Pages

  • RSS

12 September, 2010

நிலா(வீட்டு)க்கு போய்ட்டேன் – 4

ஊர் சுத்தல் ஒண்ணு.

ஊர் சுத்தல் ரெண்டு.

ஊர் சுத்தல் மூணு.

பயணங்கள் போகும்போது பொதுவாகவே வெயில் குறைவாக இருந்தா நல்லதுன்னு உங்க எல்லாருக்குமே தெரியும். அதுவும் வண்டியில போகும்போது ஏசி போட்டோம்னா குளிரும், தூக்கம் சொக்கும். வெயிலுக்கும் வயித்துக்கும் இதமா பழங்கள் கொண்டு போறது என் வழக்கம். அதிலேயும் என் சித்தப்பா ஒரு தடவை அவங்க வீட்ல இருந்து கிளம்பும்போது அன்னாசி பழத்த குட்டி குட்டியா கட் பண்ணி, சர்க்கரை, உப்பு, கொஞ்சூண்டு தூள் (அதாவது உங்க ஊர்ல காஞ்ச மிளகாய், தனியா, சோம்பு, மற்றும் இதர பொடி எல்லாம் தனி தனியா சேர்த்துப்பிங்க இல்லையா.. அதையே நாங்க மொத்தமா உரல்ல இடிச்சோ, மில்லுல குடுத்து அரைச்சோ வச்சுக்குவோம். அது தான் எங்க ஊர்ல மிளகாய்த் தூள் என்கிற தூள். யாருக்காச்சும் ரெசிபி வேணும்னா கேளுங்க) சேர்த்து ஒரு பாக்ஸ்ல போட்டு முதல் நாள் இரவு ஃப்ரிஜ்ல வச்சிட்டார். அடுத்த நாள் நாங்க ஒரு பத்து மணி வாக்குல சூரியன் சுட ஆரம்பிச்சதும் எடுத்து சாப்டோம்னா.. அமிர்தம். அப்டி ஒரு ஜூஸியா காரம், இனிப்பு, உப்பு சுவைக் கலவையோட தாகத்துக்கும் பசிக்கும் சேர்த்து சாப்பிடலாம். பசங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.

 IMG_0181 இப்போ வெயில பாருங்க. நேரம் காலை 8:48. பாக்க இப்டி இருந்தாலும் கண்ணாடி வழியா ரொம்ப சுடும். அது என்னமோ என் சைடுலவே எப்போதும் சூரியனோட கொடும், கனல் பார்வை இருக்கும். பெயர் சரியில்லை. சூரியனோட பெயர மாத்தணும்.

தலை நகர் ஆஸ்லோ போய் சேரும் வரைக்கும் இடப்புறமும் வலப்புறமுமா கூடவே வரும் ஆறு. அமைதியா, ஆரவாரமா, பொங்கும் நுரையோட குதிச்சோடி கும்மளமா அதுவும் எங்க மனம் போல. இந்த வருஷம் மழை குறைவா இருந்ததால நிறைய இடங்களில வற்றிப் போய் இருந்தது கவலை. கண்ணாளன் கூட பகிர்ந்து கிட்டு ஒரு படமும் எடுத்து வச்சேன். 1280080481535

 

 

 

 

 

அடுத்து வந்த சுப யோக சுப நேரத்தில முதலாவது சண்டைய ஆரம்பிச்சு வச்சாங்க பசங்க. அம்மு தூங்கிட்டு இருக்கும்போது சது அவங்க சோடாவ குடிச்சிட்டாராம். அவங்கள சமாதானம் பண்ணுறத்துக்குள்ள சத்தத்தில கண்ணாளன் எந்திரிச்சாச்சு. அடுத்து நம்மதுக்கு பிள்ளையார் சுழி. எப்டின்னு எழுதறேன் படிங்க.

’அந்த சன்கிளாஸ் கொஞ்சம் எடுத்து குடுங்கப்பா..’   இந்தா..   ’இது இல்லை.. மத்தது..’   இந்தா..

’டீ கொஞ்சம் குடுங்களேம்பா..’    இந்தா..

’அதோ.. அந்த பூவை ஒரு ஃபோட்டோ எடுங்கப்பா..’

(எடுத்ததும்) ’நல்ல அழகா இருக்கில்லை.. சரியா எடுத்திங்களா??’

(நோ பதில்)

’என்னோட ஐபாட் கொஞ்சம் எடுங்களேன்..’

எதுக்கு இப்போ அது உனக்கு?? அதான் சிடி பாடுதுல்ல..

’இல்லைப்பா.. இதில இருக்கிற 6 சிடியும் கேட்டாச்சு.. இனிமே அதில கேக்கலாம்..’

அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. அதையே கேளு.. எவ்ளோ வேலைதான் நான் உனக்கு செய்றது.. எனக்கு தூக்கம் வருது நான் தூங்கறேன்..

பாத்திங்களா.. என்ன அடாவடித்தனம்னு. விடுவேனா நான். அவர் ட்ரைவ் பண்ணும்போது பழி வாங்கிட்டேன்ல.  இப்போ அவர் ஓட்டுநர். நான் எதுவும் பேசல. அடிக்கடி என் பக்கம் பார்வைய வீசிட்டே ஒரு கள்ளச் சிரிப்போட இருந்தார். இப்டியே ஒரு ஒரு மணி நேரம் போச்சுது. அப்புறமா கேட்டார்.

“என்ன கம்னு இருக்கே”

“அது இப்போதான் தெரிஞ்சுதா உங்களுக்கு..”

“இல்லைடி. அது எனக்கு எப்பவோ புரிஞ்சுது. கேட்டா உனக்கு பிடிக்காது. இருந்தாலும் என் வாய் சும்மா இருக்காதே”

“அப்போ புரிஞ்சுதுன்னா வளைவில எதுக்கு இவ்ளோ ஸ்பீடா திருப்பறிங்க”

“ஆமாப்பா.. ஸ்லோவா போங்க. எனக்கும் ஒரு மாதிரியா இருக்கு” இத சொன்னது அம்மு.

எனக்கும் அம்முவுக்கும் ட்ராவல் சிக். அவ குழந்தையா இருந்தப்போ தூங்காம இருந்தான்னா உடனவே உவ்வே தான். எனக்கு எதுனா சாப்டுட்டே இருக்கணும், இல்லை புக் படிக்கணும், இல்லை ட்ரைவ் பண்ணணும். இல்லேன்னா உவ்வே. டாப்ளெட் போட்டா தூங்கிட்டே இருப்போம். இதில அம்மு அம்மா வாந்தி வருதுன்னு சொன்னதும் சதுர் படற பாடு பாக்கணுமே. எங்க அவர் மேல பட்டுடுமோன்னு பயம். கதவோட ஒண்டிக்குவார். போன வருஷம் அதுக்கும் ஒரு முடிவு வந்திச்சு. அதாவது டாப்ளட்டுக்கு. ஒரு பாண்ட். ஃபார்மசில கேட்டு கண்ணாளன் வாங்கிட்டு வந்தார். அதுல ஒரு குட்டி கோலி. அதை கைல நரம்பு மேல படும்படியா வச்சுக்கணும். அவரு நம்ம பாடியோட பாலன்ஸ பாத்துக்குவாராம். என்ன அதிக நேரம் போட்டிருந்தா அழுத்தும். வலிக்கும். அப்பப்போ அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். காரோ, கப்பலோ, ஃப்ளைட்டோ.. இப்போ கவலை இல்லை.  இது தெரியாம என்ன அம்மாவும் பொண்ணும் ஸ்டைலா ரெண்டு கைலேம் பாண்ட் போட்டிருக்கிங்கன்னு கேக்குறவங்களும் உண்டு. கொஞ்ச நேரம் தூங்கேன்.. நான் ஸ்பீடா ட்ரைவ் பண்ணனும்னு கண்ணாளன் கேக்குற ரேஞ்சுக்கு என் தூக்கம் குறைஞ்சு போச்சு. அம்முவும் விழிச்சிருந்து எல்லாருமா ஜாலியா பேசிட்டு போறது.. என்ன சுகம்.

IMG_0215 IMG_0543

முன்னல்லாம் பெருசா ஒரு மேப் கைல வச்சுட்டு வாயில நுழையாத ஊர் பேரெல்லாம் படிச்சு கண்டுபிடிச்சு போறதும் ஒரு கிக் தான். அப்புறம் navigator வாங்கினோம். அது சமயத்தில பொத்துன்னு கீழ விழுந்துடும். இப்போ GPS வண்டிலவே இருக்கு. தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கேற்ப நாங்களும் மாறிக்கிட்டோம். அடுத்த வருஷம் GPS க்கு புது சிடி வாங்கி போடணும்னு முடிவு எடுத்துக்கிட்டோம். ஏன்னா பாதையில புதுசா செய்த மாற்றங்கள் பிடிபடாம சில பல கீலோ மீட்டர்கள் சுத்த வேண்டியதாச்சு.

“அம்மா.. நான் மூணு பிஸ்கட் தான் சாப்டேன்”

“ஓ.. அப்டியா.. சமத்து.. அவ்வ்வ்ளோ பிஸ்கட் சாப்டிங்களா”

“அம்ம்ம்மா.. மூணு தானே சாப்டேன். அதுக்கு எதுக்கு இப்டி சொல்றிங்க”

“டனல் எப்டி கட்டினாங்க தெரியுமா?? கேளுங்க அப்பா சொல்றேன்”

“மலை இருக்குதில்லை மலை.. அதை குடைஞ்சு குடைஞ்சு குடைஞ்சு குடைஞ்சு.. ”

“அப்பா.. அது எங்களுக்கு தெரியும்பா”

இப்டியா நாங்க பசங்க கூட போட்ட மொக்கைகளோட..

“அம்மா.. நான் உங்க ஜூஸ்ல கொஞ்சம் குடிக்கலாமா.. ஏன்னா நான் எனக்கு ஐஸ் கிறீம் தான் வாங்கினேன்.. ஜூஸ் வாங்கலை”

இப்டியா அவங்க எங்களுக்கு செய்யிற அரசியல்களோட பயணம் தொடருது..

வரட்டா..

 

40 நல்லவங்க படிச்சாங்களாம்:

Anonymous said...

//ன்னாசி பழத்த குட்டி குட்டியா கட் பண்ணி, சர்க்கரை, உப்பு, கொஞ்சூண்டு தூள் //

நான் Cooking Apple இதே மாதிரி செய்து சாப்பிடுவேன்.

Anonymous said...

இந்த தடவ போடோஸ் அதிகமா போடல ஏன்?

நைஸ் ரெசிப்பி!

//“ஓ.. அப்டியா.. சமத்து.. அவ்வ்வ்ளோ பிஸ்கட் சாப்டிங்களா”

“அம்ம்ம்மா.. மூணு தானே சாப்டேன். அதுக்கு எதுக்கு இப்டி சொல்றிங்க”//

நோ கமெண்ட்ஸ் :)

சாந்தி மாரியப்பன் said...

எங்கூரு மும்பை-பூனா ஹைவே மாதிரியே இருக்குப்பா.. செம ஜிலுஜிலுன்னு....

Unknown said...

me the first..........

Unknown said...

Ungal payanthil nangalum vanthathaga oru unargu..

alagai thodarnthu erukeenga..

oru payana puthagam pola...

poikitey erukku.adutha padiviruku waiting..

Madumitha said...

பயண அனுபவங்களை மிகச்
சரளமாக எழுதுகிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
தொகுப்பாக படிக்க ஆசைப்படுகிறேன்.
நிறைய பயணம் செய்யுங்கள்.
நிறைய எழுதுங்கள்.

Anonymous said...

:)) அன்னாசி பழம் ஜூப்பரு :)

Chitra said...

இப்டியா நாங்க பசங்க கூட போட்ட மொக்கைகளோட..

...Thats sweet! May God bless your family. :-)

ஜெயந்த் கிருஷ்ணா said...

பயணங்கள் தொடரட்டும் காத்திருக்கிறேன்...

கார்க்கிபவா said...

அட.. அந்த பேண்ட் நல்லா இருக்கே..

ஜிபிஎஸ் இப்பலாம் இந்தியாவுலா நிறைய வந்துடுச்சு..நல்ல டெக்னாலஜி அது

பயணத்தின் போது நீங்க சமைச்சது எடுத்துட்டு போகாதிங்க. அதிலே வாந்தி வருவது பாதி குறைஞ்சிடும்

Anonymous said...

"அமிர்தம். அப்டி ஒரு ஜூஸியா காரம், இனிப்பு, உப்பு சுவைக் கலவையோட தாகத்துக்கும் பசிக்கும் சேர்த்து சாப்பிடலாம். பசங்களுக்கும் ரொம்ப பிடிக்கும். "



ஹாய் எனக்கும் ...வாயில் நீர் ஊறுதே ..



"இப்போ வெயில பாருங்க. நேரம் காலை 8:48. பாக்க இப்டி இருந்தாலும் கண்ணாடி வழியா ரொம்ப சுடும். அது என்னமோ என் சைடுலவே எப்போதும் சூரியனோட கொடும், கனல் பார்வை இருக்கும். பெயர் சரியில்லை. சூரியனோட பெயர மாத்தணும். "


சூர்யனுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு போல அதான் உங்க சைடு லே எப்போதும் பார்வை ..ஹி ஹி

உங்க அனுபவம் ரொம்ப நல்லா இருக்கு சுசி ..மீதி படிக்க ஆவலோட

நர்சிம் said...

;)

அருண் பிரசாத் said...

உங்கள் வார்த்தைகளிலேயே உங்கள் பயணத்தின் குளிர்ச்சி தெரிகிறது

//பயணத்தின் போது நீங்க சமைச்சது எடுத்துட்டு போகாதிங்க. அதிலே வாந்தி வருவது பாதி குறைஞ்சிடும்//

ரிப்பீட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏ

sakthi said...

அப்டி ஒரு ஜூஸியா காரம், இனிப்பு, உப்பு சுவைக் கலவையோட தாகத்துக்கும் பசிக்கும் சேர்த்து சாப்பிடலாம். பசங்களுக்கும் ரொம்ப பிடிக்கும்.

ட்ரை பண்ணிடுவோம்

அழகான பயண விவரிப்புங்க

நல்ல உபயோகமான பேண்ட்

Thamira said...

உப்பு, மிளகாய்த்தூளோடு சர்க்கரை என்பது புதிது. ட்ரை பண்ணிடலாம்.

சுசி said...

ஓ.. ட்ரை பண்ணிட்டா போச்சு அகிலா.

8 8 8 8 8

அது அந்தந்த இடத்தில எடுத்தத சேர்த்துட்டு வரேன் பாலாஜி. இந்த தடவை பெருசா ஒண்ணும் எடுக்கலை.

8 8 8 8 8

அப்டியா அமைதிச் சாரல்.. ஆனா இங்க இன்னும் குளிரும் :)

சுசி said...

சந்தோஷம் சிவா..

8 8 8 8 8

நமக்கெல்லாம் வருஷத்தில ஒரு பயணம் தான் மதுமிதா :(

8 8 8 8 8

சாப்டு பாத்தியா விஜி??

சுசி said...

நன்றி சித்ரா.

8 8 8 8 8

நன்றி வெறும்பய.

8 8 8 8 8

கார்க்கி.. சந்தோஷமா?? திருப்தியா?? நிம்மதியா??

ஹிஹிஹி.. தப்பா புரிஞ்சுகிட்டிங்கப்பா.. GPS இந்தியா உட்பட எல்லா இடங்களுக்கும் எப்பவோ வந்தாச்சு.. நாங்க இப்போ தான் யூஸ் பண்றோம்னு சொன்னேன் :)

ராமலக்ஷ்மி said...

முதல் படம் ரொம்ப அழகு.

இனிமையான பயண அனுபவங்கள்.

கடைசியா சொல்லியிருக்கும் அரசியலும் ரொம்பப் பிடிச்சிருக்கு:)!

கோபிநாத் said...

நிங்க பதிவுல போற ஸ்பீடை பார்த்தா நிலாவே வீட்டுக்கு வந்துடுவாங்க போல ;))

குட்டிஸ் மொக்கை கலக்கல் ;)

Vijiskitchencreations said...

ரொம்ப நல்லா எழுதறிங்க அருனா.
www.vijsvegkitchen.blogspot.com

மார்கண்டேயன் said...

மதுரைய காட்டிர்க்கேன், ஆனா நீங்க பாக்காத மதுர . . .

நம்ம கடையில வந்து பாருங்க . . .

r.v.saravanan said...

பயண அனுபவங்கள் அருமை


பயணங்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள்.

Anonymous said...

ஆமா சுசி, எனக்கு பைனாப்பிள் பிடிக்காது,இருந்தாலும் இந்த டேஸ்ட் நல்லாருக்கு :))

பித்தனின் வாக்கு said...

innaikkithan padithen.sikkiram matha katturaikalaiyum paditthu comment podukinren. anaaivarum nallama?

ஜெயந்த் கிருஷ்ணா said...

தங்களை தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன்...

http://verumpaye.blogspot.com/2010/09/blog-post.html

Ahamed irshad said...

பயணக்கட்டுரை நல்லாயிருக்கு..

சுசி said...

சந்தியா.. இது ஓவர் பிடிப்பால்ல இருக்கு :))

8 8 8 8 8

நர்சிம் பேசணும்னா கவிதை எழுதணும் போல :)

8 8 8 8 8

அருண்.. ஐஸ் வச்சுட்டு ரிப்பிட்டா..
கிர்ர்ர்ர்..

சுசி said...

நிஜமா அந்த பேண்ட் நல்லாவே ஹெல்ப் பண்ணுது சக்தி. சாப்டு பாத்துட்டு சொல்லுங்க.

8 8 8 8 8

ட்ரை பண்ணிட்டிங்களா ஆதி??

8 8 8 8 8

நன்றி அக்கா.. எடுக்கும்போது உங்களை நினைச்சேன் :)

சுசி said...

வராங்க கோப்ஸ்.. டிசம்பர்ல :))))

8 8 8 8 8

முதல் வருகைக்கு நன்றிங்க விஜி.. ஆனா அருனா யாரு??

8 8 8 8 8

முதல் வருகைக்கு நன்றி மார்க்கண்டேயன். வந்துட்டா போச்சு..

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி சரவணன்.

8 8 8 8 8

நல்லாருந்துச்சா.. அப்போ மணி ஆர்டர் இன்னும் வரலையே விஜி :)

8 8 8 8 8

எல்லாரும் நல்லா இருக்கோம் அண்ணா. நீங்க எப்டி இருக்கீங்க??

சுசி said...

இதோ வரேன் வெறும்பய.. ஆவ்வ்வ்வவ்..
ஆமா உங்க பேர் என்ன??

8 8 8 8 8

முதல் வருகைக்கு நன்றி அஹமது இர்ஷாத்.

தினேஷ்குமார் said...

வணக்கம்
எங்களுக்கு வெயில்லதான் வேலை சும்மா சுட்டெரிக்கும் பாருங்க காலைல ஒரு முறை குளிச்சா வெயில்ல ஒரு நாளைக்கு பத்து முறையாவது வியர்வையில் குளிச்சிடுவோம்........
எங்களுக்கு ஒரு நல்ல ரெசிபி சொல்லித்தாங்களேன் வெயில்லிருந்து எங்களை பார்த்துக்க ஆனா வேலைய விட்டுட்டு ஓடிப்போடானு மட்டும் சொல்லாதிங்க அக்கா........

vinu said...

வர வர நீங்க ரொம்ப ஊர் சுத்தியா ஆயுடீங்க

'பரிவை' சே.குமார் said...

பயண அனுபவங்களை மிகச்
சரளமாக எழுதுகிறீர்கள்.
வாழ்த்துக்கள்.

Unknown said...

susi aunty..enda bloga pakamum vanga..

Unknown said...

வர வர நீங்க ரொம்ப ஊர் சுத்தியா ஆயுடீங்க---poramai..susikka..

kavalaiya vidunga..neenga nalla suthi..alaga eluthunga..ethey polavey..

Unknown said...

“அம்ம்ம்மா.. மூணு தானே சாப்டேன். அதுக்கு எதுக்கு இப்டி சொல்றிங்க”//

---konjam purialai yen chonenganau..small vilakkam devai please.

Priya said...

பயணங்கள் தொடரட்டும் சுசி!

அமுதா கிருஷ்ணா said...

nice....