிடுறேன் ;)

உடம்பை பார்த்துக்கோங்க அக்கா.

கோபிநாத் said...

\\இந்த வருடம் என் ராசிய சனிபகவான் கொடும்பார்வை பாக்க போறாராம். கோபி என்ன தொடர்பதிவுக்கு கூப்பிடும்போதே நினைச்சேன். அத்தோட அதற்கான முன்னறிவிப்புதான் இந்த வெடி விளையாட்டுன்னு சாஸ்திர வல்லுனர்கள் சொல்லுறாங்க.\\

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வவ்வ்வ்வ்...என் பதிவுக்கு இப்படி ஒரு உள்குத்தா!! ;))

ரைட்டு...;))

Thamiz Priyan said...

Akka, thambi romba busy. Innum 2 maasam comp kitayathu... :(

Thamiz Priyan said...

Periya annavukku vazthukal.

Thamiz Priyan said...

Samayel ellam guna machan velai... Neenga en akka anga poreenga.. Ini kavanama irunga.. ;-)

Thamiz Priyan said...

Dewalikku puthu marumagalukku neenga thaan gift anuppanum... Olunga anuppunga... ;-))

Thamiz Priyan said...

Sari.. Sari... Udampai kavanichukkunga akka.. Bye.

Thamiz Priyan said...

Me the 9

Thamiz Priyan said...

Me the 10th

ப்ரியமுடன் வசந்த் said...

//நம்மள மாதிரி எப்டீங்க இவ்ளோ அழகா ஐசிங் போடறீங்கன்னு கேட்டது.//

அடிப்பாவி....

மோசம் போயிட்டேனே...

ப்ரியமுடன் வசந்த் said...

// அப்புறம் என்ன அப்பளம் சுடப் போய் கொப்பளம்தான்//

ஹ ஹ ஹா...

ப்ரியமுடன் வசந்த் said...

//உன் தம்பிங்க சீர் அனுப்பி வச்சாங்கன்னாதான் இந்த வருஷம் தீபாவளி கொண்டாட்டம்னு.//

யார் நீங்க?

ப்ரியமுடன் வசந்த் said...

எங்கக்க்கா சுசிக்கும்

மருமகப்புள்ளைகளுக்கும்

மாம்சுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

பித்தனின் வாக்கு said...

பார்த்து பண்ணக் கூடாதா. இப்படி சமையல் பண்ணா எப்படி? உடம்பை பார்த்துக் கொள்ளவும். சனி பகவான் நல்லா ஆரம்பம் போல.
தினமும் ஆஞ்சணேயர் வழிபாடு செய்யுங்கள். சுலோகங்கள் வேண்டும் என்றால் சொல்லவும், நான் கொசு மெய்லில் அனுப்பி வைக்கின்றேன். காயங்கள் ஆறிவிட்டதா? ரொம்ப எரிச்சல் இருந்துதா?

கலையரசன் said...

பெரியண்ணாவுக்கு வாழ்த்துக்கள்..
என்னது நாங்க சீர் வைக்கனுமா? ரைட்டு கொடுத்துடுவோம்!

அடுத்த தீபாவளிக்காவது எனக்கு டிரஸ் வாங்கித்தருவ என்ற ஆவலுடன்....

நேசமித்ரன் said...

தீபாவளிக்கு முன்னாடியே பட்டாசு வெடிச்சுட்டீங்களா ?
பார்த்துங்க பத்ரம் !
பெரிய அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
சீர்தானே அனுப்பிட்டா போகுது உங்களுக்கு செய்யாம யாருக்கு செய்யப் போறோம்

தீபாவளி வாழ்த்துக்கள் ! மீ தா பர்ஸ்டுன்னு நானும் சொல்லிக்கலாமேன்னு ஒரு ஆசைதான்
:)

சுசி said...

நன்றி அக்கா.உங்களுக்கும் எங்கள் தீபாவளி வாழ்த்துக்கள்.சீர் நீங்க கேக்காமலே கொடுப்பீங்கன்னு நினைச்சேன்.ஹிஹிஹி...


நன்றி கோபி. இவர் லைட்டா அர்ஜுன் மாதிரி இருப்பார். தானே... தானே.. ன்னு ராஜா சார் சாங்க ஹம்மிங்கா.. சீர் மட்டும் அனுப்பலேன்னா அக்காவும் கூட சேர்ந்து வயலின் வாசிக்க வேண்டியது வரும்... ரும்.. ரும்...


நன்றி தமிழ்பிரியன். குணா மச்சான் வேலையா சமையல்? க்ர்ர்ர்ர்.... சீர் வரலேன்னா தன் வேலைய காட்டுவார். அப்போ தெரியும். என் குட்டி மருமகளுக்கு முதல்ல வாழ்த்துக்கள். அவங்களுக்கு கண்டிப்பா என் தீபாவளி வாழ்த்தை அனுப்பி வச்சிடறேன்.


அவ்வ்வ்... வசந்து... சீர்னதும் யார்னு கேட்டுட்டியேப்பா... அத அப்டி படிக்க கூடாது //எப்டி வசந்த் இப்டீன்னு நம்ம பிரியமுடன் வசந்துக்கு பின்னூட்டம் போடற நம்மள மாதிரி // இங்க ஒரு சின்ன ப்ரேக் விட்டு... தொடர்ந்து //எப்டீங்க இவ்ளோ அழகா ஐசிங் போடறீங்கன்னு கேட்டது// ன்னு படிக்கணும். புரிஞ்சுதா?


நன்றி சுதாண்ணா. எரிச்சலாவா? எ..ரி..ச்..ச்..ச..ல்.. அம்மா ஏற்கனவே நிறைய எனக்காக சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. இனி நீங்க எழுதினத படிச்சத்துக்கப்புறம் நிச்சயம் ஆஞ்சநேயர் சுலோகமும்
சேர்ந்துக்கும் :)))


என்னது நீங்க சீர் வைக்க்கணுமாவா? என்ன கலை இது? யக்கான்னு கூப்டா மட்டும் போதாதுப்பா.. சீர் பணத்த சேமிச்சு வச்சு கண்டிப்பா தம்பிக்கு அடுத்த தீபாவளிக்கு புது கர்சீஃப் வாங்கி குடுக்கறேன். சரியா? ஹாப்பி???


நன்றி நேசமித்ரன். அப்போ மீ த ஃபர்ஸ்ட்டா நானும் உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்...

Anonymous said...

மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள் சுசி. குடும்பத்தாருக்கும் தெரிவிச்சிடுங்க.

//சீர் நீங்க கேக்காமலே கொடுப்பீங்கன்னு நினைச்சேன்//

உங்களுக்கு மட்டும் சீர் குடுத்துட்டு எனக்கு குடுக்காம விட்டா நானும் கோவிச்சுக்குவேன். :)

கார்க்கிபவா said...

வெயிட் பண்ணி தீபாவளிக்கு வெடிக்கலாமே.. பார்த்து செய்ங்க..

தீபாவளி வாழ்த்துகள்

சுசி said...

நன்றி அம்மணி. ரைட்டு. நல்லவேளை எனக்கு கிடைச்சதில பங்கு கேக்காம விட்டீங்களே :)))


வாங்க ஹீரோ.. ரொம்ப பிசியோ? வேறொண்ணுமில்ல உங்க சரவெடி ரிலீசுக்கு ரிஹர்சல் பார்த்தேன். தீபாவளிக்கு பெரிய்ய்...ய வெடி இருக்கு.

Anonymous said...

//http://chinnaammini.blogspot.com/2009/10/blog-post_14.html//

உங்களுக்கு இன்னொரு விருது. வாங்கிக்கோங்க சுசி

இது நம்ம ஆளு said...

இந்த வருடம் என் ராசிய சனிபகவான் கொடும்பார்வை பாக்க போறாராம். கோபி என்ன தொடர்பதிவுக்கு கூப்பிடும்போதே நினைச்சேன். அத்தோட அதற்கான முன்னறிவிப்புதான் இந்த வெடி விளையாட்டுன்னு சாஸ்திர வல்லுனர்கள் சொல்லுறாங்க. இல்லேன்னா ஒரு அதிமேதாவியால இவ்ளோ முட்டாள்தனமா நடந்துக்க முடியாதாம். ரைட்டு! புரியுது. இதுக்கு மேலயும் எழுதணும்னு தோணினாலும் அடிப்பாவி நல்லவங்கள இப்டியா சோதிப்பே கை வலிக்குது. அப்டியும் ஏன் இவ்....ளோ எழுதறேன்னு கேட்டீங்கதானே? சொல்றேன். யாம் பெற்ற துன்பம் பெறுக இவ் வையகம்தாங்க.

:)
):

சுசி said...

நன்றி அம்மணி. இதையே நீங்க கொடுத்த சீராவும் நினைச்சுக்கிறேன்.


நன்றி பாரதியார்.