Pages

  • RSS

22 July, 2009

சுசி போட்ட ரிவர்ஸ்....

எல்லாரும் நலமா மக்களே!

ஓகே. அப்டீன்னா அப்டியே பதினேழாம் தேதி வெள்ளிக் கிழமைய நோக்கி ரிவர்ஸ்ல வாங்க.

வந்திட்டீங்களா? இப்போ மணி நாலு முப்பது. பொட்டிய மூடி வச்சிட்டு வீட்டுக்கு கிளம்பறேன். கிட்டத்தட்ட பதினஞ்சு நிமிஷம் கழிச்சு வீட்டு முன்னாடி வண்டிய நிறுத்தி ரிமோட் எடுத்து garage கதவ திறக்கிறேன். ஒரு வழியா லாரிய நண்பர்கள் எங்க வண்டிக்கு வச்ச செல்லப் பெயர் உள்ள ஏத்தினதும்தான் ஞாபகம் வந்திச்சு. அடடா நாளைக்கு barbecue party க்கு நண்பர்கள கூப்ட்ருந்தோம், எதுவும் வாங்கலையேன்னு. சரி இப்பவே அதையும் முடிச்சிரலாம்னு ரிவர்ஸ போட்டு பின்னாடி எடுத்.. டமார் படார்னு கலவையா ஆனா பயங்கரமா ஒரு சவுண்டு. சுருக்கமா #"@#$%^&*@#$$%!@#$%^&*இப்டி.

ஒண்ணும் இல்லீங்க உள்ள வந்ததுமே வழக்கம்போல ரிமோட்ட அழுத்திட்டேன். கதவு அதுங் கடமைய செய்றதுக்காக மூட ஆரம்பிச்சிருக்கு. நான் ரிவர்ஸ்ல வர்றேன்னு அதுக்கு தெரியுமா என்ன! உடனடி நடவடிக்கையா ரிமோட்ட மறுபடி அழுத்தினதால லாக் ஆகி கதவு நின்னிடுச்சி. நல்லவேள ஸ்டெப்னிக்குள்ள கதவு மாட்டிக் கிட்டதால சேதாரம் கொஞ்சம் கம்மி. மிட்சுபிஷி பஜீரோ இப்போ பிஞ்சரோ ஆய்டிச்சு. சம்பவ நேரம் குணாவும் பசங்களும் வீட்ல இல்ல. இவ்ளோ பெரிய சமாசாரத்த சூ மந்த்ரகாளி போட்டா மறைக்க முடியும்? வந்ததும் குணா பாத்திட்டாரு. கதவுதான் மறுபடி மூட மாட்டாம நிக்குதே.கேள்வி நம்பர் ஒண்ணு.ஏய் என்னடி ஆச்சு? அது வந்துப்பான்னு ஆரம்பிக்கும்போதே கேள்வி நம்பர் ரெண்டு நெனப்ப எங்க வச்சிட்டு வந்தே? ..................................................................................................................... இருங்க, குணா திட்டும்போது சுசி எதுவும் பேச மாட்டா. அவர் திட்ற டைம்ல நாம நெனப்ப நான் எங்க வச்சேன்னு பாத்திர்லாம். 15 min. ரிவர்ஸ்ல வாங்க.

புறப்படறதுக்கு சற்று முன் அக்கா கிட்ட இருந்து ஒரு மின்னஞ்சல். மவளே இன்னிக்கும் நீ எனக்கு கால் பண்ணலன்னு வச்சுக்கோன்னு ஆரம்பிச்சு தங்கச்சீங்கிரதினால கெட்ட வார்த்தை எதுவும் போடலை எக்கச்சக்கமா எழுதி இருந்தா. கட்டாயம் கால் பண்ணனும்னு நெனச்சேன். படிச்ச பதிவுக்கெல்லாம் மறக்காம பின்னூட்டம் போட்டேனான்னு நினச்சேன். அப்போ பாத்து Byonce Knowels பாடின Halo ப்ளே ஆச்சா அப்புறம் எந்த நினைவும் இல்ல. எத்தன வாட்டி சொல்றது பாட்ட போட்டுக் கிட்டு டிரைவ் பண்ணாதேன்னு. அது அலறலேன்னா இசை ரசிகர்கள் குணாவை மன்னிக்கட்டும் கதவு மூடுற சத்தம் கேட்டிருக்கும் இல்ல. சின்னதா ஒரு பாயின்ட் இருக்குதோ?

நான் ஏன் குணா திட்டும்போது கம்னு இருக்கேன்னு நீங்க கேக்கலேன்னாலும் சொல்ல வேண்டியது என் கடமை இல்லையா?
கேட்டுக்குங்க. ஒண்ணு அட என் பேச்சுக்கு மரியாதை குடுத்து அமைதியா இருக்காளே நம்ம பொண்டாட்டின்னு அவர் சந்தோஷப்படுவார். ரெண்டு கொஞ்ச நேரம் ஆனதும் தனியா திட்றது அலுத்துப் போயி அவரே ஆஃப் ஆயிடுவார். மூணு அவர் திட்டும்போது கவனமா கேட்டாத்தானே அப்புறமா திருப்புறதுக்கு எனக்கும் ஏதும் பாயிண்ட்ஸ் கிடைக்கும்.

இவ்ளவுக்கும் சுசி ஸ்டேடியாதான் இருந்தா. கடைசீல ஒண்ணு சொன்னார் பாருங்க. அப்போதான் லைட்டா கண்ல தூசி. மத்தபடி தப்பு பண்ணினா சுசி அழமாட்டா. லண்டன் போம்போது நகைக்கடைக்கு போணும்னு சொல்லிட்டிருந்தே இல்ல ன்னு மனச் சாட்சியே இல்லாம சொல்லிட்டாரு. ரெண்டு நாளா நான் அவர்கூட பேசல. நீங்க நினைக்கிறாப்லையே அவர் ஓவர் நிம்மதியா இருக்காரேன்னுட்டு மறுபடி பேச ஆரம்பிச்சிட்டேன். அதுவும் இன்னைக்கு பன்றிக் காய்ச்சலோட அறிகுறி என்னன்னு பன்றிக்கறி சாப்டுக் கிட்டே அவர் கேட்டப்போ நான் சொன்ன பதிலோட லைஃப் பழைய ஃப்ளோல போக ஆரம்பிச்சிடிச்சு.

அப்டியே நீங்க நிம்மதியா இருக்கிறதா பதிவாண்டவர் சொன்னாரா அதான் மனசு கேக்கலை. என் பதிவ போட்டுட்டன்.வரட்டுமா உறவுகளே!

18 நல்லவங்க படிச்சாங்களாம்:

Admin said...

ஆமா இப்படி எல்லாம் நடக்குதோ....

Admin said...

அதிகமா குழப்படி பண்ணவேண்டாம் சுசி அக்கா...

கார்க்கிபவா said...

டாக்டர் இந்த மருந்து ரொம்ப டேஸ்ட்டா இருக்கு.. அடிக்கடி கொடுங்க..

(நீங்க திட்டு வாங்கினா எனக்கு சந்தோஷம்ன்னு தப்பு தப்பா யோசிக்காதிங்க. நான் பதிவ சூப்பர்ன்னு சொன்னேன்)

ப்ரியமுடன் வசந்த் said...

// நீங்க நினைக்கிறாப்லையே அவர் ஓவர் நிம்மதியா இருக்காரேன்னுட்டு மறுபடி பேச ஆரம்பிச்சிட்டேன்.//

அதானே ஒரு மனுஷன் நிம்மதியா இருக்குறது உங்களுக்கு பிடிக்காதே.....

சுந்தர் said...

//பன்றிக் காய்ச்சலோட அறிகுறி என்னன்னு பன்றிக்கறி சாப்டுக் கிட்டே அவர் கேட்டப்போ// நல்ல நையாண்டி

சப்ராஸ் அபூ பக்கர் said...

///அப்டியே நீங்க நிம்மதியா இருக்கிறதா பதிவாண்டவர் சொன்னாரா அதான் மனசு கேக்கலை. என் பதிவ போட்டுட்டன்.வரட்டுமா உறவுகளே! ///

ஏங்க அது எப்போதுமே கடைசில ஒரு இடி இடிச்சிட்டு போறீங்க?... (ஒ,,,,, பழக்க வழக்கமோ?..... ஆகட்டும்... ஆகட்டும்....)

அருமையாக இருந்தது... வாழ்த்துக்கள்.....

கலையரசன் said...

மூணு பாயிண்ட்ஸ் சொன்னீங்க பாருங்க யக்கா, யப்பபபபஆ.....

நீங்க டாக்குடரு இல்ல.. 4 வக்கீல நாலா மடிச்சு ஒன்னா ஆக்குன ஆளவந்தி நீங்க!

ம்.. மாமா கண்ணுல தூசி விழாம பாத்துக்கங்க..

சொல்லரசன் said...

//நான் ஏன் குணா திட்டும்போது கம்னு இருக்கேன்னு நீங்க கேக்கலேன்னாலும் //

விட்டுக்குள் இருந்தால் உடனே சமையலறைக்கு போய்.......ந‌ல்ல‌ வேலைகேட் அருகே திட்டிய‌தால் உங்க‌ளால் ஒன்னும்செய்ய‌முடிய‌வில்லை என்ப‌து
புரிகிற‌து

சுசி said...

இதுக்கு மேலயும் நடக்கும் சந்ரு.

சுசி said...

வேண்டாம் கார்க்கி. அப்புறம் திகட்டிடும்.
(சேச்சே உங்கள போயி அப்டி நினைப்பேனா. என்னங்க நீங்க)
((அவ்ளோ சந்தோஷமா? அந்த கறிய உங்கள சாப்ட வச்சிருக்கணும்))

சுசி said...

நன்றி வசந்த். என்ன கரீக்டா புரிஞ்சுகிட்டீங்க.

............................


நன்றி சுந்தர்.


..............................


நன்றி அபூ. பலபேரு முடிவ மட்டும்தான் படிக்கிராங்களோன்னு லைட்டா டவுட்டு. அதான்.

சுசி said...

நன்றி கலையரசன்.
ஏய் சுசி இனி போலி வக்கீல்னு போட்டுட்டு, அதுக்கு பொருத்தமா தூக்குதண்டனை, ஆயுள்தண்டனைன்னு லேபல்சையும் மாத்திடு.
மாமா கண்ணுல தூசி என்ன உலக்கையயே போட்டுறேம்பா.

சுசி said...

சொல்லரசன். இதுவும் நீங்க கற்பனையில போட்ட பின்னூட்டம்தானே?

கலையரசன் said...

என் நண்பர் உங்களுக்கு விருது கொடுத்திருக்கிறார்.. வந்து பாருங்கள்!

http://geethappriyan.blogspot.com/2009/07/blog-post_7146.html

விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்..
பார்ட்டி அப்புறமா.. சண்டே வச்சிகலாம்!

கோபிநாத் said...

:)))

பதிவு முழுக்க ரிவர்ஸ்...

யக்கோவ்..கதையை பாதியிலே விட்டுட்டா எப்படி!? மீதியையும் போடுங்கள்.

நேசமித்ரன் said...

சுசி
வயித்து வலி மாத்திரை பார்சல்
:)

சுசி said...

//என் நண்பர் உங்களுக்கு விருது கொடுத்திருக்கிறார்.. வந்து பாருங்கள்!//
வந்து
பாக்கிறேன். ஆனா இதுல எந்தவிதமான உள்குத்தும் இல்லையே?

//பார்ட்டி அப்புறமா.. சண்டே வச்சிகலாம்!//
வச்சிக்கலாம் வச்சிக்கலாம். மீதி பன்றி கறி இன்னும் ஃப்ரிஜ்லதான்
இருக்கு.

.................................


நன்றி கோபிநாத்.
ரிவர்சினால போட்ட பதிவுங்கிரத காட்டணுமில்ல.
மீதிக் கதைதானே? படிச்சுக்குங்க.

வண்டி இப்போ வொர்க் ஷாப்ல நிக்குது. நாளைக்கு ரெடி ஆய்டுச்சுன்னா குணாவும் நானுமா போய் எடுத்திட்டு வந்திடுவோம். மறுபடியும் டிரைவ் பண்ணுவேன். ஆனா ரிவர்ஸ் போடுவேனான்னு தெரியல.....
-சுபம்-

இத தானே கேட்டீங்க கோபி???

.................................


நன்றி நேசமித்ரன். இதோ அனுப்பிட்டேன்.

ப்ரியமுடன் வசந்த் said...

http://blogintamil.blogspot.com/2009/12/blog-post_10.html

வாருங்கள் இங்கே