Pages

  • RSS

20 July, 2009

சுசிக்கும் விருது....

எல்லாரும் நல்லா இருக்கீங்களா உறவுகளே? நான் நல்லாவே இல்ல. ஏன்னு இப்போ கேக்காதீங்க. அழ எல்லாம் மாட்டேன். எழுதீருவேன் அப்புறம் நீங்க அழுவீங்க. மேல படீங்க.

சுசிக்கும் விருதாமே.... ?! நம்பவே முடியவில்லை.

நன்றி சந்ரு. எனக்கு பதிவுலகில் கிடைத்த முதல் அங்கீகாரம். நான் பாட்டுக்கு ஏதோ எழுதிக்கிட்டு இருக்கேன். உருப்படியாவும் ஏதாவது எழுதணும்னு நினைக்க வச்சிட்டீங்க. என்னோட எழுத்துக்காக இல்லேன்னாலும் சின்ன வயசுல சின்னண்ணன் பிடிச்ச பட்டாம்பூச்சீங்களை எல்லாம் அவன் கூட கட்டிப் புரண்டு சண்டை போட்டு பறக்க விட்டு உயிர் காத்த சமூக சேவைக்காக வேணா கட்டாயம் ஏத்துக்கிறேன். மீண்டும் நன்றிகள் சந்ரு.

குறிப்பா நான் இன்னைக்கு இருக்கிற மனநிலைக்கு எனக்கு இது பெரிய ஆறுதல்.

சந்ரு மொத்தம் ஆறு பட்டாம்பூச்சீங்கள என் பக்கமா பறக்க விட்டாரு. இதில ஒண்ண மட்டும் வச்சிக்கிட்டு மத்த அஞ்சையும் யார் கிட்டயாவது கொடுத்திரணும்னு சொல்லி இருக்காரு. அத நானும் ரிப்பீட்டே.

நான் ஒண்ண சாளரம் கார்க்கிக்கு வழங்கிக்கிறேன். இவர் ஒரு ஐடியா திலகம். விளையாட்டுத்தனமா பதிவுகள போட்டாலும் திடீர்னு சிந்திக்கவும் வச்சிடுவார். சண்டைக்கு அஞ்சாதவர். எனக்கு பின் பிறவா என் தம்பி.

இன்னொண்ண பிரியமுடன்......வசந்த் க்கு வழங்கிக்கிறேன். படம் போட்டே சமூகத்தில விழிப்புணர்வ ஏற்படுத்திக் கிட்டு வர்றாரு. சில படங்களைப் பாத்து மிரண்டதில என் தூக்கம் பறிபோன பாவத்துக்கு சொந்தக்காரர்.

இன்னொண்ண இது என்னோட இடம். தமிழ் பிரியனுக்கு வழங்கிக்கிறேன். சின்னதா ஒரு சோக டச்சிங்கோட எழுதுவாரு.என்ன அன்போட அக்கான்னு கூப்ட என் முதல் பதிவுலக தம்பி.

இன்னொண்ண பிரிவையும் நேசிப்பவள்.. காயத்ரிக்கு வழங்கிக்கிறேன். காதல் கவிதை அதுவும் ரொம்ப பீலிங்கோட இவங்க எழுதுவாங்கன்னு எல்லாருக்கும் தெரியும்.

இன்னொண்ண சொல்லரசன் க்கு வழங்கிக்கிறேன். எலக்சன்னாலே சக பதிவர்களுக்கு இவர் ஞாபகம்தான் வருமாம். சமுதாய சிந்தனைகளோட பதிவு எழுதுவார்.

அப்புறம் என்ன? ஸ்வீட் எடுத்து கொண்டாடி மறக்காம எனக்கும் அனுப்பி வச்சிடுங்க.
மீண்டும் சந்திக்கிறேன்.

26 நல்லவங்க படிச்சாங்களாம்:

நேசமித்ரன் said...

விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்
நானும் உங்களுக்கு ஒரு விருது கொடுக்க நினைத்திருந்தேன்
(சத்தியமாங்க)
ஒரு துறை சார்ந்தவர்களை ஒருவர் விட்டு இன்னொருவருக்கு கொடுக்க
மனம் இல்லாததால்
மேலும் உங்களுக்கான விருதறிக்கையை பார்த்ததால்
...
மனமார்ந்த வாழ்த்துக்கள்
மிக்க சந்தோசம் !

சுசி said...

நேசமித்ரன் நீங்க கொடுக்க நினைச்சதே எனக்கு விருது கிடைச்சா மாதிரி. உங்க கவிதைகள் முன்னாடி நான் பூஜ்ஜியம். ரொம்ப நன்றி.

ப்ரியமுடன் வசந்த் said...

யப்பா உங்கள பயமுறுத்துனதே பெரிய விசயம் தானே சுசி....

ரொம்ப நன்றி சுசி விருதுக்கு....

விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Thamiz Priyan said...

ஆகா.. தொடர் பதிவுக்கு விடாம கூப்பிடுறாங்களே... விருதோட ஏதாவது பண முடிப்பு கொடுத்தீங்கன்னா நல்லா இருக்கும்.,. அக்கா.. அக்கவுண்ட் நம்பர் அனுப்பவா?..ஹிஹிஹி

Admin said...

உங்களுக்கும் உங்களிடம் இருந்து விருது பெறும் ஏனைய நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்..

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் தங்களுக்கும் தாங்கள் கொடுத்தவர்களுக்கும்.

*இயற்கை ராஜி* said...

விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்

gayathri said...

விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்

Unknown said...

இரண்டாம் முறையாக இந்த பட்டாம்பூச்சி என்செடியில் வந்து அமர்ந்திருக்கிறது.இந்த‌ விருதுக்கு நன்றிங்க‌ சுசி.

கார்க்கிபவா said...

விருதுடன் பணமுடிப்பு, பரிசு, பொற்காசு ஏதும் கிடையாதா மருத்துவரே?

விருதுக்கும், கொடுத்த பில்டப்பிற்கும் ரொம்ப நன்றி..

கலையரசன் said...

பெரிய மனதுடன் விருது கொடுத்த சுசிக்கும்...
அதை மனமகிழ்ந்து வாங்கிகொண்ட என் தோழர்கள், தோழிகளுக்கும்
என் வாழ்த்துக்கள்!!

இனி கும்மி ஸ்டார்ட்ஸ்...


1. //எனக்கு பின் பிறவா என் தம்பி//

டமமமமார்!
(கார்க்கி நெஞ்சுதான் வெடிச்சிடிச்சோ!!)

2. //சொந்தக்காரர்//

என்னா முறையில எக்கா?

3. //முதல் பதிவுலக தம்பி//

அப்ப மத்தவங்க என்னான்னு கூப்பிட்டாங்க, தங்கசின்னா?

4. //காதல் கவிதை அதுவும் ரொம்ப பீலிங்கோட//

ஹய்யா.. லிங்கு கிடச்சுடுச்சே!!

5. //இன்னொண்ண சொல்லரசன்க்கு வழங்கிக்கிறேன்//

இவரு குரலரசனுக்கு அண்ணனா? தம்பியா?

சுசி said...

நன்றி வசந்த். நான் ரொம்பப் பயந்தவங்கிரத தைரியமா சொல்லிக்குவேன்.



நன்றி தமிழ் பிரியன். நீங்கதான் பர்ஸ் நெறைய பணம் வச்சிருக்கீங்களே. உங்களுக்கு எதுக்கு பண முடிப்பு?

சுசி said...

நன்றி சந்ரு.

நன்றி ஜமால்.

நன்றி இயற்கை.

நன்றி காயத்ரி.

நன்றி சொல்லரசன். செடி நிறைய வண்ணத்துப் பூச்சிகள் கிடைக்க வாழ்த்துக்கள்.

சுசி said...

நன்றி கார்க்கி.
பேசிக் கிட்டதவிட எக்ஸ்ட்ராவா ரெண்டு பிட்ட சேத்துப் போட்ருக்கேன். சோ நீங்கதான் மீதிய செட்டில் பண்ணணும். அக்கவுண்ட் நம்பர் அனுப்பட்டுமா?

Unknown said...

//5. //இன்னொண்ண சொல்லரசன்க்கு வழங்கிக்கிறேன்//

இவரு குரலரசனுக்கு அண்ணனா? தம்பியா?//

என்னுடைய பதிவு ஒன்றில் இதற்கு பதில்சொல்லியிருக்கிறேன்
க(கொ)லையரச‌ன்

சுசி said...

வாங்க ராஸா, கலையரசா!
தனியா ஒரு அப்பாவி சிக்கினா இப்டித்தான் நெம்பர போட்டு கும்முவீங்களோ? இப்போ நீங்க எண்ணிக்கோங்க.

1. //டமமமமார்!
(கார்க்கி நெஞ்சுதான் வெடிச்சிடிச்சோ!!)//

கழுகுப் பார்வை பார்க்காம நேராப் பாத்துப் படிச்சிருந்தா கார்க்கி நெஞ்சில்ல உங்க நெஞ்சுதான் டமாரி இருக்கும்.

2. //என்னா முறையில எக்கா? //

அவர் பதிவுல இருக்கிற நமீதா எக்காவ மட்டும் பாக்கிற உங்களுக்கு எப்டி புரிய வைக்கிறது?

3. //அப்ப மத்தவங்க என்னான்னு கூப்பிட்டாங்க, தங்கசின்னா?//

இல்லீங்க சுசின்னு....

4. //ஹய்யா.. லிங்கு கிடச்சுடுச்சே!!//

காயத்ரி என்ன மன்னிச்சிடும்மா... உன்ன இப்டி ஒரு சிக்கல்ல கோத்து விட்டுட்டேனே.....

5. //இவரு குரலரசனுக்கு அண்ணனா? தம்பியா?//

நீங்க ஆடலோட சேர்ந்த க(கொ)லை மாதிரி இவர் குரலோட சேர்ந்த சொல்னு நினைக்கிறேன்.

நன்றி கலையரசன். என்னதான் ஆணி ஜாஸ்தி இருந்தாலும் சுசி மாதிரி சிரிச்சுக் கிட்டே புடுங்கணும்னு டீம் லீடர் சொல்லீட்டுப் போறாங்க....

கோபிநாத் said...

உங்களுக்கும்....உங்களிடம் இருந்து விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ;))

சுசி said...

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கோபிநாத்.

சப்ராஸ் அபூ பக்கர் said...

நானும் வந்து போனேன்....

விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்....

சுசி said...

நன்றி அபூ. வந்து போனதுக்கு. அப்போ படிச்சிட்டு போகலையா?

gayathri said...

hai susi ungaluku en blogla oru avord koduthu iruken vanthu parunga pa

சுசி said...

ரைட்டு. பழி வாங்கிறதுன்னே முடிவு பண்ணிட்டிங்க. வந்துகிட்டே இருக்கேன் காயத்ரி.

சப்ராஸ் அபூ பக்கர் said...

சுசி said...

//நன்றி அபூ. வந்து போனதுக்கு. அப்போ படிச்சிட்டு போகலையா?///

ஐயோ.... நீங்க வேற...

படிச்சிட்டு தாங்க குத்து மதிப்பா புள்ளி வச்சிட்டு போனேன்.....

சுசி said...

அப்டீன்னா மீண்டும் நன்றி அபூ. ரொம்ப சமத்து.

வால்பையன் said...

வாழ்த்துக்கள்!

கொடுத்தவருக்கும், பெற்றவர்களுக்கும்!

நையாண்டி நைனா said...

வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. நன்றி.. நன்றி...